சுமார் 36 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
ஐயா, "எனக்கு 33 வயதில் தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஆறுமாத காலம், மனைவியும், நானும் சேர்ந்து வாழ்ந்தோம. அதன்பிறகு என் தாய்க்கும், என் மனைவிக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி என்னைவிட்டுப் பிரிந்து இப்போது அவள், தன் பெற்றோருடன் பிறந்த வீட்டில் இருக்கின்றாள்.
என் மனைவிமீது அதிகமாகப் பாசம் வைத்துள்ளேன். பலமுறை அவள் வீட்டிற்குச் சென்று சேர்ந்துவாழலாம் என்று கூறி அழைத்தேன். ஆனால் அவளும், குடும்பத்தாரும் என்னை மரியாதைக் குறைவாகப் பேசினார் கள். அவள் என்னுடன் வரமறுத்தும், தனக்கு விவாகரத்து தந்துவிடும்படி கேட்டாள். இப்போதும் அதையே கூறுகின்றாள்.
மனைவி என்னுடன் சேர்ந்து வாழ்வாளா? அல்லது பிரிந்துவிடுவாளா? எங்கள் இருவரிடையே உண்டான வாழ்க்கைப் பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thosam_13.jpg)
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
மனைவி இவனைவிட்டுப் பிரிந்ததற்கு இவன் காரணமில்லை. இவன் தாயின் தவறான நம்பிக்கையில் செய்த செயல்தான் காரணம். இவன் திருமண சமயத்தில், இருவரின் ஜாதகத் தையும், இணைத்து ஜாதகத்திலுள்ள கிரக அமைப்பினைகொண்டு, இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தால், பிரச்சினையின்றி ஒற்றுமையுடன் வாழ்வார் களா? அல்லது கருத்து வேறுபாடு கொண்டு நிம்மதியில்லாமல் வாழ்வார்களா என்று இன்னும் பலவிதமான பலன்களைப் பற்றி ஆராய்ந்து பார்க்கவில்லை.
ஜோதிடன் ஒருவன், இவன் தாயாரிடம், சில நட்சத்திரங்களைக் குறிக்கக் கொடுத்து, இந்த நட்சத்திரங்களில், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை உங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைத்தாள் குடும்ப வாழ்க்கை, கணவன்- மனைவி ஒற்றுமை, புத்திர பாக்கியம் என செல்வ சிறப்பாக அமையும் என்று கூறிவிட்டான். அதனால் இவன் தாயார், அந்த குறிப்பிட்ட நட்சத் திரங்களில் பிறந்த பெண்களைத் தேடித் தேடி அலைந்து, இறுதியில் இந்தப் பெண்ணை திருமணம் செய்துவைத்தாள்.
திருமணம் முடிந்த சில நாட்களில், இவன் தாய்க்கும், இவன் மனைவிக்கும் பிரச்சினை ஆரம்பித்தது. இவன் தாயின் பேச்சைக்கேட்டு, மனைவியைக் குறைக்கூறி கண்டித்தான். அதனால் கோபம்கொண்டு, இவனைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள்.
கணவன்- மனைவி பிரிவிற்கு, யாரையும் காரணம் கூறமுடியாது, இவன் மனைவி, தன் முற்பிறவியில், தனது குடும்பத்தில் வாழவந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்ததால், அந்தப் பெண் வாழ்க்கையை இழந்து, தற்கொலை செய்துகொண்டு மாண்டாள். பாதிக்கப்பட்ட மனம் வெறுத்துவிட்ட சாபம் அந்த ஆத்மாவின் கோபம், இப்பிறவியில் ஆபிசார (ஆவி) தோஷமாக உருவாகி, இவள் வாழ்க்கையில் பாதிப்பை தந்துகொண்டு இருக்கின்றது. மனைவி, இனி சேர்ந்து வாழமாட்டாள். அதனால் அவளுக்கு விவாகரத்து தந்துவிடச் சொல் என்றார்.
ஐயா, "என் மனைவியை விவாகரத்து செய்ய, என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவள் கோபம் தீர்ந்து, மறுபடியும் என்னுடன் சேர்ந்து வாழ்வாள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
வேத கணித ஜோதிடர்கள், இப்போது நடக்கும் தசா, புக்தி, காலம் சரியில்லை. இன்னும் ஏழு மாதத்திற்குப் பிறகு வந்து சேர்ந்து வாழ்வாள் என்று கூறுகின்றார்கள். அகத்தியர் பிரிந்து விடச் சொல்கின்றாரே'' என்றார்.
நான் கூறுவதை, ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவன் விருப்பம், உரிமை. கணவன்- மனைவியைப் பிரிப்பது என் நோக்க மல்ல. இவன் மனைவியின் கர்மவினைப் பதி வைப் பற்றிக் கூறினேன். ஏழு மாதம் கடந்து முடிந்தபின், இவன் அகத்தியன் வாக்கையும், மனைவியின் விதி நிலையையும் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
ஒரு வருடம் சென்றபின்பு, அந்த நபர் மறுபடி யும் என்னைக் காணவந்தார். அன்று அகத்தியர் கூறியதை அலட்சியம் செய்தேன். இப்போது என் மனைவி விவாகரத்துக் கேட்டு, எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நான் இப்போது என்ன செய்யவேண்டும்.என்றார்.
மனைவிக்கு இவனை எந்த மறுப்பும் கூறாமல், எதனையும் எதிர்பார்க்காமல், விவாகரத்து தந்துவிடச்சொல். கணவன்- மனைவி இருவரின் ஜாதகத்தையும், சித்தர்கள் கூறியுள்ள தமிழ் சோதிடமுறையில் ஆய்வு கிரக நிலையை ஆய்வு செய்து, விளக்கமாகப் பலனைக் கூறு என்று சொல்லிவிட்டு ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.
இருவரின் ஜாதகத்திலும் கணவன்- மனைவி இருவரையும் குறிப்பிடும் உதாரண கிரகங்களின் நிலையை ஆய்வுசெய்து, தம்பதியாரை பிரிவு, இழப்பை தரும் நிலையில் அமைந்துள்ளதையும், அவளுக்கு ஆபிசார, ஆவிதோஷ பாதிப்பை சுட்டிக்காட்டும் கிரக நிலையையும், அந்த தோஷப் பாதிப்பால் அவள் குணத்தையும், செயலையும், அனுபவிக் கும் பலன்களையும் விளக்கமாகக் கூறி அனுப்பிவைத்தேன்.
பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் திருமண சமயத்தில், வெறும் நட்சத்திரப் பொருத்தம், பத்து பொருத்தம் மட்டும் பார்த்து, திருமணம் செய்து வைக்கக்கூடாது. ஜாதகத்திலுள்ள கிரகநிலைகளை, ஆய்வு செய்து திருமணத்திற்குப் பிரிவு, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, புத்திரர், பெரியோர்களை மதித்தல், செல்வம், செல்வாக்கு உயர்வு உண்டாகுமா? அல்லது கணவன்- மனைவி பிரிவு, இழப்பு, புத்திரத்தடை, பெரியோர்களை மதிக்காத நிலை, வறுமை, கடன், நோய் பாதிப்புகள் உண்டாகுமா? என்று ஜாதக ஆய்வுசெய்து திருமணம்செய்து வைக்க வேண்டும், திருமணத்தை அவசர அவசரமாக செய்துவிட்டு, பின்பு சாவகாசமாக வருத்தப் பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து; வேண்டுகோள்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-12/thosam-t.jpg)