Advertisment

எண் கணித பலன்கள் பரிகாரங்கள்! 2025-ல் உங்கள் நம்பர் என்ன சொல்கிறது ? -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/numerology-benefits-and-remedies-what-does-your-number-say-2025-pandit-map

பொதுவில் ஒருவருடைய, பிறந்த தேதி, மாதம் மிக முக்கியமானது. அத்துடன் வரும் நடப்பு ஆண்டான 2025-ஆம் ஆண்டை இணைத்தால் ஆதிக்க எண்மூலம் என்ன நற்பலன் தருமென பார்க்கலாம்.

ஒருவர் 6- 12-ல் பிறந்திருந்தால் அவரின் பிறந்த தேதி, மாதத்துடன் 2025-ஐ இணக்கவேண்டும். அதன்விடை ஆதிக்க எண்ணாகத் தெரியவரும்.

6+1+2+2+0+2+5=18. 1+8=9 இவரின் ஆதிக்க எண் இவ்வருடம் 9. அதற்கான பலனைப் பார்க்கவும்.

2025 எண் கணிதப் பலன்கள், பரிகாரங்கள்

Advertisment

nn

எண்- 1

இவ்வாண்டு எதிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். எதிரிகளின் எந்த மறைமுக செயல்களும் வெற்றிபெறாது. ஆனால் நீங்கள் உயர்பதவி வகிப்போரிடம் மற்றும் கீழ்மட்ட பணியாளர்களிடம் பகை உணர்வு கூடாது. 2025-ஆம் ஆண்டின் கூட்டு எண் 2+0+2+5=9 செவ்வாயின் ஆதிக்கம்பெற்ற எண். எனவே நீங்கள் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. வெற்றிவாகை சூடலாம். உடல் ஆரோக்கியம் கக்சிதமாக இருக்கப்பெறும். ஆனால் உணவு விவகாரங்களில் கவனம் வேண்டும். நேரம் கடந்து உண்ணுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் தன்னிறைவு பெற்று லாபம் மிகையாக ஈட்டலாம். வயோதிகப் பெற்றோர் இருந்தால் அவர்கள் சார்ந்த சில செலவினம் வரும். தம்பதிகள் மிகச் சிறப்பாக வாழலாம். மாணவர்கள் கல்வியில் கவனச் சிதறல் கூடாது. அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் அதிக பொறுப்புகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை வரும். இருமுக ருத்திராட்சம் அணியவும். அதிர்ஷ்டக்கிழமை. ஞாயிறு, திங்கள். இவ்வருட பகை எண் 6, 7. புதுமுயற்சியைத் தவிர்க்கவும்.

எண்- 2

சந்திரனின் பேராதரவுபெற்ற எண் 2. பிறரிடம் மென்மையாக பழகும் குணம். அமைதி, புத்திக்கூர்மை நிதானம் இவர்களின் சொத்து. இருப்பினும் திறமைக்கு ஏற்ற நற்பலன் சுலபமாக அமைவதில்லை. மன அமைதிக்கு அரும்பாடுபடுபவர்கள். எல்லா வருடமும் உங்களுக்கு நன்மை வரும் காலம் 21 ஜூன்முதல் 22 ஜூலை எனலாம். இவ்வருடம் ஏற்ற- இறக்கம் கலந்த வருடமாகவே அமையும். இனம்புரியாத ஆரோக்கியக்குறை வரலாம். சர்க்கரை, பிளட்பிரஷர், மைக்ரேன் தலைவலி போன்றவை தொல்லை தரும். அதை சமாளிக்க

பொதுவில் ஒருவருடைய, பிறந்த தேதி, மாதம் மிக முக்கியமானது. அத்துடன் வரும் நடப்பு ஆண்டான 2025-ஆம் ஆண்டை இணைத்தால் ஆதிக்க எண்மூலம் என்ன நற்பலன் தருமென பார்க்கலாம்.

ஒருவர் 6- 12-ல் பிறந்திருந்தால் அவரின் பிறந்த தேதி, மாதத்துடன் 2025-ஐ இணக்கவேண்டும். அதன்விடை ஆதிக்க எண்ணாகத் தெரியவரும்.

6+1+2+2+0+2+5=18. 1+8=9 இவரின் ஆதிக்க எண் இவ்வருடம் 9. அதற்கான பலனைப் பார்க்கவும்.

2025 எண் கணிதப் பலன்கள், பரிகாரங்கள்

Advertisment

nn

எண்- 1

இவ்வாண்டு எதிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். எதிரிகளின் எந்த மறைமுக செயல்களும் வெற்றிபெறாது. ஆனால் நீங்கள் உயர்பதவி வகிப்போரிடம் மற்றும் கீழ்மட்ட பணியாளர்களிடம் பகை உணர்வு கூடாது. 2025-ஆம் ஆண்டின் கூட்டு எண் 2+0+2+5=9 செவ்வாயின் ஆதிக்கம்பெற்ற எண். எனவே நீங்கள் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. வெற்றிவாகை சூடலாம். உடல் ஆரோக்கியம் கக்சிதமாக இருக்கப்பெறும். ஆனால் உணவு விவகாரங்களில் கவனம் வேண்டும். நேரம் கடந்து உண்ணுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் தன்னிறைவு பெற்று லாபம் மிகையாக ஈட்டலாம். வயோதிகப் பெற்றோர் இருந்தால் அவர்கள் சார்ந்த சில செலவினம் வரும். தம்பதிகள் மிகச் சிறப்பாக வாழலாம். மாணவர்கள் கல்வியில் கவனச் சிதறல் கூடாது. அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் அதிக பொறுப்புகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை வரும். இருமுக ருத்திராட்சம் அணியவும். அதிர்ஷ்டக்கிழமை. ஞாயிறு, திங்கள். இவ்வருட பகை எண் 6, 7. புதுமுயற்சியைத் தவிர்க்கவும்.

எண்- 2

சந்திரனின் பேராதரவுபெற்ற எண் 2. பிறரிடம் மென்மையாக பழகும் குணம். அமைதி, புத்திக்கூர்மை நிதானம் இவர்களின் சொத்து. இருப்பினும் திறமைக்கு ஏற்ற நற்பலன் சுலபமாக அமைவதில்லை. மன அமைதிக்கு அரும்பாடுபடுபவர்கள். எல்லா வருடமும் உங்களுக்கு நன்மை வரும் காலம் 21 ஜூன்முதல் 22 ஜூலை எனலாம். இவ்வருடம் ஏற்ற- இறக்கம் கலந்த வருடமாகவே அமையும். இனம்புரியாத ஆரோக்கியக்குறை வரலாம். சர்க்கரை, பிளட்பிரஷர், மைக்ரேன் தலைவலி போன்றவை தொல்லை தரும். அதை சமாளிக்கவேண்டும். வருடத்தின் பிற்பகுதி எல்லா கெடுதலும் மறைந்துவிடும். பணவரவு தேவைக்கு ஏற்ப வரும். வங்கி இருப்பை கூட்ட இயலாது. தேவையற்ற சில செலவினம் வரும். சமாளிக்கலாம். செவ்வாய்க்கிழமை சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வணங்கல் சிறப்பு. 5, 14, 23 தேதிகளில் பிறந்தோரிடம் கவனமாக செயல்படவும். 1, 3, 4, 6 தேதிகளில் பிறந்தோரிடம் உதவியைக் கேட்கலாம். எல்லா மாதமும் இவ்வருடம் 2, 4, 8, 11, 16, 20 தேதிகள் வெற்றியைத் தரும். புதுமுயற்சிக்கு திங்கட்கிழமை மிக நன்று. மாதர்கள், அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை 3, 6, 9, 12-ல் பார்வதியை வணங்கவும்.

எண்- 3

இவ்வருடம் பல அற்புதங்களை எதிர்பார்க்கலாம். இத்துடன் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்திருந்தால் எந்தத் தொழில் புரிந்தாலும் பதவி உயர்வு வரும். விருப்பமான இடமாற்றம் பெறலாம். 19 பிப்ரவரிக்குமேல் 20 மார்ச் மாதத்திற்குள் பிறந்திருந்தாலும் 22 நவம்பருக்குமேல் 21 டிசம்பருக்குள் பிறந்திருந்தாலும் அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம். இராணுவம், பாதுகாப்புத் துறை, மற்றும் அரசு பணியாளர்கள் நற்பலனை எதிர்பார்க்கலாம். முன்பு நோய் வாய்ப்பட்டிருந்தால் தேக சுகம் மிகுதியாகும். வியாபாரத்தில் தன்னிறைவு உறுதி. சில உண்மையான நண்பர்களிடம் விரோதப் போக்கை எதிர்பார்க்கலாம். அசையா சொத்து, வீடு, வாகனம் அனுகூலம், கோர்ட் விவகாரம் இருந்தால் சாதகமான தீர்ப்பை எதிர் பார்க்கலாம். சொந்தபந்த உதவிகள் கேள்விக்குறிதான். கிருஷ்ணர் ஆலயம் சென்று வணங்கலாம். வியாழக்கிழமை மஞ்சள் கலந்த நீரால் நீராடவும். ஆட்காடி விரலில் புஷ்பராகம் (எல்லோ சபையர்) ராசிக்கல் அணியலாம். சொந்த ஜாதகத்தில் 10-ல் குரு இருந்தால் மதபோதகர்கள், பக்திமான்களுக்கு புகழ் மேலோங்கும்.

எண்- 4

எதையும் எதிரான கண்ணோட் டத்துடன் பார்ப்பவர்கள். சுலபத்தில் இவர்களை நண்பராக்க இயலாது. நண்பராக்கிவிட்டால் ஆயுள் முழுக்க மறக்க இயலாத வர் என பாராட்டைப் பெறுபவர் கள். பாசத்தோடு பழகுவார்கள். பணம் இல்லையே என்ற கவலை யோ, சொத்து இல்லையே என கவலையோ கொள்ளாதவர்கள். இவர்கள் மனதில் என்னதான் இருக்கிறது என பிறரால் சுலபத்தில் அறிய இயலாது. 2025 மிகக் கடினமான வருடமாகவே செயல்படும். தேவையில்லா செலவினம் தவிர்க்க இயலாது. நடப்பு தசை ராகு தசை என்றால் தப்பிக்கலாம். வியாபாரத்தில் விரிவாக்கம் வேண்டாம். அன்னிய நாட்டுப் பயணம், வியாபாரம் வெற்றியைத் தரும். ஏப்ரல், செப்டம்பர் நன்மை தரும். செப்டம் பர் புது முயற்சிக்கு உரிய மாதம். சொந்த பந்தம் ஆதரவு கிடைக்காது. அசையா சொத்து வாங்கலாம்; விற்கலாம். கோபத்தை அடக்கி செயல்பட நன்று. சனியன்று நாய்களுக்கு உணவூட்டல் நல்லது. சிவப்புநிற முகம் கொண்ட அனுமனை வணங்கவும். 3, 5 தேதியில் பிறந்தோரை கூட்டு வியாபாரம் சேர்ப்பது கூடாது. பெற்ற தாய் ஆசிர்வாதம் முக்கியம்.

எண்- 5

புதனின் ஆதிக்கமும் செயல் திறனும் கொண்ட நீங்கள் எதைத் தொடங்கினாலும் அதனை முடிக்கும் வரை பாடுபடும் அசகாய சூரர்கள். ஒவ்வொரு ஆண்டும் 21, மேயில் இருந்து ஜூன் 20 வரையிலுள்ள கால அளவிலும் 23, ஆகஸ்டில் இருந்து 22 செப்டம்பர் வரையிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம். 5, 14, 23 தேதிகள் யோகமானவை. உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்த்தல் நன்று. கௌரவம் பார்ப்பவர்கள். புதன், வெள்ளி யோக தினங் கள். இவ்வருடம் நீண்டநாள் முன்னேற்றத் திற்கான பாதை அமைப்பீர்கள். தொழிற் சாலை வைத்திருப்போர் புது மிஷின் உபகரணங்கள் வாங்கலாம். வீடு, வாகனம், மனை அமையும். கூட்டு வியாபாரத்தில் சக உறுப்பினர்கள்மீது கவனம் வேண்டும். யாருக்கும் பணம் கடனாகத் தருதல் வேண்டாம். கணவன்- மனைவி உறவில் விரிசல் வரலாம். "ஓம் நமோ பகவதே வாசு தேவாய நமக' என்ற மந்திரம் உபச்சரிப்பது நல்லது. அமிதிஸ்ட் அல்லது ஓபல் மோதிரம் அணியவும். 1, 6, 7, 8-ல் பிறந்த நபர்களோடு கூட்டுவியாபாரம் நன்று. 2, 4-ல் பிறந்தோரைத் தவிர்க்கவும். புதன், திங்கள், வெள்ளி யோக தினம். வடதிசை வாசல் தலைவாசல் என்றால் பணவரவு அதிகரிக்கும். காலையில் வடதிசை நோக்கி குபேரனை வணங்கவும்.

எண்- 6

சுக்கிரனின் பரிபூரண ஆதிக்கம் பெற்றவர்கள். வசீகரமானவர்கள். பிறரால் விரும்பப்படுபவர்கள். இவ்வாண்டு எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். புதன் பகவானால் உயர்வான மாற்றம் பெறலாம். கலை உலகம் வரவேற்கும். நண்பர்களால் பல நன்மைகள் பெறலாம். 20 ஏப்ரலுக்குமேல் மே 20 தேதிக்குள்ளும் 25 செப்டம்பருக்கு மேல் 22 அக்டோபருக் குள்ளும் நீங்கள் பிறந்திருந்தால் கூடுதல் நன்மைகளை எதிர்பார்க்கலாம். 2025 எண் கணிதரீதியாக செவ்வாயின் வலிமை பெற்றது. எனவே தேவையில்லா குறுக்கீடுகள் வரலாம். போராடி வெற்றிபெறலாம். வேலைப்பளுவால் உடல் அசதி போன்றவை வரும். வருடத்தின் ஆறு மாதங்களுக்குமேல் கூடுதல் நன்மை வரும். பிரமுகர்களின் பேராதரவு பெறலாம். எத்தொழிலிலும் பாராட்டைப் பெறலாம். பணவரவு ஏற்ற- இறக்கம் காணப்படும். மொத்தத்தில் நிம்மதி தரும் ஆண்டாக அமையும். சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமை வணங்கவும். "ஜிர்கான்' ராசிக்கல் மோதிரம் அணியலாம். வீட்டில் வடகிழக்கில் 16 லிட்டர் ஆற்றுநீரை வைப்பது மிக நல்லது.

எண்- 7

நெப்டியூனின் ஆதரவுபெற்ற நீங்கள் 7, 16, 25-ல் பிறந்திருந்தால் இவ்வாண்டு கூடுதல் பலன் பெறலாம். 21 ஜூன் மாதத்திற்குமேல் 22 ஜூலைக்குள் பிறந்திருந்தால் மேலும் நன்மைகள் வரும். சந்திரன், புதன் பேராதர வால் சமுதாயத்தில் வித்தியாசமாகக் காணப் படுவீர்கள். சுற்றுலா விரும்பிகள். சுலபத்தில் வெளிநாடு செல்லும் யோகம், வெளிநாட்டில் வாணிபம் வெற்றியைத் தரும். பிறந்த மண்ணை நேசிப்பவர்கள். எழுத்து, ஓவியம், கலைத்துறை வரவேற்கும். கேது பகவானின் அருளால் சூழ்நிலைகள் சுலப வெற்றியைப் பெற்றுத்தரும். புதுத்தொழில், புது வியாபாரம் என புதிதாகத் தொடங்கலாம். பணம் எங்காவது முடங்கியிருந்தால் வந்து விடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலையாகும். சுபநிகழ்ச்சிகள் சுபவிரயம் எதிர்பார்க்கலாம். வியாபார விரிவாக்கம் நிச்சயமாகும். பணவிவகாரங்களில் பிறரை நம்பவேண்டாம். நெருங்கிய உறவுகள் உதவி நாடிவருவார்கள். விநாயகப் பெருமானை வணங்கவும். டர்குவிஸ் மோதிரம் அணியலாம். சொத்து சுகம் மிகுதியாகும். இளம் காதலர்களுக்கு சாதகமான வருடமாகத் திகழும்.

எண்- 8

எண் 8 என்றாலே சனிபகவான் ஆதிக்கம் பெற்ற எண் என்பது யாவரும் அறிந்ததே. நீங்கள் 22 டிசம்பர் மாதத்திற்குமேல் 18 பிப்ரவரிக்குள் பிறந்திருந்தால் பல பின்னடைவுகள் வரும். எப்போதும் மவுனம் விரும்பிகள். எதையோ பறிகொடுத்தவர்போல் எப்போதுமே எதையோ எண்ணிக் கொண்டிருப்பவர்கள். எதையும் சீரியசாக எடுத்து செயல்படுபவர்கள். பிறரின் எதிர்ப்பைப் பொருள்படுத்தாத குணம். எனவே பல எதிரிகளை சம்பாதிப்பீர்கள். 2025-ல் சில சட்டரீதியான விவகாரங்களை சந்திக்க நேரிடும். கடின உழைப்புக்கேற்ற பலன் வராது. அரசு உத்தியோகத்தில் இருப்போர் முறைகேடக நடப்பது கூடாது. நெருக்கமாணவர்களே காட்டிக் கொடுப்பார்கள். வியாபாரத்தில் நல்ல வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். அண்ணன்- தம்பி பாகப்பிரிவினை வில்லங்கம் இருந்தால் மூன்றாம் நபர் மூலம் தீர்வு காணப்படும். காலில் செருப்பணியாமல் ஆலயம் சென்று சனிபகவானை வணங்கி வரவேண்டும். சனிபகவானை நேராக நின்று வணங்கக் கூடாது. ஓரமாக நின்று வணங்கவும். "டர்குவிஸ் புளு' ராசிக்கல் அணியவும். எருக்கம் செடி வேரை வாசலில் தொங்க வைக்கலாம். தோஷம் அகலும்.

எண்- 9

போராட்ட குணமும் பல அற்புதங்களை யும் தன்னகத்தே கொண்ட எண் 9. வாழ்வில் பல சாதனைகளை படைக்கும் எண் 9, 18, 27 ஆகியவை. கடின உழைப்புதான் இவ்வாண்டின் மூலதனம். 21 மார்ச்முதல் 19 ஏப்ரல்வரை வரையுள்ள கால அளவில் பிறந்தவர்களும் 28 அக்டோபருக்குமேல் 21 நவம்பரில் பிறந்தவர்களும் அதிக நன்மையை எதிர்பார்க்கலாம். 2025 பல எண்ணங்களை நிறைவேற்றும் ஆண்டாக செயல்படும். உடல் ஆரோக்கியம் தெம்பையும் வலிமையும் தரும். பணம் எங்காவது முடங்கியிருந்தால் வந்துவிடும். முழு நம்பிக்கையுடன் வாழலாம். திட்டங்கள் நிறைவேற்றுவதில் நம்பிகை வேண்டும். கவனச் சிதறல் கூடாது. கூட்டுவியாபாரம் பணவரவைப் பெருக்கும். வயோதிகப் பெற்றோர் இருந்தால் அவர்கள் உடல்நிலை சார்ந்த கவலை வரும். இளம் தம்பதியர் காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். அனுமாரை வணங்கவும். பவளம் ராசிக்கல் மோதிரம் அணியலாம். முருகப் பெருமானை வணங்கவும். 4, 5, 3-ல் பிறந்தோரி டம் நட்பு வைக்கலாம். 7-ஆம் எண்ணில் பிறந் தோரைத் தவிர்க்கவும். செவ்வாய்க்கிழமை யோகமான தினம்.

Advertisment
bala170125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe