7-கேது

7, 16, 25, 34, 43, 52, 61, 70, 79, 88, 97, 106 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களும் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்கள்.

"ராகுவைப்போல் கொடுப்பவருமில்லை; கேதுவைப்போல் கெடுப்பவருமில்லை' என்ற ஜோதிடப் பழமொழிக்கேற்ப 7-ஆம் எண்ணைப் பார்த்து பயப்படுவர்கள் அதிகம்.

இவர்கள் தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடு இருக்கும். சுத்தமான ஆடைகளை அணிய விருப்புவார்கள். ஆடம்பரத்தையும், அலங் காரத்தையும் விரும்பாதவர்கள். யாரிடமும் கலகலப்பாகப் பேசவோ, பழகவோ மாட்டார் கள். வார்த்தைகளில் நிதானம் உண்டு. உண்மை யான நண்பர்கள் கிடைப்பது அரிது.

Advertisment

கோப உணர்வு, ஆத்திரம் மிகுந்தவர்கள். தங்களுடைய வாழ்வின் ஏற்ற- இறக்கங்கள் மற்றும் ஆதங்கங்கள், ஆழ்மன சிந்தனைகளைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமைவதில்லை. திருமண வாழ்வில் பற்றில்லாதவர்கள். நல்ல உழைப்பாளிகள். செய்யும் தொழிலை முழுமையாக நேசிப்பவர் கள். சூழ்நிலை சரியாக இருந்தால் எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிப்பர். சரீர பலத்தை விட மனபலம் அதிகம். எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பயம் இருந்துகொண்டே இருக்கும்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண். மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப் படும். ஆனால் இந்த 7-ஆம் எண் பிரபஞ்ச சக்திக்கு மட்டும் கட்டுப்படும். இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும். பலருக்கு இளமைக் காலத்தில் போராட்டங்க ளையும், வறுமையையும் கொடுக்கும். ஆனால் மத்திம வயதிற்குமேல் பெரும் யோகங்களை யும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பால் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக் காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும், ஆதரவற்றோர் ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.

பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு. மிக எளிதாக எவரையும் வசியப்படுத்தி விடுவார் கள். கடுமையான உழைப்பும், எதையும் ஒழுங்கா கவும் சரியாகவும் செய்துமுடிக்கும் இயல் பும் உண்டு. ராஜயோகம், மந்திரம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கையுடையவர்கள்.

Advertisment

வேதனைகளும் சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்துவரும். எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் அதை நிறைவேற்றுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்கவேண்டிவரும். பலருக்கு நல்ல உயர்கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்காது. இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடை கின்றனர்.

பல லட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், தொழிலால் கடனாளியாவதில் முன்னணியில் இருப்பவர்கள் 7-ஆம் எண் காரர்கள் என்றால் மிகையாகாது. மஞ்சள் கடிதம் கொடுத்து தொழிலை இழந்து மூடுபவர் கள். ஆனால் சளைக்காமல் மனோ தைரியத்து டன் வாழ்க்கையில் போராடுவார்கள். உடன் பிறந்தவர்கள், மனைவி, குழந்தைகள் என அனைவருக்காகவும் விட்டுக்கொடுப்பார்கள்.

இந்த எண்காரர்களுக்கு மதபோதனை, ரசாயன ஆராய்ச்சி, சட்டம், நீதித்துறை, மருத்துவம், ஏற்றுமதி- இறக்குமதி, மின்சாரப் பொருட்கள், நடிப்பு, பாடல், சமையல் கலை, கவிதை, கதை, எழுத்து, பத்திரிகை, ஜவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், பான வகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருட்கள் (பீடி, சிகரெட்) விற்பனை, ரேடியோ, டெ-விஷன், கடிகாரம் தயாரித்தல், சர்வீஸ், ஜெராக்ஸ் கடை, போட்டோ ஸ்டுடியோ, சிற்பம் வடித்தல், சங்கீதம், நாட்டியம் போன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். உத்தியோகங்கள் சிறப்பிருக்காது. பதவி உயர்வுகள் ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டு இவர்களுக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும்.

கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி இவர்கள்தான். இல்லறத் துறவிகள் எனலாம். இவர்களுக்குத் திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர் இவர்களின் திறமை யைப் பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவதொரு குறை இருந்து கொண்டே இருக்கும். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான். பிரிவு சோகம் இவர்களைத் தொடர்ந்துவரும்.

இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த வர்களை மணந்துகொண்டால் ஓரளவு சிறப் பான திருமண வாழ்க்கை அமையும். 8-ஆம் தேதி பிறந்தவர்களை மணந்துகொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்துகொள்ளும் நாட்களின் தேதி, கூட்டு எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது.

1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். 2-ஆம் எண்காரர்களால் இவர்களுக்கு பெருத்த உதவியும் முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழில் ஒத்துவராது.

ஜனனகால ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்கம் மிகுதியாக இருப்பவர்களுக்கு மனக் கவலை, மனச்சோர்வு, சிறிய தொல்லை களையும் பெரிதுபடுத்துதல் போன்றவை அடிக்கடி பாதிக்கும்.

ஜீரணக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள், மலச்சிக்கல், எளிதில் கண்டுபிடிக்க முடியாத இனம்புரியாத நோய்கள், கட்டிகள், கொப்புளங்கள் போன்றவற்றால் அடிக்கடி பாதிப்புண்டு.

பெயரெண்- 7: தனித்த கேதுவின் ஆதிக்கம் பெற்ற எண். உயர்ந்த லட்சியம், மேன்மையான சுபாவம், ஆன்மிக எண்ணங்கள் போன்ற உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள்.

nn

நீதிக்கும் தர்மத்திற்கும் போராடுவார்கள். மக்களுக்காக மனம்விரும்பி உழைப்பார்கள். மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடு வார்கள். எதிர்பாராத மாறுதலைத் தரும் எண். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல் களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள்.

பெயரெண்- 16: சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கலந்த எண். வேகமாக முன்னேறி திடீரென தலைகீழே மீளமுடியாத பள்ளத்தில் வீழ்வார்கள். அவ்வளவு சிறப் பான எண்ணல்ல. புரட்சியாளர்களாக அமைய வாய்ப்புண்டு. சமூகத்தில் பிரச்சினைக் குரியவர்களாக இருப்பார்கள். உற்றாரும் ஊராரும் மதிப்பதில்லையே என்ற கவலை நிரம்பியவர்கள். ஒருநாள் உற்றார்- உறவினர் கள் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையில், எதையும் தாங்கிக்கொண்டு வாழ்வார்கள்.

பெயரெண்- 25: சந்திரன் மற்றும் புதனின் ஆதிக்கம் சேர்ந்த எண். கற்பனை வளம் மிகுந்தவர்கள். பிரபஞ்ச சக்தியுடன் உடனடி தொடர்பு இவர்களுக்குண்டு. வாழ்க்கையில் முன்னேற கடினமாக உழைக்கவேண்டும். வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும். பலவித சோதனைகளுக்கு உட்படுவார்கள். சோதனைக்குப்பின் புகழடைவார்கள். பொருளாதாரநிலை எப்பொழுதும் மந்தமாகவே இருக்கும்.

பெயரெண்- 34: குரு மற்றும் ராகுவின் ஆதிக்கம் கலந்த எண். எளிய முயற்சியில் ஏராளமான பணம் சம்பாதிப்பார்கள். எதிர் பாராத ஏற்றத்தையும், சுதாரிக்கமுடியாத இறக் கத்தையும் தரும் எண். மது, மாதரிடம் மனதைப் பறிகொடுக்க நேரும். அச்சம் தரக்கூடிய எண். குடும்ப வாழ்க்கையில் சில சலசலப்புகள் தோன்றும். குழந்தையின்மையால் அல்லது குழந்தைகளால் மனநிம்மதி குறையும்.

பெயரெண்- 43: ராகு மற்றும் குருவின் ஆதிக்கம் சேர்ந்த எண். நிரந்தர வேலையிருக் காது. வேலையை ராஜினாமா செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள். வாழ்க்கையே புரட்சிமயமாக இருக்கும். அதிக விரோதி களை சம்பாதிப்பவர்கள். தீவிரவாத எண்ணம் மிகுந்தவர். மத நம்பிக்கையற்றவர்கள்.

பெயரெண்- 52: புதன், சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். அதீத கற்பனை வளமுண்டு. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி உண்டு. மன நோயாளிகள். மன அழுத்தம் உள்ளவர். பகல்கனவு காணும் பழக்கம் உள்ள வர். தெளிவாக திட்டமிடுவர். திட்டமிடுதலை தனக்குப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். பிறருடைய எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் முடிவு கூறுவர். கடுமையான புத்திரதோஷம் தரும் எண்.

பெயரெண்- 61: சுக்கிரன் மற்றும் சூரியனின் சம்பந்தம் பெற்ற எண். அடிக்கடி கண்களில் பாதிப்புண்டாகும். சுகமாக அமைந்த வாழ்க்கையை விட்டுவிட்டு தன் இஷ்டப்படி புதிய முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியடைவர். இவர்கள் வாழ்க்கை வெளிப்பார்வைக்கு விசேஷமாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் வேதனை நிறைந்ததாகவே இருக்கும். வாழ்க்கையின் பிற்பாதியில் பணமும் பொருளும் சேரும்.

பெயரெண்- 70: தனித்த கேதுவின் ஆளுமை நிரம்பிய எண். தீவிரவாதிகள். தோல்விகளும் ஏமாற்றங்களும் உண்டு. வாழ்நாள் முழுவதும். மாறிமாறி வெற்றி- தோல்வியை சந்திப்பவர். வம்பு, வழக்கு போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பெருமளவு பணம் சேர்வதற்கு வழியில்லை. வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்கு வாழ்க்கைத் துணை வெளிநாடு, அந்நிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதி போன்றவற்றில் அமைவர். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையை ஓரளவு அனுசரித்துச் சென்றால் நல்ல வாழ்க்கை அமையும்.

பெயரெண்- 79: கேது மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் சேர்ந்த எண். இவர் களுக்குத் துணிச்சலும் அறிவுத்திறமையும் உண்டு. தன் திறமையினால் வேகமாக முன்னேறுவர். ஜனவசியர். வெற்றிகளைப் பெறக்கூடியவர். சுயநலவாதிகள். திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு பொருளை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே, கவனமாக இருக்கவேண்டும். மனோசக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தை பிறப்பது சற்றுத் தாமதமாகும். முறைதவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருப்பது மிகவும் அவசியம். திடீர்ப் புகழுண்டு. நல்ல மனிதராக இருந்தபோதிலும் வாழ்வில் சிறப்பான நிலையை அடைவது கடினம்.

பெயரெண்- 88: சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள்பக்தி நிறைந்த வர்கள். மன அமைதி குறைவானவர்கள். இவர்கள் மனதில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உள்ளூரில் புகழ்பெறமுடியாது. வெளியூர், வெளிநாடு என்று பணத்திற்காகவும் தொழிலுக்காகவும் புறப்பட்டுவிடுவார்கள். வாழ்நாள் முழுவதும் உழைத்தே நொந்துபோவார்கள்.

பெயரெண்- 97: செவ்வாய் மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த எண். வாஸ்து சரியில்லாத வீட்டில் வசிப்பவர்கள். சொத்து கள் தொடர்பான வம்பு வழக்கு நிரம்பிய வர்கள். ஆண்களுக்கு உடன்பிறந்தவர்களுட னும், பெண்களுக்கு கணவருடனும் மன வேதனையை ஏற்படுத்தும். பல பெண்களுக்குத் திருமணத்தை நடத்துவதில் சிரமத்தைத் தரும். திருமணம் நடந்தபிறகு, கல்யாணம் செய்யாமலே வாழ்வைக் கழித்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று, கணவரை கௌவரப்படுத்தி சமுதாயத்தில் வலம்வர முயன்று மனநோயை வரவழைக்கும் பெண் களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடமிருந்து பிரிக்கும் எண். கணவனை பாம்பென்று தாண்டவும் முடியா மல், பழுதென்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ்க்கைப் போராட்டத்தைத் தரும் எண்.

பெயரரெண்- 106: சூரியன், சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பிரதிப-க்கும் எண். இவர்களில் பெரும்பாலோர் நல்ல எழுத் தாளராகவோ, ஓவியர்களாகவோ, கவிஞர் களாகவோ ஆகின்றனர். சிறந்த நடிகர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் இவர்களே. இவர்கள் தாங்கள் செய்யும் தொழி-ல் எப்போதும் மிகுந்த ஈடுபாட் டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம், தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தங்களது மதத்தின்மீது தீவிர நாட்டம் கொள்வார்கள். தெய்வீகத் தன்மை நிறைந்தவர்கள். மக்களுக்கு வழிகாட்டவே பிறந்தவர்கள். சிறந்த கற்பனைவாதிகள். குடும்பவாழ்க்கை சரிவர அமையாது. எனவே ஆன்மிகத் தலைவராகவோ, நீதிபதியாகவோ மாறிவிடு வார்கள். பேரும் புகழும் அடைவார்கள். நல்ல திறமைசா-கள். அரசிய-லும் ஈடுபட்டு எம்.எல்.ஏ., எம்.பி போன்ற பதவிகளை அடைந்து, மக்களுக்கு உண்மையான சேவைகள் செய்வார்கள்.

பொதுவாக 7-ஆம் எண் ஆதிக்கத்தில் பெயர் வைப்பதைத் தவிர்க்கவேண்டும். கேது வினால் ஏற்படும் இன்னல்கள் நீங்க விநாயகரை வழிபடலாம். கேது காயத்ரி மந்திரம் படிக்கலாம். வைடூரியம் அல்லது சந்திரகாந்தக் கல் அணியலாம். வெள்ளை, இளம் மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் சிறந்த வையே. கருஞ்சிவப்பையும், கருப்பு நிறத் தையும் தவிர்க்கவேண்டும். பல வண்ண உடைகளும் அதிர்ஷ்டமானவை.

அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20, 29; 7, 16, 25.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட இரத்தினங்கள்: வைடூரியம், சந்திரகாந்தக்கல்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளம் மஞ்சள், பச்சை, நீலம்.

அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர், சித்ரகுப்தன்.

அதிர்ஷ்ட மலர்: செவ்வரளி.

அதிர்ஷ்ட மு-கை: அறுகம்புல்.

அதிர்ஷ்ட உலோகம்: துருக்கல்.

(தொடரும்)