இன்று குடும்பமென்பது கணவன்- மனைவி, மகன் அல்லது மகள் என்கிற மூவராக மாறிவிட்டது. ஒரு பிள்ளையைப் படிக்கவைத்து ஆளாக்குவதே இன்றைய பொருளாதாரச் சூழலில் பெரும் போராட்டமாக உள்ளபோது அடுத்த குழந்தையென்பது அனாவசியமாகிறது. ஒரே குழந்தையென்றால் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, நினைத்ததைப் படிக்க வைத்து, பெரிய அளவில் வாழவைக்கலாம் என்னும் ஆசையும் லட்சியமும் சாத்தியமாகும் என பலர் முடிவெடுக்கின்றனர். பொருளாதார மேதைகள்போல் முடிவெடுத்தபின், காலத்தால் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. குழந்தைக்கு சிறு நோய்வந்ததும் ஏதாவது நடந்துவிடுமோ- நடந்துவிட்டால் என்னவாகும்- ஒரே பிள்ளையை வைத்திருக்கிறோமே என்று பயமாகி, பதட்டமாகி விடுகின்றனர்.
பெற்றோர்களாகிய தங்களுக்கு ஏதாவது பாதிப்பென்றாலும் பயமாகிவிடும். நாம் இல்லையென்றால் நம் பிள்ளைக்கு யார் துணை? தனிமரம் தோப்பாகாது என்பதைப் பலர் காலம்கடந்தே உணர்கின்றனர்.
பெற்றோர்களுக்குத் தங்களுடைய ஒரே குழந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டும் என்னும் கட்டாயம் வந்துவிடுகிறது. அக்குழந்தைக்கு உடல்ரீதியாக- மனரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாமலிருக்க, கேட்கும்போதெல்லாம் கேட்டதை உடனே வாங்கித்தந்து, ஆகாததைச் செய்யவேண்டிய நிலை வந்துவிடுகிறது. சில குழந்தைகள் பெற்றோரின் சூழ்நிலையைப் பயன்படுத்தி மிரட்டி பிடிவாதக்கார்களாக மாறிவிடுகின்றனர்.
தான் சொன்னதே சட்டமென்னும் மன நிலைக்கு மாறி, சில குழந்தைகள் பெற்றோரைப் படாதபாடு படுத்துகின்றனர். மூவர் உள்ள குடும்பத்தில் பாதிப்பு ஏற்படாதவரை மகிழ்ச்சியாக- நிம்மதியாகத்தான் இருக்கும். ஒருவருக்கு இழப்பு ஏற்பட்டால் வாழ்க்கையே நிர்மூலமாகிவிடும்.
உடன்பிறப்பில்லாத குழந்தைகள் அவசர உதவிக்குக்கூட பிறரை எதிர்பார்த்து, சார்ந்து வாழவேண்டியிருக்கும். தோழர்கள் இருந்தாலும், எதிர்பார்ப்பில்லா, உண்மை யான நேசம் கிடைக்காது. தான் ஆடவில்லை யென்றாலும் தன் தசை ஆடும்
இன்று குடும்பமென்பது கணவன்- மனைவி, மகன் அல்லது மகள் என்கிற மூவராக மாறிவிட்டது. ஒரு பிள்ளையைப் படிக்கவைத்து ஆளாக்குவதே இன்றைய பொருளாதாரச் சூழலில் பெரும் போராட்டமாக உள்ளபோது அடுத்த குழந்தையென்பது அனாவசியமாகிறது. ஒரே குழந்தையென்றால் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, நினைத்ததைப் படிக்க வைத்து, பெரிய அளவில் வாழவைக்கலாம் என்னும் ஆசையும் லட்சியமும் சாத்தியமாகும் என பலர் முடிவெடுக்கின்றனர். பொருளாதார மேதைகள்போல் முடிவெடுத்தபின், காலத்தால் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. குழந்தைக்கு சிறு நோய்வந்ததும் ஏதாவது நடந்துவிடுமோ- நடந்துவிட்டால் என்னவாகும்- ஒரே பிள்ளையை வைத்திருக்கிறோமே என்று பயமாகி, பதட்டமாகி விடுகின்றனர்.
பெற்றோர்களாகிய தங்களுக்கு ஏதாவது பாதிப்பென்றாலும் பயமாகிவிடும். நாம் இல்லையென்றால் நம் பிள்ளைக்கு யார் துணை? தனிமரம் தோப்பாகாது என்பதைப் பலர் காலம்கடந்தே உணர்கின்றனர்.
பெற்றோர்களுக்குத் தங்களுடைய ஒரே குழந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டும் என்னும் கட்டாயம் வந்துவிடுகிறது. அக்குழந்தைக்கு உடல்ரீதியாக- மனரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாமலிருக்க, கேட்கும்போதெல்லாம் கேட்டதை உடனே வாங்கித்தந்து, ஆகாததைச் செய்யவேண்டிய நிலை வந்துவிடுகிறது. சில குழந்தைகள் பெற்றோரின் சூழ்நிலையைப் பயன்படுத்தி மிரட்டி பிடிவாதக்கார்களாக மாறிவிடுகின்றனர்.
தான் சொன்னதே சட்டமென்னும் மன நிலைக்கு மாறி, சில குழந்தைகள் பெற்றோரைப் படாதபாடு படுத்துகின்றனர். மூவர் உள்ள குடும்பத்தில் பாதிப்பு ஏற்படாதவரை மகிழ்ச்சியாக- நிம்மதியாகத்தான் இருக்கும். ஒருவருக்கு இழப்பு ஏற்பட்டால் வாழ்க்கையே நிர்மூலமாகிவிடும்.
உடன்பிறப்பில்லாத குழந்தைகள் அவசர உதவிக்குக்கூட பிறரை எதிர்பார்த்து, சார்ந்து வாழவேண்டியிருக்கும். தோழர்கள் இருந்தாலும், எதிர்பார்ப்பில்லா, உண்மை யான நேசம் கிடைக்காது. தான் ஆடவில்லை யென்றாலும் தன் தசை ஆடும் என்னும் உண்மை, வலியானது உடன்பிறப்பில் லாமல் ஏமாந்து, அவதிப்படும் பலருக்கு தான் புரியும். உடன்பிறந்தவர்கள் உடன் இருக்கும்வரை அதன் அருமை தெரியாது. தனித்து விடும்போதே புரியும். பெற்ற பிள்ளைகளுக்காக உடன்பிறந்தவர்களைப் பகைத்துக்கொண்ட பலர், பிள்ளைகளாலும், மருமகள்- மருமகன் கொடுக்கும் தொல்லை களாலும் மனம் வெதும்பியே இறந்துள்ளனர்.
உடன்பிறப்பென்பதே ஒரு சொத்து. "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
அண்ணன் என்று ஏன் சொல்லவில்லையென் றால், மூத்த சகோதரர்களுக்கு எப்போதும் தானே முதல்வன் என்னும் "ஈகோ' இருந்துகொண்டே இருக்கும். தனக்குமேல் இளைய சகோதரன் வளர்வதை, வாழ்வதைப் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு குடும்பத்தில் சகோதரர்களை மதித்து, அவர்களின் வாழ்க்கையைத் தங்களுடைய வாழ்க்கையாக நினைத்து வாழ்கிறார்களோ, அவர்கள்தான் பல தலைமுறையாக ஊர்போற்ற வாழ்வார்கள். அப்படிப்பட்ட சகோதர பந்தத்தில் இளைய சகோதரத்தை அறிய ஜாதகத்தில் மூன்றா மிடத்தின் நிலையை அறியவேண்டும்.
மூன்றாமிடம்
செவ்வாய் கிரகமானது உடன்பிறந்த சகோதரரைக் குறிக்கும். மூன்றாமிடம் இளையவரையும், மூத்த சகோதரத்தை பதினோறாமிடமும் குறிக்கும். மூன்றாமிட நிலையைப் பொருத்து இளைய உடன்பிறப்பு களின் அன்பு, உதவி, ஒத்துழைப்பு, லாபம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். தற்போது பெரும்பாலும் தாத்தாவின் உடன்பிறந்த பங்காளி, அப்பாவுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள்மீதான பாசமும் பற்றும் குறைந்துவிட்டது. மேலும் இன்று உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து, ஒரு நபராக வாழவேண்டிய சூழல் வந்துவிட்டது. இதனால் இன்று நண்பர்கள்தான் உடன்பிறந்தவர்கள் என்னும் நிலையில், அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள சகோதர கிரகமாகிய செவ்வாயின் வலுத்தன்மையைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. வயதில் மூத்த நண்பரை மூத்த சகோதரராகவும், தன்னைவிட வயது குறைந்தவரை இளைய சகோதரராகவும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மூன்றா மிட நிலையைப் பொருத்து நல்ல, கெட்ட இளவயது நண்பர்கள் அமைவர்.
சகோதர தோஷம்
சகோதர கிரகமான செவ்வாய் மூன்றா மிடத்தில் இருந்தால் காரகோபாவ நாஸ்தி ஏற்பட்டு, சகோதர ஸ்தானம் பாதிக்கப்படும். இளைய சகோதரம் கிடையாது. குரு போன்ற சுபகிரக பார்வை, இணைவு சுபத்தன்மை பெற்று, 3-ஆமிடத்தில் செவ்வாய் இருந்தால் உடன்பிறப்புகள் குறைவு. 3-ஆம் அதிபதி 6, 8, 12- ஆமிடங்களில் மறைந்தாலோ, நீசம் பெற்றாலோ, செவ்வாய் நீசம், பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்று பலமிழந்தாலோ உடன்பிறப்புகள் இல்லாமலோ, பிரிந்தோ, இறந்தோ இருக்க நேரும். சூரியன், 3-ஆம் அதிபதியுடன் சேர்ந்து 8-ல் இருக்க, சனிக்கு 7-ஆமிடத்தில் செவ்வாய் அல்லது ராகு இருக்க, சந்திரன், ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருக்க, 6 -ஆம் அதிபதி 3-ஆமிடத்தில் இருந்தால், உடன்பிறந்தவர் இன்றி தனித்தே வாழ்வர். பொதுவாக இதுபோன்ற அமைப் பிருந்தால் நல்ல நண்பர்கள்கூட அமையமாட் டார்கள்.
இளைய சகோதரர்களால் நன்மை நான்கு, ஒன்பதாமிடங்கள் கெட்டு மூன்றாமிடம் வலுப்பெற்றவர்கள் உடன்பிறந்த வர்களால் பராமரிக்கப்பட்டு, கல்வி, திருமணம், தொழில்வரை உதவிசெய்வர்.
3-ல் சந்திரன் இருந்தால் நண்பர்களாலும், 3-ல் குரு இருந்தால் இளைய சகோதரராலும் ஆதரவு பெறுவர். 3-ல் புதன் இருந்தால் சகோதரர்களுக்குள் பரஸ்பரம் உதவிக் கொள்வர். 3-ல் சுக்கிரன் இருந்தால் பெண் சகோதரத்தால் பாசம் கிடைக்கும். 3-ஆம் அதிபதி 4-ல் இருந்தால் இளைய சகோதரரால் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். 3-ஆம் அதிபதி 11-ல் இருந்தால் சகோதரர்கள் ஒற்றுமையாய் சேர்ந்து தொழில்செய்து லாபம் பெறுவர். 3, 4-ஆம் அதிபதி, செவ்வாய் பலம்பெற்றால் உடன் பிறந்தவரால் ஆதாயம், சொத்து கிடைக்கும். 4, 10-ஆம் அதிபதி, செவ்வாய் பலமாக இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கும்.
இளைய சகோதரர்களால் தீமை 3-ல் சூரியன் இருந்து, 3-ஆமிடத்தை பாவ கிரகங்கள் பார்த்தால் சகோதரன் கருவிலேயே அழிவான். அல்லது சகோதர வர்க்கம் கிடையாது. அப்படியே இருந்தாலும் துரோகி யாவார். நன்மையான பலன் தராது. 3-ல் உள்ள செவ்வாய் இளைய சகோதரத்தைத் தடுக்கும். 3-ல் ராகு, கேது இருப்பது சகோதரத்தை விரோதியாக்கும். 3-ல் உள்ள சனி இளைய சகோதரத்தைக் கெடுக்கும். 4-ஆம் அதிபதி 3-ல் இருந்தால் ஜாதகருக்கு வரவேண்டிய சொத்து, வீடு, வாகனத்தைத் தடுத்து, சகோதரர் அபகரித் துக்கொள்வர். 3-ஆம் அதிபதி 6-ல் இருந்தால் எதிரியாகவும், 8, 12-ல் இருந்தால் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். 4-ஆம் அதிபதி, 10-ஆம் அதிபதி, செவ்வாய் இணைந்து 12-ல் இருந்து நீசமும் பெற்றால், முன்னோர் சொத்தில் பிரச்சினை தந்து, பங்கு கிடைக்காமல் பகை வளர்க்கும்.
4-ஆமிடம் வீடு, வாகனம், சொத்து, உறவினர் ஸ்தானம் என்பதால், 3-ஆம் அதிபதி 6, 8, 12-ல் நின்று பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால், பங்காளி சண்டையால் காவல் நிலையம், நீதிமன்றம் செல்ல நேரும். ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனிக் காலமாக இருந்தால் கொலைவரை செல்லும். 3-ஆம் அதிபதி 4-ல் நீசம்பெற்றால் உடன்பிறந்த வர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், செய்தது போல் பேசுவர். பாசமில்லாதவராக இருப்பர். உரிய பங்குதராமல் தியாகிபோல் பேசுவர். 3-ஆம் அதிபதி 4-ல் இருந்தால் சகோதரர் சொத்தை அபகரிப்பர். இதே அமைப்பு கொண்ட வர்கள் இன்றைய காலத்தில் சகோதர உறவான நண்பர்களாலும் ஏமாற்றப்படுவர்.
பரிகாரம்
முதன்முதலில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு "முத்தான வாழ்க்கைக்கு மூன்று குழந்தைகள்' என சொல்லப்பட்டது. அடுத்து,
"நாம் இருவர் நமக்கு இருவர்' எனச் சொல்லி,
இப்போது, "நாம் இருவர் நமக்கு ஒருவர்' என
மாற்றப்பட்டது. அடுத்து இன்று "நாமே குழந்தை;
நமக்கேன் குழந்தை' என்கிற நிலையாகிவிட்டது. படிப்படியாகக் குடும்பக்கட்டுபாடு திட்டம் வெற்றிபெற்று, இன்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் குடும்பம் வந்துவிட்டது. இனி இங்கு இதனை மாற்றமுடியாது. இன்று உடன்பிறந்தவர் களைப் பணமாக- சொத்தாகப் பார்க்கும் காலத்தில் இருக்கிறோம். நம் அவசரத்திற்குப் பணம் தந்து உதவியும் செய்பவனே சகோதரன் என நினைக்காமல், உடன்பிறந்தவர்களிடம் வாங்குவதையே எண்ணாமல் கொடுக்க முயற்சி செய்யுங்கள். உடன்பிறந்தவர் உண்மை யான அன்புடன் உடன்வருவார். உடன்பிறந்த வர்களுக்குக் கொடுக்க நினைத்தாலே பொருளா தாரச்சூழல் தோஷம் மாறி பணம் பெருகும்.
இன்றைய தலைமுறையில் நண்பர்கள் சொத்தில் பங்கு கேட்கமாட்டார்கள். நண்பர் களின் பிள்ளைகளும் பங்காளி பாகம் கேட்க வரமாட்டார்கள் என்னும் நம்பிக்கையில்தான் பலர் உடன்பிறந்த சகோதரர்களுக்கு முக்கியத் துவம் தராமல், நண்பர்களுடன் உறவாடுகிறார் கள். நண்பர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுதல், நண்பர்களால் தன் மனைவியை இழத்தல் போன்றவையும் நிகழ்கின்றன. தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும் நாள் வரும்வரை, சகோதரர்களாகவே பாவித்து உறவு மேற்கொள்வார்கள். அதுவரை உடன்பிறந்தவர் உடனிருந்து கெடுப்பவரைப் போலவேதான் தோன்றும். குடும்ப உறவுகளுக்கு இதுவே கடைசி தலைமுறை. இதிலும் சொத்து, பணத்தின் அடிப்படையில் பிரிந்து, பிரித்துப் போனால், அடுத்த தலைமுறையினருக்கு உடன் பிறப்பும் இல்லை; பங்காளியும் இல்லை.
இன்றைய காலத்தில் நல்லவர்களைவிட தீயவர்கள் பெருகிவருகின்றனர். அப்படிப் பட்டவர்களுடன் பயணிக்க, நம் பிள்ளைகளைத் தனியாகத் தவிக்கவிட்டுச் செல்கிறோம். அதனால் சில விஷயங்களில் உடன்பிறப்பு, பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து, அமர்ந்து பேசி, சொந்தபந்தங்களைப் பிள்ளைகளுக்குப் பழக்கிவிட்டுச் செல்வது உத்தமம். குற்றம் பார்க்கின் சுற்றமில்லாமல் போய்விடும். கடைசி காலத்தில் தனியறையில் முற்றம் பார்த்து காலத்தை முடிக்க வேண்டியதாகிவிடும். அதனால் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று குலதெய்வத்தை வழிபட, பங்காளிகள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்து வணங்கவும். நம் குலதெய்வத்தின்முன் மனமுருக வேண்டினால், முன்னோர்கள் ஆன்மாவின் ஆசிபெற்று நலமுடன் வாழலாம்.
செல்: 96003 53748