Advertisment

அடுத்தடுத்த கிரக பெயர்ச்சி... அவஸ்தை படப் போகும் நான்கு ராசிக்காரர்கள்! நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/next-planetary-transit-four-zodiac-signs-will-suffer-misfortune-satirist

2025 சனிப் பெயர்ச்சி குருப் பெயர்ச்சி ராகு- கேது பெயர்ச்சி என அடுத்தடுத்து கிரகப் பெயர்ச்சிகள் கோடி கோடியாய் அள்ளித் தரப்போகிறது..

நான் ஆசையாய் காத்திருக்கிறேன் தமிழ்ப் புத்தாண்டில்

அத்தனையும் நிறைவேற அருள்புரிவாய் ஆண்டவரே...

நல்லதைப் பேசுவோம் நல்லதே நடக்கும் என

சொல்லும் நல்லவர்கள் மத்தியில் வாழும்

உண்மை பேசும் நையாண்டிச்சித்தரே!

மகரத்திற்கு ஏழரைச் சனி ஒன்றும் செய்யாது

Advertisment

ss

ஏனென்றால் சனியின் சொந்த வீடு என்றார்கள்..

ஆனால் நான் பட்டபாடு எனக்குதான் தெரியுமய்யா..

நிஜத்தை நம்பாமல்

அன்றாடம் வீடியோ பார்த்து கெட்டுப்போன

அப்பாவியாய்க் கேட்கிறேன்

இனியாவது மகர ராசி உயிர் பெறுமா?

கெடுபலனாக இருந்தாலும் உண்மையைச் சொல்லுங்கள்..

என் கண்ணுக்கு எட்டிய தூரம் நல்லதே

காணவில்லை...

உண்மையைச் சொல்லவிடாமல்

தடுக்கும் உத்தமர்களே!

இனியாவது உஷாராக இருங்கள்..

நான் கெட்ட பலன் சொல்லவில்லை

நீங்கள் கெட்டுப்போகாமல்

இருப்பதற்கே பலன் சொல்கிறேன்..

மனதில் பட்டதை பேசும்

மகர ராசிக்காரா

சனிப்பெயர்ச்சி உன் மன நிலையை

மாற்றி வைத்திருக்கிறான்..

பொறுத்தார் பூமி ஆள்வார்

இனி வரும் ம

2025 சனிப் பெயர்ச்சி குருப் பெயர்ச்சி ராகு- கேது பெயர்ச்சி என அடுத்தடுத்து கிரகப் பெயர்ச்சிகள் கோடி கோடியாய் அள்ளித் தரப்போகிறது..

நான் ஆசையாய் காத்திருக்கிறேன் தமிழ்ப் புத்தாண்டில்

அத்தனையும் நிறைவேற அருள்புரிவாய் ஆண்டவரே...

நல்லதைப் பேசுவோம் நல்லதே நடக்கும் என

சொல்லும் நல்லவர்கள் மத்தியில் வாழும்

உண்மை பேசும் நையாண்டிச்சித்தரே!

மகரத்திற்கு ஏழரைச் சனி ஒன்றும் செய்யாது

Advertisment

ss

ஏனென்றால் சனியின் சொந்த வீடு என்றார்கள்..

ஆனால் நான் பட்டபாடு எனக்குதான் தெரியுமய்யா..

நிஜத்தை நம்பாமல்

அன்றாடம் வீடியோ பார்த்து கெட்டுப்போன

அப்பாவியாய்க் கேட்கிறேன்

இனியாவது மகர ராசி உயிர் பெறுமா?

கெடுபலனாக இருந்தாலும் உண்மையைச் சொல்லுங்கள்..

என் கண்ணுக்கு எட்டிய தூரம் நல்லதே

காணவில்லை...

உண்மையைச் சொல்லவிடாமல்

தடுக்கும் உத்தமர்களே!

இனியாவது உஷாராக இருங்கள்..

நான் கெட்ட பலன் சொல்லவில்லை

நீங்கள் கெட்டுப்போகாமல்

இருப்பதற்கே பலன் சொல்கிறேன்..

மனதில் பட்டதை பேசும்

மகர ராசிக்காரா

சனிப்பெயர்ச்சி உன் மன நிலையை

மாற்றி வைத்திருக்கிறான்..

பொறுத்தார் பூமி ஆள்வார்

இனி வரும் மூன்று ஆண்டுகள்

ராகு கேதுவின் பிடியில் வாழப் போகிறாய்..

பிரம்மாண்டத்தை நம்பாதே

புகழ்பவனிடம் கவனம்..

குரு பார்வை இல்லாத நேரம்

உடல்நிலையில் அக்கறை செலுத்து..

உள்ளதை வைத்து நல்லது செய்..

வினை தீர்க்கும்

விக்னேஸ்வரரை வழிபடு

விழி நீர் வராதப்பா...

கடக ராசிக்காரன்..

யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத எனக்கு

அஷ்டம சனி ஒன்றும் செய்யாது என

எகத்தாளமாய் இருந்தான்..

இப்போது என்ன நிலையில் இருக்கிறான் என்பதை

சிம்ம ராசிக்காரன் நீ கேட்டுத் தெரிந்துகொள்..

நீதி தேவன் சனி பகவான்

"நல்லவன் நீ என்று நீயே சொல்லிக்கொண்டால்

நான் எதற்கு'' என கேள்வி கேட்பார்..

அஷ்டமத்துச்சனியில் அகப்பட்டவனுக்கு

அவன் செய்த கர்ம பலனை அனுபவித்தே

ஆகும் காலமப்பா..

அஷ்டமச்சனியில் அகம்பாவம் இன்றி

அமைதியாய் நீ இருந்தால்

அற்புதமான பலன்களைப் பெறலாம்..

நீ செய்யும் தவறை சுட்டிக்காட்ட

ஒருவன் வருவான்

அவனை அவமானப்படுத்தி அனுப்பாதே..

அக்கறை உள்ளவன் அவன் ஒருவனே..

அவனை விரட்டி அடித்து வம்பில் மாட்டிக்கொள்ளாதே..

கோட்சாரத்தில் சனியும் ராகுவும்

பரிவர்த்தனையாகிறார்கள்..

கடக, சிம்ம ராசிக்காரர்களுக்கு

மாற்றம் ஒன்றும் ஏற்படாது

ஏமாற்றம் தரக்கூடிய நேரம்... எச்சரிக்கை... எச்சரிக்கை...

சனியின் ஆட்டம் ஆரம்பம்

மேஷ ராசிக்காரர்களுக்கு

மோசமான காலம் துவங்கிவிட்டது..

யார் என்ன சொன்னாலும்

கெஞ்சிக் கூத்தாடினாலும்

பணத்தைக் கொடுத்துஏமாற்றம் அடையாதே..

ஜாமீன் கையெழுத்து போட்டு

சகல சந்தோஷத்தையும் இழப்பாய்..

புத்திசாலித்தனமாய் பிழைக்க

உன் தகுதிக்கேற்ப கடன் வாங்கி வீடு கட்டு..

பிரம்மாண்டமானதை யோசிக்காதே

புகழ்பவனை நம்பி எதிலும் இறங்காதே..

யாரிடமும் அன்பு வைத்தால் வம்பு வந்துசேரும்

புதியவர் நட்பை கவனத்துடன் கையாளு..

ஏழு வருடமும் எச்சரிக்கை தேவை

ஏழு நிமிடத்திலும் மாறிவிடும்

எச்சரிக்கை எச்சரிக்கை...

ஜென்ம குருவும் கர்மச் சனியும்

கொண்ட மிதுன ராசிக்காரா!..

கடந்துவந்த ரிஷப ராசிக்காரனிடம்

பலனை போய் கேளு..

பிரிவையும் பிரச்சினையும்

இழப்பையும் வேதனையையும்

வீழ்ச்சியும் விரக்தியும் தந்து

தடுமாற வைத்துவிட்டார்..

சுப காரியம் எதையும் தொடங்கிவிடாதே

பாதியில் நின்று வீதியில் நிறுத்திவிடும்..

உன்னை நேசித்த ஒருவரை இழப்பாய்

இருண்ட காலம் உன் கண்முன்னே வந்துபோகும்..

தசாபுக்தி தவறாய் போனால்

தர்ம சங்கடமும் கர்மச் சங்கடமும்

உனக்கே நேர்ந்துவிடும்..

ஜாக்கிரதை சகலத்திலும் ஜாக்கிரதை..

ஈரேழு மாதம் பொறுத்திரு..

குரு வளமுடன் உன்னை காப்பாற்றும்...

பதவி இருந்தாலும் பறிபோகும்

பதவி கொடுத்தும் பறிபோகும்..

ராகு கொடுப்பதை சனி தடுப்பார்

குரு கிடைப்பதை தக்க வைப்பார்..

கலவையான பலன்கள்

கன்னி ராசிக்காரனை கலங்க வைக்கும்..

நித்திய கண்டம் பூரண ஆயுசு..

அடுத்த ஐந்து ஆண்டுகள்

அவ்வப்போது நன்மைகள் அவ்வளவுதான்..

கண்டகச் சனி நடக்கும்போதே

காசு விஷயத்தில் கவனம்..

அஷ்டமச்சனி வருவதற்குள் அலர்ட் ஆகிவிடு..

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில்

குடை பிடிப்பான்...

நீ இதுவரை பட்டது கொஞ்சம் நஞ்சமல்ல

இனி அதிர்ஷ்டம் வரும்பொழுது

அத்தனையும் சேமித்துக்கொள்

அவதிப்படாமல் வாழ்வாய்...

அர்த்தாஷ்டமச் சனி விலகி

அஷ்டம குருவிற்குள் நுழைகிறார்

அர்த்தாஷ்டம ராகு பிரம்மாண்டத்தைக் காட்டி

பின் மண்டையில் சாத்துவார்...

உன் ஆணவம் அழியும் காலம்

உண்மையை நம்புகிறவனுக்கு

ஒன்பதில் குரு வரும்போது ஓரளவு காப்பாற்றுவார்..

வீம்புக்கு விரக்தி ஆகும் விருச்சிக ராசிக்காரா!

நீ ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருக்க

வீட்டுக்குள் வேதாளம் முருங்கை மரம் ஏறும்..

இழப்புகள் எதுவானாலும் ஏற்றுக்கொள்

இருப்பதை வைத்து இயங்கு இன்பம் கிட்டும்...

குறி பார்த்து அடிப்பேன் என சொல்லி

போராடும் வில் அம்புகொண்டு

தடுமாறி விழுந்த தனுசு ராசிக்காரரே..

ஏழில் குரு வந்து ஏற்றம் தரப்போகிறது

வீடு, வாகன யோகம் தரும் அர்த்தஷ்டமச் சனி

அத்தனையும் சமாளிக்க மூன்றில் ராகு

இதுவரை சந்தோஷம் தராத சனி

இனி உங்களுக்கு நன்மையைத் தருவார்...

பழைய பாக்கி எதுவானாலும்

பயத்துடனே பரிமாறுவார்...

சந்தோஷம் பொங்கும் சில சங்கடத்துடன்...

கும்பத்திற்கு ஜென்மச் சனி விலகும் காலம்

ஜென்ம ராகு... பாத சனி வந்தபோது

பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவான்..

அதிக கஷ்டம், அனைத்தும் நஷ்டம்

இந்த நிலை இனி மாறும்...

கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும்

இஷ்டப்பட்டதெல்லாம் கிடைக்கும் இனிய நேரம்...

அடுத்தடுத்த கிரகப்பெயர்ச்சி

அமோகப் பலன்களை அள்ளித் தரும்...

கலங்காதே! கவலைகள் தீரும்...

மீண்டு வருவான் மீன ராசிக்காரன்...

உயிர்த்தெழுவான் துலா ராசிக்காரன்...

செய்வினை அகன்று ஜெயிப்பான்

ரிஷப ராசிக்காரன்...

மகத்துவம் பெறுவான் மகர ராசிக்காரன்...

செல்: 96003 53748

bala180425
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe