Advertisment

புதிய வாஸ்து சாஸ்திரம் - உடலே உன் வீடு!

/idhalgal/balajothidam/new-vastu-shashtra

Vastu

"வாள்காட்டும் அமைப்பில் யார்க்கும் வாகனம் பதவி பட்டம்

வேள் காட்டும் வனப்பு மேன்மை வேலையாள் கன்று கரலி

நான்காட்டும், உடுக்கை அன்னம் அணிவகைல் காட்டும் அன்னார்

ஆள் காட்டும் விரலின் கீழே ஆனது குருவின் மேடு.'

-கமல முனிவர்.

பொருள்: ஆள்காட்டி விரலின் அடி பாகத்தில், மூன்றாம்

Advertisment

அங்குலாஸ்திக்கு கீழே, ஆயுள் ரேகைக்கு மேலிருக்கும் மேடே, குருமேடு. இந்த மேடு, கோபுரம்போல் உயர்ந்திருந்தால், மன்மதனைப்போன்ற அழகும் செல்வசெழிப்பும் ஆள், படை, அம்பாரியுடன் செல்வாக்கான ராஜயோகம் உண்டாகும்.

1. சுக்கிரமேடு, 2. கீழ் செவ்வாய்மேடு, 3. குருமேடு, 4. சனிமேடு, 5. சூரியமேடு, 6. புதன்மேடு, 7. மேல் செவ்வாய்மேடு, 8. செவ்வாய் சமவெளி, 9. சந்திர மேடு.

Vastu

Advertisment

மகான்கள் தங்கள் அருளாசியைத் தரும்போது கைகளைஉயர்த்தி, உள்ளங்கை தெரியுமாறு ஆசீர்வதிப்

Vastu

"வாள்காட்டும் அமைப்பில் யார்க்கும் வாகனம் பதவி பட்டம்

வேள் காட்டும் வனப்பு மேன்மை வேலையாள் கன்று கரலி

நான்காட்டும், உடுக்கை அன்னம் அணிவகைல் காட்டும் அன்னார்

ஆள் காட்டும் விரலின் கீழே ஆனது குருவின் மேடு.'

-கமல முனிவர்.

பொருள்: ஆள்காட்டி விரலின் அடி பாகத்தில், மூன்றாம்

Advertisment

அங்குலாஸ்திக்கு கீழே, ஆயுள் ரேகைக்கு மேலிருக்கும் மேடே, குருமேடு. இந்த மேடு, கோபுரம்போல் உயர்ந்திருந்தால், மன்மதனைப்போன்ற அழகும் செல்வசெழிப்பும் ஆள், படை, அம்பாரியுடன் செல்வாக்கான ராஜயோகம் உண்டாகும்.

1. சுக்கிரமேடு, 2. கீழ் செவ்வாய்மேடு, 3. குருமேடு, 4. சனிமேடு, 5. சூரியமேடு, 6. புதன்மேடு, 7. மேல் செவ்வாய்மேடு, 8. செவ்வாய் சமவெளி, 9. சந்திர மேடு.

Vastu

Advertisment

மகான்கள் தங்கள் அருளாசியைத் தரும்போது கைகளைஉயர்த்தி, உள்ளங்கை தெரியுமாறு ஆசீர்வதிப்பது வழக்கம்.ஞானமும், தெய்வீக அருளும்நிறைந்த அவர்களின் உள்ளங்கையின் குருமேட்டைக் காணும்போது நம் துன்பங்கள், சூரியனைக்கண்ட பனிபோல் விலகிவிடும்.இடதுகை, மனதின் ஆசையையும், வலதுகை, அந்த ஆசை நிறைவேறு வதையும் குறிக்கும். நம் எண்ணங்கள் ஈடேறவேண்டும் என்பதாலேயே, இரு கரம் குவித்து, கடவுளை வணங்குகிறோம். கைகூப்பி வணங்கும்போது சக்தி நிலைகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

கைகளை இணைத்து நெற்றிக்கு நேராகவைத்து வணங்குவது நம்எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, முழுமையாகக் கவனம்செலுத்த உதவும். இரண்டு கைகளையும் இணைப்பதால் மூளையின் இரண்டு பக்கங்

களும் சீராகச் செயலாற்றும்.குருமேடு ஆள்காட்டி விரலுக்குக் கீழே, கீழ் செவ்வாய் மேட்டிற்கு மேல் அமைவதே குரு மேடு. மற்ற மேடுகளை விட, குருமேடு உயர்ந்திருக்கும் கைகளையுடையவர்களுக்கு, அதிஷ்ட மான வாழ்க்கை அமையும்.

குருமேடு கோபுரம்போல் உயர்ந்தால்

  • தர்ம சிந்தனையுடையவர்.
  • தெய்வ நம்பிக்கை அதிகம்.
  • நேர்மையானவர்.
  • பேராசிரியர்.
  • சட்டம், தர்ம சாத்திரங்களை மதிப்பவர்.
  • குருமேடு அளவுக்கதிகமாக உயர்ந்து காணப்பட்டால், கர்வமும், கொடூர எண்ண மும் கொண்டவராக விளங்குவார்.
  • குருமேடு, தாழ்ந்திருந்தால், குரு தசைஅல்லது குரு புக்திகளில் துன்பத்தைஅனுபவிப்பார்.
  • குருமேட்டிலுள்ள நட்சத்திர அடை யாளம், அதிக சக்தி, மரியாதை மற்றும் உயர் பதவியை உறுதிப்படுத்து கிறது.
  • ஜாதகத்தில் குருபகவான் ஆட்சி,உச்சம்பெற்ற நிலையிலோ, திரிகோணத்திலோ இருக்க, அந்த ஜாதகருக்குகுரு தசை நடக்கும் காலத்தில் ஆள்காட்டி விரலுக்கு கீழ் உள்ள குருமேடுமற்ற மேடுகளைக் காட்டிலும் உயர்ந்து காணப்படும்.
  • குரு மேட்டின்மேல்பகுதியில் நட்சத்திரம் இருந்தால், அதனுடன் ஆயுள் ரேகை, தலைமை ரேகை மற்றும் விதி ரேகை போன்றவை தீர்க்கமான வடிவம் பெற்றிருந்தால், அந்தநபர் எந்த துறையிலும் வெற்றி பெறுவார்.
  • நட்சத்திரக் குறிகுருமேட்டின்கீழ்பகுதியில் இருந்தால், சிறப்பாக இருக்காது.இத்தகையவர்கள் பிரபலமானநபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பார்கள். எல்லோரையும் முன்னேற்றப் பாதையில் ஏற்றிவிடும் ஏணியாகவே இருப்பார்.
  • குருமேடு உயர்ந்து,அந்த மேட்டின்மேல் அழுத்தமான பெருக்கல் குறி இருந்தால், ஜோதிடத்தில் சிறந்து விளங்குவார்.
  • குருமேட்டில் நேர் ரேகைகள் இருந்தாலோ, முக்கோணக் குறியீடு இருந்தாலோ, நட்சத்திரக் குறியீடு இருந்தாலோ அவர்கள் முக்காலத்தையும் உணரக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த நேர்கோட்டின் குறுக்காக சில ரேகைகள் காணப்பட்டால்,காரியங்களில் அடிக்கடி தடை ஏற்படும்.
  • குருமேட்டில், திடீரென்று தோன்றும் கருப்பு மச்சம், அவப்பெயர், சங்கடங்களுக்கு, அறிகுறியாகும். பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு, பதவி பறிபோகும். திருமணத் தடையை உண்டாக்கும்.
  • புத்திர காரகனாகிய குருவின் மேடுநல்லமுறையில் அமைந்தால், நல்ல புத்திரர்கள் அமைவார்கள்.
  • குருமேட்டில் இணை கோடுகள் ஆசிரியர் பணியையும், பெருக்கல் குறி மேடைப்பேச்சாளரையும், நட்சத்திரக் குறி அரசியல் வாதியையும் குறிக்கும்.
  • ஜாதகத்தில், சந்திரனுக்கு கேந்திரத்தில் அமர்ந்தாலும் குருமேடு பிரகாசமாக அமையும்.

சின் முத்திரை (ஞான முத்திரை)

வலதுகையில் ஆள்காட்டி விரலால், பெருவிரலின் நுனியைச்சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் நேராக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை ஆகும்.ஞானத்தைக் கைவிரல்களால் காட்டும் அடையாளமே, சின்முத்திரை. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தம் திருக்கரத்தில் சின்முத்திரையைக் காட்டிக்கொண்டிருக்கிறார். கட்டை விரலுடன், குரு விரலாகிய ஆள் காட்டி விரலின் தொடர்புகுரு தோஷத்தை நீக்கி ஞானத்தைத் தரும்.

பலன்

மன அழுத்தத்தை நீக்கி, உற்சாகம் தரும்.

(தொடரும்)

கந்தர்வநாடி ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன்

செல்: 63819 58636

bala jothidam 12-07-2024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe