"ஒடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா' என்று, அன்றே பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தைக் கூறினார். ஆனாலும் படிப்புதான் வாழ்க்கையென்று பலரும் அந்த வழிக்குச் செல்ல தயங்கினார்கள். ஆனால் இப்பொழுது சூழ்நிலை மாறியுள்ளது. உலகத்தாருடன் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

சில பெற்றோர்கள், "என் பிள்ளைக்கு கடும் முயற்சி, பயிற்சி, கடும் உழைப்பிருந்தும் மாநில அளவில் வரமுடிந்ததே தவிர இந்திய அளவில் வர முடியவில்லையே' என்ற ஏக்கம் இருக்கும். அதனால் தூக்கம் தொலைந்து துக்கத்தை மனதில்கொண்டு குழப்பத்தில் இருப்பார்கள். இதற்குப் பல காரணங்கள் இல்லை- ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது.

gg

அவர்கள் பிள்ளைக்கு யோகதசை பருவவயதில் வரவில்லை.

Advertisment

ஒ-ம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கம் வாங்கித்தந்த நீரஜ் சோப்ராவின் பிறந்தநாளை வைத்து அவரது ஜாதகத்தைக் கணித்துள்ளேன். இவர் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். மூன்றாமிடத்தில் லக்னாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். வீரம் பொருந்திய செவ்வாய்க்கு நல்வழிகாட்டும் கிரகங்களாக குருவும் சுக்கிரனும் அமைந்துள்ளன. இவர்களின் சேர்க்கை, நீரஜ் தன் வீரத்தை சரியான இடத்தில் வெளிகாட்ட உதவியது.

சரியான இடமென்றால் என்ன? நம் வீரத்தை பக்கத்து வீட்டுக்காரரிடமோ- நண்பரிடமோ காட்டினால் ஒரு பயனும் இல்லை. அதை ஒரு மைதானத்தில் காட்டினால் அதற்கான பலன் கிட்டும். அதனால் தான் இவர் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்- குரு தசையில்! மேலோட்டமாகப் பார்த்தால் குரு தசை நீசமென்று தோன்றும்.

ஆனால் அவர் பரிவர்த்தனையாக இருப்பதால் வலுக் குறையாமல் இருக்கிறார்.

Advertisment

இங்கே குரு 2-க்கும் 5-க்கும் உடைய ஆதிபத்தியம் கொண்டுள்ளார். இரண்டாமிடம் தனத் தைக் குறிக்கிறது. ஐந்தாமிடம் தன் திறமையைக் குறிக்கிறது. இரண்டு மாபெரும் சுப ஸ்தானங் களுக்கு அதிபதியான குரு மூன்றாமிடமாகிய நீண்டபுகழ்- அழியாப்புகழ் என்று குறிக்கக்கூடிய இடத்தில் அமர்ந்து இவருக்கு புகழும் சேர்த்துக் கொடுத்துள்ளார். குரு, செவ்வாயுடன் பணத்தைக் குவித்தார். ஐந்தாம் வீட்டு ஆதிபத்திய காரணத்தினால் அவர் திறமையை வெளிக்காட்டினார்.

இந்த யோகங்கள் இவருக்கு அமைய முக்கிய காரணம் என்னவென்றால், குருதசை இவருக்கு பருவவயதில் வந்தது. ஒரு விளையாட்டு வீரர் குறைந்தது 17 முதல் 36 வயதுவரைதான் தன் திறமையை முழுமையாக வெளிக் காட்ட வாய்ப்புள்ளது. நடுத்தர வயதில் குரு தசை வந்திருந்தால், இவர் தங்கம் வெல்ல வாய்ப்பில்லை. ஆனால் பல தங்கங்களை உருவாக்கி யிருப்பார். அதாவது தங்கம் வெல்லும் வீரர்- வீராங்கனைகளை உருவாக்கியிருப்பார்.

உதாரணத்துக்கு, கோபிசந்த் ஒரு பேட்மின்டன் வீரர். அவர் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வாங்க முடியவில்லை. ஆனால் அவர் இரண்டு தங்கங்களை உருவாக்கினார். அவர்கள்தான் பி.வி சிந்து மற்றும் சாய் நெஹ்வால். உங்கள் பிள்ளைகளுக்கு யோக தசை பருவவயதில் வந்தால் அவர்கள் தங்கம் வாங்குவார் கள். நடுத்தர வயதில்தான் வருகிறதென்றால் அவர்கள் தங்கத்தை உருவாக்குவார்கள்; வெற்றி நிச்சயம்!

செல்: 90801 23711