Advertisment

12 ராசியினருக்கும் அதிர்ஷ்டம் தரும் நவரத்தினங்கள்! -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/navaratnams-bring-luck-all-12-zodiac-signs-pandit-map-continued-pillais-last

விருச்சிகம்

புதன், செவ்வாய், சுக்கிரன் உதவிக்கரம் தரமாட்டார்கள். குரு, சந்திரன் பேராதரவு தருவார்கள். சூரியன், சந்திரன் யோகக்காரர் கள். மாணிக்கம் அணிய லாம். 10-க்குடைய வரால் நன்மையை எதிர் பார்க்கலாம். புகழ், கீர்த்தி, தொழில் மேன்மை பெறலாம். தோல் சார்ந்த உபாதை மறையும் பித்தம், கபம் போகும்.

முத்து அணியலாம். நற்பலன் பெற உதவும். மாணிக்கத்துடன் இணைந்தும் அணியலாம். சிறுநீர் கோளாறிருந்தால் மறையும். மஞ்சள் புஷ்ப ராகம் அணியலாம். நல்ல சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் தொடரும். வி.ஐ.பிகள் தொடர்பு வரும். ஆன்மிக சிந்தனை மிகையாகும். வியாழக்கிழமை அணிவதால் ஐஸ்வர்யம் பெருகும்.

அணியக்கூடாதவை: பவளம் வேண்டாம். தேகநலம் பாதிக்கும். முயற்சிகள் வீணாகும். செவ்வாயன்று பணப்பரிவர்த்தனை ஏமாற்றம் தரும். சுக்கிரன் 7, 12-க்குரியவர். எனவே வைரம் அணிந்தால் பலவித தொல்லைகள் அணிவகுக்கும். நீலக்கல் ஒத்துவராது. 3, 4-க்குடைய சனி அசையா சொத்தை இல்லாமல் செய்வார். கும்ப ராசியினருடன் கூட்டு வியாபாரம் தவிர்ப்பது நன்று. சுய ஜாதகத்தில் சனி- 4, 5, 9, 10, 11-ல் இருந்தால் சனி மகா தசையில் நீலம் அணியலாம்.

தனுசு

எதிலும் பூரண வெற்றி பெறுபவர்கள். குருவின் அருளாசி பெற்றவர்கள். சிலருக்கு சூதாட்ட மனப் பான்மை இருக்கும் உறவுக்குள் திருமணம் செய்தல் நன்று. சுக்கிரன் 6, 11-க்குரியவர். எனவே சுக்கிர தசையில் வைரம் அணியலாம்.

Advertism

12

புதன் 7, 10-க் குரியவர். எனவே மரகதப்பச்சை, திருமணத்தடை, வியா பாரத் தேக்கம். பிறரிடம் வீண் வாக்குவாதம் போன்றவற்றை உருவாக் கும். இருந்தாலும் மாணிக்கத் துடன் இணைந்து அணிய லாம். எதற்கெல்லாம் பவளம் அணியலாம் என்றால், ரத்தக் கொதிப்பு, அஜீரணம், உடல் வளர்ச்சியின்மை, அதிக வியர்வை, மாதவிடாய் தாமதம், மாலைக் கண், ரத்தப் புற்றுநோய் போன்றவற்றுக்கு அணியலாம். நல்ல கணவர் வர, "அமிதிஷ்ட்' அணிய லாம். பயணம் வெற்றியைத் தரும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந் தோரும் அணியலாம். 2025-ல் பவளம் அணிந்தால் உயர்வைத் தரும். சுக்கிரன் பகையானவர். புதன், சூரியன் துணை புரிவார்கள். அணியவேண்டிய ராசிக்கல் புஷ்பராகம். எல்லோ சபையர் அற்புதமாக செயல் பட்டு வாழ்வின் தரத்தை உயரச்செய்யும். குரு தசையில் அணிவது மிகச்சிறப் பானது. சுப நிகழ்ச்சிகள் தடை யின்றி நடக்கும். தனவரவு வாழ்வை அரண்போல் காக்கும். மாணிக் கம் அணியலாம். சூரியன் 9-க்கு டையவர். புஷ்பராகம் இணைந்து அணிந்தால் பலவித நன்மை கள் நாடிவரும். பவளம் அணியலாம். வேலை வாய்ப்பு, கல்வி, அரசு ஆதரவு, பட்டம், பதவி அமோகமாகும். செவ்வாய்க்கிழமை அணியலாம்.

அணியக்கூடாதவை: முத்து வேண்டாம்.

சந்திரன் 8 குடையவர்; எனவே தவிர்ப்பது நல்லது. நீலக்கல் குருவுக்குப் பகை. பகை உணர்வைத் தரும்; தவிர்க்கவும்.

மகரம்

தங்களை மதிப்பவர்களை நேசித்து நேசக்கரம் நீட்டுபவர்கள். ஜாதகத்தில் மகரத் தில் குரு இருக்க, கடகத்தில் சந்திரன் இருந் தால், பல மனைவி இருந்தாலும் அந்திமக் காலத்தில் சுவைப்பது கேள்விக்குறிதான்.

ராசிக்கு 1, 2-ஆம் இடங்கள் சனி பகவானுக்குரியது. எனவே பணம், வேலை வாய்ப்பு, சொத்து சுகம் சுலமாகும். ஆரோக்கி யம் வலுவாகும். குரு 3, 12-ற்குரியவர். எனவே கெடுதலை உருவாக்கும். சுக்கிரன் 5, 10-க்குடையவர். கல்வியின் தாழ்வு உயரும்.

சுக்கிரன் 5, 10-க்குரியவர். எனவே வைரம் அணியலாம். சனியும் இணைந்து யோகம் தருவார். மரகதம் அணியலாம். பணவரவு, பொருளாதார மேம்பாடு, வியாபாரத் தந்திரம், இவையாவும் வந்துவிடும். புதன் தசையில் அணிதல் சிறப்பு.

சந்திரன் 7-க்குரியவர். எனவே முத்து அணியலாம். முத்தை வெள்ளி உலோகத்தில் பதித்து மோதிரமாகவும் அணியலாம்.

அணியக்கூடாதவை: நீலம் வேண்டாம். கெடுதலுக்குத் துணைபோகும். மாணிக்கம் போராட்டத்தைத் தரும். பவளம் வேண்டாம். வீண்வம்பு, சோதனைமேல் சோதனை வரும். புஷ்பராகம் தவிர்க்கப்படவேண்டும். 3, 12-க்குடையது. வயதான காலத்தில் அணித்தால் வரவேண்டிய சொத்து, பணவரவு வராது. மூட்டுவலி வந்தால் "டர்குவிஸ்' அணியலாம். ஜாதகத்தில் 12-ல் சனி இருந்தால் கருப்புத்துணியில், ஒரு இரும்புத்துண்டு அல்லது மூன்று அங்குல ஆணி, வேப்பிலைச் சருகு அல்லது வேப்பமர விதையை முடிச்சிட்டு, மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவும். வீட்டில் நீல ஊமத்தஞ்செடி வளர்க்கலாம். தீமை போகும்; செடி உள்வாங்கிக்கொள்ளும்.

கும்பம்

புரட்சி சிந்தனையாளர்கள். கற்பனைத் திறன், கலையார்வம் உடையவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவர்கள்.

குரு, சந்திரன், செவ்வாய் உதவிக்கரம் நீட்ட மாட்டார்கள். சுக்கிரன் மட்டுமே யோகக் காரகன். சனி 1, 12-க்குரியவர். ஆரோக்கியம், சொத்து சுகம். பணவரவு தருவார். சுக்கிரன் துணை நிற்பார். ஆடம்பரமான வீடு, சொத்து வாங்கித்தருவார்.

நீலம் அணியலாம்; நன்மை தரும். வைரம் அணியலாம். மரகதமும், இணைத்து அணிந்தால கூடுதல் பலன்பெறலாம். மரகதப் பச்சை அணியலாம். தங்கத்தில் அணிதல் நன்று. புதன்கிழமைகளில், புதன் ஹோரையில் அணிந்தால் நல்ல பலன்தரும்.

அணியக்கூடாதவை: மாணிக்கம் வேண்டாம்; அணிந்தால் கெடுபலன் கூடுதலாகும். வாதம், பித்தம், கபம், தோல் நோய்கள் வீரியமாகும். முத்து அணிய வேண்டாம். சிறுநீர்க் கோளாறு, இதயக் கோளாறு, ஆஸ்துமா உள்ளவர்கள் அணிதல் வேண்டாம்.

புஷ்பராகம் வேண்டாம். 2, 11-க்குடையவர். பணத்தை வைத்துப் பணம் புரட்டுவோர், லேவாதேவி தொழில், வட்டிக்குப் பணம் கொடுப்போர் அணிவதைத் தவிர்க்கவும். குரு தசையில் மட்டும் அணியலாம்; கெடுதல் வராது.

பவளம் தவிர்க்கவும். அரசுப் பணியாளர் கள், செந்நிறப் பொருள் தயாரிப்போர், சிவப்புநிறப் பொருள் மொத்த வியாபாரம் செய்வோர் அணியவேண்டாம். ரத்த சோகை, விக்கல், அதிக வியர்வை உள்ளவர்கள் அணிதல் கூடாது.

மீனம்

பிறர்மீது பாசத்தோடு பழகுபவர்கள். அத்தனை சாஸ்திரத்தையும் அறிய வேண்டிய ஆவல் நிரம்பிய வர்கள். குழந்தைப் பருவம் மந்தமாகக் காணப்பட் டாலும், மத்திம வயதில் பெரிய மேதைகளாகவும், புத்திசாலியாகவும் ஜொலிப்பார்கள்.

சனி, சுக்கிரன், சூரியன் உதவிக்கரம் நீட்டமாட்டார்கள். புதன், செவ்வாய், சந்திரன் ஆதரவு கிடைக்கப்பெறும். செவ்வாயும் குருவும் ராஜயோகம் தருவர்.

புஷ்பராகம் அணியலாம். குருவருள் தடையின்றிக் கிடைக்கப்பெறும். பவளத் தோடு அணிவதும் சிறப்பானது. முத்து அணிய லாம். நல்ல நண்பர்கள், வாகன சுகம், அசையா சொத்து, வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கப்பெறும். புஷ்பராகத்தோடு அணியலாம்.

பவளம் அணிந்தால் அரசு சார்ந்த நன்மை, நிரந்தர வேலை, போகுமிடத்தில் நல்ல புகழ், மரியாதை வரும். புஷ்பராகம் அணிதல் சிறப்பானது. மரகதப்பச்சை அணிந்தால் வியாபாரத்தில் வெற்றிகிட்டும். காய்கறி வியாபாரம் செய்வோர். வங்கி, எல்.ஐ.சி முகவர்கள். மெடிக்கல் ரெப்ரசென்ட்டேடிவ் இவர்களும் அணியலாம்.

அணியக்கூடாதவை: மாணிக்கம் வேண்டாம். இதனை அணிந்தால் பல இடையூறுகள் நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும். வைரம் வேண்டாம். சுக்கிரன் 8-க்குரியவர். பலவிதத்திலும் புகழைக் கெடுக்க முயலும். வெள்ளியன்று அணிந்து சுபநிகழ்ச்சிக்குப் போனால் கௌரவம் பாதிக்கும். நீலம் வேண்டாம். 11, 12-க்குரியவர் சனி. எனவே பூமி சார்ந்த தடைகள் வரும். ஆனால், சனி மகரதசையில் அணியலாம். கெடுதலைப் போக்கும்.

செல்: 93801 73464

bala151124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe