Advertisment

நவகிரகங்களும் தசை புக்தி பலன்களும்!

/idhalgal/balajothidam/navagrahas-and-muscle-building-benefits

சோதி என்றால் ஒளி எனப்படுகிறது. சோதிடம் என்பது கோள்களின் ஒளியால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதாகும். சோதிடம் என்ற சொல் சோதிஷ்ய என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்தது. சோதி என்பது ஒளியையும் இஷ்ய என்பது வழியையும் கூறுவது. அதாவது அறிவாகிய ஒளி கொண்டு எதிர்கால வழியை அறிவது சோதிடமாகும்.

Advertisment

அஸ்ட்ராலஜி என்பது அஸ்டர், லோகேஸ் என்ற இரண்டு கிரேக்கச் சொற்களின் தழுவல். அஸ்டர் என்றால் நட்சத்திரம், லோகேஸ் என்றால் லாஜிக் என்ற ஆங்கில சொல்லின் திரிபு. அதாவது நட்சத்திரம் மற்றும் கோள்களின் கொள்கைகளையும், விதிமுறைகளையும் தெரிவிப்பது சோதிடமாகும்.

ஜனன ஜாதகத்தைக்கொண்டு ஒருவரது வாழ்க்கையில் நடைபெறவிருக்கும் நன்மை தீமையைப்பற்றி தெளிவாக அறிந்துகொள்ளமுடியும். ஜோதிட ரீதியாக ஒருவரது பிறந்த நேரத்திலுள்ள கோள்நிலைதான் ஜெனன ஜாதகமாகும். ஜாதகத்தை சரி வர கணக்கிட்டால் அவரது வாழ்க்கை நிலையை மிக துல்லியமாக கூறிவிடலாம். இந்திய முறைப்படி ஊடகங்களில் ஜோதிடம் கூறும்போது கோட்சார பலன்களைக் கொண்டு ஜோதிடம் கூறப்படுகிறது.

அதாவது ஒருவர் பிறந்த நேரத்தில் சந்திரன் இருக்கும் இடமே பிறந்த ஜென்ம ராசியாகும். ஜென்ம ராசிக்கு பலன் கூறகூடிய நாளில் இருக்கக்கூடிய கோள் நிலையைகொண்டு பலன் சொல்வது கோட்சார பலன் ஆகும். கோட்சார பலன் என்பது ஒரு பொதுவான கணிப்பு என்பதால் ஒரு தனி மனிதனுடைய

ஜாதகப்பலனை தெளிவாக அறிந்துகொள்வதற்கு தசை புக்தி முறையே சிறந்தது ஆகும்.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றாரோ

Advertisment

அந்த நட்சத்திரத்தின் சாரம் பெற்ற கோளின் தசையே முதலில் நடைபெறும். ஒருவருக்கு ஜாதகப் பலன் சொல்லும்போது அவரது ஜாதகத்தையும் வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பலன் சொல்லவேண்டு

சோதி என்றால் ஒளி எனப்படுகிறது. சோதிடம் என்பது கோள்களின் ஒளியால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதாகும். சோதிடம் என்ற சொல் சோதிஷ்ய என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்தது. சோதி என்பது ஒளியையும் இஷ்ய என்பது வழியையும் கூறுவது. அதாவது அறிவாகிய ஒளி கொண்டு எதிர்கால வழியை அறிவது சோதிடமாகும்.

Advertisment

அஸ்ட்ராலஜி என்பது அஸ்டர், லோகேஸ் என்ற இரண்டு கிரேக்கச் சொற்களின் தழுவல். அஸ்டர் என்றால் நட்சத்திரம், லோகேஸ் என்றால் லாஜிக் என்ற ஆங்கில சொல்லின் திரிபு. அதாவது நட்சத்திரம் மற்றும் கோள்களின் கொள்கைகளையும், விதிமுறைகளையும் தெரிவிப்பது சோதிடமாகும்.

ஜனன ஜாதகத்தைக்கொண்டு ஒருவரது வாழ்க்கையில் நடைபெறவிருக்கும் நன்மை தீமையைப்பற்றி தெளிவாக அறிந்துகொள்ளமுடியும். ஜோதிட ரீதியாக ஒருவரது பிறந்த நேரத்திலுள்ள கோள்நிலைதான் ஜெனன ஜாதகமாகும். ஜாதகத்தை சரி வர கணக்கிட்டால் அவரது வாழ்க்கை நிலையை மிக துல்லியமாக கூறிவிடலாம். இந்திய முறைப்படி ஊடகங்களில் ஜோதிடம் கூறும்போது கோட்சார பலன்களைக் கொண்டு ஜோதிடம் கூறப்படுகிறது.

அதாவது ஒருவர் பிறந்த நேரத்தில் சந்திரன் இருக்கும் இடமே பிறந்த ஜென்ம ராசியாகும். ஜென்ம ராசிக்கு பலன் கூறகூடிய நாளில் இருக்கக்கூடிய கோள் நிலையைகொண்டு பலன் சொல்வது கோட்சார பலன் ஆகும். கோட்சார பலன் என்பது ஒரு பொதுவான கணிப்பு என்பதால் ஒரு தனி மனிதனுடைய

ஜாதகப்பலனை தெளிவாக அறிந்துகொள்வதற்கு தசை புக்தி முறையே சிறந்தது ஆகும்.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றாரோ

Advertisment

அந்த நட்சத்திரத்தின் சாரம் பெற்ற கோளின் தசையே முதலில் நடைபெறும். ஒருவருக்கு ஜாதகப் பலன் சொல்லும்போது அவரது ஜாதகத்தையும் வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பலன் சொல்லவேண்டும். ராசி சக்கரம், நடப்பு தசை புக்தி, கோட்சாரம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒருவரது வாழ்க்கையை ஆராய்கின்றபோது பல்வேறு கால கட்டங்கள் உள்ளது. 10 வயதுவரை குழந்தைப் பருவம், 10 வயதுமுதல் 25 வயதுவரை வாலிபப் பருவம், 25 வயதுமுதல் 45 வயதுவரை மத்திம பருவம், 45 வயதுக்கு மேல் முதுமை பருவம். ஜாதகத்தில் பலா பலன்களை நிர்ணயித்து பலன் சொல்லும்போது ஒருவரது பருவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் கூறவேண்டும்.

ddd

தசை என்பது நவகிரகங்களில் எந்த கோளின் தசை நடைபெறுகிறதோ அக்கிரகத்தின் ஆட்சிக் காலமாகும். நடப்பில் எந்த கோளின் தசை நடைபெறுகி றதோ அக்கிரகமே தசா நாதனாவார். தசாநாதனின் தன்மைக்கேற்ப அத்தசையின் பலா பலன்களும் நடைபெறும். 120 வருடகாலம் கொண்ட விம்சோத்திரி தசையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு 100-க்கு அதிகமான 20 வருடங்கள் என பொருள். தசை காலங்கள் மேலும் புக்தி காலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கோளின் சேர்க்கைகள், ராசிகள் அமையும் வீடுகளின் விதம், வீடுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் ஆகியவை ஒரு மனிதனின் வாழ்வில் தங்களது பங்கை அளிக்கின்றன. நல்ல யோகம் தரும் கோளின் தசை, புக்தி நடைபெறும்போது ஒரு மனிதனின் வாழ்வில் நல்ல முன்னேற்றங் களையும், யோகங்களையும் அளிக்கின்றது. பெரிய மாற்றம் உண்டாகிறது.

நவகிரகங்களின் தசை புக்தி பலன்களை நிர்ணயம் செய்கின்றபோது பலா பலன்கள் பருவத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

சூரியன்

நவகிரகங்களில் தலையாய கிரகமாக விளங்கும் சூரியனின் தசை, குழந்தை பருவத்தில் வந்தால் தந்தைக்கு சோதனை கொடுக்கும். சூரியன் 3, 6, 10, 11-ல் பலமாக அமையப்பெற்றால் குழந்தையின் உடல் நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். சூரியன் பலமிழந்து தசை நடைபெற்றால் ஜுரம், தோல்களில் பாதிப்பு, கண்களில் பாதிப்பு, தந்தைக்கு கண்டம் உண்டாகும்.

சூரியன் வலுப்பெற்று வாலிப பருவத்தில் தசை வந்தால் கல்வியில் மேன்மை, பெரியோர்களின் ஆசி, நல்ல உடலமைப்பு, பல்வேறு வகையில் அனுகூலங்கள் உண்டாகும். சூரியன் பலமிழந்தால் உஷ்ண நோய், கல்வியில் மந்த நிலை, தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

சூரியன் பலமாக இருந்து மத்திம வயதில் சூரிய தசை வந்தால் சிறப்பான ஆரோக்கியம், நல்ல அறிவாற்றல், அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவி வகிக்கும் அமைப்பு, கடினமாக உழைத்து முன்னேறும் அமைப்பு உண்டாகும். சூரியன் பலமிழந்திருந்தால் சோம்பேறித்தனம், நிலையான வருமானம் இல்லாத அமைப்பு, அரசு அரசாங்கவழியில் அனுகூலமற்ற பலன், தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

முதுமை பருவத்தில் சூரியன் பலமாக இருந்து சூரிய தசை வந்தால் சிறப்பான உடலமைப்பு, கௌரவ பதவிகளை வகிக்கும் யோகம், பொருளாதார ரீதியாக அனுகூலங்கள், சமுதாயத்தில் பெயர் புகழ் உண்டாகும். சூரியன் பலமிழந்து சூரிய தசை நடைபெற்றால் உடல்நிலை பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு தொழில், உத்தியோகரீதியாக நெருக்கடிகள் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

சந்திரன்

சந்திரன் பலமாக இருந்து குழந்தை பருவத்தில் சந்திர தசை வந்தால் மகிழ்ச்சி, சுறுசுறுப்பான அமைப்பு, நல்ல ஆரோக்கியம் உண்டாகும். சந்திரன் பலமிழந்து சந்திர தசை நடைபெற்றால் அடிக்கடி உடம்பு பாதிப்பு, ஜல சம்மந்தப்பட்ட நோய்கள், தாய்க்கு கண்டம் உண்டாகும்.

சந்திரன் வலுவாக இருந்து வாலிப வயதில் தசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை, எதிலும் நிதானமாக பேசக்கூடிய அமைப்பு சிறப்பான பேச்சாற்றல் உண்டாகும். சந்திரன் பலமிழந்து வாலிப வயதில் தசை நடைபெற்றால் கல்வியில் தடை, மனக் குழப்பம், சோம்பேறி தன்மை, ஜல சம்மந்தப்பட்ட உடல் நிலை பாதிப்புகள் உண்டாகும்.

மத்திம வயதில் சந்திரன் பலமாக அமைந்து சந்திர தசை நடைபெற்றால் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை, சமுதாயத்தில் கௌரவம், அந்தஸ்து, சமூக நலப் பணிகளில் ஈடுபடும் நிலை, நல்ல ஆரோக்கியம், பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் பலம் இழந்து தசை நடைபெற்றால் வீண் குழப்பம், மனநிலை பாதிக்கக்கூடிய அமைப்பு, சோம்பேறித் தனம் உண்டாகும்.

சந்திரன் பலமாக அமைந்து முதுமைப் பருவத்தில் தசை நடைபெற்றால் நல்ல உடல் அமைப்பு, தெய்வீக காரியங்களில் ஈடுபடும் நிலை, மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். சந்திரன் பலமிழந்து சந்திர தசை வந்தால் ஆரோக்கிய பாதிப்பு, சோம்பேறித்தனம், ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.

செவ்வாய்

செவ்வாய் பலமாக இருந்து குழந்தை பருவத்தில் தசை வந்தால் நல்ல உடலமைப்பு, சிறப்பான ஆரோக்கியம், சுறுசுறுப்புடன் இருக்கும் நிலை உண்டாகும். அதுவே பலமிழந்து தசை நடைபெற்றால் உடம்பு பாதிப்பு, வெட்டு காயங்கள், நெருப்பால் கண்டம் உண்டாகும்.

செவ்வாய் தசை இளம் வயதில் நடைபெற்றால் பலமாக இருக்கும் பட்சத்தில் கல்வியில் மேன்மை, அசையா சொத்து சேர்க்கை, எதையும் தைரியத்துடன் செயல்படுத்தி பல்வேறு ஏற்றங்களை அடையும் நிலை உண்டாகும். செவ்வாய் பலமிழந்திருந்தால் விபத்துக்களை எதிர்கொள்ளும் நிலை, வீண் வம்பு, பிரச்சினைகள், சகோதரர்களால் பிரச்சனைகள் உண்டாகும்.

மத்திம வயதில் செவ்வாய் தசை வந்தால் கடினமாக உழைக்கும் நிலை, உயர் பதவி வகிக்கக்கூடிய யோகம், எதிலும் தைரியமாக செயல்படும் அமைப்பு உண்டாகும். செவ்வாய் பலமிழந்து மத்திம வயதில் செவ்வாய் தசை நடைபெற்றால் நெருங்கிய நண்பர்கள் இழப்பு, ரத்த சம்மந்தப்பட்ட உடல் நிலை பாதிப்புகள், எதிலும் வீண் வாக்குவாதம் சண்டை, சச்சரவுகள், தொழில், உத்தியோகரீதியாக எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை உண்டாகும்.

செவ்வாய் பலம் பெற்று முதுமையில் வந்தால் பயமற்ற நிலை, எதையும் தைரியத்துடன் செயல்படுத்தும் அமைப்பு, பூமியால் அனுகூலங்கள், நல்ல உடலமைப்பு கௌரவ பதவிகளை வகிக்கும் நிலை உண்டாகும். செவ்வாய் பலமிழந்து தசை நடைபெற்றால் ரத்த சம்மந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள், உடல் பலவீனம், சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.

புதன்

புதன் தசை குழந்தை பருவத்தில் வலுவாக அமையப்பெற்று நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், அழகாக பேசும் திறன், சுக வாழ்வு உண்டாகும். புதன் பலமிழந்தால் பேச்சில் இடையூறு, காதுகளில் கோளாறு, சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

இளமை பருவத்தில் புதன் வலுவாக இருந்து தசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை செய்யும் அமைப்பு, தனிப்பட்ட முறையில் உயர்வு உண்டாகும். புதன் வலுவிழந்து தசை நடைபெற்றால் கல்வியில் தடை, உடல் பலவீனம், நெருங்கியவர்களிடையே பகை உண்டாகும்.

மத்திம வயதில் புதன் வலுவாக இருந்து தசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கௌரவ பதவிகள் வகிக்கும் அமைப்பு, அறிவு திறனால் பல பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். வலுவிழந்து தசை நடைபெற்றால் குழப்பம், தொழில் உத்தியோகரீதியாக நிறைய தடைகள் உண்டாகும்.

புதன் பலமாக இருந்து முதுமையில் தசை நடைபெற்றால் கௌரவ பதவிகள் வகிக்கும் அமைப்பு, நல்ல ஞாபக சக்தி, மற்றவர்களை வழி நடத்தும் அமைப்பு உண்டாகும். வலுவிழந்து தசை நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி, மூளையில் பாதிப்பு, உடல் பலவீனம், பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்..

bala250823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe