Advertisment

நவகிரகங்களும் தசை புக்தி பலன்களும்! சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/navagrahas-and-muscle-building-benefits-continued-last-issue

குரு

குரு பலமாக அமையப்பெற்று குழந்தை பருவத்தில் தசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், சுறுசுறுப்பு, பெற்றோர் களுக்கு மேன்மை உண்டாகும். குரு பலம் இழந்திருந்தால் உடல்நிலை பாதிப்பு, வயிறு கோளாறு உண்டாகும்.

Advertisment

குரு பலம்பெற்று இளமை பருவத்தில் தசை நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், தெய்வீக எண்ணம், பரந்த மனப்பான்மை, மற்றவர்களிடம் நல்ல பெயரை எடுக்கும் வாய்ப்பு உண்டாகும். குரு பலமிழந்திருந்தால் கல்வியில் தடை, வீண் செலவுகளை செய்யும் நிலை, பொறுப்பற்று செயல்பட்டு மற்றவர் களிடம் அவப்பெயரை எடுக்கும் நிலை உண்டாகும்.

Advertisment

குரு பலம்பெற்று மத்திம பருவத்தில் தசை நடைபெற்றால் தாராள தன வரவுகள், நல்ல பழக்க வழக்கம், பொது நலப்பணிகளில் ஈடுபடும் நிலை கௌரவ பதவிகளை அடையும் அமைப்பு உண்டாகும்.

குரு பலமிழந்திருந்தால் பொருளாதார நெருக்கடி, புத்திர வழியில் கவலை, உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.

குரு பலம்பெற்று முதுமை பருவத்தில் தசை நடைபெற்றால் பொதுநலப்பணி களில் ஈடுபடும் அமைப்பு, கௌரவ பதவிகளை அடையும் யோகம், தாராள தனவரவு, பரந்த மனப்பான்மை உண்டாகும்.

குரு பலமிழந்திருந்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், வயிறு கோளாறு, தேவையற்ற அவப்பெயர் உண்டாகும் நிலை ஏற்படும்.

nn

சுக்கிரன்

சுக்கிரன் பலம்பெற்று குழந்தைப் பருவத் தில் தசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், சுக வாழ்வு, சத்தான உணவுகளை உண்ணும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் பலமிழந்தி ருந்தால் குழந்தை பருவத்தில் அடிக்கடி உடம்பு பாதிப்பு, நோயாளியாக விளங்கும் அமைப்பு உண்டாகும்.

சுக்கிரன் பலம்பெற்று வாலிப பருவத்தில் தசை நடைபெற்றால் கவர்ச்சியான உடல மைப்பு, மற்றவர்களை ஈர்க்கும் அமைப்பு, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு கல்வியில் மேன்மை உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் ரகசிய உடல்நிலை பாதிப்புகள், தேவையற்ற பழக்கங்கள் உண்டாகும்.

சுக்கிரன் பலம்பெற்று மத்திம வயதில் தசை நடைபெற்றால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, பெண்களால் அனுகூலங்கள், வசதி வாய்ப்புகள் போன்ற யாவும் உண்டாகும். பலமிழந்திருந்தால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுக வாழ்வு சொகுசு, வாழ்வில் பாதிப்பு, பெண்களால் செலவுகள் உண்டாகும்.

சுக்கிரன் பலம்பெற்று முதுமை பருவத் தில் தசை நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, தாராள தன வரவுகள் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந் தால் உடல்நிலை பாதிப்புகள் தேவையற்ற பிரச்சினைகள், சர்க்கரை வியாதி, ரகசிய நோய்கள் உண்டாகும்.

சனி

சனி பலம்பெற்று குழந்தை பருவத்தில் தசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம் உண்டாகும். அதுவே பலமிழந்தால் அற்ப ஆயுள், ஆரோக்கிய பாதிப்புகள், சுறுசுறுப் பற்ற நிலை உண்டாகும்.

சனி பலம்பெற்று வாலிப பருவத்தில் தசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், மற்றவர்களை எதிர்கொள்ளும் அமைப்பு உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கிய பாதிப்பு, சோம்பேறிதனம், கல்வியில் தடை உண்டாகும்.

சனி பலம்பெற்று மத்திம பருவத்தில் தசை நடைபெற்றால் கடின உழைப்பால் பல்வேறு ஏற்றங்களை அடையும் அமைப்பு, பலரை வைத்து ( வேலையாட்களை) தொழில் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் செல்வாக்குடன் வாழும் அமைப்பு உண்டாகும். சனி பலமிழந்து தசை நடைபெற்றால் உடல் ஆரோக்கிய பாதிப்பு, சோம்பேறித்தனம், மனக்குழப்பம், தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகக்கூடிய நிலை உண்டாகும்.

சனி பலம்பெற்று முதுமை பருவத்தில் தசை நடைபெற்றால் பலரை வழிநடத்தும் அமைப்பு, நீண்ட ஆயுள், நல்ல உடல் வலிமை உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

ராகு

ராகு பலமாக அமையப்பெற்று குழந்தைப் பருவத்தில் தசை நடைபெற்றால் சுறுசுறுப்புடன் இருக்கும் நிலை, நல்ல ஆரோக்கியம் இருக்கும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்புகள் பெற்றோருக்கு கண்டம் உண்டாகும்.

ராகு பலமாக அமையப்பெற்று வாலிப பருவத்தில் தசை நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், எதிலும் திறம்பட செயல்படும் அமைப்பு, ஸ்பெகுலேஷன்மூலம் தனசேர்க்கை உண்டாகும். பலமிழந்திருந்தால் கல்வியில் தடை, தேவையற்ற நடப்புகள், தீய பழக்க வழக்கங்கள், பெற்றோர்களிடம் அவப்பெயர் உண்டாகும்.

ராகு பலமாக அமையப்பெற்று மத்திம பருவத்தில் தசை நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய தொழில் தொடங்கி வெற்றி பெறக்கூடிய அமைப்பு, எதிர்பாராத ஏற்றங்கள் உண்டாகும். பலமிழந்திருந்தால் மண வாழ்வில் பிரச்சினை, எடுக்கும் முயற்சி யில் தடை, இடையூறு, தீய பழக்க வழக்கங்கள், முரட்டுத்தனமான செயல்பாடுகளால் அவப் பெயர் உண்டாகும்.

ராகு பலமாக அமையப்பெற்று முதுமை பருவத்தில் தசை நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தனசேர்க்கை, செய்யும் தொழிலேற்றம் உண்டாகும். பல மிழந்திருந்தால் வீண் விரயங்கள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், தேவையற்ற கருத்து வேறுபாடுகள், விபத்துகளை எதிர்கொள்ளும் நிலை உண்டாகும்.

கேது

கேது பலம்பெற்று குழந்தை பருவத்தில் தசை நடைபெற்றால் விளையாட்டுத் தனம், பிடிவாத குணம் இருக்கும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, வயிறு கோளாறு, பெற்றோர்களுக்கு சோதனை உண்டாகும்.

கேது பலம்பெற்று வாலிப பருவத்தில் தசை நடைபெற்றால் கல்வியில் மந்தநிலை, ஆன்மிக தெய்வீக நாட்டம், எதிலும் எதிர் நீச்சல் போட்டு ஏற்றங்களை அடையும் அமைப்பு உண்டாகும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்புகள், கல்வியில் தடை, சிலர் காதல் வலையில் சிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

கேது பலம்பெற்று மத்திம பருவத்தில் தசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபடும் அமைப்பு, எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றத்தை அடையும் நிலை, குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, பல்வேறு வகையில் இடையூறு குடும்ப வாழ்வில் பிரிவு உண்டாகும்.

கேது பலம்பெற்று முதுமை பருவத்தில் தசை நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபடும் அமைப்பு, எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றத்தை அடையும் நிலை, குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். பலமிழந்திருந்தால் ஆரோக்கிய பாதிப்பு, பல்வேறு வகையில் இடையூறு, குடும்ப வாழ்வில் பிரிவு உண்டாகும்.

கேது பலம்பெற்று முதுமை பருவத்தில் தசை நடைபெற்றால் பல்வேறு தெய்வீக காரியங்களில் ஈடுபடும் அமைப்பு, அமைதி யான சூழ்நிலை, ஸ்தல தரிசனங்கள் உண்டாகும். பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு விஷத்தால் கண்டம், நெருங்கியவர் களிடையே பகை உண்டாகும்.

செல்: 72001 63001

bala010923
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe