ஒரு மனிதன் தன்னுடைய பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பான் என்பதை ஜனன ஜாதகத்தைக்கொண்டு அறியமுடியும். பன்னிரண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங்களில்தான் தூண்டப்படுகின்றன. அதனடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கைச் சக்கரம் சுழன்று செயல்பட ஏழாம் பாவகம் மிக முக்கியம்.
நிரந்தரமான ஒரு வாழ்க்கைத்துணையால் மட்டுமே மனிதனை முழுமையடையச் செய்யமுடியும். ஒரு மனிதனின் ஜாதக அமைப்புப்படி, ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்புப் பெற்ற மனிதனாக உயர்த்துகின்றன.
ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகருக்கு வாழ்க்கைத்துணை அமைய துணைபுரி கின்றன. ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கின்றன. ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருகிறது அல்லது வாழ்க்கைத்துணை அமைவதைத் தடைசெய்கிறது.
திருமணம் என்ற இல்லற பந்தத்தில் ஈடுபடும்போதே ஒரு மனிதனின் கர்மா முழுவீச்சில் செயல்படுகிறது. வினையில் லாமல் விளைவு இல்லை. ஜாதகரின் வினைப் பதிவில் உள்ள சுப கர்மா நல்லதை நடத்தும். ஒரு குற்றம் நல்லதைத் தடுக்கும். அதனடிப் படையில் ஜாதகரின் 21 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவபுண்ணியமே உரிய வயது திருமணம், காலம் தாழ்ந்த திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலையையும் தீர்மானிக்கிறது.
மனிதர்களுக்கு மனவுளைச்சலைத் தருவதில் திருமணமும் திருமண வாழ்க்கையும் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த ஊரடங்கு நேரத்தில் திருமணத் தடை மனவுளைச்சலை மேலும் அதிகரிக்கிறது.
கட்டுரைக்குள் செல்லும் முன் நட்சத்திரங்கள் பற்றிய சில அறிய தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம். ராசி மண்டலத்திலுள்ள 12 ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் வழியாகத்தான் ஒன்பது கிரகங்களும் தினமும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் மேஷம்முதல் மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளில், அதனுள் குறிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு நட்சத்திர பாதத்தில்தான் சுற்றி
ஒரு மனிதன் தன்னுடைய பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பான் என்பதை ஜனன ஜாதகத்தைக்கொண்டு அறியமுடியும். பன்னிரண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங்களில்தான் தூண்டப்படுகின்றன. அதனடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கைச் சக்கரம் சுழன்று செயல்பட ஏழாம் பாவகம் மிக முக்கியம்.
நிரந்தரமான ஒரு வாழ்க்கைத்துணையால் மட்டுமே மனிதனை முழுமையடையச் செய்யமுடியும். ஒரு மனிதனின் ஜாதக அமைப்புப்படி, ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்புப் பெற்ற மனிதனாக உயர்த்துகின்றன.
ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகருக்கு வாழ்க்கைத்துணை அமைய துணைபுரி கின்றன. ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கின்றன. ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருகிறது அல்லது வாழ்க்கைத்துணை அமைவதைத் தடைசெய்கிறது.
திருமணம் என்ற இல்லற பந்தத்தில் ஈடுபடும்போதே ஒரு மனிதனின் கர்மா முழுவீச்சில் செயல்படுகிறது. வினையில் லாமல் விளைவு இல்லை. ஜாதகரின் வினைப் பதிவில் உள்ள சுப கர்மா நல்லதை நடத்தும். ஒரு குற்றம் நல்லதைத் தடுக்கும். அதனடிப் படையில் ஜாதகரின் 21 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவபுண்ணியமே உரிய வயது திருமணம், காலம் தாழ்ந்த திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலையையும் தீர்மானிக்கிறது.
மனிதர்களுக்கு மனவுளைச்சலைத் தருவதில் திருமணமும் திருமண வாழ்க்கையும் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த ஊரடங்கு நேரத்தில் திருமணத் தடை மனவுளைச்சலை மேலும் அதிகரிக்கிறது.
கட்டுரைக்குள் செல்லும் முன் நட்சத்திரங்கள் பற்றிய சில அறிய தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம். ராசி மண்டலத்திலுள்ள 12 ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் வழியாகத்தான் ஒன்பது கிரகங்களும் தினமும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் மேஷம்முதல் மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளில், அதனுள் குறிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு நட்சத்திர பாதத்தில்தான் சுற்றிவர முடியும்.
(அட்டவணை காண்க)
காலற்ற, உடலற்ற மற்றும் தலையற்ற நட்சத்திரங்கள் சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத் திரங்களின் முதல் பாதம் மட்டும் ஒரு ராசி யிலும், மற்ற இரண்டு, மூன்று, நான்கு பாதங்கள் அடுத்த ராசியிலும் அமைந் திருப்பதால், இவை தலையற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதம் மற்றும் இரண்டாம் பாதம் ஒரு ராசியிலும், மூன்று மற்றும் நான்காம் பாதங்கள் அடுத்த ராசியிலும் அமைந்திருப்பதால், இவை உடலற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப் படுகின்றன.
குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம் ஆகியவை ஒரு ராசியிலும், நான்காம் பாதம் அடுத்த ராசியிலும் அமைந்திருப்பதால், இவை காலற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப் படுகின்றன.
தலையற்ற, உடலற்ற மற்றும் காலற்ற நட்சத்திரங்களுக்கும் திருமண வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரங்களை உடைபட்ட நட்சத்திரங்கள் எனவும் கூறலாம். ஏழாமிடத்தோடு சம்பந்தம்பெறும் உடைபட்ட நட்சத்திரங்கள் திருமண வாழ்வில் சங்கடத்தை மிகைப் படுத்துகின்றன.
இனி, கட்டுரைக்குள் செல்லலாம்...
பலருக்கு செவ்வாய், ராகு- கேது மட்டுமே திருமணத்தைத் தடைசெய்யும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. திருமணத்தை எந்த கிரகம் தடைசெய்தாலும் பழியைச் சுமப்பவர்கள் ராகு- கேது, செவ்வாய்தான். மற்ற கிரகங்கள் எந்த விதத்தில் தடை, தாமதத்தைத் தருகின்றன என்பதை இந்தக கட்டுரையில் பார்க்கலாம். ஏழாமிடத்தில் அமர்ந்த நவகிரகங்கள் திருமணத்தை எவ்வாறு தடைசெய்கின்றன எனப் பார்க்கலாம்.
ஏழில் சூரியன்
கோபம் மற்றும் உஷ்ணத்திற்குக் காரக கிரகமானவர் சூரியன். ஒருவரின் சமூக மதிப்பையும் நிர்வாகத் திறமையையும் பற்றிக் கூறும். அத்துடன் ஒருவரின் கனவுகளைப் பற்றிக் கூறும் காரக கிரகமாகும்.
ஏழில் சூரியன் அமர்ந்தவர்கள் தனது வாழ்க்கைத்துணையைப் பற்றிய மிகைப் படுத்தலான பகல் கனவுகளைக் கண்டு, ஒரு கோட்டைகட்டி சாம்ராஜ்ஜியம் நடத்து வார்கள். இவர்களுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் மிகுதியாக இருக்கும். தன் கனவுக் கற்பனைக் கோட்டையில் வசிக்கும் வாழ்க்கையே கிடைக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும்.
அழகு, உத்தியோகம், கௌரவம், அந்தஸ்து எனப் பல கனவுகள் இருக்கும். இதில் சிறு குறை இருந்தாலும் திருமணம் கேன்சல்தான். இவர்கள் பல வரனைப் பார்த்து ஒதுக்குவார்கள். அதனால், எளிதில் திருமணம் நடக்காது. சூரியன் தலையற்ற நட்சத்திரம் என்பதால், திருமணத்தடையை அதிகப்படுத்துடன் திருமண வாழ்வின் குறிப்பிட்ட சில ஆண்டுக் காலங்கள் தம்பதி களுக்குள் புரிதல் இல்லாமலே இருக்கும்.
கோப உணர்வு மிகுதியால் அடங்கிப் போவதில் சிரமம் மிகும்.
கர்மாரீதியாக இதை உற்றுநோக்கினால் தந்தைவழி முன்னோர்கள் சிவன் கோவில் சொத்தை அபகரித்த குற்றம், அரசியலில் ஊழல்செய்த குற்றம், குடும்ப உறுப்பினர் களை முறையாக நிர்வகிக்காத, தந்தையை அவமதித்த குற்றத்தின் பதிவு இருக்கும்.
பரிகாரம்
ஞாயிறு காலை 6.00-7.00 மணிக்குள் சூரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்கவேண்டும்.
கோதுமையைத் தானம்செய்வதுடன், கோதுமை உணவு சாப்பிடவேண்டும்.
சிவ வழிபாடு சூரியனை சுப வலுப்பெறச் செய்யும். சிவன் கோவில் மூல ஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு எண்ணெய் வாங்கித் தரவேண்டும்.
சிவாலயத்திலுள்ள சூரியனின் சந்நிதியில் கோதுமை அல்வா அல்லது கோதுமைப் பாயசம் படைத்து, சிவப்பு வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட, தடைநீங்கி திருமணம் கைகூடும்.
ஞாயிற்றுக்கிழமை தந்தையின் நல்லாசி களைப் பெறவேண்டும்.
சந்திரன்
சந்திரன் ஒரு குளிர்ந்த கிரகம். திருமண உறவில் சந்திரன் உடலையும் மனதையும் குறிக்கும் காரகக் கிரகம். சந்திரன் என்றால் நீர். நீரும் மனமும் ஒருநிலையில் நிற்காது. இங்குமங்கும் அலைந்துகொண்டே இருக்கும். திருமண விஷயத்தில் வரன் குறித்துத் தெளிவாக முடிவுசெய்யும் தன்மை இருக்காது. நடக்காததை நடப்பதாகக் கற்பனை செய்வார்கள்.
சந்திரன் ராகுவின் சாரம் பெற்றால், திருமணத்தை நடத்தி, பிரச்சினை தரும். கேதுவின் சாரம்பெற்றால், திருமணத்தை நடத்தாமல் பிரச்சினை தரும். சந்திரன், உடைபட்ட நட்சத்திரங்களான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் நட்சத் திரத்தில் இருந்தாலும் திருமணத்தடை இருக்கும்.
சந்திரன் பாசத்தைப் பொழியும் கிரகம். ஏழில் சந்திரன் திருமணத்திற்குப் பிறகு தாயின் பாசத்தைக் களத்திரத்திடம் ஒப்பிட்டுப் பிரச்சினையை அதிகரிப்பார்கள் அல்லது தங்களின் அந்தரத்தைப் பற்றிய அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து, களத்திரத்தின் வெறுப்பை சம்பாதிப் பவர்கள்.
கர்மாரீதியாக இதை உற்றுநோக்கினால், தாய்வழியில் 21 தலைமுறையாக வாழாத பெண்கள் இருப்பார்கள். தினமும் கண்ணீர் விட்டு அழுத பெண் சாபம். தண்ணீரில் மூழ்கி தற்கொலைசெய்த சாபம், வயதான தாயை முறையாகப் பராமரிக்காத குற்றம், ஒரு பெண்ணை பைத்தியமாகுமளவிற்கு மன உளைச்சல் கொடுத்த குற்றப் பதிவு இருக்கும்.
பரிகாரம்
பௌர்ணமியன்று சத்திய நாராயணர் விரதமிருக்கவேண்டும்.
சந்திர தோஷத்தால் திருமணத்தடை இருப்பவர்கள் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) விரதமிருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்கவேண்டும்.
சந்திர காயத்ரி மந்திரம் ஜபிக்கவேண்டும்.
திங்கட்கிழமைதோறும் பச்சரிசி சாதம் சாப்பிடவேண்டும்.
பச்சரிசி மாவில் மாவிளக்குசெய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபமேற்றவேண்டும்.
நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும்.
வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.
திருப்பதி சென்று வேங்கடாசலபதியைத் தரிசிக்கவேண்டும்.
செவ்வாய்
"ஏழில் செவ்வாய்: தோஷம் உண்டா?' என்னும் விவாதம் எத்தனை நூற்றாண்டு களானாலும் முடிவுக்கு வராத விஷயம் என்பதால், நாம் அதைப் பற்றிப் பேச வேண்டாம்.
செவ்வாய் உடைபட்ட நட்சத்திரம் என்பதால், திருமணத்திற்கு முன்பு திருமணத்தடையையும், பின்பு ஈகோவால் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் பிரச்சினையையும் ஏற்படுத்துகிறது . செவ்வாயுடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெறும்போது பிரச்சினை மிகுதியாக இருக்கிறது.. செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் தைரியம் இருக்கும். செவ்வாய் முழுக்கமுழுக்கத் தாய், தந்தைவழிக் கர்மாவை மிகுதியாகப் பிரதிபலிக்கும் கிரகமாகும். செவ்வாயால் ஏற்படும் பிரச்சினைகள் காசு, காமம், சொத்து என்ற மூன்று வினையின் விளைவுகளாகவே இருக்கின்றன.
காமம்: மனிதன் இல்லற இன்பத்தை மனைவியிடம் மட்டுமே பெறவேண்டும். முறையற்ற காமத்தால் பொருள் விரயத்துடன் தீராத நோயும் வரும்.
காசு: தன் விதிப்பயனையும் மீறிய பொருளாசை, அநீதியாவழியில் பொருளீட்டும் உணர்வைத் தூண்டும். காசு என்றால் பொருள், கடன் மட்டுமல்ல, பொருள் சேர்க்க அநீதியைக் கடைப் பிடித்து ஒருவரை ஏமாற்றி பொருளீட்டும் போது அடுத்த பிறவி உறுதியாகிவிட்டது.
அடுத்தவருடைய பணம் நம்மிடம் ஒரு ரூபாய் இருந்தால்கூடஅந்தக் கடனைக் கொடுத்து முடிக்கும்வரை மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
சொத்து: முறையற்ற சொத்துப் பங்கீடு எந்தக் குடும்பத்தில் இருந்தாலும், அநீதியான முறையில் சொத்து சேர்த்தாலும் அந்தச் சொத்தை அவர்களால் அனுபவிக்கமுடியாது.
அவர்களுடைய வாரிசுகளுக்கும் சொத்து பயன்படாது. பல தலைமுறைக்கு சொத்தை வைத்து உருட்டி வேடிக்கை பார்ப்பார்கள்.
முடிவில் பத்து ருபாய் மதிப்பான சொத்தை ஒரு ரூபாய்க்கு விற்றுத் தீர்ப்பார்கள்.
பரிகாரம்
செவ்வாய் காயத்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும்.
துர்க்கா கவசம் படிக்கவேண்டும்.
வெள்ளி, தாமிரம் கலந்த வளையல் அல்லது மோதிரம் அணியவேண்டும்.
செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை யணிந்து, விரதமிருந்து முருகனை வழிபடுவது நல்ல பலன் தரும். சென்னை அருகிலுள்ள சிறுவாபுரி முருகனை வழிபடவேண்டும்.
செவ்வாய்க்கிழமை சிவப்பு துவரை தானம் செய்யவேண்டும்.
தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும்.
இரத்த தானம் செய்யவேண்டும்.
சிவப்பு நிறப் பசு தானம் செய்ய வேண்டும்.
கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்யவேண்டும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 98652 20406