ஆரூட சாஸ்திரம் என்பது, கிரகங்களின்மூலம் தெய்வீகத் தன்மையைப் பெற்று தனிநபர் கேள்விக்கான பதிலைத் தரும் அற்புதக்கலையாகும். வாழ்க்கைக்கு ஒளி (ஜோதி) காட்டும் ஜோதிட சாஸ்திரத்தின் முக்கியமான பிரிவாகவும் இது கருதப்படும். தனிநபருக்கு சில சமயங்களில் மிகுந்த கவலையும், பயமும் தரும் இக்கட்டான தருணங்கள் உருவாகலாம். இந்த சங்கடமான நேரத்தில் சரியான தீர்வைத் தருவதே ஆரூட (பிரச்ன) சாஸ்திரத்தின் தனிச்சிறப்பு எனலாம். அப்படி ஆரூட சாஸ்திரத்தின் பல்வேறு வழிமுறைகளில் நவகிரக ஆரூடச் சக்கரப் பயன்பாடும் ஒன்று.
ஆரூடம் கேட்க வந்த நபர் எதிரே உட்கார வேண்டும். முதலில் அவரது இஷ்ட தெய்வத்தை ஐந்து நிமிடங்கள் நினைத்து மௌனமாக தியானம்
ஆரூட சாஸ்திரம் என்பது, கிரகங்களின்மூலம் தெய்வீகத் தன்மையைப் பெற்று தனிநபர் கேள்விக்கான பதிலைத் தரும் அற்புதக்கலையாகும். வாழ்க்கைக்கு ஒளி (ஜோதி) காட்டும் ஜோதிட சாஸ்திரத்தின் முக்கியமான பிரிவாகவும் இது கருதப்படும். தனிநபருக்கு சில சமயங்களில் மிகுந்த கவலையும், பயமும் தரும் இக்கட்டான தருணங்கள் உருவாகலாம். இந்த சங்கடமான நேரத்தில் சரியான தீர்வைத் தருவதே ஆரூட (பிரச்ன) சாஸ்திரத்தின் தனிச்சிறப்பு எனலாம். அப்படி ஆரூட சாஸ்திரத்தின் பல்வேறு வழிமுறைகளில் நவகிரக ஆரூடச் சக்கரப் பயன்பாடும் ஒன்று.
ஆரூடம் கேட்க வந்த நபர் எதிரே உட்கார வேண்டும். முதலில் அவரது இஷ்ட தெய்வத்தை ஐந்து நிமிடங்கள் நினைத்து மௌனமாக தியானம் செய்யவேண்டும். வேறு சிந்தனை இன்றி தெய்வீக அருளைப்பெறவே இந்த ஏற்பாடு. அடுத்தபடியாக தெளிந்த மனதுடன் அந்த நவகிரக ஆரூடச் சக்கரத்திலுள்ள எண்களில் ஏதாவது ஒரு எண்ணை சுட்டுவிரல் (குரு விரல்) கொண்டு தொட வேண்டும். வந்த அந்த எண்ணைக்கொண்டு கீழ்க்காணும் பலாபலன்கள் பதிலாகக் கூறப்படும்.
எண்-1 (சூரியன்)
சூரியன் உதயமாவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருள் கிட்டும். போனவரும் திரும்ப வருவார். நம்பிக்கை, நாணயம் அமையும். தொடுத்த வழக்கானது சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வுண்டு.
எண்-2 (சந்திரன்)
சந்திரன் தோன்றுவதால் உறவினர்களாலும் நண்பர்களாலும் பெண்களாலும் உதவி கிடைக்கும். நோய்கள் அகலும். தாய்வழியே பலவித ஆதாயங்கள் வந்துசேரும்.
எண்-3 (செவ்வாய்)
செவ்வாய் உதயமாவதால் தீயானது பரவுவதுபோல கலகங்களும் சண்டைகளும் தோன்றிப் பெருகும். நண்பர்களே பகையாவர். சச்சரவுகள் அதிகமாகி வீட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலையும் உண்டு. முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து வணங்கி வரவேண்டும். தீமைகள் நிச்சயம் அகலும்.
எண்-4 (புதன்)
புதன் உதயமாவதால் நினைத்தது நடந்தேறும். வித்தைகள் விருத்தியடையும். வியாபாரம் செழிக்கும். பிணிகள் தீரும். பிரிந்த பெண்கள் வந்துசேருவர்.
எண்-5 (குரு)
குரு உதயமாவதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். திருமணம் நடந்தேறும். உத்தியோகமோ, உயர்வோ நிச்சயம் கிட்டும். தெய்வபலம் பரிபூரணமாக உள்ளது. முன்னேற்றம் அடையலாம்.
எண்-6 (சுக்கிரன்)
சுக்கிரன் தோன்றுவதால் சுக சந்தோஷங்கள் அதிகரிக்கும். கலைகளில் வெற்றி காணலாம். கௌரவம் உண்டாகும். செல்வம் சேரும். திருமண பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் நன்மைகள் கிடைக்கும்.
எண்-7 (சனி)
சனி பகவான் உதயமாவதால் சேதமும் பொல்லாப்புமே மிஞ்சும். வீண் பயம் தோன்றும். எந்த காரியமும் தடைப்பட்டுக்கொண்ட இருக்கும்; தாமதமாகும். சனி பகவானைத் தொடர்ந்து சனிக்கிழமைகளில் பூஜித்து வரவேண்டும்; ஸ்ரீவேங்கடேசப் பெருமாளையும் வழிபடவேண்டும்; தீவினைகள் விலகி சுபங்கள் ஏற்படும்.
எண்-8 (ராகு)
ராகு உதயமாவதால் பொருள் சேதமும் அசௌகரியங்களும் உண்டு. கடன் உபாதைகள் அதிகரிக்கும். "எடுத்த காரியம் நிறைவேறாது.'
தடைகளும், தடங்கல்களும் தொடர்ந்துவரும். ஞாயிற்றுக்கிழமைகளில் துர்க்கையம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வினைகள் அகன்று நன்மைகள் உறுதி.
எண்-9 (கேது)
கேது தோன்றுவதால் எதிலும் சந்தேகமும் தொழிலில் மந்தமும் தேக்கமும் இருந்தாலும், கஷ்டநஷ்டங்கள் பெருகும்; திருட்டுபயமும் உண்டு; விநாயகப்பெருமானை தொடர்ந்து திங்கட்கிழமைகளில் அறுகம்புல் மாலை அணிவித்துப் பூஜைசெய்து வந்தால் சுபமாக முடியும் என்பதே உண்மை.
இந்த ஆரூட ஜோதிடத்தை பயன்படுத்திப் பலன் தெரிந்துகொண்டால், சில கால அவகாசத்துப் பிறகே அடுத்தமுறை பயன்படுத்த வேண்டும். குறைந்தது மூன்று மாதங்கள் இடைவெளி அமைவதே நல்லது என்று கருதலாம். முக்கியமான விஷயங்களுக்கே இதைப் பயன்படுத்த வேண்டும்.
செல்: 74485 89113