Advertisment

கேது ஏற்படுத்தும் இயற்கை மாற்றம்! -ஆர் மகாலட்சுமி

/idhalgal/balajothidam/natural-change-after-ketu-transit-r-mahalakshmi

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரககமும் ஒவ்வொரு தத்துவங்களைக் கொண்டது. சூரியன்- நெருப்பு, சந்திரன்- நீர், செவ்வாய்- நெருப்பு, புதன்- காற்று, குரு- ஆகாயம், சுக்கிரன்- நீர், சனி- காற்று, ராகுவும் கேதுவும்- நெருப்பு மற்றும் காற்று தத்துவம் கொண்டவை.

இதில் ராகு பெரும்போக்கான சுழல் காற்றையும், கேது தூசிக் காற்றையும் குறிப்பர்.

கேது எப்போதும் தூள் தூளாக்கும் குணம் கொண்டவர். முழுமையைப் பிரிக்கும் தன்மையுடையவர். எனவே காற்றிலும் நிறைய தூசு கலந்து பரப்புவார்.

தற்போதைய கோட்சாரத்தில், கேது கன்னி ராசியில் நகர்வு. கன்னி ராசியின் அதிபதி புதனும் காற்று தத்துவம் கொண்ட வர். புதன் தரும் காற்று இதமானது. ஆனால் கேது ஒரு நிழல் மற்றும் இருட்டுக் கிரகம். அவரால் ஒரு சுகமான, மகிழ்ச்சியான, மெதுவான, தன்மையான, தென்றலை வீச இயலாது. கேது ஒரு பாம்பு கிரகம். அவரால் பிறர்க்கு நன்மை தரும்விதத்தில் காற்றை வீச இயலாது. எனவே கேது தரும் காற்று தூசியுடன், எதிரில் வரும் வண்டி, வா

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரககமும் ஒவ்வொரு தத்துவங்களைக் கொண்டது. சூரியன்- நெருப்பு, சந்திரன்- நீர், செவ்வாய்- நெருப்பு, புதன்- காற்று, குரு- ஆகாயம், சுக்கிரன்- நீர், சனி- காற்று, ராகுவும் கேதுவும்- நெருப்பு மற்றும் காற்று தத்துவம் கொண்டவை.

இதில் ராகு பெரும்போக்கான சுழல் காற்றையும், கேது தூசிக் காற்றையும் குறிப்பர்.

கேது எப்போதும் தூள் தூளாக்கும் குணம் கொண்டவர். முழுமையைப் பிரிக்கும் தன்மையுடையவர். எனவே காற்றிலும் நிறைய தூசு கலந்து பரப்புவார்.

தற்போதைய கோட்சாரத்தில், கேது கன்னி ராசியில் நகர்வு. கன்னி ராசியின் அதிபதி புதனும் காற்று தத்துவம் கொண்ட வர். புதன் தரும் காற்று இதமானது. ஆனால் கேது ஒரு நிழல் மற்றும் இருட்டுக் கிரகம். அவரால் ஒரு சுகமான, மகிழ்ச்சியான, மெதுவான, தன்மையான, தென்றலை வீச இயலாது. கேது ஒரு பாம்பு கிரகம். அவரால் பிறர்க்கு நன்மை தரும்விதத்தில் காற்றை வீச இயலாது. எனவே கேது தரும் காற்று தூசியுடன், எதிரில் வரும் வண்டி, வாகனம், மனிதரைப் பார்க்க இயலாதவாறு, அடர்த்தி யாக இருள் படிந்து வீசும்.

இதனால் நிறைய விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் ஏற்படும். அது சரி; ஒரு பாம்பு கிரகம் இருக்கும் இடத்தில் விபத்து ஏற்படாவிட்டால்தான் ஆச்சரியம்.

கேது வடகிழக்கு திசையைக் குறிப்பார்.

Advertisment

ss

இடம் கொடுத்த கன்னி புதன் வடக்கு திசை யைக் குறிப்பார். எனவே தற்போது வட இந்தியா, புழுதிக்காற்றால் அல்லோல கல்லோலப்படுகிறது. மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நமது வாழ்க்கையில் ஒரு எதிரி நுழைந்து விட்டால் என்ன செய்வோம். ஒன்று, அவனுக்குப் பிடித்ததாக செய்து, தாஜா பண்ணி, கெஞ்சிக் கூத்தாடி, நமது வம்புக்கே வராதபடிக்கு செய்துவிடுவோம்.

இன்னொன்று, அவனை எதிர்த்துப் போராடி, துரத்திவிடுவோம். முதலில் கேதுவுக் குப் பிடித்தமானதை பார்த்துவிடுவோம்.

1. அறுகம்புல்

இது கேதுவுக்கு மிகவும் பிடிக்கும். எனவே நம்மால் முடிந்தளவு அறுகம்புல் வளரச் செய்வது நல்லது.

2. பூக்கள்

நிறைய செடிகளை, பூஞ்செடிகளை வளர்க்கலாம். வீடுகளில் மட்டுமல்ல; வீதியோரம், பள்ளி, கல்லூரி மருத்துவமனை என சுத்தமான காற்று தேவைப்படும் இடங்களில் பூஞ்செடிகளை வளர்ப்பது சிறப்பு.

3. செந்தாமரை

இப்போது ஆங்காங்கே சிறு குளம் வெட்டி தண்ணீர் தேங்க வழிவகை செய்கிறார் கள். அதில் செந்தாமரையை வளர்க்கலாம். இது கேதுவுக்கு மட்டும் பிடித்தமானது அல்ல. லட்சுமி கடாட்சமும் நிரம்பியது என நீங்களும் அறிவீர்கள்.

4. கடுகு

இந்தச் செடியையும் வளர்க்கலாம். இதுவும் கேதுவுக்குப் பிடிக்குமாம்.

5. பேரிச்சை

சாலை ஓரங்களில் இந்த மரத்தை வளர்க்க முயற்சிக்கலாம். நம் நாட்டில் இது வளருமா என தெரியவில்லை.

5. அன்னாசி

இதனை முடிந்த இடங்களில் வளர்க்கலாம்.

6. மிளகு

இதனை தகுந்த சிதோஷ்ண நிலை இருக்குமிடத்தில் வளர்ப்பது உத்தமம்.

7. வேம்பு

வேப்ப மரம் நிறைய வளர்ப்பது என்பது, நிஜமாகவே மக்களுக்கு செய்யும் பெருந்தொண்டாகும். எனவே அனைத்து மக்களும் உங்கள் வீடுகள், அபார்ட்மென்ட், வேலை செய்யுமிடங்கள், வீதிகள் என எங்கெங்கும் வேப்ப மரத்தை வளருங்கள். வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை. வெட்டிப் பாழாக்காதீர்கள். மரம் வெட்டினவன் குலம் நாசமடையும்.

8. சேனை

சேனை மற்றும் புல் வகைகள், கொடி இவையும் கேதுவுக்குப் பிரியமானது.

9. ஆலமரம்

ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் வேர்கள் கேதுவுக்கு மிகவும் ஆகிவந்த இடங்கள். மேலும் கேது வேர்களைக் குறிப்பார். எனவே வெட்டிவேர் போன்ற வேர்த் தாவரங்களை அதிகமாகப் பயிரிட்டு, கேதுவின் புழுதிப் படலத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

இனி கேதுவுக்கு எதிரி கிரகங்கள் பற்றி சூரியனும் கேதுவும் பகை கிரகங்கள்தான். ஆனாலும் ரொம்ப வேலை செய்ய இயலாது.

சந்திரன்

இவர் தண்ணீரைக் குறிப்பார். எனவே, கேதுவின் தூசிக் காற்றிலிருந்து தப்பிக்க, தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதன்மூலம் கட்டுப்படுத்தலாம்.

புதன்

இதன் சமித்து நாயுருவி மற்றும் உப்பு சுவையும் உடையது. இவை இரண்டையும் தகுந்த விதத்தில் பயன்படுத்தி, கேதுவின் தூசியைத் தடுக்கலாம்.

சனி

இவரது தானியம் எள். சமித்து வன்னி. இவரது மலர் கருங்குவளை. எனவே முறையாகக் கையாண்டு, கேதுவின் புழுதியைக் கட்டுக்குள் வைக்கலாம்.

இப்போது உங்களுக்குத் தோன்றலாம். எங்கேயோ வடக்கே புழுதிப்புயல் வீசுகிறது என்றால், நாம் ஏன் இங்கே மெனக்கெடனும் என யோசிப்பீர்கள். வடக்குப் பக்கம் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் கேது, கொஞ்சம் தெற்குப் பக்கமும் போய்ப் பார்க்கலாமே என முடிவெடுத்துவிட்டால் நம் கதி என்ன? நம் குழந்தைகள் என்ன ஆவார்கள்.

ஒரு சொலவடை சொல்வார்கள். "மலையில் அடிக்கிற காத்து, மன்னன் பக்கம் அடித்தால் நமக்கென்ன' என்பர். இப்படியெல்லாம் இல்லாமல், கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கேது என்றவுடன் விநாயகர்தான் முதலில் நினைவுக்கு வருவார். எனவே இப்போதிலிருந்தே உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள கணபதியை வணங்குங்கள். எத்தனையோ இன்னல்களை, கஷ்டங்களைக் களையும் கணபதி, இந்தப் புழுதிக்காற்றையும் அடக்கமாட்டாரா என்ன!

நம்புவோம்; நலம் பெறுவோம்!

செல்: 94449 61845

Advertisment
bala170125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe