இராமாயண காவியத்தின், யுத்த காண்டம் 54-ஆவது சர்க்கத்தில் அங்கதனும் வஜ்ர தம்ஷட்ரனும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் போர் அங்காரகனும் புதனும் மோதிக்கொண்டாற்போல் இருந்ததாம். அவ்வாறா யின் அங்காரகன் எனும் செவ்வாயும் புதனும் அத் துணை கொடும் பகைவர்களா எனில், ஆம்; அவர்கள் சேர்க்கை மிகக் கொடுமையான குணத்தைக் கொடுக்கும்.
இவர்கள் இருவரும் சேர்ந்த இடத்தைப் பாழாக்காமல் விடவேமாட்டார்கள்.
ஜோதிடப்படி, செவ்வாய் கிரகம், புதனுடைய இரு வீடுகளான மிதுனம், கன்னியில் பகை பெறுகிறார். மேலும் செவ்வாயும் புதனும் பகை பெற்ற கிரகங்கள்.
செவ்வாய் காலபுருஷனின் 1 மற்றும் 8-ஆம் அதிபதி. புதன் 3, 6-ன் அதிபதி. காரகப்படியும், பாவகப்படியும் எதிரிகளாகி, ஜாதகருக்கு சொல்லொணா துயரம் தருவர். செவ்வாய் 8-ஆம் அதிபதி; புதன் 6-ஆம
இராமாயண காவியத்தின், யுத்த காண்டம் 54-ஆவது சர்க்கத்தில் அங்கதனும் வஜ்ர தம்ஷட்ரனும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் போர் அங்காரகனும் புதனும் மோதிக்கொண்டாற்போல் இருந்ததாம். அவ்வாறா யின் அங்காரகன் எனும் செவ்வாயும் புதனும் அத் துணை கொடும் பகைவர்களா எனில், ஆம்; அவர்கள் சேர்க்கை மிகக் கொடுமையான குணத்தைக் கொடுக்கும்.
இவர்கள் இருவரும் சேர்ந்த இடத்தைப் பாழாக்காமல் விடவேமாட்டார்கள்.
ஜோதிடப்படி, செவ்வாய் கிரகம், புதனுடைய இரு வீடுகளான மிதுனம், கன்னியில் பகை பெறுகிறார். மேலும் செவ்வாயும் புதனும் பகை பெற்ற கிரகங்கள்.
செவ்வாய் காலபுருஷனின் 1 மற்றும் 8-ஆம் அதிபதி. புதன் 3, 6-ன் அதிபதி. காரகப்படியும், பாவகப்படியும் எதிரிகளாகி, ஜாதகருக்கு சொல்லொணா துயரம் தருவர். செவ்வாய் 8-ஆம் அதிபதி; புதன் 6-ஆம் அதிபதி. இதன்மூலம் நிறைய இடர்கள் ஏற்படும்.
செவ்வாய் பெண்களின் களஸ்திரகாரகன்; புதன் அலித்தன்மை உடையவர். எனவே குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகும் அல்லது குழந்தையின்மை ஏற்படும்.
செவ்வாய் கொடுரமானவர்; புதன் புத்திசாலி. இவர்கள் 5-ஆமிட சம்பந்தம் பெற கொடுர புத்தி உடையவர்கள்.
செவ்வாய் மூடத்தனம் உடையவர்; புதன் கல்வியைக் குறிப்பவர். இவர்கள் 4-ஆமிட சம்பந்தம் பெற கண்டிப்பாக கல்வித் தடையுண்டு.
செவ்வாய் மூர்க்கமானவர்; புதன் பேச்சு சம்பந்தம் உடையவர். இவர்கள் 2-ஆமிட சம்பந்தம் பெற, நடைமுறைக்கு உதவாத- உருப்படியில்லாத பேச்சு பேசுவர். இவர்கள் பேச்சால் குடும்பத்தில் சண்ட ஏற்படும்.
செவ்வாய் 8-ஆம் அதிபதி; புதன் காலபுருஷனின் வீரிய ஸ்தானமான 3-ஆம் அதிபதி. இவர்கள் 3-ஆமிடம் அல்லது 7-ல் சேர, பாலின வன்கொடுமை செய்யும் கீழ்த்தர குணத்தைக் கொடுப்பர்.
செவ்வாய் தீ சம்பந்தம் உடையவர்; புதன் தோல் சம்பந்தர். எனவே தோலில் தீப்புண் ஏற்படும்.
செவ்வாய் நெருப்புக்காரகர். புதன் காற்றுத் தன்மையுடையவர். விரைவில் தீப் பிடிக்கும், தீவிபத்து ஏற்படும் நிலையுண்டு.
செவ்வாய் மனையைக் குறிப்பார்; புதன் 6-ஆம் அதிபதி. இவர்கள் 4-ஆமிட சம்பந்தம் பெற, மனையால் வழக்கு உண்டாகும். செவ்வாய் சகோதரகாரகர்; புதன் 6-ஆம் அதிபதி. சகோதரருடன் சண்டை நிச்சயம்.
செவ்வாய் வீரம்; புதன் அலி. இவர்கள் சம்பந்தம் ஒருவித கோழைத்தனத்தையும், அதனால் ஏற்படும் குறும்புத்தனத்தையும் கொடுக்கும்.
செவ்வாய் திருட்டுத்தனம் தரும்; புதன் புத்திசாலித்தனம் கொடுக்கும். எனவே இச்சேர்க்கை புத்திசாலியான திருடராக்கி விடும். "வொயிட் காலர் கிரிமினல்' ஆகி விடுவர்.
செவ்வாய் சிவப்பு; புதன் பச்சை. இரண்டு நிறத்துக்கும் ஆகிவரவே வராது. விவசாயிகள் பச்சை நிறத்தைப் பயன்படுத்தினாலும், கல்வியாளர்கள் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தினாலும் உருப்படியாக நடக்காது.
செவ்வாய் படைத் தளபதி; புதன் அறிவுப்பூர்வமானவர். போரும் அறிவும் என்றைக்கும் இணங்கி வராது. அதனால் தான் "ங்ஸ்ங்ழ்ஹ் ற்ட்ண்ய்ஞ் ண்ள் ச்ஹண்ழ் ண்ய் ப்ர்ஸ்ங் ஹய்க் ஜ்ஹழ்' என்று சொன்னார்கள் போலும்.
செவ்வாய் சரீரபலம்; புதன் புத்திபலம்.
புத்திசாலிகள் எல்லாம் சற்றே இளைத்தவர் போல இருப்பதையும், மகா பராக்கிரமசாலிகள் சற்று முட்டாளாக இருப்பதையும் நீங்களே பார்த்திருப்பீர்கள்.
செவ்வாய் கடன் காரகர்; புதன் கால புருஷனின் 6-ஆம் அதிபதி. இவர்கள் சேர்க்கை முதல் அல்லது 6-ஆம் வீட்டில் அல்லது 2-ஆம் வீட்டில் அமைய, எப்போதும் கடன்தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இராமயணத்திலேயே இவர்களின் போர்க்குணம் குறிப்பிடப்பட்டுள்ளது எனில் அதில் உண்மையில்லாமல் இராது.
சரி; இந்த செவ்வாய், புதன் சேர்க்கைக்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? நரசிம்மரைதான்.
நரசிம்மர் தலங்கள்
அகோபிலம் (ஆந்திரப் பிரதேசம்), சோளிங்கர், வந்தவாசி, கரூர், கீழப்பாவூர் (நெல்லை), பரிக்கல் மற்றும் பூவரசன்குப்பம், கடலூர் அபிஷேகபாக்கம், விழுப்புரம் அந்திலி, செங்கல்பட்டு பொன்விளைந்த களத்தூர், காஞ்சிபுரம் செவ்வல்லி வேடு, திருவேளுக்கை, நரசிங்கபுரம், பழைய சீவரம், நங்கநல்லூர், சேலையூர், திண்டிவனம், நாமக்கல், மதுரை ஒத்தக்கடை என பல நரசிம்மர் தலங்கள் உள்ளன.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், புதன் சேர்க்கை இருந்தால், முதல்வேலையாக அருகிலுள்ள நரசிம்மரை வழிபடவும். புதன் என்ற விஷ்ணுவும், செவ்வாய் என்ற ரௌத்திரமும் சேர்ந்த திருமூர்த்தியே நரசிம்மர்!
செல்: 94449 61845