லகம் என்னும் சொல்லைக் கேட்டாலே அமைதியை விரும்புபவர்கள் அஞ்சி நடுங்குவர். ஒரு கூட்டுக் குடும்பத் தில் உள்ளவர்களைப் பிரிக்க முயற்சி செய்வது, தனக்கு வேண்டாதவர்கள்மீது கோள்சொல்லி அவர்களைப் பிரித்து அதன்மூலம் நன்மையடைவது என்று பல வகைகளில் கலகம் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில பெரிய குடும்பங்களில், குடும்பத் தலைவரின் மூத்த சகோதரி கணவனை இழந்து, தம்பியின் ஆதரவில் நடுக் கூடத்தில் அமர்ந்துகொண்டு வீட்டையே ஆட்டிப்படைத்து சிதறடிப்பதையும் காண்கிறோம். அதுபோல குடும்பத்திற்குத் தொடர்பில்லாத வெளிநபர்கள், நண்பர் என்னும் பெயரில் வீட்டுக்குள் அமர்ந்த படி தேவையில்லாமல் குடும்ப விஷயங் களில் தலையிட்டு அதிகாரம் செய்வதை யும் பார்க்கிறோம். இதுபோல பல நிர்வாகங்களில் கலகம் செய்வோர் பலர் நிறைந்திருப்பதையும் காண்கிறோம்.

கலகம் செய்பவர்களைப் பார்த்தால் எதுவுமே நடக்காததுபோல அமர்ந்திருப்பார்கள். அமைதியானவர் போலவும், நமக்கு நன்மை செய்பவர் போலவும், உடனிருந்து உதவுபவர் போலவும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தி போலிச் சிரிப்பை வெளிக்காட்டுவார்கள். முற்காலங்களில் கலகத்திற்கு "கீலகம்' என்று வழக்குச் சொல் இருந்தது.

bb

கலகம் செய்வோரை குடும்பத்திலிருந்தும் நிர்வாகத்திலிருந்தும் வெளி யேற்ற கைகண்ட மருந்துபோல, புராண ஏடுகளில் காணப்படுவது நாரதர் சரித்திரம். இவரது கதையைக் கேட்டா லும் படித்தாலும் கலகங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து நிம்மதி பிறக்கும். "நாளும் கோளும் நன்மைசெய்யாத காலகட்டங்களில் கலகம் வரத்தானே செய்யும்' என்று எண்ணவேண்டாம். சதாசர்வகாலமும் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தைக் கூறியபடி வலம்வரும் நாரதரின் சிந்தனை நமக்குத் துணைபுரியும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

நாரதர் பிறப்பு வரலாறு

பதினெண் புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில், ஸ்ரீ ராமபிரானின் எதிரியான இராவணனின் கட்க விதியைப் பின்பற்றினால் நம் எதிரிகள்கூட உதிரியாகிவிடுவர் என்று உபதேசிக்கப்பட்டுள்ளது. அதே போல நாரத முனிவரின் மூல மந்திரத்தையும் காயத்ரி மந்திரத்தையும் அவரது பிறப்பு வரலாற்றையும் நாவால் சொல்பவருக்கு, கலகம் என்பது கதிரவனைக் கண்ட பனிபோல விலகிச் செல்லும் என்கிறது நாரத பக்தி விளக்கம். நாரதருக்கு கலகப் பிரியர், விஷ்ணு ஸ்மரணர், சர்வலோக சஞ்சாரகர் போன்ற பெயர்கள் உள்ளன. எந்த பிரச்சினைக்குத் தீர்வுபெற யாரை அணுகலாம் என்று தெய்வங்களுக்கே ஆலோசனை சொல்பவர் நாரதர் என்று புகழ்கின்றனர்.

"நாரதர் கலகம் நன்மையில் முடியும்' என்று சொல்லப்படும் பழமொழியின் உட்பொருளை அறிந்தால், நாரதர் ஒரு பலனைத் தருவதற்கு முன்பாக பரீட்சை செய்து, அவருக்கு அதனை அடையத் தகுதி இருக்கிறதா என்று பார்க்கிறாராம். கலகத்தை உண்டாக்கி பகைவர்களை அகற்றி, நல்லோருக்கு நலம்பயக்கும் சூத்திரதாரி நாரதர் என்று முனிவர்கள் உரைக்கின்றனர்.

நாம் படிக்கும் மந்திரங்கள், பாராயண சுலோகங்களில் விஷ்ணு உவாச, ஈஸ்வர உவாச, இந்திர உவாச என்னும் வரிசையில், நாரத உவாச என்பதும் தவறாமல் இடம்பெறும். நாரத உவாச என்றால், நாரதரால் இந்த சுலோகத்தில் சிறப்பு சொல்லப்படுகிறது என்று பொருள். இவ்வாறு நாரதர் பரீட்சைசெய்து அதன் பலன்சொல்லாத சுலோகங்களே இல்லை என்று கூறலாம். அத்தகைய நாரதரின் பிறப்பே வித்தியாசமானது.

வேலைக்காரி மகன்

நாரத முனிவரின் தாயார் பிரம்மவாதிகளிடம் வேலைக்காரியாக அவர் களுக்குப் பணிவிடை செய்துவந்தாள். ஒரு சாதுர்மாஸ்ய விரத காலத்தில் யோகிகளும் தவசிகளும் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். சிறுவனாக இருந்த நாரதரும் யோகிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துவந்தார்.

நாரதர் சிறு பிள்ளையானாலும் விளையாட்டில் புத்தியை செலுத்தாமல், பணிவிடை என்னும் கடமையையே அதிககாலம் கவனம் செலுத்திச் செய்து வந்ததால், அவர்கள் சிறுவனிடம் அன்பு காட்டியதோடு மீதமாகின்ற உணவை அவனுக்கு அளித்தனர். ஒரு வேளை மட்டும் உணவுண்டு, அதனால் பாவங்கள் நீங்கப்பெற்று, இறைவனைக் குறித்த தியானத்தில் ஈடுபட்டான் சிறுவன். மகாவிஷ்ணுவின் கதைகள் கானம் செய்யப்படுவதை தினமும் கேட்டுவந்ததால் பக்தி அதிகமாயிற்று. எப்போதும் பகவானின் புகழைக் கேட்டதால் சிறுவனிடமிருந்த ரஜோ குணமும் தமோ குணமும் அறவே நீங்கிவிட்டன.

யோகிகளும் தபஸ்விகளும் தங்களது சாதுர்மாஸ்ய விரத காலம் நிறைவு பெற்றபிறகு, சிறுவனை அழைத்து உண்மைஞானம் அவனது இதயத்தில் நிலையாக இருக்கும்படி முறையோடு தீட்சை கொடுத்து அங்கிருந்து வேறிடம் சென்றனர். அவர்கள் சொல்லித் தந்த பக்தி மார்க்க உபதேசங்களை மனதில் பதியவைத்துப் பழகிவந்த சிறுவன், வாலிபப் பருவம் அடைந்த பின்னர் உலகத்திற்கே அறிவுபுகட்டும் இறைமார்க்கத்தை எடுத்துக் கூறினான்.

ஒருசமயம் சனகாதி முனிவர்கள் நாரத முனிவரை ஏதேனும் ஒரு கேள்வி கேட்டு மடக்கிவிட வேண்டுமென்று எண்ணி கேள்வி கேட்டபோது, இளைஞனான நாரதர் சொன்ன பதிலைக் கேட்டு முனிவர்கள் வியந்து நின்ற னர். மூவுலகிலும் தேவலோகத்திலும் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், நாரதரைக் கேட்டால் தெளிவான வழி கூறிவிடுவார் என்றபடி அவருக்குப் புகழ் வந்துசேர்ந்தது.

வாசுதேவன் திருக்காட்சி

நாரதரின் தாய் தனது ஒரே மகனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தாள். ஒரு அதிகாலை வேளையில், ஒரு வீட்டில் பசுவிடம் பால் கறந்தபோது அரவம் தீண்டி இறந்துபோனாள். தாயின் பிரிவு மனதை வாட்டினாலும், இறுதிக்கடனைச் செலுத்தி விட்டு வடதிசை நோக்கிச் சென்று, கானகத்தை அடைந்து, பசி தாகம் மறந்து ஒரு அரசமரத்தின்கீழ் அமர்ந்து, தனது இதயத் திலுள்ள பரமாத்மாவை பூஜை செய்தார். அப்போது பரமாத்மா தோன்றி மறைந்து விட்டார். மீண்டும் தியானத்தில் ஈடுபட்ட போது பகவான் மகாவிஷ்ணு, "அப்பா, நீ இந்தப் பிறவியில் அடிக்கடி என்னைக் காண இயலாது. ஒருமுறை கண்டதாலேயே நீ பாவமற்ற புனிதனாகிவிட்டாய். தபஸ்விகள் உனக்களித்த ஞானம் நிரந்தரமாக உன் ஆன்மாவைப் பற்றிக்கொண்டது. இனி எல்லா பிறவிகளின் நினைவுகளும் உனக்கு வரும். கடமை முடித்து என்னிடம் வந்து சேர்வாய்' என்று அசரீரியாக வாக்கு தந்து மறைந்தார்.

எப்போதும் "நாராயணா நாராயணா' என்று சொன்னபடியே ஆசை, அகங்காரம், விருப்பு, வெறுப்பு இல்லாதவராய், தன் வாழ்நாள் முடிவை எதிர்நோக்கியவராக இந்த உலகத்தை சுற்றி வந்துகொண்டிருந்தார். தனது அந்திமக் காலம் நெருங்கியபோது, ஒரு மாலைப்பொழுதில் சௌதாமினி என்னும் மின்னல் தோன்றி அவருக்கு மரணத்தைத் தந்தது. பஞ்ச பூதங்களாலான இந்த சரீரத்தை விடுத்து, ஸ்ரீமன் நாராயணன் அருகில் நிற்கும் சூட்சும உடலைப் பெற்றார்.

பிரம்ம கற்பம் முடிவுற்ற சமயத்தில் நாராய ணர் சயனமாகும்போது, பிரம்ம தேவரின் மூச்சுக் காற்றுடன் நாரதர் அங்கே பிரவேசித் தார். ஆயிரம் யுகங்கள் கடந்தபோது பிரம்ம தேவர் எழுந்து உலகத்தைப் படைக்க விரும்பி னார். அவர் மூச்சியிலிருந்து மரீசி முதலிய மகரிஷிகள் தோன்றினர். அதில் நாரதரும் ஒருவர். பகவான் விஷ்ணுவால் கொடுக்கப் பட்ட வீணையைக் கையில் ஏந்தியபடி மூவுலகங்களையும் சுற்றிவரும் பாக்கியத்தைப் பெற்றார். இவ்வாறாக நாரத முனிவர் தனது சுய சரிதையை வியாச மகரிஷியிடம், சரஸ்வதி நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சம்யாப்ராசம் என்னும் ஆசிரமத்தில் கூறி விட்டு அங்கிருந்து வேறுலகத்திற்குச் சென்றார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

கலகம் தீர்க்கும் நாரதர் வழிபாடு

"என்மீது பக்தி செலுத்துபவனுக்கு நான் சேவகனாக இருக்கிறேன்' என்று பகவான் கூறியுள்ளார். சரணாகதி தத்துவ மூலங்களில் "அடியார்க்கு அடியேன்' என்பது ஒரு விதி.

எப்போதும் நாராயணின் நாமத்தை உட்கணித்து வருவதால், அவரது ரூபமாகவே ஆகிவிடுவதால் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார் நாரதர்.v நாரத மகரிஷியின் படத்தைத் தூய்மை செய்து, பூ, பொட்டு வைத்து, மலர்ச்சரம் சாற்றி அலங்கரித்து, நெய் தீபமேற்றி, சங்கு சக்கர கோலமிட்டு, ஸ்ரீ விஷ்ணு பாதத்தை நடுவில் வைத்து, "ஓம் நமோ நாராயணாய, ஜெபப்ரியாய, கீலக ப்ரியாய, வீணாதாரணாய, விஷ்ணு பக்தாய, சக்தி தராய, ஆனந்த நிலயாய, ஓம் நமோ நாராயணாய நம' என்று ஒருநாளைக்கு இருபத்தோரு முறை கூறி, அவர் படத்தின் முன் துளசியால் அர்ச்சனை செய்து, கற்கண்டு, தயிரன்னம், உளுந்துவடை நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் வணங்குதல் அவசியம்.

கலகத்தைத் தூண்டிவிட்டு உண்மை நிலையை உணரவைக்கும் மகரிஷி இவர். பூஜைக்குப்பிறகு அவரது பிறப்பின் கதையை நாரதர் பக்தி இலக்க ணம் வரை ஒருமுறை படித்துவிட வேண்டும்.

மழைப்பொழிவுக்கு ரிஷ்ய சிருங்க மகரிஷியை நினைக்க வேண்டும். பித்ரு தோஷம் நீங்கிட ஜரத்காரு மகரிஷியை வணங்கவேண்டும். சொல்வாக்கில் உயர்ந்து நிற்க அகத்திய முனிவரை வணங்குதல் வேண்டும். அறிவுக் களஞ்சியமாக மிளிர யாக்ஞவல்கிய மகரிஷியை வணங்கவேண்டும். கலகத்திலிருந்து மீண்டுவந்து நிம்மதி பெற நாரத மகரிஷியை வணங்குதல் முறை.

கலகத்தால் கலங்கும் ஜாதகர்கள்!

முற்காலத்தில் இரு நாட்டு மன்னர்களும் போர் தொடங்குவதற்கு முன், எதிரிநாட்டு படைவீரர்கள் தங்கியிருக்கும் பாசறைகளுக்கு ஒற்றர்களை அனுப்பி, அங்கு கலகம் மூட்டி படைகளைப் பிரித்து பலமிழக்கச் செய்வார் கள். இதை சிப்பாய் கலகம் என்பர். அதே நிலை இக்கால கட்டத்திலும் குடும்ப உறவுகள், அரசு அலுவலகங்கள், ஒப்பந்தம் எடுக்கும் போட்டி யாளர்கள் போன்றவர்களிடையே நிலவுகிறது.

"கலகமில்லாமல் உலகமில்லை. உலகம் உயர்ந்திட கலகம் அகற்றுக' என்னும் வாசகத் தின்படி, கலகம் என்னும் பெரும் பிரச்சினை யாருக்கு வந்தாலும் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டுவிடும். வீட்டில் தீர்க்கமுடியாத கலகம் (பிரச்சினை) ஏற்பட்டால், உடனே குடியிருக்கும் இல்லத்தை கிருஹ வாஸ்து இலக் கண விதியைப் பயன்படுத்தி, அங்கு ஏதேனும் துர்சக்தி, ஏவல்கள் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். காலில் குத்தும் முள்ளைப்போல அது இருந் தால், நல்ல குடும்பத்திலும் கலகம் உண்டாகக்கூடும். பித்ருக்களுக்கு அவிர்பாகம் தந்து அனுப்பிவிட்டாலும் கலகம் நிரந்தரமாகிவிடும்.

மூன்றாம் வீட்டுக்குடையவன் 6, 8, 12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்து, அதை பாவர்கள் சூழ்ந்தால் சகோதர கலகம் ஏற்படக்கூடும்.

லக்னாதிபதி உச்சமாகி சந்திரனைப் பார்த்தால், செல்வம் சேர்வதனால் கலகம் உண்டாகி ஆட்டிப்படைக்கும்.

லக்னாதிபதி பலவீனமாகி அவரது தசை நடக்கும் காலகட்டங்களில் உறவினர் மற்றும் அரச பதவிக்கு அருகில் அமர்ந்த நண்பரால் கலகம் பெரிதாகிவிடும்.

இரண்டுக்குடையவனுடன் புதன், குரு, சுக்கிரன் இணைந்து 6, 8, 12-ல் இருந்தால், பணம் கொடுக்கல்- வாங்க லில் கலகம், பகை உருவாகக்கூடும்.

பஞ்சாயத்துத் தலைவர், ஒரு நிறுவன முதலாளி, பெரிய பொறுப் பில் உள்ளவரால் மக்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலகம் ஏற்படுவது- தலைவரின் ஜாதகத்தில் லக்னாதி பதி உச்சமாகி சந்திரனைப் பார்ப்ப தால்தான். மேலும் சனி, புதன், சுக்கிர தசைக் காலங்களிலும் பகை, கலகம் உருவாகி, பெண்மூலம் பிரச்சினை ஏற்பட்டு தீர்க்கமுடியாத நிலை உருவாகக்கூடும்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நந்தி வாக்கிய செய்யுள் தொகுப்பை, நூலிடை முறையில் பார்த்து கலகம் செய்வோரை அறிந்து விடலாம். நாரதர் வழிபாட்டால் நன்மை சேரும். அவர் சரித்திரம் படிப்பதால் கலகங்கள் மறைந்து மங்களம் உண்டாகும்.