சித்தர்தாசன் சுந்தர்ஜி
ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
இன்றைய நாளில் மக்களிடையே பாசப் பிணைப்பு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை குலைந்து, உறவுகளில் ஒற்றுமையின்மை அதிக மாக உள்ளது.
பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு; கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு; மாமனார்- மாமியாரை வெறுத்து ஒதுக்கி வாழ்தல்; சகோ தரன்- சகோதரிகளிடையே பகை; தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமைக்குறைவு; கூட்டுத்தொழிலில் ஏமாற்றப்படுதல்; நம்பிய வர்கள் செய்யும் மோசம்; நம்பவைத்து துரோகம் செய்தல் போன்ற பல நிலைகளில் பாதிப்படைந்து, மனம் கலங்கி நிறையபேர் வாழ்கின்றனர்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஒற்றுமை உண்டாக பூஜை, யாகம் போன்றவற்றிலோ, விரதம், மாந்த்ரீக வசியம் போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களிலோ ஈடுபட்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே நடைமுறையில் நாம் காணும் உண்மை.
மனித வாழ்வில் விதியாலோ, கிரகங் களாலோ, வம்சத்தில் உண்டான பாவ- சாப வினைப்பதிவுகளாலோ, ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றாலோ
சித்தர்தாசன் சுந்தர்ஜி
ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
இன்றைய நாளில் மக்களிடையே பாசப் பிணைப்பு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை குலைந்து, உறவுகளில் ஒற்றுமையின்மை அதிக மாக உள்ளது.
பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு; கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு; மாமனார்- மாமியாரை வெறுத்து ஒதுக்கி வாழ்தல்; சகோ தரன்- சகோதரிகளிடையே பகை; தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமைக்குறைவு; கூட்டுத்தொழிலில் ஏமாற்றப்படுதல்; நம்பிய வர்கள் செய்யும் மோசம்; நம்பவைத்து துரோகம் செய்தல் போன்ற பல நிலைகளில் பாதிப்படைந்து, மனம் கலங்கி நிறையபேர் வாழ்கின்றனர்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஒற்றுமை உண்டாக பூஜை, யாகம் போன்றவற்றிலோ, விரதம், மாந்த்ரீக வசியம் போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களிலோ ஈடுபட்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே நடைமுறையில் நாம் காணும் உண்மை.
மனித வாழ்வில் விதியாலோ, கிரகங் களாலோ, வம்சத்தில் உண்டான பாவ- சாப வினைப்பதிவுகளாலோ, ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றாலோ பாதிப்புகள், தடைகள் இருந்தால் அவற்றை-
✶ நடைமுறை செயல்மூலம் நிவர்த்தி
✶ முறையான முன்னோர் வழிபாடு
✶ நம்மால் பாதிக்கப்பட்டதால், தற்போது பாதிப்பினைத் தரும் ஆத்மாக்களை அறிந்து அதற்குச் சரியான பாவ- சாப நிவர்த்தி வழிமுறை
✶ சகல வினைகளையும் தீர்த்து நன்மை தரும் சித்தர் வழிபாடு
என அவரவர் நிலையறிந்து, நிவர்த்தி செய்து கொள்ள பல வழிமுறைகளை அகத்தியர் முதலான சித்தர் பெருமக்கள் ஜீவநாடியில் கூறியுள்ளனர்.
அவ்வகையில் சித்தர்கள் கூறியுள்ள "பெயர் வசியப் பரிகாரம்' மூலம் குடும்ப உறவுகளில் பாசப் பிணப்பையும் ஒற்றுமையையும் உண்டாக்கும் வழிமுறைகளை அறிவோம்.
சித்தர்கள் கூறியுள்ள பெயர் வசியம் என்பது ஆங்கில எழுத்துகளைக் கொண்டு அமைக்கும் நியூமராலஜியோ, பிறந்த தேதிகளைக் கொண்டு அமைக்கும் எண்கணித முறைகளோ அல்ல. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட நேர்கிறது. சில தம்பதிகள் கருத்து வேறு பாட்டுடன் ஒருவருக்கொருவர் பாசமில்லாமல் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதுபோன்ற கணவன்- மனைவி பெயர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களின் பெயர் வசியமின்றி பகைநிலையில் அமைந்திருக்கும்.
நம் முன்னோர்கள் ஆண்- பெண் திருமண கால சமயத்தில், அவர்களின் பெயர் உச்சரிப்பு (ஒலி நிலை) ஒற்றுமையை அறிந்தே திருமணம் செய்துள்ளார்கள்.
பெயர் வசியமறிந்து திருமணம் செய்தவர்கள் ஒருவருக்கொருவர் பாசத்துடன், மக்கட் செல்வம் குறையாமல், நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர் என்பது அனுப வத்தில் நாம் அறியும் உண்மை.
புராணங்களில் ஆண்- பெண் தெய்வங் களுக்குரிய பெயர்கள் ஒத்த உச்சரிப்பு, வசியம் உள்ளதாக அமைந்திருப்பதைக் காணலாம்.
உதாரணமாக, சில தெய்வத் தம்பதியரின் பெயர்களைக் காணலாம்.
அண்ணாமலை - உண்ணாமுலை
பரமசிவன் - பார்வதி
மகேசுவரன் - மகேசுவரி
விசுவநாதன் - விசாலாட்சி
ஏகாம்பரம் - காமாட்சி
வெங்கடாசலபதி - பத்மாவதி
மகாவிஷ்ணு - லக்ஷ்மி
மலையப்பசுவாமி - அலமேலு
இந்திரன் - இந்திராணி
தண்டாயுதபாணி - தெய்வானை
இதுபோன்று இன்னும் ஏராளமாக எடுத்துரைக்கலாம். இங்கு கணவன்- மனைவி பெயர் உச்சரிப்பு, ஒலியமைப்பு இணைந்து வசியம் உண்டாகி, ஒற்றுமை நிலையைத் தருகிறது.
இதுபோன்ற பெயர் வசியம் அமைந்த கோவில்கள் நாளுக்கு நாள் பிரசித்தம் பெற்று வருகின்றன. நல்ல வருமானத்தையும் தருகின்றன.
கணவன்- மனைவி பெயர்கள் வசியமில் லாமல் அமைந்துள்ள கோவில்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதையும் காணலாம்.
கந்த புராணத்தில் முருகனுக்கு ஏராளமான பெயர்கள் கூறப்படுகின்றன. முருகன் தெய்வானையை மணந்த பின்பு, வேடர்குல மங்கையான வள்ளியின்மீது காதல் கொள்கிறார் என்பது புராணம். முருகன் வள்ளியை எந்தப் பெயருடன் வந்து காதலித்து, போராடி, பிடிவாத மாக மணந்தார் என்றால்-
"வேடன்- விருத்தன்- வேலன்' என்ற பெயர் களுடன்தான். இந்த பெயர்களுக்கும், வள்ளி என்ற பெயருக்குமுள்ள ஒலி நிலை வசியம் தான் ஒன்றுசேர்த்தது. "வே, வ, ல' என்ற எழுத்துகளின் ஒலி நிலைதான் இங்கு வசியப்படுத்தியது.
இவர்களிருவரும் இணைய உதவி செய்தவர் விநாயகர். இங்கும் "வ' வரிசையில் உள்ள "வி' என்ற எழுத்தின் உச்சரிப்பு உதவி செய்தது.
கணவன்- மனைவி இருவரின் பெயர் எழுத்து களின் உச்சரிப்பு ஒற்றுமையாகி, பெயர் வசியம் பெற்று அமைந்துவிட்டால், அந்த தம்பதியர் ஆயுள்வரை ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, அரவணைத்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
பெயர் வசியம் பெற்ற தம்பதியரை முன்வினை பாவ- சாபம், கிரகதோஷம் போன்றவற்றால் பிரிக்க முடியாது. பிரிவினை, விவாகரத்து ஏற்படாது.
இன்றைய நாளிலும், நமது பிள்ளைகளின் திருமண காலத்தில் நமது முன்னோர்கள் காட்டிய வழியில், இருவரின் பெயர் வசியம் பார்த்து, அது அமைந்துவிட்டால் பயப் படாமல் திருமணம் செய்யலாம். ஆனால், பெயர் வசியம் பார்க்கும்போது கொஞ்சம் கவனமாக, சரியாகப் பார்த்து செய்தல் வேண்டும். திருமணத் திற்குத் தடை, தாமதம் ஏற்படாது. காலத்தே திருமணம் நடக்கும்.
திருமணமாகி மகிழ்ச்சியில்லாமல் வாழும் தம்பதியர்கூட தங்கள் பெயர்களை வசியமுள்ள தாக அமைத்துக்கொண்டால், வாழ்க்கையை உயர்வாகவும், இன்பமானதாகவும் உருவாக் கிக்கொள்ளலாம்.
பெயர்களிலுள்ள மேலும் சில சூட்சுமங் களை பிறகு காண்போம்.
செல்: 99441 13267