ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சென்ற இதழ் தொடர்ச்சி...
ஒன்பது கிரகங்களில் சனி பகவானை பதவி, பணம், தொழில் ஆகியவற்றுக்கு உதாரண கிரகமாக தமிழ்முறை நாடி ஜோதிடத்தில் சித்தர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொரு மனிதனும் இந்தப் பிறவியில் எந்த தொழிலைச் செய்தால் செல்வம், செல்வாக்கை அடையலாம்? தனக்கு உயர்வு தரும் தொழில் எது என்பதை அவரவர் பிறப்பு ஜாதகத்தில் சனி கிரகத்தின் நிலையை அறிந்து, தனக்குரிய தொழிலைச் செய்தால் மட்டுமே, செய்யும் தொழிலிலில் சரிவு, இழப்பு ஏற்படாது.
மனிதர்கள் வாழ்வில் "நல்லதை விட்டவனும் கெடுவான்; கெட்டதைத் தொட்டவனும் கெடுவான்' என்பதே உண்மை. ஒரு மனிதனுக்கு சரியான தொழில், பணம் ஆகிய இரண்டும் இருந்துவிட்டால் போதும்; அவனும், அவன் வாரிசுகளும் கௌரவமாக வாழ்வார்கள்.
ஒருவர் தொழிலில் உயர்வதும், தாழ்வதும் சனியின் கோட்சார நிலையில் ராசி மாற்றக் காலங்களில்தான். ஒருவரது பிறப்பு ஜாதகத்திலுள்ள ஒன்பது கிரகங்களுடன், கோட்சார சனி இணையும்போதுதான் தொழில், பொருளாதாரம், பதவி, மதிப்பு என வாழ்வின் அனைத்திலும் உயர்வு- தாழ்வு உண்டாகிறது.
குரு+சனி
ஒருவர் பிறப்பு ஜாதகத்தில் பணம், பதவி, தொழிலைக் குறிக்கும் சனி மகரம், ரிஷபம், கன்னி ராசிகளில் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் மகரத்திற்கு வரும் குரு (நவம்பர் 15) ஜென்மச் சனியுடன் இணைந்து என்ன விதமான பலன்களைத் தருவார் என்று அறிவோம்.
இந்த கோட்சார குரு, சனி இணைவு தொழிலில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இதுவரை பல தொழில்களைச் செய்து, ஒரு நிலையான தொழில் அமையாத வர்களுக்கு இப்போது சனி பகவான் நிலையான தொழிலை அமைத்துத் தருவார். வேலை தேடி அலைபவர்களுக்கு வேலையை அமைத்துத் தருவார். இப்போது நிலையான வருமானத்திற்கு நல்ல வழியை உண்டாக்கி வைத்துவிடுவார்.
உங்கள் திறமை வெளிப்படும் காலம் வந்துவிட்டது. இதுவரை தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள், வேலையாட்களால் உண்டான சிக்கல், சிரமங்கள் நீங்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்திவிடுவீர்கள்.
படிப்பை முடித்துவிட்டு, தன் தகுதிக் கேற்ற வேலை அமையவில்லை, சம்பளம் குறைவாக உள்ளது போன்ற ஏதாவது காரணத்தைச் சொல்லி, வேலைக்குப் போகாமல் வெட்டியாக அலைந்துகொண்டு பெற்றோர் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டி ருப்பவர்கள், அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு, குறைவான சம்பளமாக இருந்தா லும் பரவாயில்லை என ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லத் தொடங்குங்கள். இன்னும் இரண்டு வருடத்திற்குள் அவரவர் படிப்பு, உழைப்பு, திறமைக்கேற்ற சம்பளத் தையும், உயர்வான பதவியையும் அடைவார்கள். நீங்கள் மாறினால்தான் உங்கள் வாழ்க்கை யில் நல்ல மாற்றமும் வரும். சனிபகவான் தேடிவந்து தரமாட்டார். ஆனால் தேடு பவனுக்கு கட்டாயம் தந்துவிடுவார்.
நீங்கள் ஈடுபட்டுச் செய்யும் தொழில் சம்பந்தமான எல்லா செயல்களிலும் வெற்றி உண்டாகும். இந்த வெற்றியை பணம், பொருள், நிலையான சொத்துகளாக மாற்றி, எதிர்கால வாழ்க்கை வளமானதாக அமைய அடித்தளம் அமைத்துக்கொள்ளுங்கள். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனிக் காலங்களில் சனிபகவான் கொடுக்கும் தொழில், சொத்து, பணம், பதவி அழியாமலிலிருந்து, உங்களையும் வம்ச வாரிசுகளையும் காப்பாற்றும்.
ஒரு மனி தனுக்கு பணம், பதவி கிடைத்த வுடன், ஆணவம், அகந்தை, அலட்சி யம், முன்கோபம், செய்நன்றி மறக் கும் குணம் போன்றவையும் கூடவே வந்துவிடும். இந்த குணங்களுடன் வாழ ஆரம்பித்தால், இவை சனி பகவான் தரும் நன்மைகளைத் தடுத்துவிடும். பதவி கிடைத்தவுடன் பணிவாக இருக்க வேண்டும் பணம் சேர்ந்தவுடன் நிதானமாக செயல்படவேண்டும்.
அரசியல் தலைவர்களில் இருந்து, அடிமட்டத்தொழில் செய்பவர்கள் என அனைவரையும் குரு, சனி சேர்க்கை இப்போது உயர்த்திவைக்கும்.
குரு+ராகு
ஒருவர் பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசிகளில் ராகு இருந்தால், இப்போது கோட்சார நிலையில் மகர ராசிக்கு மாறும் குருபகவான் ஜென்ம ராகுவுடன் இணைந்து என்ன பலன்களைத் தருவார் என்று அறிந்து கொள்வோம்.
இதுவரை இருந்த நல்ல குணங்கள் மாறி விடும். நல்லது- கெட்டது அறிந்து செயல் படும் அளவு குறையும். நல்ல தைச் சொல்பவர் கள், செய்தவர் கள் இப்போது எதிரிகளாகத் தெரிவார் கள். நல்லவர்கள் விலகிச் செல்வார்கள். தீயவர்கள் நட்பு உருவாகும். கெட்டவர் களின் நட்பால் சூதாட்டம், ரேஸ், மது, கஞ்சா போன்ற சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்து பணம் சம்பாதிக்க எண்ணுவார்கள் அல்லது இவற்றுக்கு அடிமையாகி பணம், சொத்து களை இழந்துவிடுவார்கள்.
குரு, ராகு இணைவால் மனதில் ஒருவித இனமபுரியாத பயம் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும். நெருங்கிய உறவு களில் மரணம் உண்டாகும். முன்னோர்கள் காலத்தில் துர்மரணமடைந்தவர்களின் ஆவித்தாக்கம் ஏற்பட்டு, கண்டங்கள், கஷ்டங்கள் அனுபவிக்கச் செய்துவிடும். பாட்டன் காலத்துப் பாவங்கள் இப்போது பேரன்கள் வாழ்வில் துயரங்களை அனுபவிக் கச் செய்யும். விபத்துகள், கீழே விழுந்து கால்களில் அடிபடுதல், மூட்டுகளில் வலிலி, உடல் அசதி, களைப்பு, மனதில் குழப்பம் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
இதுபோன்று உண்டாகும் கஷ்டங் களால், தனக்கு யாரோ ஏவல், பில்லி, சூனியம் வைத்துவிட்டார்கள் என்று பயந்து, சிலர் மந்திரவாதிகளைத் தேடி அலைவார்கள். பெண்கள் அமாவாசை பூஜை, பௌர்ணமி பூஜை என இரவுநேர பூஜைகளுக்கு காளி, மாரி, துர்க்கை போன்ற தெய்வ ஆலயங்களுக் குச் சென்று பொருளை இழப்பார்கள். ஆசை யைத் தூண்டிவிட்டு அல்லல் படவைத்து விடுவார் ராகு. கவனம்!
குரு+கேது
பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசிகளில் கேது இருந்தால், இப்போது கோட்சார நிலையில் மகர ராசிக்கு வரும் குருபகவான் ஜென்ம கேதுவுடன் இணைந்து என்ன பலன்களைத் தருவார் என்று காண்போம்.
செய்யும் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். எதிர்பார்ப்பது போன்று எந்த செயலும் சீக்கிரத்தில் முடியாது. இவர்களது பணம், சொத்து, திறமை, அறிவால் உண்டாகும் நன்மைகளை பிறர் அனுபவிப் பார்கள். இவர்களால் அனுபவிக்க முடியாமல் போகும். தொழில், வியாபாரத்தில் சிரமம், தடைகளைத் தந்து வருமானத்தைக் குறைத்து விடும்.
மனதில் விரக்தி, சலனம், குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் சரீரநலன் கெடும். எதிலும் உற்சாகமாக ஈடுபட்டுச் செய்ய மனம் ஒத்துழைக் காது. மற்றவர்கள் ஆதரவு பெரிதாகக் கிடைக்காது. இது வரை இவர்களால் நன்மையடைந்த நண்பர்களும், உறவினர்களும் நன்றி கெட்டவர்களாய் நடந்துகொள்வார்கள். இவர்களை ஒதுக்கி விடுவார்கள் அல்லது இவர்களைவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். அடிமைபோன்று பிறர் தயவில் வாழ நேரிடலாம். வாயை விட்டு எதைச் சொன்னாலும் அந்த காரியத்தைச் செய்யமுடியாது. தன் குடும்பம், குழந்தை களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய முடியாது.
வாழ்க்கையில் இப்போது உண்டாகும் சிரமங்களுக்குப் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்று கூறி, சிலர் பணத்தை விரயம் செய்து அழிப்பார்கள். இன்னும் சிலர் கோவில் கோவிலாக அலைவார்கள். இன்னும் சிலர் புண்ணிய நதி, தீர்த்தங்களில் குளித்தால் பாவ- சாபம் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும் என்று செல்வார்கள். மனதிற்கு நிம்மதி தேடி, மலை மலையாக ஏறி இறங்குவார்கள்.
இந்த குரு, கேது இணைவுக் காலத்தில் இது போன்ற நம்பிக்கை சார்ந்த எந்த செயல்களைச் செய்தாலும் பலன் கிடைக்காது. கையில் உள்ள பணம்தான் செலவாகி கரைந்துவிடும். இப்போது இவர்கள் தங்கள் கையில் உள்ள சொத்து, பணத்தை கவனமாகக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். பகுத்தறிவுக் கருத்தும், செயல்களில் கவனமும் மட்டுமே காப்பாற்றும்.
செல்: 99441 13267