ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

குரு+புதன்

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளில் புதன் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் மகர ராசிக்கு வந்துள்ள குருபகவான் ஜென்ம புதனுடன் இணைந்து என்ன விதமான பலன்களைத் தருவார் என்று அறிந்துகொள்ளுங்கள்.

Advertisment

gg

இளைய சகோதர- சகோதரிகளின் உறவு மேம்படும். பகை நீங்கி அவர்களால் நன்மைகள் உண்டா கும். இளைய உறவு களுக்கு சுபகாரியம் கூடிவரும். தாய் மாமன் உறவு மேம் படும்; தாய் மாமனுக்கு நன்மை கள் உண்டாகும். ஆண்கள்- பெண் களுக்கு புதிய நண்பர்கள் அமைவார்கள். சிலர் வாழ்க்கையில் காதல் நிகழ்வுகள் உண்டாகும். இருபாலாரும் காதல் சம்பந்த மான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இதுநாள்வரை தனக்கு ஒரு வீடு, மனை இல்லையே என ஏங்கியவர்கள் கட்டிய வீடோ, வீட்டுமனையோ, பிளாட்டோ சொந்தமாக வாங்குவார்கள். புதிய தோட்டம், நிலம் வாங்கும் வாய்ப்புண்டாகும். பிறருக்கு வாடகை, ஒத்திக்கு விட்ட வீடு, வியாபாரக் கடைகள், கட்டடங்கள், தோட்டம் போன்ற வற்றில் இருக்கும் வில்லங்கம், வழக்கு, வியாஜ் ஜியங்கள் நீங்கி, உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் சொத்தின் மதிப்பு உயரும்.

மாணவர்களுக்கு கற்கும் திறமை மேம்படும். படித்தது அப்படியே மனதில் தங்கும். சிலர் இடையில் நின்றுபோன படிப்பை மறுபடியும் தொடர்ந்து முடித்துவிடுவார்கள். அரியர் பாடங்கள் இருப்பவர்கள் இப்போது தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். மேற்படிப்பு முயற்சி கைகூடும். அறிவால் செயல்படும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானி கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி புகழ்பெறுவார்கள்.

கல்வி சம்பந்தமான உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். தடைகள் நீங்கும்; பணி உயர்வுண்டாகும். திறமையான, உண்மையான ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுவார்கள். பள்ளி, கல்லூரி, கல்விக்கூடங்கள் நடத்துபவர்களுக்கு வருமானம் கூடும்.

புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் பிரசுரிக்கப்படும். எழுத்தையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு வருமானம் கூடும்; சன்மா னம் கிட்டும். படைப்புகள் புகழ்பெறும்.

செய்தி, பத்திரிகைத்துறை, வருவாய்த் துறை, கம்ப்யூட்டர் தொழில், அஞ்சல் துறை, தொலைத்தொடர்புத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுண்டாகும். இதுவரை தங்கள் திறமைக்கேற்ற வேலை, ஊதியம் கிடைக்காமல் உழைத்துக்கொண்டி ருந்தவர்களுக்கு நல்ல வேலை, திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திறமை வெளிச்சத்திற்கு வரும்.

வங்கிப்பணி, வட்டித் தொழில், பைனான்ஸ், ஷேர்மார்க்கெட், எல்.ஐ.சி., கமிஷன் மண்டி, ஏஜென்சி, விநியோகஸ்தர், பலசரக்குக்கடை போன்ற தொழில்களைச் செய்பவர்களுக்கு உயர்வும் வருமானமும் கூடும். புதிய கம்பெனிகளின் தொடர்பும், விநியோக உரிமையும் கிடைக்கும். கிளைகள் அமைத்து தொழிலை விரிவுபடுத்துவார்கள். புத்தக வெளியீட்டாளர்கள், புத்தக வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல உயர்வு உண்டாகும்.

தோட்டம், ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த தேக்கநிலை மாறி, நல்ல லாபம் அடைவார்கள். நிலத்தின் மதிப்பு உயரும்.

குரு+குரு

சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை நாடி ஜோதிடத் தில் குரு என்ற கிரகமும், வார்த்தையும் ஆண்கள் ஜாதகத்தில் ஜாதகரையே குறிக்கும்.

உங்கள் பிறப்பு ஜாதகத் தில் மகரம், ரிஷபம், கன்னி ராசிகளில் குரு இருந்தால், இப்போது கோட்சார நிலையில் மகரத்திற்கு வந்துள்ள குரு ஜென்ம குருவுடன் இணைந்து என்ன பலன்களைத் தருவார் என்று அறிந்துகொள்வோம்.

இந்த ஒருவருட காலத்தில் நன்மைகளையே செய்யும் என்பது பொதுவான பல னாகும். பிறப்பு ஜாதகத்தில், உங்கள் ஜென்ம நட்சத்திரத் திற்கு நன்மை தரும் நட்சத் திரங்களின் பாதசாரங்களில் இருந்தால் மிகமிக நன்மை களைத் தந்து வாழ்வில் உயர்வைத் தந்துவிடும்.

ஆனால் ஜென்ம நட்சத்திரத் திற்கு நன்மை தராத நட்சத்திரத்தின் பாதசாரங்களில் இருந்தால், கோட்சார குரு மாறுபட்ட, மத்திமமான பலன்களையே தரும்.

குடும்பம், உறவு, நட்பு, தொழில், உத்தியோகம், சொத்து என அனைத்திலும் இருக்கும் தடைகள், கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் நீங்கி, நல்ல தீர்வு கிட்டும். நன்மையும், நிம்மதியும் உண்டாகும். ஈடுபட்டுச் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றியடைவீர்கள். அந்த வெற்றியால் புகழ், செல்வம் பெருகும். உங்களைவிட்டு விலகிப் போன உறவுகள், நட்புகள், கைவிட்டுப்போன பொருட்கள் என அனைத்தும் திரும்பக் கிடைக்கும்.

உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அந்தஸ்து, அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம், நட்பு கிடைக்கும். இதனால் நீங்கள் பிரபலமானவராக மதிக்கப் படுவீர்கள். இதுவரை மனதில் இருந்துவந்த விரக்திநிலை மாறும். இந்த காலத்தில் உங்களின் தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும். இப்போது எந்த செயலையும் பதட்டமில்லாமல், குழப்ப மில்லாமல், பொறுமையாக, புத்திசாலிலித்தனமாக செய்து முடித்துவிடுவீர்கள். உங்கள் உதவியை நாடி வந்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பீர்கள். அதனால் பலனையும் அடைந்துவிடுவீர்கள்.

நீங்கள் செய்யும் கௌரவமான எந்த தொழில், உத்தியோகம் என்றாலும், அதில் உயர்வும், வருமானமும் கிடைக்கும். பணப்பற்றாகுறை நீங்கும். பணம் கையில் இருப்பதால் மனதில் தைரியம் உண்டாகும். இதனால் உடலிலிருந்த நோய் நீங்கும். மனைவி, குழந்தைகளின் தேவைகளைத் தட்டாமல் நிறைவேற்றித் தந்து அவர்களை மகிழ்ச்சியாக இருக்க வைப்பீர்கள்.

பகுத்தறிவு சிந்தனைகளால் உண்மை, பொய்யை அறிந்து, தனக்குத் தேவையில்லாத செயல்களில் ஈடுபடாமல், வருங்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய சரியான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்பட்டு வாழ்வீர்கள். இதுவரை உங்களிடமில்லாத இந்த குணம், செயல், மனமாற்றம் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.

புதிய முயற்சிகளைப் புதுமையான முறையில் செய்து வெற்றியடைந்து மற்றவர்களிடம் பாராட்டுப் பெறுவீர்கள். உங்கள் நல்வாழ்வுக்கு புதிய புதிய வாய்ப்புகள் வரும்.

அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நலம் பெறுவீர்கள்.

குரு+சுக்கிரன்

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்திலுள்ள சுக்கிரன் அந்த ஜாதகியைக் குறிக்கும். ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்திலுள்ள சுக்கிரன் அவர் மனைவியைக் குறிக்கும். திருமணத்திற்குப் பிறகு வாழ்வில் அனுபவிக்கப்போகும் நன்மை- தீமைகளையும், வாழ்க்கை நிலையையும் சுக்கிரனை உதாரண கிரகமாகக்கொண்டு பலன் கூறியுள்ளார்கள் சித்தர்கள்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசிகளில் சுக்கிரன் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் மகர ராசிக்கு வந்துள்ள குரு இந்த ஒரு வருட காலம் ஜென்மச் சுக்கிரனு டன் இணைந்து என்ன விதமான பலன்களைத் தருவார் என்று அறிந்துகொள்வோம்.

இதுவரை திருமணமகாமலிருக்கும் ஆண்களுக்கும், இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துவரும் ஆண் களுக்கும் இப்போது பெண் கிடைத்து திருமணம் நடக்கும்.

திருமணத்திற்குப் பெண் பார்க்கும் போது, பெண்ணுக்கு ஜாதக தோஷம், கிரகதோஷம், செவ்வாய் தோஷம், 7, 8-ஆமிடங்கள் தோஷம், பத்துப் பொருத்தமில்லை, நட்சத்திரப் பொருத்த மில்லை, மூல நட்சத்திரம், கேட்டை நட்சத்திரம் உள்ள பெண் என்று யாரோ கூறுவதைக் கேட்டு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடக்கவிடாமல் செய்யவேண்டாம்.

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் யார் துணையாக வருவார் என்று தீர்மானிக்கப்பட்டுதான் பிறக்கிறார்கள். ஒரு ஆண், பெண்ணின் திருமணம், ஏதேதோ தோஷங்களைக் கூறி மற்றவர்கள் தீர்மானிப்பதல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சுய ஜாதகத்தில் மகரத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்த ஆண்களுக்கு, குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரும், குடும்பப் பொறுப்புள்ள பெண் மனைவியாக அமைவார்.

பணம், சொத்து சேர்ப்பதில் ஆர்வமுள்ளவர். தேவையில்லாத செலவுகளைச் செய்யமாட் டார். தன் ஆசை, சுகங்களை நீக்கிவிட்டு, தன் கணவன், குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்; உறவுகள் மத்தியில் நாமும் உயர்வாக வாழவேண்டும் என்ற லட்சியம் உடையவர். கணவனையும் சேர்த்துக் காப்பாற்றும் நல்ல உழைப்பாளிப் பெண் மனைவியாக அமைவார்.

அந்தப் பெண்ணின் ஊர் தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளில் சுமார் 30 மைல் தொலைவுக்குள் இருக்கும். பிறந்தவீடு தெற்கு, வடக்குவீதியில், கிழக்கு, மேற்கு முன்வாசல் உள்ள வீடாகும்.

ஆணின் பிறப்பு ஜாதகத்தில் ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால், மனைவி கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர். குடும்பம் நடத்துவதில் திறமையானவர். ஆடை, ஆபரணம் அணிந்து, அலங்காரம் செய்துகொண்டு, தன்னை அழகாகக் காட்டிக்கொள்வதில் அதிக விருப்பமுள்ளவர்.

சொந்த ஊரிலும், சொந்தத்திலும் மனைவி அமையலாம். அவர் பிறந்த ஊர் தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசையில், சுமார் பத்து மைல் தொலைவுக்குள் இருக்கும். பிறந்தவீடு தெற்கு, வடக்கு வீதியில் கிழக்கு, மேற்கு முன்வாசல் உள்ள வீடாக இருக்கும்.

கன்னி ராசியில் சுக்கிரன் இருக்கப் பிறந் துள்ள ஆண்களுக்கு, இளமையான தோற்றமுள்ள பெண் மனைவியாக அமைவார். இனிமையாகப் பேசுவார். கண்ணியமான குணமுடையவர். குடும்பத்தை நிர்வாகம் செய்யும் குடும்பத் தலைவியாக இருப்பார்.

பிறந்த ஊர் தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசையில் சுமார் பத்து மைல் தொலைவுக்குள் இருக்கும். பிறந்த வீடு தெற்கு, வடக்கு வீதியில் கிழக்கு, மேற்கு முன்வாசல் உள்ள வீடாகும்.

ஆண்களின் பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசிகளில் குருவும் சுக்கிரனும் இணைந்திருந்தாலும் அல்லது குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்தாலும், அவருக்கு போனபிறவியில் யார் மனைவியாக இருந்தாரோ, அவரே இந்தப் பிறவியிலும் மனைவியாக வருவார். திருமணம் நடக்கும்; ஆனால் தாமதம், தடையாகும்.

புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்க்கு இப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். முதலில் பெண் குழந்தை பிறக்கும். மனைவி, மகளால் பெருமை உண்டாகும். மனைவியைப் பிரிந்து வாழும் கணவர்கள், தங்கள் தவறை யுணர்ந்து மனைவியைத் தேடிவந்து இணைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள். கணவனைவிட்டுப் பிரிந்து வாழும் பெண்களும் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி கணவனுடன் சேர்ந்து வாழ்வார்கள். கணவன், மனைவியிடையே பாசம், நெருக்கம் அதிகமாகும். இந்த குருப் பெயர்ச்சி பிரிந்த தம்பதியரை இணைத்து, குடும்பத்தை ஒன்றுசேர்த்து வைத்துவிடும்.

அதன்பின்பு இவர்கள் வாழ்வில் செல்வம், செல்வாக்கு பெருகும். மனைவியால் யோகம், நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம், சுபச்செலவுகள் ஏற்படும். வீடு, வாகனம், ஆபரணம் சேரும்.

இதுவரை சொந்தவீடு இல்லாமல் இருப்பவர்கள் வீடு கட்டுவார்கள். வீடு, கட்டடம், திருமண மண்டபம் போன்றவை கட்டி முடிக்கமுடியாமல் தடையாகியிருந்தால், அவற்றை முழுமையாகக் கட்டி முடித்து விடுவார்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்குவார்கள். அவரவர் வருமானத்தைப் பொருத்து வீடு, வாகனம், ஆபரணம், அழகுப் பொருட்கள், அலங்காரப் பொருட்களை அடைவார்கள்.

பொதுவாக, இப்போது பண வருவாய் அதிகரிக்கும். நினைப்பது எண்ணம்போல் நிறைவேறும். நிலையான சொத்துகளை வாங்கி சேமித்துக்கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் ஆசைப்பட்டு கிடைக்காதவை அனைத் தும் இப்போது கிடைக்கும்.

நடிப்பு, நாட்டியம், பாடுதல், கலை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், அழகுப் பொருள், ஆடம்பரப் பொருள், ஜவுளி, பட்டு, உணவுப்பொருள், உணவு விடுதி, எண்ணெய்ப் பொருட்கள், மளிகைக்கடை, கனிமப்பொருள், கால்நடை, வாகனம் போன்ற வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கும், கணக்கர், ஆசிரியர், வங்கியில் பணிபுரிபவர்களுக்கும் உயர்வும் வருமானமும் கூடும்.

சனி, ராகு- கேது கிரகங்களுடன் இணைந்து கோட்சார குரு தரும் பலன்களை அடுத்த இதழில் அறிவோம்.

செல்: 99441 13267