ணோ பெண்ணோ- இசைத் துறையில் புகழுடன் இருப்பதற்கு, அவர் களுடைய ஜாதகத்தில் சந்திரனும், 2-ஆம் பாவத்திற்கு அதிபதியும் நல்ல நிலைமையில் இருக்கவேண்டும். அதை சுபகிரகம் பார்க்க வேண்டும். 2-ஆம் பாவம்தான் ஒருவரு டைய குரலுக்கு அதிபதி. அந்த இடத்தில் சந்திரன் இருந்து, அதை சுபகிரகம் பார்த்தால் ஜாதகர் புகழ்பெற்ற பாடகராக இருப்பார்.

ஒரு ஜாதகரின் லக்னாதிபதி, சுக்கி ரனுடன் சேர்ந்திருந்து, 5-க்கு அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் அல்லது 5-க்கு அதிபதி உச்சத்தில் இருந்தால், அவர் உலகப் புகழ்பெறக்கூடிய பாடகராக வருவார்.

ஜாதகத்தில் சந்திரன், குருவுடன் சேர்ந்து 4-ல் இருந்து, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், அந்த ஜாதகர் முன்னணிப் பாடகராக வருவார்.

லக்னாதிபதி 5-ல் இருந்து, 5-க்கு அதிபதி 3-ல் இருந்து, 2-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அவர் உலகப் புகழ் பெற்ற பாடகராக இருப்பார்.

Advertisment

2-ல் சுக்கிரன், 2-க்கு அதிபதி சந்தி ரனுடன் 3 அல்லது 5-ல் இருந்தால், அவர் பெரிய பாடகராக வருவார்.

லக்னத்தில் சந்திரன், 5-ல் புதன், சூரியன், 6-ல் குரு, சுக்கிரன் இருந்தால், அவர் இளம்வயதிலேயே பெரிய பாடகராவார். மிகப்பெரிய திறமைசாலிலியாக இருப்பார்.

2-க்கு அதிபதி லக்னத்தில் இருந்து, 7-ல் சுக்கிரன், 8-ல் சந்திரன், சூரியன், புதன் இருந்தால், 8-ல் இருக்கும் இந்த கிரகங்கள் 2-ஆம் பாவத்தைப் பார்க்கும். அதனால் அவர் பல மொழிகளில் பாடக்கூடிய மிகப்பெரிய பாடகராக இருப்பார்.

Advertisment

2-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன், சூரியன் இருந்தால் பெரிய பாடகராக வருவார். இசைத்துறையில் புகழுடன் விளங்குவார்.

சூரியன், சுக்கிரன், சந்திரன் 2 அல்லது 3-ல் இருந்து அதை குரு பார்த்தால், அவர் சூழலுக் கேற்றபடி பாடும் திறமையானவராக இருப்பார்.

ss

லக்னத்தில் உச்ச சனி, 2-ல் சுக்கிரன், சந்திரன், 3-ல் குரு, சூரியன், புதன் இருந்தால், உலகமெங்கும் அவருடைய குரல் ஒலிலித்துக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்குப் புகழ்பெற்றவராக இருப்பார்.

ஒருவர் புகழ்பெற்ற பாடகராக வரவேண்டு மென்றால், அவருடைய ஜாதகத்தில் 2-ஆம் பாவத்திற்கு சுக்கிரன் மற்றும் சந்திரனின் பார்வை கட்டாயம் இருக்க வேண்டும். அல்லது 2-ஆம் பாவாதிபதி, சுக்கிரன், சந்திரனுடன் இருக்கவேண்டும். அல்லது 2-ஆம் பாவத்தின்மீது அவர்களுடைய பார்வை இருக்க வேண்டும்.

2-ஆம் பாவாதிபதி 5-ல் இருந்து, 5-ஆம் பாவத்திற்கு குருவின் பார்வை இருந்து, அந்த குருவுக்கு சுக்கிரனின் பார்வை இருந்தால், அவர் பல மொழிகளில் பேசுவார். பல மொழி களில் பாடுவார். புகழுடன் திகழ்வார்.

சுக்கிரன், சந்திரன் 5-ல் இருந்து, 5-க்கு அதிபதி 9-ல் இருந்து, அதை லக்னத்திலுள்ள குரு பார்த்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதியிலேயே பெரிய பாடகராகி விடுவார்.

3-ல் சுக்கிரன், சந்திரன் இருந்து, 5-க்கு அதிபதி உச்சமாக இருந்து, 9-ல் குரு இருந்தால் அந்த ஜாதகர் இசைத்துறையில் கொடி கட்டிப் பறப்பார். கடவுளின் அருள் அவருக்கு இருக்கும்.

லக்னத்தில் உச்ச புதன், 2-ல் சுக்கிரன், சந்திரன், 10-ல் குரு இருந்தால், அவர் கடவுளின் அருள் கிடைக்கப்பெற்றவர். கடவுளின் கீர்த் தனைகளைப் பாடுவார். அவருக்கு நிகர் யாருமே இல்லை என்னும் அளவுக்கு உச்சத்தில் இருப்பார். சனி பகவான் 6-ல் இருந்தால், 14 வயதிலிலிருந்தே அவர் பாடகராக ஒளிவீசத் தொடங்கிவிடுவார்.

ஒரு வீட்டின் வடகிழக்கு தூய்மையாக இருந்து, வடகிழக்கில் பூஜையறை இருந்து, வீட்டின் வண்ணம் மென்மையானதாக இருந்து, அங்கு வசிப்பவர் கிழக்கில் தலை வைத்துப் படுத்தால் அந்த வீட்டில் கடவுளின் அருளிருக்கும். அங்கிருப்பவர் இசைத் துறையில் பெரிய பாடகராகவோ இசைக்கலைஞராகவோ இருப்பார்.

வீட்டின் வடகிழக்கு தூய்மையில்லாமல், படுப்பவரின் தலை தென்கிழக்கு அல்லது வடமேற்கில் இருந்தால் அங்கிருப்பவர் பல முயற்சிகள் செய்தாலும் இசைத்துறையில் புகழ்பெற முடியாது.

பரிகாரங்கள் இசைத்துறையில் புகழ்பெறுவதற்கு...

தினமும் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று, சிவப்பு மலர்களை வைத்து வழிபடவேண்டும்.

தினமும் சூரியனை வழிபடவேண்டும். சூரியனுக்கு நீர்வார்க்கவேண்டும்.

கிழக்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது.

வீட்டின் வடகிழக்கு அல்லது தென் மேற்கில் படுக்கவேண்டும்.

குப்பைகளை சேர்க்கக்கூடாது.

லக்னாதிபதி, 5-க்குரிய கிரகத்தின் ரத்தி னத்தை அணியலாம்.

வெள்ளிக்கிழமை இரவில் காளிக்கு விளக்கேற்றி வழிபட எண்ணம் ஈடேறும்.

செல்: 98401 11534