Advertisment

யோகம் தரும் தசைகளும் பரிகாரமும் - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/muscles-and-remedies-yoga-gives

பொதுவில் ஜாதகரீதியாக எல்லா தசையும், புக்தியும், அந்தரமும் நற்பலனை அள்ளித்தரும் விதமாக அமையாது. சில தசைகள் அற்புதங்களை அபரிமிதமாக தரும்.

Advertisment

அதன் சூட்சமங் களையும், அந்தக் கால அளவில் உள்ளங்கையில் தோன்றும், கரும்புள்ளி, சதுரம், ஸ்டார் போன்றவை எவ்வாறு நம்மை எச்சரிக்கை செய்யும் என்பதையும், கெடுபலனையும் சுருக்க மாக அறிவோம்.

Advertisment

மேஷ லக்னத்தில் பிறந்தவருக்கு, குரு- சனி என்னும் இரு தசையும் யோகத்தை தரும். உங்களுடைய உள்ளங்கையில் ஆட்காட்டி விரலின் அடிப்பாகம் காணப்படுவதுதான் குரு மேடு. அதைபோல் நடுவிரலின் கீழ் காணப்படுவது சனி மேடு. இவற்றில் திடீரென கரும்புள்ளி தோன்றினால் நன்மையோடு கெடுதிகள் வரப்போவதன் அறிகுறிதான். குரு மேட்டில் கரும்புள்ளி தோன்றினால் உங்கள் குடும்பத் தில் உங்களால் கெட்ட பெயர், குடும்ப கௌரவம் பாதிக்கபோவதன் அறிகுறி என உணரவேண்டும். சனி மேட்டில் தோன்றினால் பூர்வீகமாக வரவேண்டிய அசையா சொத்து சார்ந்த கவலை உச்ச கட்டத்தை

பொதுவில் ஜாதகரீதியாக எல்லா தசையும், புக்தியும், அந்தரமும் நற்பலனை அள்ளித்தரும் விதமாக அமையாது. சில தசைகள் அற்புதங்களை அபரிமிதமாக தரும்.

Advertisment

அதன் சூட்சமங் களையும், அந்தக் கால அளவில் உள்ளங்கையில் தோன்றும், கரும்புள்ளி, சதுரம், ஸ்டார் போன்றவை எவ்வாறு நம்மை எச்சரிக்கை செய்யும் என்பதையும், கெடுபலனையும் சுருக்க மாக அறிவோம்.

Advertisment

மேஷ லக்னத்தில் பிறந்தவருக்கு, குரு- சனி என்னும் இரு தசையும் யோகத்தை தரும். உங்களுடைய உள்ளங்கையில் ஆட்காட்டி விரலின் அடிப்பாகம் காணப்படுவதுதான் குரு மேடு. அதைபோல் நடுவிரலின் கீழ் காணப்படுவது சனி மேடு. இவற்றில் திடீரென கரும்புள்ளி தோன்றினால் நன்மையோடு கெடுதிகள் வரப்போவதன் அறிகுறிதான். குரு மேட்டில் கரும்புள்ளி தோன்றினால் உங்கள் குடும்பத் தில் உங்களால் கெட்ட பெயர், குடும்ப கௌரவம் பாதிக்கபோவதன் அறிகுறி என உணரவேண்டும். சனி மேட்டில் தோன்றினால் பூர்வீகமாக வரவேண்டிய அசையா சொத்து சார்ந்த கவலை உச்ச கட்டத்தை அடையப்போவதன் அறிகுறி தான். இதற்கு சுலப பரிகாரம், ஆட்காட்டி விரலில், புஷ்ப ராகம், (எல்லா சபையர்) மோதிரம் அணியவேண்டும். சனி மேட்டில் கரும்புள்ளி தென்பட்டால், "டர்கயஸ்' ராசிக்கல் அல்லது நீலநிற கல் அணிதல்வேண்டும்.

மேஷ லக்னத்தார் சந்திக்கும் கெடுபலன்களை பார்ப்போம் இரண்டில் சூரியன் ரிஷபத்தில் இருந்தால் கல்வியில் தடுமாற்றம் வரும். பணவரவு சார்ந்த மனக்குறை தொடர்கதையாகும், அன்றாட வாழ்வில் அல்லல்கள் வரும். குழந்தைகளில் கல்வியில் வரும் தடைகளைச் சமாளிக்க நேரிடும். அதற்கான பரிகாரம் கோதுமை பண்டங்களை பிறரிடம் இலவசமாக பெற்றுகொள்வது கூடாது. வசிக்கும் இடத்திற்கு கிழக்கு பாகம் இருக்கும் ஈசன் கோவிலுக்கு சென்று வணங்கவேண்டும்.

சூரியன்

துலாத்தில் இருந்தால், மனைவி மற்றும் குழந்தைகளால் வேதனைபட நேரிடும். தாம்பத்திய சுகமும் திருப்திகரகமாக அமையாது. மேலும் மனைவி அல்லது கணவனின் சுண்டுவிரல் மிக குட்டையாக காணப்பட்டால், அவர்களிடம் சிற்றின்ப தாக்கம் கேள்விக்குறியாகும். இப்படிபட்டோர், திருமண பொருத்தம் பார்க்கும்போது "யோனி' பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தருதல் வேண்டும். இல்லையேல் இதுவே மணமுறிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.

பரிகாரம்: கருப்புநிற பசுவுக்கு புல், அகத்திகீரை தருதல் நல்ல பரிகாரம். வெள்ளை பசுவுக்கு கொடுப்பது கூடாது. சிறுவருக்கு இனிப்பு கலந்த கோதுமை பண்டம் உச்சி வேளையில் தானம் செய்தல்வேண்டும். (லிட்டில் ஹார்ட்) என்ற பிஸ்கட் பொட்டலம் குழந்தைக்கு தரலாம். (கோதுமை இனிப்பு கலந்த பண்டம்) நலிந்த கடைநிலை அரசு ஊழியருக்கு தானம் செய்வதும் சூரியனை திருப்தியடையச் செய்யும்.

மேஷ லக்னத்திற்கு சூரியன் இருக்குமிடம் மகரம், கும்பம் என்றாலும், குழந்தைகளின் கல்விக்கு அதிகமான பணத்தை சம்பாதிக்க நேரிடும். நன்றாக கல்வி கற்றாலும் பின்னாளில் அவர்களிடம் இருந்து எந்தவிதமான பொருளாதார உதவியையும் எதிர்பார்க்க இயலாது. சிலருக்கு கல்வி மேம்பாட்டிற்காக அசையா சொத்துகளை விற்க நேரிடும். வருமானத்திற்கு உதவாத கல்வியை கற்றும் வேலை வாய்பின்றி வாழ நேரிடும். எனினும் உங்கள் உள்ளங்கையில் மோதிர விரலில் நடுவிரலுக்கு சமமாக நீண்டு காணப்பட்டால், தேவைகேற்ற பணவசதி வந்துவிடும். பொதுவான பரிகாரம் வயது முதிர்ந்தவர்கள், தலையில் டர்பன் கட்டுவது நன்று. வாலிபர்கள் ஹெல்மட் இன்றி பயணிப்பது கூடாது. ஞாயிற்றுக்கிழமை, கருப்புநீல ஆடைகள் தவிர்க்கவேண்டும். வீட்டில் பழைய செல்லா காசுகள் இருந்தால் அவற்றுடன் செம்பருத்தி பூ அல்லது இரண்டு "ஊமத்தன்'காய் இரண்டினை கிழக்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் அல்லது கடலில் வீசுவது நல்ல பரிகாரம்.

yogam

நவகிரக பரிகாரம்

நீங்கள் மேஷ லக்னம் என்றால்- நீங்கள் சாரா லக்னம். அதற்குரிய பரிகாரம்- சஷ்டி திதியிலும், செவ்வாய்க்கிழமைகளிலும். பைரவருக்கு குங்குமம் பன்னீர் கலந்த அபிஷேகம் செய்யவும். விநாயகர், அம்மன் மற்றும் முருகனுக்கு நெய்தீபமேற்றி வணங்குதல் சிறப்பு.

பைரவருக்கு அரளிப்பூ மாலை, பால் சாதம் செய்து, தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம். மேஷ ராசியினரும் இதனை செய்தல் நன்று.

செவ்வாய்க்கிழமை ஆலயம் சென்று ஸ்ரீ காலபைரவருக்கு உரியவகையில் வணங்கலாம். பைரவருக்கு மாலை நேரத்தில் பழங்களில் மிளகு தீபம், பூசணி, மாதுளை பழத்தில் மிளகு தீபமேற்றி அர்ச்சனைசெய்து வழிபட்டால், இழந்த பொருள், பணம், நமக்கு வரவேண்டிய சொத்துகள் திரும்பவும் சுலபமாக வந்துவிடும். ஸ்ரீ கண்ட பைரவர் காயத்திரி மந்திரம் கூறவேண்டும்.

"ஓம் சர்வ சத்ரு நர்ஸாய வித்மஹே

மஹா வீர்ய தீமஹி

தந்நோ கண்ட பைரவ ப்ரசோதயாத்.'

ஸ்ரீ கௌமாரி தேவி காயத்திரி

மந்திரம்

"ஓம் கிரித் வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ கௌமாரி பிறசோதயாத்.'

* மேலும் மேஷ லக்னம் சந்திரன் கன்னியிலும் விருச்சிகத்தில் இருந்தாலும் சோதனைதான்.

* செவ்வாய்- மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மீனத்தில் இருப்பதுவும் நல்லதல்ல.

* புதன்- மிதுனம், சிம்மம், கன்னி, மகரம், இங்கு இருப்பதும் பின்னடைவுதான்.

எனவே இவர்களும் மேலே கூறியவாறு வணங்குவதால் கெடுதலின் வேகம் குறையும்.

செல்: 93801 73464

bala090224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe