தி மனிதனின் முதல் தொழில் விவசாயம். உலகில் பல புதிய தொழில்கள் தோன்றி மறைந்தாலும், உலக இயக்கம் உள்ளவரை மனிதர்களுடன் வாழும் தொழில் விவசாயம் மட்டுமே. இந்தியா விவசாய நாடு என்பதால், இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டுபங் கினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளனர்.

1980-ஆம் ஆண்டுக்கு முன்புவரை விவசாயத்திலிருந்த ஆர்வம் தற்போது இல்லை. 1980-க்கு முன்பு ஒரு ஆண்மகன் 5 அல்லது 10 ஏக்கர் விவசாய நிலம் வைத் திருந்தால் மட்டுமே சமுதாய அங்கீகாரம் கிடைத்தது. விவசாயிகளுக்குப் பெண் கொடுக்க ஆர்வப்பட்டனர். ஆனால், தற்காலத்தில் பொறியியல் கல்வி படித்து, குறைந்தபட்சம் 50,000 சம்பளத்தில் சென்னை, பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பக் கம்பெனியில் வேலையில் இருக்கும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்கும் ஆண்களுக்குப் பெண் தரவே சமுதாயம் விரும்புகிறது.

இயற்கைப் பேரிடர் மற்றும் பல்வேறு நடைமுறை சிக்கலினால் பல பரம்பரை விவசாயிகள்கூட விவசாயத்தையே மறந்து வேறு தொழிலுக்குச் சென்றுவிடலாம் என்னும் மனநிலைக்குத் தள்ளப்படு கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மாடு வளர்த்தல், பால் கறத்தல், மரம் வளர்த்தல், விவசாயம் செய்தல் போன்றவை கேவலம் என்னும் வாழ்வியல் மாற்றத்தை பல இளைய தலைமுறையினர் விரும்பத் தொடங்கிவிட்டனர்.

கலாச்சார மாற்றம் ஒருபுறம் இருந் தாலும், நன்குப் படித்த அல்லது படிக்கமுடியாத பல கோடி விவசாயிகளின் இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராடி வருகின்றனர்.

Advertisment

பலர் பரம்பரை விவசாய நிலத்தை இழந்து வட்டிக்கு வட்டிகட்டி உயிரையே மாய்த்துக்கொள்ளவும் துணிந்துவிட்டனர்.

விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் ஏனிந்த அவலம்?

lakshmi

Advertisment

வெயில், மழை எனப் பாராமல், அனைவரின் பசியையும் தீர்க்க முன்வந்ததற்குப் பிரபஞ்சம் கொடுக்கும் தண்டனையா? அல்லது விவசாயியாகப் பிறந்தது குற்றமா?

இதற்கு அரசியல், அறிவியல், புவியியல் என ஆயிரமாயிரம் காரணங்களைச் சொல்லலாம். எனினும், பல்வேறு புதிய தொழில்மூலம் சம்பாதித்த பணத்தை விவசாயத்தில் முதலீடுசெய்து பல கோடி சம்பாதித்து, "விவசாயத்தில் சம்பாதித்த பணமா...!' என வியக்கும்வகையில் சாதனையாளர்களாக வலம்வருபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏன், பலரை வாழவைக்கும் விவசாயம் சிலரை வீழவைக்கிறது?

இதுபோன்றவற்றுக்கான காரணத்தை ஜோதிடரீதியாகக் காணலாம்.

ஜனனகால ஜாதகத்தில் பின்வரும் அமைப்புகள் இருப்பவர்கள் விவசாயத்தில் மிகுதியான பொருளாதாரம் ஈட்டுகிறார்கள்.

ஜனனகால ஜாதகத்தில் நான்காம் அதிபதி, நான்கில் நின்ற கிரகம், நான்காமிடத்தோடு சம்பந்தம்பெறும் கிரகம் சுபவலிமை பெற்றவர்களுக்கு விவசாயத்தால் ஆதாயம் உண்டு.

ஜனனகால ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி மற்றும் பத்தாமிடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகம் வலிமைபெற வேண்டும்.

குரு மற்றும் சனியின் சம்பந்தம் சுபத்துவத்துடன் இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையமுடியும்.

ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் 1, 2, 4, 10, 11-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெறவேண்டும்.

ஜனனகால ஜாதகத்தில் பூமிக்காரகன் செவ்வாய் கேந்திர- திரிகோண சம்பந்தம் பெறவேண்டும்.

ஜனனகால ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு சந்திரன் சம்பந்தம் இருப்பது சிறப்பு.

பூமிக்காரகன் செவ்வாய் மற்றும் சந்திரன் சம்பந்தம் மிகச்சிறப்பு.

சந்திரன், செவ்வாயுடன் குரு, சுக்கிரன் சம்பந்தம் மிகமிகச் சிறப்பு. இந்த கிரக அமைப்புகள் இருக்கும் ஜாதகரின் பூமி வளம் நிறைந்தாக இருக்கும். விளைச்சல் பெருகும். விளையும் காய்கள், பழங்கள் மற்றும் தானியங்களால் குறைந்த முதலீட்டுடன், பல மடங்கு வருமானம் கிடைக்கும்.

2, 8, 9-ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்த வர்கள், விவசாயத்தால் பொருள் ஈட்டும் அதிர்ஷ்டம் நிரம்பியவர்கள். இதை ஓர் உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

3- 4- 1952 அன்று காலை 10. 54 மணிக்குப் பிறந்த இந்த ஆண் ஜாதகர் பரம்பரை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பிறந்த போது இவரு டைய குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. ஒரு சிறிய துண்டு பரம்பரை விவசாய நிலத்தில், ஒரு குடிசையில் இருந்துகொண்டு விவசா யத்தில் ஜீவனம் நடத்திய குடும்பத்தில் பிறந்தவர். தற்போது, தனது சொந்த உழைப்பில் முன்னேறி ஐந்தாயிரம் தொழிலாளர்களை வைத்து விவசாயம் செய்பவர். வெளிநாடுகளுக்கு விளை பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்.

விவசாயத்துறை இவருக்கு எப்படி கைகொடுத்தது எனப் பார்க்கலாம்.

இந்த ஜாதகக்தில் புதன், சனி, செவ்வாய் வக்ரம். லக்னாதிபதி மற்றும் நான்காம் அதிபதி புதன் 10-ஆமிடத்தில் நீசம். இந்த ஜாதகம் எப்படி ஜெயிக்கும் என்னும் குழப்பம் சிலருக்கு ஏற்படலாம்.

அத்துடன், லக்னம் மற்றும் நான்காம் அதிபதி நீசம் என்பதால், விவசாயம் கைகொடுக்காதென சிலர் தவறாகக் கணிக்கலாம்.

மேலே கூறிய விதிகளின்படி, இரண்டாமதிபதி சந்திரன் லக்னத்தில் அமர்ந்து 11-ல் நின்ற குருவின் சாரம் பெற்றது சிறப்பு. சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு திரிகோண சம்பந்தம். செவ்வாய்க்கு குரு பார்வை என பல சிறப்பம்சங்கள் வக்ர கிரகங்களால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. புதன் வக்ரம் பெற்றதால், நீசபங்க விதிப்படி வலிமை பெறுகிறார். 4- ல் நின்ற சனி சந்திரன் சாரம் பெற்றதால், அயராத உழைப்பு இவரை உயர்த்தியது.

சுக்கிர தசையின் புதன் புக்தியில் 2017-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் ஆவணம் மற்றும் சொத்து தொடர்பான வம்புவழக்கின் தீர்வுக்காக நேரில் அணுகியவர்.

விவசாயத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் கிரக அமைப்புகளைக் காணலாம்.

ஜனனகால ஜாதகத்தில் லக்னம், நான்கு மற்றும் பத்தாம் அதிபதிகள் மறைவு ஸ்தானத்தோடு சம்பந்தம் இருப்பவர் களுக்கு விவசாயம் கைகொடுக்காது.

ஜனனகால ஜாதகத்தில் நான்காமிடத்தில் மாந்தி இருப்பவர்கள் விவசாயத்தில் பெரும் முதலீட்டை இழந்து வாழ்நாளை முடிப்பவர்கள்.

ஜனனகால ஜாதகத்தில் நான்காமிடத் திற்கு திதி சூன்யப் பாதிப்பு இருப் பவர்கள் மற்றும் செவ்வாய் + ராகு- கேது, சந்திரன் + ராகு- கேது சம்பந்தம் இருப் பவர்களின் நிலங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். விளை பொருட்களின் தரம் குறையும் அல்லது விளைச்சல் நன்றாக இருந்தாலும் உரிய விலை கிடைக்காது. அதிக முதலீட்டில் குறைந்த வருமானம் கிட்டும். விவசாயத்தை நம்பி பாதிக்கப்பட்டுக் கடனாளியாக வாழ்வார்கள்.

6, 8, 12-ஆம் அதிபதிகளின் தசா, புக்தி, அந்தரக் காலங்களில் பெரும் முதலீட்டில் விவசாயம் செய்பவர்கள் இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர்களால் கடுமையான இழப்பை சந்திக்கிறார்கள்.

4, 7-ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந் தவர்கள் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விட்டு சம்பாதிப்பது நலம்.

உதாரணம்- 2

விவசாயம் போதிய பொருளாதாரம் ஈட்டித் தராதவர்கள், விவசாயத்தை தனக்கு சாதகமாக மாற்றியமைப்பது எப்படியென்பதைப் பார்க்கலாம்.

இந்த ஜாதகர் 1- 5- 1970 அன்று இரவு 12. 15 மணிக்குப் பிறந்தவர். இந்த ஜாதகத்தில் இரண்டா மதிபதி சனி நான்கில் நிற்பது சிறப்பு. நான்கா மதிபதி செவ்வாய் சந்திரன் சாரம் மிகச்சிறப்பு. இரண்டு மற்றும் நான்காமிடங் களுக்கு குரு பார்வைபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

ஆனால், செவ்வாயின் 4-ஆம் பார்வை கேதுவுக்குவும், இரண்டாமிடமான தன ஸ்தானத்திற்கும் இருந்ததால் விளைச்சல் தரமானதாக இல்லை. மற்றும் சந்திரன்- ராகு சேர்க்கையால் பருவத்திற்கேற்ற பயிரை விளைவிக்கும் ஆற்றலும் குறைவாக இருந்தது. ஆறாமதிபதி புதனின் தசை.

புதன் அஷ்டமாதிபதி சூரியனின் சாரம் பெற்றதால் கட்டுக்கடங்காத இழப் பிலிருந்து மீள அணுகினார்கள். விளைச்சல் அதிகரித்து, அதிக லாபம் பெறும் வழிபாட்டுமுறைகள் பரிந்துரைக்கப் பட்டன.

பரிகாரம்

ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தமிருப்பவர்கள், 27 நட்சத்திரங்களின் உதவியால் பயிர்செய்யும்போது பெரும் இழப்பு மற்றும் கடன் ஏற்படாமல் தங்களைப் பாதுகாக்கமுடியும்.

27 நட்சத்திரங்களையும் மூன்றாக வகைப் படுத்தலாம்.

1. மேல்நோக்கு நாள்

பூமிக்குமேலே விளையும் காய்கனிகள் மற்றும் தானிய வகைகளை- அதாவது செடி, கொடி, மரம் மற்றும் விருட்சங் களை மேல்நோக்கு நாட்கள் எனப்படும் ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களில் பயிரிட மிகுதியான விளைச்சல் மற்றும் லாபம் பெற்றிட முடியும்.

2. கீழ்நோக்கு நாள்

பூமிக்குக் கீழே விளையும் கிழங்குவ கைகளைக் கீழ்நோக்கு நாட்கள் எனப்படும் பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பயிரிட, இரட்டிப்பு லாபம் கிட்டும்.

3. சமநோக்கு நாள்

அஸ்வினி, மிருகசிரீடம், புனர் பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் நிலம் வாங்குதல், உழவிடுதல், பயிரிடுதல் போன்ற விவசாயம் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டால் இழப்புகளைத் தவிர்க்கமுடியும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் காலபைரவரை வழிபடவேண்டும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திர நாட்களில் முருகப் பெருமானை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வழிபட பூமி தோஷம் நீங்கும். செவ்வாய் மற்றும் பஞ்சமித் திதி மற்றும் ராகு வேளையில் வராகி அம்மனுக்கு மாதுளை படைத்து வழிபட, மிகுதியான சுபப் பலன் தேடிவரும்.

செல்: 98652 20406