Advertisment

அதிகாரம், ஆளுமை கொண்ட மிருகசீரிடம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/mrigasir-power-and-personality-melmaruvathur-s-kalaivani

மிருகசீரிடம் என்பது வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்திலும் பேசப் படுகின்ற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது ,நட்சத்திரமாகும். இது ரிஷபத்தில் முதல் இரண்டு பாதங்களையும், மிதுனத்தில் மூன்று மற்றும் நான்காம் பாதங்களையும் பதித்துப் பிரதிபலிக்கின்றது.

Advertisment

மிருகசீரிடம் என்பது வடமொழி சொல் லாகும். இதன் தமிழ்ப் பெயர் மான்தலை என்பதாகும். இதன் அறிவியல் பெயர் ஞழ்ண்ர்ய்ண்ள் என்றும், பொதுப்பெயர் ஙங்ண்ள்ள்ஹ எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

ஜோதிடத்தில் மிருகசீரிடத்தை செவ்வாய் ஆள்கிறது. இந்த நட்சத்திரத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ரிஷபம் ராசியாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங் களில் பிறந்தவர்களுக்கு மிதுனம் ராசி யாகவும் அமையப்பெறும். இங்கு ராசிநாதன் முதலிரண்டு பாதங்களுக்கு சுக்கிரனாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கு புதனாகவும், நட்சத்திரநாதன் செவ்வாயாக வும், நவாம்ச நாதர்களாக ஒன்றாம் பாதத் தில் பிறந்தவர்களுக்கு சூரியனாகவும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புதனாகவும், மூன்றாம் பாதத்தில் பிறந்த வர்களுக்கு சுக்கிரனாகவும், நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயாகவும் அமையப்பெறும்.

இந்த நட்சத்திரத் தின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்கள் உண்மையான ஞானமுள்ளவர்கள். ஞானமுள்ள நூல்களைக் கற்பவர்கள். கம்பீரமானவர்கள். நிமிர்ந்த நேரான நடையை உடையவர்கள். மேலும் நல்ல கல்விமான்கள், ஆசான்கள், மகரிஷிகளின் நட்புறவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இராணுவம், காவல

மிருகசீரிடம் என்பது வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்திலும் பேசப் படுகின்ற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது ,நட்சத்திரமாகும். இது ரிஷபத்தில் முதல் இரண்டு பாதங்களையும், மிதுனத்தில் மூன்று மற்றும் நான்காம் பாதங்களையும் பதித்துப் பிரதிபலிக்கின்றது.

Advertisment

மிருகசீரிடம் என்பது வடமொழி சொல் லாகும். இதன் தமிழ்ப் பெயர் மான்தலை என்பதாகும். இதன் அறிவியல் பெயர் ஞழ்ண்ர்ய்ண்ள் என்றும், பொதுப்பெயர் ஙங்ண்ள்ள்ஹ எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

ஜோதிடத்தில் மிருகசீரிடத்தை செவ்வாய் ஆள்கிறது. இந்த நட்சத்திரத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ரிஷபம் ராசியாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங் களில் பிறந்தவர்களுக்கு மிதுனம் ராசி யாகவும் அமையப்பெறும். இங்கு ராசிநாதன் முதலிரண்டு பாதங்களுக்கு சுக்கிரனாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கு புதனாகவும், நட்சத்திரநாதன் செவ்வாயாக வும், நவாம்ச நாதர்களாக ஒன்றாம் பாதத் தில் பிறந்தவர்களுக்கு சூரியனாகவும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புதனாகவும், மூன்றாம் பாதத்தில் பிறந்த வர்களுக்கு சுக்கிரனாகவும், நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயாகவும் அமையப்பெறும்.

இந்த நட்சத்திரத் தின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்கள் உண்மையான ஞானமுள்ளவர்கள். ஞானமுள்ள நூல்களைக் கற்பவர்கள். கம்பீரமானவர்கள். நிமிர்ந்த நேரான நடையை உடையவர்கள். மேலும் நல்ல கல்விமான்கள், ஆசான்கள், மகரிஷிகளின் நட்புறவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இராணுவம், காவல்துறை போன்றவற்றில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்துவர்களாக இருப்பார்கள். இளமையில் கல்வித் தடையை இயல்பாக உடையவர்கள். இவர்கள் ஆயுதம் ஏந்தும் யோக்யதை உடையவர்கள். மதிநுட்பமும், பிடிவாதமும், முன்கோபமும் அதிகமாக உடைய நபர்கள் என்றால் மிகையல்ல.

Advertisment

dd

நட்சத்திரத்தின் அதிதேவதை ஈஸ்வரன் ஆவார். சில ஜோதிட நிகண்டுகள் சந்திரன் எனவும் கூறுகின்றன. ஆளும் அதிகாரம்கொண்ட நட்சத்திரமாகவும், எண்ணியதை அடையும் ஆளுமைகொண்ட நட்சத்திரமாகவும் அறியப்பெறுகின்றது.

இதில் ரிஷபத்தில் அமையப்பெற்ற முதலிரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் சுக்கிரனின் வீடு மேலும் சந்திரன் அங்கு உச்சம். செவ்வாயின் பலமும் ஒருங்கே பெறுவதனால், எதையும், எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எல்லா சுகத்தையும் அதிகாரத்துடன் அடைந்தே ஆகவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் எளிதில் காதல்வயப்படக் கூடியவர்கள். காதல் தோல்வியுற்றால், எளிதில் மனதை மாற்றிக்கொள்ள இயலாதவர்களாக இருப்பார்கள். இங்கு சுக்கிரனின் வீட்டில் செவ்வாய் என்பதால், அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் முன்கோபம், முரட்டுத்தனம் பிடிவாதம் இவர்களுக்கு மேலோங்கியிருக்கும். மேலும் சுக்கிரனின் வீடென்பதால் அழகியல் உணர்வு, ஈர்ப்புத் தன்மை, தங்கநகை, ஆபரணங்கள் அணியும் வேட்கை போன்றவை இயல்பாகவே அமைந்திருக்கும்.

மூன்று மற்றும் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களின் சந்திரன் மிதுனத்தில் அமையப்பெறுவதால், அங்கு புத்திசாலித் தனமும், விவேகமும், கணிப்பும், கணிதமும் மேலோங்கி, வேண்டியவற்றை அதிநுட்பமான முறையில் அடையும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். இங்கு வேகம் குறைந்து விவேகம் மேலோங்கி நிற்கும். தொடர்புகளின் மூலமாக தங்களுக்கான விஷயங்களை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், சீறும் குணம் இயல்பாகவே இருக்கும். இந்த சீற்றத்தினை ஆக்கப்பூர்வமான காரியங்களில் நிலவ வைத்து, தனக்கான விஷயத்தை செயல்படுத்திக் கொள்வார்கள்.

இந்த நட்சத்திரம் இரண்டாக- சரி சமமாகப் பிரிந்து இரண்டு ராசிகளில் அமையப்பெறுவதனால், இவர்களுக்கு இரட்டை மனோநிலை இருக்கும். இவர்களில் சிலருக்கு இருதாரக் குற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையை நாம் வாழ்வியல் நிகழ்வுகளில் காண்கிறோம்.

இவர்களுக்கு இளமையில் திருமணமாகி குழந்தைகள் பிறந்தால் பெண் பிள்ளைகளும், சற்று தாமதமான திருமணமென்றால் ஆண் பிள்ளைகளும் பிறக்கும் என்று ஜோதிடச்சுவடிகள் எடுத்துரைக்கின்றன.

இந்த நட்சத்திரம் குருவின் சாபம் பெற்ற நட்சத்திரமாகும். காரணம், நம்முடைய ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கதைகளில், ரோகிணி நட்சத்திரத்திற்கு அதிபதியான சந்திரனுக்கும், குருவின் மனைவிக்கும் பிறந்த குழந்தைதான் புதன். எனவே புதனுக்கும், சந்திரனுக்கும் பகையென்று கூறப்பட்டுள்ளது.

மிருகசீரிடம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு சந்திரன், நவாம்சத்தில் சிம்ம வீட்டில் அமையப்பெறுவார். இங்கு சுக்கிரன் ,செவ்வாய், சூரியன், ஆகியோரின் இணைவு. அதீத பிடிவாதமும், போர்க்குணமும் பெற்றிருப்பார்கள். இவர்கள் அரசியல், அரசாங்கம் சம்பந்தப்பட்ட தொழில், இராணுவம், காவல்துறை, சிலர் மருத்துவம் போன்ற துறைகளில் தங்கள் நிலையை சிறப்பாக உயர்த்திக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டாவதாக வரும் ராகு தசையானது கல்வியில் சற்று இடர்ப்பாடான சூழ்நிலைகளை உருவாக்கித் தரும். இவர்கள் பேங்கிங், நிதி நிறுவனம், ரெஜிஸ்டர் துறை போன்றவற்றில் சிறப்பினை அடையலாம்.

மிருகசீரிடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்கள் கல்வியில் உயர்நிலைபெறத் தவறினாலும் கலைகளில் உச்சத்தை அடைவார்கள். இவர்களுக்கு சந்திரன் நவாம்சத்தில் புதன் வீட்டில் அமையப் பெறுவதனால் கற்பனை, மௌனமாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்ளுதல், கலைகளில் ஆர்வம், கதை, கட்டுரை எழுதுதல் போன்றவற்றில் சிறப்படைவார்கள். இது ரிஷபத்திற்கு ஐந்தாம் வீடாக வருவதால் தூரதேசப் பயணம், எண்ணங்கள் ஈடேறுதல், காதல் விஷயத்தில் தான் நினைத்த வண்ணம் நிகழ்வு, பூர்வீகத்தில் யாரும் பெறமுடியாத சுக பாக்கியங்களை புத்திசாலித்தனத்தினால் அடையப் பெறுவார்கள்.

மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு சந்திரன் நவாம்சத்தில் சுக்கிரனின் வீட்டில் அமையப்பெறுவார். இந்த அமைப்பானது இவர்களை வெகு செலவாளிகளாகவும், விருப்பத்திற்காக எந்த அளவிற்கும் செலவுசெய்பவர்களாகவும் உருவாக்கிவிடும். இவர்கள் தன் சுகத்திற் காகவும், சந்தோஷத்திற்காகவும் எதையும் அடையும் துணிவும் ஆளுமையும் பெற்றிருப் பார்கள். அழகியல் மற்றும் அதிகாரம் நிறைந்த பதவிகளில் தன்னை ஆட்படுத்திக் கொள்வதனால் சிறப்படை வார்கள்.

மிருகசீரிடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களின் சந்திரன் நவாம்சத்தில் விருச்சிக வீட்டில் தன்னை நீசப்படுத்திக் கொண்டு அமையப் பெறுவார்கள். மேலும் இது மிதுனத்திற்கு ஆறாம் வீடாக அமைவதனாலும், வாழ்வில் பலவித துயர், தடை, தாமதம், சூழ்ச்சிகள், மறைமுக எதிரிகள், அறியமுடியா நோய்கள் போன்றவற்றின் பாதையில் பயணிக்க நேரிடும். காரணம் சஷ்டாஷ்டக அமைப்பு தன் நிலையினை இழந்து நீசமானதனாலும், செவ்வாயின் பிடிவாதம் விருச்சகத்தில் வெளிப்படும் என்பதனாலும், இவர்களின் முற்பிறவி கர்மவினையினை அனுபவத்தே ஆகவேண்டும் என்னும் நிலையினை ஏற்படுத்தித் தந்துவிடும். இவர்களின் தொழில் நிலையானது, சற்று கீழ்நிலைத் தொழில்களாக அமைய நேரும். சனி மற்றும் இவர்களின் பத்தாமதிபதியான குருவின் நிலையை ஆராய்ந்தே இவர்களின் தொழில் துறையினை எடுத்துரைக்க முடியும். பொதுவாக மிருகசீரிடம் பூமிகாரகனான செவ்வாயின் நட்சத்திரம் என்பதனால், காலையில் விழித்ததும் தனக்கான கடமைகளை முடித்தபிறகு பூமியினைத் தொட்டு வணங்குவதன்மூலம், பல இடர் களையும் இன்னல்களையும் இவர்களால் தவிர்க்கமுடியும். மேலும் குருவின் சாபம் பெற்ற நட்சத்திரம் என்பதனால் குழந்தை களுக்கு- பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு மஞ்சள் நிற இனிப்பு தானம் செய்வதன் மூலம் இவர்கள் நினைத்த இடத்தை வெகு சுலபத்தில் அடையலாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்.

வழிப்படவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன் கோவில். விருட்சம்: கருங்காலி.

ரத்தினம்: வைரம்.

(அடுத்த இதழில் திருவாதிரை)

bala060123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe