க்னத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய ஆளுமையைச் சொல்லமுடியும். அழகான தோற்றம், உடற்கட்டு, நற்குணம்- குறிப்பாக ஹீரோவா அல்லது வில்லனா- பெண்ணெ னில் நாயகியா அல்லது வில்லியா என தெரிந்து

கொள்வதற்கு லக்னமே ஆதாரம். ஒருவன் அறிவாளியா? முட்டாளா? திறமைசாலியா?

சோம்பேறியா? நல்லவனா? கெட்டவனா? வக்ரம் பிடித்தவனா? அப்பாவியா? கல்லுளி மங்கனா? சமூகத்தோடு ஒத்துப்போகிறவனா என இவையனைத்தையும் சொல்வதெல்லாம் லக்னத்தை வைத்துதான்.

லக்னத்திற்கு முக்கியமானவர் லக்னாதிபதி என்னும் இந்த வீட்டின் அதிபதியாவார். லக்னாதிபதி லக்னத்தில் இருப்பது சிறப்பு.

Advertisment

உதாரணத்திற்கு லக்னம் மேஷமாகி, லக்னாதி பதி செவ்வாய் அங்கிருக்க நன்மை பயக்கும். ஏனெனில் அது செவ்வாய்க்கு ஆட்சி வீடு. அவ்வீட்டைவிட்டு வேறுவீட்டிலிருக்க பலன்கள் மாறுபடும். பகைவீடானால் பலன் பாதியாகக் குறைந்துவிடும். அதுவே 6, 8, 12 எனில் எதிர்மறையான பலன்களே நடக்கும்.

லக்னத்தில் பகை கிரகங்களோ, நீச கிரகங்களோ, தீய கிரகங்களோ இருக்காமலும், பார்க்காமலும், சேராமலும் இருக்க நன்மை யுடையதாக இருக்கும். உச்சம்பெற, சுபகிரகப் பார்வை, இணைவுபெற அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும்.

லக்னாதிபதி எங்கிருக்கிறார் என்பது முக்கியம். உதாரணத்திற்கு சிம்ம லக்னமாகி, அதன் அதிபதி சூரியன் 5, 9 (திரிகோண), 4, 7, 10 (கேந்திர) வீடுகளில் இருப்பது சிறப்பு.

Advertisment

ff

லக்னாதிபதி 7-ஆம் வீட்டிலிருந்து லக்னத் தைப் பார்க்க மிகவும் சிறப்பு. லக்னத்திற்கு அடுத்து 7-ஆமிடம் பிரதானமானது. 7-ஆம் வீட்டிலிருந்து லக்னத்தைப் பார்க்கும் அமைப்பு சிறப்பானதாகும். இது களத்திர பாவமாகும். லக்னம் நன்றாக இருந்து 7-ஆம் பாவமும் நன்றாக இருந்தால் தாம்பத்திய வாழ்க்கை அற்புதமாக அமையும். ஜோடிப் பொருத்தம் அருமையாக இருக்கும். மனைவி கணவனுக்காக உயிரையும் கொடுப்பவளாக அமைவாள்.

லக்னாதிபதி லக்னத்திலிருந்து 6, 8, 12-ஆம் வீடுகளில் அமர்ந்துவிடக்கூடாது. அப்படி யிருந்தால் வாழ்க்கை போராட்டமாக அமைய லாம். லக்னாதிபதி 12-ல் அமர்ந்தால், ஜாதக ரின் வாழ்க்கை அவரைச் சுற்றியுள்ளவர் களுக்குப் பயன்படுமேயன்றி அவருக்குப் பயன்படாது.

அதுபோல விரயாதிபதியான 12-ஆமதிபதி லக்னத்தில் அமர்ந்தால், உதாரணமாக சிம்ம லக்னத்தில் 12-ஆமதிபதி சந்திரன் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கை விரயமாகி, எவருக்கும் பயன்படாது போகும்.

லக்னாதிபதியும் விரயாதிபதியும் இணைந்து எங்கு அமர்ந்தாலும் அது ஜாதகருக்குப் பயனளிக்காது.

லக்னாதிபதி உச்சம்பெறுவது மிகவும் நல்லது. லக்னத்தில் குரு இருப்பது நல்லது. அது ஆசீர்வதிக்கப்பட்ட ஜாதகமாம். அதற்கு நேரெதிரானது லக்னத்தில் சனி இடம் பெறுதல். (மகரம், கும்பம் தவிர.)

லக்னத்தை சந்திரன் பார்த்தாலோ, இருந்தாலோ ஜாதகர் அழகானவராய் இருப்பார். பெண்ணெனில் அழகாக இருப்பாள். அதேபோல் சுக்கிரன் இருக்க, பார்க்க அழகான தோற்றமுண்டு. திரைப்பட நடிகைகள் ஜாதகத்தில் இதைக் காணலாம்.

எல்லா லக்னங்களும் சமமே. ஆயினும் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான சிறப்புண்டு. லக்னத்தில் செவ்வாய் இருக்க அபரிமிதமான திறமையைக் கொடுப்பான். மேஷ, விருச்சிக லக்னத்தார் பொதுவாக குடும்பத்தில் மூத்தவராக இருப்பார் அல்லது குடும்பத்தில் தலைமை தாங்கும் வல்லமையுடையவராக இருப்பார். சுறுசுறுப்பானவர். தற்பெருமை உடையவர். ஒரு நாயகனுக்குள்ள தன்மைகளைப் பெற்றிருப்பர். நியாயத்துக்கும், நேர்மைக் கும் போராடுபவர்கள். ஓரிடத்தில் இருக்கமாட்டார்கள். பெண்கள்மேல் தனி விருப்பமுடைய வர்கள். அவர்களின் வளர்ச்சி சீராக இருக்காது. உணர்ச்சி வசப்படுபவர்கள். முன்கோபக்காரர்கள், ஆயினும் எளிதில் சமாதானமாகிவிடக்கூடியவர்கள். வேலைபார்க்கும் இடங்களில் நற்பெயர் எடுக்கக்கூடியவர்கள்.

ரிஷபத்தாரை சுலபமாக வளைத்துவிடமுடியும். மென்மையானவர்கள். மெல்லிய உணர்வு படைத்தவர்கள். எதையும் அனுபவிக்கத் தயாராக இருப்பவர்கள். மதுகுடிக்க அழைத்தாலும் மறுப்பின்றி வந்துவிடுவர். துலா லக்னத் திற்கு, இதே சுக்கிரன் அதிபதியானால் அவர்கள் இடம், கௌரவம் பார்ப்பவர்களாக இருப்பர்.

மிதுன லக்னக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பர். (உதாரணம்- ஜெமினி கணேசன், செல்வி ஜெயலலிதா, ப. சிதம்பரம்.) கன்னி, மிதுன லக்னக்காரர்கள் இயற்கை யிலேயே புத்திசாலிகள். அனைவருடனும் நெருங்கிப் பழகக் கூடியவர்கள். எவருடனும் ஜோடி சேரக்கூடியவர்களே. சீட்டாட்டத்தில் ஜோக்கர் போன்றவர்கள். இவையிரண்டில் கன்னி தராதரம் பார்க்கும்; மிதுனம் பார்க்காது. கன்னி லக்னக் காரர்கள் அனைவரும் எளிதாக ஈர்த்துவிடக்கூடியவர்கள்.

கடக லக்னக்காரர்கள் பெரும்பாலும் அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபாடு உடையவர்கள். (உதாரணம்- கலைஞர், நேரு, இந்திராகாந்தி.). அரசியலில் இல்லையெனினும் தலைமை தாங்கும் தகுதி படைத்திருப்பார்கள். அறிவாளிகள். ஜோதிட ஆர்வம் உடையவர்கள். குடும்பப் பாசம் மிக்கவர்கள். அதிக குடும்ப நண்பர்களை உடையவர்கள். அவர்களின் செல்வநிலை சந்திரன்போல் ஏறி, இறங்குவதாக இருக்கும். மனைவிக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பர்.

சிம்ம லக்னம் ஹீரோக்களின் லக்னம். (உதாரணம்- கமல், ரஜினி.) இவர்களுக்கு, இவர்கள் வைத்ததுதான் சட்டம். யாரும் இவர்களை மடக்கிவிடமுடியாது. முன்கோபக்காரர்கள். பிடிவாதக்காரர்கள். நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் இவர்களை மாற்றிவிடமுடியாது. சிங்கம் தனித்திருப்பதுபோல் ராஜாவாக இருப்பார்கள். தியாக மனப்பான்மை, எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, சமாதானப்படுத்த முடியாத கோபம், பெண்களோடு இணைவின்மை, காடு, மலைகளில் சுற்றித் திரிவதில் ஆர்வம், தைரியம் மிக்கவர்களாகவும் இருப்பர். மற்றவர் களின்மேல் கட்டுப்பாடுடைய ஹீரோக்களாகவும் இருப் பர். சிலர் மனநோய் மற்றும் பல் நோயால் அவதியுறுவர்.

சிம்ம லக்னத்திற்கு எதிர்வீடாகவும், முற்றிலும் மாறுதலான பலன்களைக் கொண்டதாகவும் கும்ப லக்னம் இருக்கும். 1, 12-க்குரியவன் சனியாதலால் மிகப்பெரிய வெற்றி அல்லது தோல்வி இவற்றில் ஒன்றே பலனாக இவர்களுக்கு அமையும்.

தனுசு, மீன லக்னத்தினர் எப்போதும் சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடுவர். சரளமாக சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். மதத்தின்மீது பற்றும், எவருக்காகவும் தியாகம் செய்யும் குணமும் உடையவர். எதிரிகளை வெல்பவர். இவர்களைக் கட்டாயப்படுத்தி அடிபணியவைக்க முடியாது. தன்மையாகக் கேட்டால் பணிவுடன் இருப்பர்.

மகர, கும்ப லக்னக்காரர்கள், சனி அதிபதி யாவதால் கடின உழைப்பாளிகளாக இருப்பர்.

எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். உழைப்பாளிகள். மகரத் தார் கிடைத்ததை மட்டும் கடுமையாக உழைத்து செயல்படுத்துவர். கும்பத்தார் தேடிப்பிடித்து வேலைசெய்யும் குணமுடைய வர்கள். கும்ப லக்னக்காரர்கள் இயற்கை யாகவே மிகவும் நல்லவர்கள். இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம். கும்ப லக்ன ஜாதகியை மணந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

லக்னத்திற்கு இருபுறமும் சுபகிரகங்கள் இருக்க ராஜயோகம் உடையவர். அதேபோல், பாவ கிரகங்கள் இருக்க அதிர்ஷ்டம் இல்லாதவர்; தரித்திர யோகம் உடையவர். வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும். இரு நல்லவர்களுக்கிடையே வாழ்வதையும், இரு ரௌடிகளுக்கிடையே வாழ்வதையும் கற்பனை செய்துபாருங்கள். இது லக்ன பாவம் மட்டுமின்றி அனைத்து பாவங்களுக்குமே பொருந்தும். இது பாப கர்த்தாரி யோகமாகும்.

லக்னாதிபதி, 10-ஆமதிபதி, 11-ஆமதிபதி ஆகிய மூவரும் நல்ல நிலையிலிருக்க, ஜாதகர் வியாபாரம், தொழில் அல்லது பெரிய நிறுவனத்தில் வேலை என, அதிக பொருள் ஈட்டுவார்.

லக்னாதிபதியும், 10-ஆமதிபதியும் மட்டும் நன்றாக இருக்க உத்தியோகம் பார்த்து வசதியாக இருப்பார்.

லக்னாதிபதி, 10-ஆமதிபதி வலுவற்றிருக்க ஜாதகருக்கு கஷ்ட ஜீவனம் அமையும். (6, 8, 12-ல் இருக்க.) மற்ற கிரகங்கள் பலமுடன் இருக்க, விதிவிலக்காக ஜாதகருக்கு சுகஜீவனம் ஏற்படும்.

லக்னாதிபதி, 10-ஆமதிபதி பலம் பெற்றிருக்க (கேந்திர, திரிகோணம்) ஜாதகர் தான் இருக்குமிடத்தில் பிரபலமானவராக, அனைவருக்கும் உதவிசெய்பவராக இருப்பார்.

செல்: 97891 01742