ருவர் ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியாக இருந்தால், அவர் சந்தோஷமாக வாழ்வார். நன்கு சாப்பிடுவார். வசீகரிக்கும் தன்மையுடன் இருப்பார். பலராலும் பாராட்டப்படுவார். பெண்கள் அவருடன் விரும்பிப் பழகுவார்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற மனநிலையுடன் எப்போதும் இருப்பார்.

Advertisment

மூளை வேகமாக வேலை செய்யும். எந்த காரியத்தையும் மிகுந்த கவனத்துடன் செய்வார். உடல் நிலை நன்றாக இருக்கும். பணக்காரர்களாக இருந்தால் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பார்கள். பல இடங்களுக்கும் பயணம் செல்லக்கூடியவராக இருப்பார். பல பொருட்களை சேர்க்க வேண்டுமென்ற மனநிலை கொண்டவராக இருப்பார்.

life

ஜாதகத்தில் சந்திரன் சரியில்லாமலிருந்தால் அல்லது பலவீனமாக இருந்தால், அவருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வரும். சிலருக்கு ரத்த அழுத்த நோய் வரும். சிலர் மனநோயால் பாதிக்கப்படுவார்கள். சிலர் சீதளம், கபம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். சிலர் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திலோ, சுயவீட்டிலோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அவர் திறமை வாய்ந்த எழுத்தாளராகவோ, கலைஞராகவோ, தொலைக்காட்சித் தொடர் நடிகராகவோ, புகழ்பெற்ற ஆடிட்டராகவோ இருப்பார்.

வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டப்பட்டாலும் இரண்டாம் பகுதியில் நல்ல பண வசதியுடனும் புகழுடனும் வாழ்வார்கள்.

கேந்திரத்தில் இருக்கும் சந்திரனை குரு பார்த்தால் அல்லது சந்திரனும் குருவும் சேர்ந்து லக்னத்தில் அல்லது 4, 7, 9, 10-ல் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். அதனால் அவர் பெரிய அரசியல்வாதியாகவோ தொழிலதிபராகவோ இருப்பார். அவருக்கு எங்கு சென்றாலும் நல்ல மதிப்பிருக்கும். அவரிடம் பலவிதமான வாகனங்களும் இருக்கும். நல்ல வீட்டைக் கட்டி சந்தோஷமாக வாழ்வார்.

ஜாதகத்தில் 4-ல் சந்திரன், சுக்கிரனுடன் இருந்தால், அவர் சந்தோஷமாக- புகழுடன் வாழ்வார்.

4-ல் இருக்கும் சந்திரனை குரு பார்த்தால், அந்த ஜாதகருக்கு தாயால் மகிழ்ச்சி கிடைக்கும். அவர் தன் தாயை மதிக்கக்கூடியவராக இருப்பார்.

சிலர் ரசாயனத் தொழில், நீர், பால் வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்.

ஒரு ஜாதகத்தில் 6-ல் சந்திரன் சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால் அவர் பல பெண்களுடன் பழகுவார். அதனால் மனக்கஷ்டங்கள் உண்டாகும்.

ஜாதகத்தில் 7-ல் சந்திரன் தனித்திருந்தால், அவருக்கு மனம் சரியாக இருக்காது. ஆனால் தொழிலில் திறமைசாலியாகவும் புகழுடையவர்களாகவும் இருப்பார்கள். 7-ல் சந்திரன், சுக்கிரனுடன் இருந்தால் பெண்களால் பிரச்சினைகள் உண்டாகும்.

பிறக்கும்போது ஒரு குழந்தையின் ஜாதகத்தில் 8-ல் சந்திரன் இருந்தால், பாலாரிஷ்ட யோகம் உண்டாகும். அதனால் எட்டு வயதுவரை குழந்தையின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். அந்த ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருந்தால், உடலில் பிரச்சினைகள் வந்து, அவை சரியாகிவிடும்.

ஜாதகத்தில் 9-ல் சந்திரன் இருந்து, அது சுயவீடாக இருந்தால் அல்லது உச்சமாக இருந்தால், அவர் வெளிநாட்டில் வியாபாரம் செய்து புகழுடன் இருப்பார். 10-ல் சந்திரன் இருந்து அதை குரு பார்த்தால் அல்லது குரு கேந்திரத்தில் இருந்தால், அவர் தைரியசாலியாகவும், அரசாங்கத்தில் பெரிய பதவியிலும் இருப்பார். 11-ல் சந்திரன் சுயவீட்டில் அல்லது உச்சமாக இருந்தால், அவர் புகழுடன் இருப்பார்.

நன்கு பணம் சம்பாதிப்பார். அவருக்கு குலதெய்வத்தின் அருள் இருக்கும். 12-ல் சந்திரன் பலவீனமாக அல்லது நீசமாக இருந்தால், அவருக்கு தூக்கம் சரியாக வராது. எந்த சுப காரியங்களைச் செய்தாலும் அதில் தடைகள் உண்டாகும்.

பரிகாரங்கள்

சந்திரனின் அருள் கிடைக்க தினமும் துர்க்கையை வழிபடவேண்டும்.

பௌர்ணமியன்று வீட்டில் பால் பாயசம் தயாரித்து, அதை சந்திரனுக்குக் காட்டிவிட்டுப் பருக வேண்டும்.

வானத்திலிருக்கும் சந்திரனைப் பார்த்து "ஓம் ஏம் க்ளீம் சோமாய நமஹ' அல்லது "ஓம் ஸோம் சோமாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும்.

சந்திரனின் ரத்தினமான முத்தை அணியலாம்.

கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும். தாயை மதிப்பவர்களுக்கு சந்திர தோஷம் இருக்காது.

வீட்டின் வடமேற்கில் தேவையற்ற பொருட்களைச் சேர்க்கக்கூடாது.

பௌர்ணமியன்று உடலுறவு கொள்ளக்கூடாது.

பௌர்ணமியன்று சத்திய நாராயண பூஜை செய்தல் நன்று.

செல்: 98401 11534