Advertisment

செவ்வாய் தோஷம் விலக்கி சிறப்புகள் சேர்க்கும் மூ-கைக் குளியல் பரிகாரம்! -அம்சி கோ. விவேகானந்தன்

/idhalgal/balajothidam/moon-hand-bath-remedy-get-rid-mars-dosha-and-add-benefits-amsi-co-vivekananda

ந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கலாம். உண்மையில் பரிகாரம் என்பது ஜோதிடநூல்கள் சொல்லுகின்ற கருத்து ஏதெனில், எந்த கிரகம் ஜாதகருக்கு பாதிப்பை தருகின்றதோ, தோஷத்தை வியாதியை பிரச் சினையைத் தருகின்றதோ அந்த கிரகத்திற்குரிய மந்திரத்தால் அந்த கிரகத்தை ஸாந்தி செய்வது, வேதங்களில் கூறப்பட்ட கிரக ஸாந்தி மந்திரங் களால் யாகம் செய்வது இவையாவும் ஒரு கிரகம் தருகின்ற பாதிப்பை விலக்கி நன்மையை வழங்குகின்றது. இவ்விதம் செய்கின்ற பரிகார மானது வேத விற்பன்னர் மூலமாக கிரகசாந்தி, கிரக தானம், கிரக ஸ்நானம் என்பவற்றால் இவை நிறைவு செய்யப்படுகின்றது.

Advertisment

கிரக தானம் என்பது கிரகங்களுக்குரிய தானியங்கள், ரத்தினங்கள் இவற்றை முறைப் படியாக தானம் செய்வது ஸ்நானம் என்பது மூல நூல்களில் சொல்லப்பட்ட கிரகங்களுக் குரிய மூலிகை மற்றும் திரவியங்களால் வேத மந்திரங்கள் ஒலிக்க கிரக பாதிப்புக்கு உள்ளான வரை நீராடச் செய்வது என்று சில படிநிலை களாக ப

ந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கலாம். உண்மையில் பரிகாரம் என்பது ஜோதிடநூல்கள் சொல்லுகின்ற கருத்து ஏதெனில், எந்த கிரகம் ஜாதகருக்கு பாதிப்பை தருகின்றதோ, தோஷத்தை வியாதியை பிரச் சினையைத் தருகின்றதோ அந்த கிரகத்திற்குரிய மந்திரத்தால் அந்த கிரகத்தை ஸாந்தி செய்வது, வேதங்களில் கூறப்பட்ட கிரக ஸாந்தி மந்திரங் களால் யாகம் செய்வது இவையாவும் ஒரு கிரகம் தருகின்ற பாதிப்பை விலக்கி நன்மையை வழங்குகின்றது. இவ்விதம் செய்கின்ற பரிகார மானது வேத விற்பன்னர் மூலமாக கிரகசாந்தி, கிரக தானம், கிரக ஸ்நானம் என்பவற்றால் இவை நிறைவு செய்யப்படுகின்றது.

Advertisment

கிரக தானம் என்பது கிரகங்களுக்குரிய தானியங்கள், ரத்தினங்கள் இவற்றை முறைப் படியாக தானம் செய்வது ஸ்நானம் என்பது மூல நூல்களில் சொல்லப்பட்ட கிரகங்களுக் குரிய மூலிகை மற்றும் திரவியங்களால் வேத மந்திரங்கள் ஒலிக்க கிரக பாதிப்புக்கு உள்ளான வரை நீராடச் செய்வது என்று சில படிநிலை களாக பரிகாரங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. என்றாலும் எளிய பரிகாரமாக நூல்களில் சொல்லப்பட்ட கிரகங்களுக்குரிய மூலிகை திரவியத்தை அரைத்து உடல் எங்கும் பூசி நீராடுவது எளிய பரிகாரமாக ஜோதிட விற்பனர்கள் கூறுகின்றார்கள்.

Advertisment

dd

கற்று அறிந்த ஜோதிட பண்டிதர் களின் கருத்து ஒரு ஜாதகத்தை பார்க்கின்றோம். அந்த ஜாதகத்தை பார்த்து நாக தோஷம் இருக்கின்றது, செவ்வாய் தோஷம் இருக்கின்றது, சூரிய தோஷம் இருக்கின் றது, கேமத்ரம யோக தோஷம் இருக்கின்றது, இப்படி ஒருவரை அச்சுறுத் துவது அல்ல.

ஜோதிடருடைய கடமை ஒரு ஜாதகத்தில் காணப்படும் தோஷங்களை கண்டறிந்து சிறிய வயதிலேயே அதற்கான பரிகாரத்தை அறிவுரையாக சொல்வதுதான். ஒரு ஜோதிட பண்டிதனுடைய தலையாயக் கடமை என்பதனை மேன்மை தாங்கிய ஜோதிட சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தற்போது மங்களன் என்றும், பூமி புத்திரன் என்றும், சேய் என்றும், செவ்வாய் பகவான் என்றும், செவ்வாய் என்றும், ஆரன் என்றும், வக்ரன் எனவும், அங்காகரன் எனவும் நூல்கள் புகழ்ந்து பேசும் செவ்வாய் பகவானுக்குரிய மூலிகை குளியலை குறித்து காண்போம். பொதுவாகவே செவ்வாய் என்றாலே செவ்வாய் தோஷம் அதன்மூலம் மண வாழ்வில் போராட்டம் என்னும் கருத்து ஜோதிடர்கள் இடையேயும், பொதுமக்கள் மத்தியிலும் இரவில் நிலவிவருகின்றது. என்னத் தான் சனிபகவான் என்றாலும், எல்லா பாவ கிரகங்களிலும் கடுமையானவராக செவ்வாய்பகவானை ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. ஒரு ஜாதகத்தில் எத்தனை ராஜ யோகங்கள் இருந்தாலும் எட்டாம் வீட்டில், அதாவது லக்னத்திற்கு எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் அமர அனைத்து ராஜயோகங்களும் இல்லாமல் செய்கின்ற தன்னை செவ்வாய்பகவானுக்கு இருக்கின்றது என்று சில நூல்கள் தெரிவிக்கின்றன அதுபோன்று ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனிபகவான் இணைவு கடுமையான விளைவு களைத் தருவதாக விமகவி போன்ற நூல்களில் உணர முடிகின்றது. ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி அமர்ந்து லக்னவீட்டோன் இரண்டு பன்னிரண்டு அஷ்டமத்தில் அமர்ந்து, கேந்திரங்களில் சுப கிரகம் இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வியாதியால் வருந்தும் அவயோகத் தைப் பெற்றவர் என்று ஜாதகா தேசம் என்னும் நூல் சொல்கின்றது.

அவ்வாறே ஆண் ஜாதகத்திலும் அது போன்று பெண் ஜாதகத்திலும் ஏழில் செவ்வாய் அமர்ந்திருப்பது அல்லது இரண்டில் எட்டில் அமர்வதும், மணவாழ்வை பாதிக்கும் அமைப் பாகும் ஜாதக பாரிஜாத ஆசிரியர் கீழ்வருமாறு கூறுகின்றார். எவருடைய ஜாதகத்தில் வலுக்குன்றி அரிட்ட தானங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்திருந்து அவர் தசை புக்தி நடந்தது என்றால் அவர் தசையில் வலுவான கபம் அதிகரிப்பதால் வரும் வியாதி, ஆயுதங்களால் வரும் காயம், தீ விபத்து, மற்றும் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற வியாதிகள், கொப்பளங்கள், உக்கிரமான சைவ பூதங்களின் கோபம், பைரவ மூர்த்தியின் கோபம், ரத்த சம்பந்தமான வியாதியும் ஏற்படுவதாக ஜாதக பாரிஜாதக ஆசிரியர் சொல்லுகின்றார்.

மேலும் உச்ச ராசி அமர்ந்து நீசத்தில் அம்சகம் பெற்ற செவ்வாய் தசையில் சகோதரர் அல்லது சகோதரிக்கு மரணத்திற்கு சமமான துயரமும் அக்கினியால் தீமையும் விஷேபயமும் ஏற்படுவதாகவும் நூல்கள் சொல்லுகின்றன. வக்ரத்தில் இருக்கும் செவ்வாய் தசையில் மிகப்பெரிய அச்சமும் திருடர்களால், தீயால் தீமையும், வனவாசம், குடிபெயர்தல் இவை பலனாக அமைவதாகவும் நூல்களால் உணர முடிகின்றது.

இவ்விதமாக செவ்வாய் பகவான் தரும் தீமைகள் இருந்து விலகி நன்மையை பெறுவதற்கு கீழ்க்கண்ட மூலிகை குளியல் பரிகாரம் கூறப்பட்டுள்ளது வில்வ இலை, சந்தணம், குறுந்தொட்டி, கொன்றை பூ, சாயில்யம், நாணல் பூ, இலஞ்சி பூ, ஜடாமாஞ்சி இவற்றை நீரில் கொதிக்க வைத்து குளிரூட்டிய நீரில் நீராடுவது எல்லாவித செவ்வாய் தோஷத்தை விலக்கும் பரிகாரமாக வீரஸிம்ஹ அவலோகனம் என்னும் நூல் சொல்லுகின்றது.

அவ்வாறு சிகப்பு பவிழம் அணிவதும் நலமாகும். இதோ இந்த தகவலைக் கூறும் வடமொழி சுலோகம் வில்ய சந்தண பலாருண புஷ்பைர் ஹிம் குளு கபலினீ பகுளைச்ச ஸ்னானமத்திரிஹ மாம்ஸியுதாபிர் பௌமதோஷ விநிவாரணமாவு என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது எனவே செவ்வாய் தோஷம் என கலங்காமல் மேற்கண்ட பரிகாரம் செய்து நன்மைபெற வேண்டுகின்றோம்.

செல்: 97913 67954

bala220923
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe