விருச்சிக லக்னத்தில் சந்திர பகவான் நீசமடைகிறார். அதனால் ஜாதகர் மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். பெயர், புகழ் விஷயத்தில் கடுமையான சோதனை உண்டாகும். அதன்காரணமாக மனதில் குழப்பமேற்படும்.
2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். குடும்பசுகம் இருக்கும். ஜாதகர் தர்மச் செயல்களைச் சரியாக செய்யமாட்டார். ஆனாலும் அதிர்ஷ்டம் அவருக்குக் கைகொடுக்கும்.
3-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சந்திர பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். உடன்பிறப்புகளுட னான உறவில் குறையிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். அதிர்ஷ்டம் அவருக்கு உண்டாகும்.
4-ஆம் பாவத்தில் கும்ப ராசியில் சந்திர பகவான் இருந்தால், பூமி, வாகனம் வாங்கலாம். தாயாரால் சந்தோஷம் உண்டாகும். எதிரியான சனியின் ராசியில் சந்திரன் இருப்பதால் மனதில் சந்தோஷம் இருக்காது. ஆனால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.
5-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் அறிவுக் கூர்மையுடன் திகழ்வார். நன்கு படித்தவராக இருப்பார். குழந்தைகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் நல்ல மனிதராகவும், இனிமை யாகப் பேசக் கூடியவராகவும் இருப்பார். தன் அறிவைக் கொண்டு முன்னேறுவார். பெயர், புகழுடன் விளங்குவார்.
6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் பகைவர்களை வெற்றி காண்பார். பகைவர்கள் அடிக்கடி பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். அதனால் மன அமைதி கெடும். கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார்.
7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திர பகவான் உச்சமடைகிறார். ஜாதகர் படிப்படியாக வளர்வார். மனைவி அழகாக இருப்பாள். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனதில் எப்போதும் தைரியம் இருக்கும். பெயர், புகழுடன் வாழ்வார்.
8-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சந்திர பகவான் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு மனநோய் ஏற்படும். சிலருக்கு பெயர், புகழ் கிடைக்கும். நல்ல பணவசதி இருக்கும். சிலருக்கு தூங்குவதில் பிரச்சினை ஏற்படும்.
9-ஆம் பாவத்தில் சுய வீட்டில், கடக ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.
படிப்படியாக முன்னேறுவார். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். பெயர், புகழுடன் விளங்குவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் பல போட்டிகளைச் சந்தித்து பணம் சம்பாதிப்பார்.
10-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் லாபம் இருக்கும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
11-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் ஜாத கருக்கு நன்கு பண வருமானமிருக்கும். தர்மச் செயல்களை ஆர்வத் துடன் செய்வார். நல்ல மனம் உள்ளவராக இருப் பார். இரக்க குணம் இருக் கும். அதிர்ஷ்டம் அவரின் செயல்களுக்குத் துணை யாக இருக்கும். நல்ல பண வசதியுடன், புகழ்பெற்ற மனிதராக இருப்பார்.
12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் சந்திரன் இருந் தால் செலவுகள் அதிக மாக இருக்கும். அதனால், ஜாதகர் கடுமையாக உழைப்பார். வாழ்க்கை யில் பல பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய திருக்கும். வெளித் தொடர்புகளைப் பயன் படுத்தி பணத்தைச் சம்பாதிப்பார். தான் இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்று சம்பாதிக்க வேண்டிய திருக்கும்.
செல்: 98401 11534