ரிஷப லக்னத்தில் சந்திரன், சுக்கிரனின் வீட்டில் இருந்தால், ஜாதகருக்கு மனபலம் அதிகமாக இருக்கும். சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

2-ஆம் பாவத்தில் சந்திரன், புதனின் வீட்டில் இருப்பதால், ஜாதகர் பணத்தை சேமித்துவைப்பார். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஆனால், தம்பி- தங்கைக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். அவர்கள் வேலையெதுவும் செய்யாமல் வெறுமனே இருப்பார்கள்.

3-ஆம் பாவத்தில் சந்திரன் சுயவீட்டில் இருப்பதால், உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். மனதில் சந்தோஷம் இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும்.

12

Advertisment

4-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், தாயின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வீடு வாங்கும் அதிர்ஷ்டம் இருக்கும். உடன் பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். வீட்டில் ஏராளமான பொருட்கள் சேரும்.

5-ஆம் பாவத்தில் சந்திரன் மூலத் திரிகோணத்தில் இருப்பதால், ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். பிளைகளால் பெயர், புகழ் கிடைக்கும். உடன்பிறப்பு களுடன் உறவு நன்றாக இருக்கும். செல்வச் செழிப்புடன் வாழ்க்கை இருக்கும். ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி பல காரியங் களைச் சாதிப்பார்.

6-ஆம் பாவத்தில் சந்திரன் ரோக ஸ்தானத்தில் இருப்பதால், "சந்திரனின் பலம் சற்று குறைவாக இருக்கும். அதனால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். சண்டை, சச்சரவு உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருந்தாலும், அவருக்குப் பிரச்சினைகள் இருக்கும். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

Advertisment

7-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். செவ்வாயின் ராசியில் சந்திரன் இருப்பதால், வர்த்தகத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத் தைக் கொண்டிருப்பார். சிரமப்பட்டு உழைத்து பெயர், புகழ் பெறுவார்.

8-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகருக்கு முன்னோரின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. குருவின் வீட்டில் சந்திரன் இருப்பதால், உடல்நலம் நன்றாக இருக்கும். சற்று தைரியம் குறையும். குடும்பத்தில் சந்தோஷம் குறையும். உடன்பிறப்புகளுடன் சுமாரான உறவிருக்கும். எனினும், சந்திரன் 2-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஜாதகர் பணத்தை சம்பாதிப் பார்.

9-ஆம் பாவத்தில் சந்திரன், சனியின் வீட்டில் இருப்பதால், ஜாதகர் கடுமையாக உழைப்பார். தர்ம காரியங்களில் வெற்றிபெறுவார். நிறைய கடவுள் நம்பிக்கை இருக்கும். நல்ல தொழிலதிபராக இருப்பார். சுறுசுறுப்பாக செயல்படுவார். தைரியத்துடன் காரியங் களைச் செய்து சந்தோஷமாக இருப்பார்.

10-ஆம் பாவத்தில் சந்திரன் இருப்பதால், தந்தையுடன் சுமாராகத் தான் உறவிருக்கும். தந்தையுடன் மகனுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும்.

ஜாதகர் கடுமையாக உழைத்து, வெற்றியைக் காண்பார். தாயால் சந்தோஷம் கிடைக்கும். வீடு, மனை பாக்கியம் இருக்கும்.

11-ஆவது பாவம் என்றால், லாப ஸ்தானம். அங்கு சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு வீடு இருக்கும். தைரிய சாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார். நன்கு சிந்தித்து செயல் பட்டு வெற்றியைக் காண்பார். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.

நன்றாக பேசக்கூடியவராக இருப்பார்.

12-ஆம் பாவத்தில் தன் நண்பர் செவ்வாயின் வீட்டில் சந்திரன் இருப்பதால், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்பால் பணம் சம்பாதிப்பார். பகைவர்களால் பிரச்சினைகள் இருக்கும். ஆனால், ஜாதகர் மிகவும் கவனமாக செயல்பட்டு வெற்றியைக் காண்பார்.

செல்: 98401 11534