லக்ன கேந்திரத்தில், 7-ஆம் பாவத்திற்கு அதிபதியான சந்திரன், சனியின் மகர ராசியில் இருந் தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்.சந்தோஷமாக வாழ்வார். மென்மையான குணமுள்ள வர். தன் காரியத்தில் கவனமாக இருப்பார். வாழ்க்கையில் உயர வேண்டுமென்ற சிந்தனையுடனே இருப்பார். பெயர், புகழ் கிட்டும்.
2-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷமிருக்கும். ஜாதகர் பணத்தை சேமிப்பார். மனைவியால் சில பிரச்சினைகள் உண்டாகும். மனதில் தைரிய மிருக்கும். பேச்சுத் திறமை உண்டு.
3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சந்திரன் இருந்தால் உடன்பிறந்தோருடன் நல்ல உறவிருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். பெயர், புகழ் இருக்கும்.
4-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் பூமி வாங்குவதற்கான வாய்ப்பிருக்கும். அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியால் சந்தோஷம் உண்டாகும். ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். அவருக்கு பெயர், புகழ் கிட்டும்.
5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திரன் உச்சமடைகிறது. அதனால் ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். மனைவியால் கணவருக்கு சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஜாதகர் எதைக் கேட்டாலும் உடனடியாக பதில் கூறுவார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பெயர், புகழ் உண்டு.
6-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் தன் பகைவர்களிடம் மென்மையாகப் பேசி, காரியங்களை முடித்துக்கொள்வார். மனைவியுடன் சிறிய கருத்து வேறுபாடிருக்கும். அதனால் மனதில் கவலை உண்டாகும். பண வரவிருக்கும்.
7-ஆம் பாவத்தில் சுயராசியான கடக ராசியில் சந்திரன் இருந்தால் அழகான மனைவி கிடைப்பாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல ஆதாயமுண்டு. ஜாதகர் பகட்டான தோற்றத்துடன் இருப்பார். அலங்காரப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவார்.
8-ஆம் பாவத்தில், தன் நண்பரான சூரியனின் சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். இல்வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். அதனால் மனதில் கவலையுண்டாகும்.
9-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில், புதனின் கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபாடிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். மனைவி அழகாக இருப்பாள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
10-ஆம் பாவத்தில் சுக்கிர னின் துலா ராசியில் சந்திரன் இருந்தால் தந்தையால் சந்தோஷ மிருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியா பாரத்தில் லாபம் கிட்டும். மனதில் தைரியமிருக்கும். மனைவி அழகாக இருப்பாள். ஜாதகர் சுய மரியாதை உள்ளவராக இருப்பார். வீட்டில் அனைவரிட மும் நன்கு பழகுவார்.
11-ஆம் பாவத்தில் செவ்வா யின் விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைகிறது. அதனால் பண வரவில் குறை இருக்கும். மனைவியால் சுமாரான சந்தோஷமே கிடைக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபமிருக்கும். ஜாதகர் சாதா ரண வாழ்க்கையை வாழ்வார். எப்போதும் மனதில் குழப்பத்துடன் இருப்பார். ஆனால் நல்ல குணம் கொண்டவராகவும், அறிவாளி யாகவும் இருப்பார்.
12-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் ஜாத கருக்கு சம்பாத்தியம் கிடைக் கும். மனைவியுடனான சந்தோ ஷத்தில் குறையிருக்கும். பணி செய்யுமிடத்தில் சிக்கல்கள் ஏற்படும். அதனால் மனதில் கவலை உண்டாகும்.
செல்: 98401 11534