காலபுருஷ தத்துவத்தின் 4-ஆவது பாவாதிபதியான சந்திரன் மேஷ லக்னத்தில் இருந்தால், அதன் 7-ஆவது பார்வை 7-ஆவது பாவத்திற்கு இருக்கும். அதனால் மனைவி நல்லவளாக இருப்பாள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வர்த்தகம் வெற்றிகரமாக நடக்கும். மனதில் எப்போதும் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பார்.
மேஷ லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், அவர் 8-ஆம் பாவத்தைப் பார்ப்பார். அதனால் மனதில் சஞ்சலம் இருக்கும். நோய் பாதிப்பு, திடீர் கஷ்டம், சொத்தில் பிரச்சினை ஆகியவை இருக்கும். ஏனென்றால், 8-ஆம் பாவத்தில் சந்திரன் நீசமடைகிறார்.
சந்திரன் 3-ல் இருந்தால், அவர் தன் நண்பரான குருவின் வீட்டைப் பார்ப்பார். அதனால், ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். கல்வி விஷயத்தில் சிறந்து விளங்குவார். அதிர்ஷ்ட சாலியாக இருப்பார். வள்ளல் குணம் கொண்டவர். நல்ல மனம் உள்ளவர். தைரிய சாலி. பூமி, வாகனம் வாங்குவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சந்திரன் 4-ல் இருந்தால், 7-ஆவது பார்வையாக சனியின் மகர ராசியைப் பார்ப்பார். 10-ஆம் வீடு தந்தை, வர்த்தகம், தொழில், அரசாங்கம், பெயர், புகழ் ஆகியவற்றைக் குறிக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. அரசாங்கம் சம்பந்தப் பட்ட விஷயங்களில் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் கேளிக்கைகளில் ஈடுபாடுள்ளவராக இருப்பார். தொழிலில் ஏதாவது முக்கிய பொறுப்பில் இருப் பார்.
சந்திரன் 5-ல் இருந்தால், அவரது 7-ஆவது பார்வை 11-ஆவது பாவத்திற்கு இருக்கும். அதனால், ஜாதகருக்கு வருமான விஷயத்தில் பிரச்சினை இருக்கும். ஆனால் அவர் அமைதியான மன நிலையுடன் எப்போதும் இருப்பார். எல்லா கஷ்டங்களையும் அமைதியாக ஏற்றுக்கொள்வார். இறுதியில் வெற்றிகாண்பார்.
சந்திரன் 6-ல் இருந்தால், அதன் 7-ஆவது பார்வை 12-ஆவது பாவத்திற்கு இருக்கும். அதனால், செலவுகள் அதிகமாக இருக்கும். தான் பிறந்த இடத்திலிருந்து தூர இடத்திற்குச் சென்று புகழுடன் இருப்பார். இல்வாழ்க்கையில் குறைகளும் அமைதியற்ற நிலையும் இருக்கும். சுபச் செலவுகள் அதிகமாக இருக்கும்.
சந்திரன் 7-ல் இருந்தால், அதன் 7-ஆவது பார்வை லக்னத்தின் மீது இருக்கும். அதனால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பார். பொழுதுபோக்கு விஷயங்களில் விருப்பமுள்ளவர். புகழுடன் இருப்பார். நிறைய சொத்துகள் இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள்.
8-ல் சந்திரன் இருந்தால், தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். பூமி, சொத்து ஆகியவற்றில் பிரச்சினை இருக்கும். ஆனால் ஜாதகர் சுயமாக சம்பாதிப்பார். பண வசதி இருக்கும். குடும்பம் அவருக்கு ஆதரவாக இருக்கும்.
9-ல் சந்திரன் இருந்தால், தன் நண்பரான புதனின் மிதுன ராசியைப் பார்ப்பார். அதனால் அவருக்கு உடன் பிறப்புகள் இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஜாதகர் ஈடுபடுவார். புனிதப் பயணம் மேற்கொள்வார். நல்ல செயல்களைச் செய்வார். பூமி, பணவசதி இருக்கும்.
10-ல் சந்திரன் இருந்தால், தன் 7-ஆவது பார்வையால் தன் சொந்தவீடான கடக ராசியைப் பார்ப்பார். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். வீடு, பூமி, வாகனம் இருக்கும். ஆனால் தந்தையுடன் ஏதாவது பிரச்சினை இருக்கும்.
11-ல் சந்திரன் இருந்தால், அவர் தன் 7-ஆவது பார்வையால் 5-ஆவது பாவத்தைப் பார்ப்பார். அதனால் ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். புத்திக்கூர்மை உள்ளவர். புகழுடன் இருப்பார். பல கஷ்டங்களைச் சந்தித்து, வாழ்க்கையில் முன்னேறுவார்.
12-ல் சந்திரன் இருந்தால், அவர் தன் 7-ஆவது பார்வையால் 6-ஆம் பாவத் தைப் பார்ப்பார். அதனால் ஜாதகர் அமைதி யான குணம் கொண்டவராக இருப்பார். நிதானமாக தன் செயல் களைச் செய்வார். புத்திக் கூர்மையுடன் இருப்பார். வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் ஏதாவதொரு நல்ல தொடர்பில் இருப்பார். அதன்மூலம் அவருக்கு பெயர், புகழ் கிடைக்கும்.
செல்: 98401 11534