துலா லக்னத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பிறரை ஈர்ப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார் கள். பெயர், புகழ் இருக்கும். பெற்றோரின் ஆசிர் வாதம் கிடைக்கும்.

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைகிறார். அதனால் பணத்தை சேமிப்பதில் இடையூறு இருக்கும். குடும்பசுகம் குறைவாக இருக்கும். வியாபாரத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரும். ஜாதகர் பல கில்லாடித் தனங்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்பு களால் சந்தோஷம் கிட்டும். ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். அவரின் தந்தைக்குப் பெயர், புகழ் இருக்கும். ஜாதகரும் நல்ல புகழுடன் இருப்பார். பல வெற்றிகளைக் காண்பார். முன்னோரின் சொத்து கிடைக்கலாம்.

Advertisment

nn

4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சந்திரன் இருந் தால் ஜாதகரின் தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பிருக் கும். பூமி, வாகனம் வாங்கு வதில் பிரச்சினை ஏற்படும். ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். பணம் சம்பாதித்து, சந்தோஷ மாக வாழ்வார்.

5-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்கும். ஜாதகர் பல வெற்றிகளைக் காண்பார். தன் சொந்த அறிவைக்கொண்டு பல காரியங் களைச் செய்துமுடிப்பார். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஜாதகர் கூர்மையான அறிவைக் கொண்டிருப்பார்.

6-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் அமைதியாக இருந்தவாறு பகைவர்களை வெல்வார். அவருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடிருக் கும். சில தடைகளைக் கடந்து அவர் வெற்றி பெறுவார். சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்வார்கள்.

7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு தொழி-ல் வளர்ச்சியிருக்கும். மனைவி அழகான தோற்றத்துடன் இருப்பாள். பல காரியங்களை ஜாதகர் சந்தோஷத்துடன் முடிப்பார்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திரன் உச்சமடைகிறார். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்கும். சந்தோஷமான வாழ்க்கை வாழ்வார். சிலருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடி ருக்கும். வர்த்தகத்தில் கடுமையான போட்டியைக் கடந்து, பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.

9-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், புதனின் மிதுன ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அவர் தர்ம காரியங்களில் ஈடுபடு வார். தந்தையால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தைரிய மாக செயல்பட்டு வெற்றி பெறுவார். பெயர், புகழுடன் இருப்பார்.

10-ஆம் பாவத்தில் சுய ராசியான கடக ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு பெயர், புகழ் இருக்கும். அரசாங்க விஷயத்தில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தந்தையால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்.

11-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பண வரவிருக்கும். தந்தையால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் ஜாதகருக்கு பெயர், புகழ் கிட்டும். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார். அடிக்கடி பயணங்களை மேற் கொள்வார்.

12-ஆம் பாவத்தில் தன் நண்பரான புதனின் கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிப்பார். அவருக்கு பெயர், புகழ் இருக்கும். வியாபாரம் காரண மாக ஜாதகர் அடிக்கடி பயணம் செய்வார். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். சிலர் அதிகமாக சாப்பிடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

செல்: 98401 11534