சிம்ம லக்னத்தில் சந்திரன் தன் நண்பரான சூரியனின் ராசியில் இருந்தால் ஜாதகர் மெலிந்த தோற்றத் தைக் கொண்டிருப்பார். வெளியே நிறைய சுற்றுவார். வெளித் தொடர்புகள் பல இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் பிரச்சினைகள் உண்டாகும்.
2-ஆம் பாவத்தில் சந்திர பகவான் புதனின் கன்னி ராசியில் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் ஆடம்பரமாக வாழ்வார். குடும்பத்தில் மனக்கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி அதிகமாக பணம் சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் சந்திரன் துலா ராசியில் இருந்தால், உடன்பிறப்பு களுடன் சுமாரான உறவே இருக்கும். தைரியம் க
சிம்ம லக்னத்தில் சந்திரன் தன் நண்பரான சூரியனின் ராசியில் இருந்தால் ஜாதகர் மெலிந்த தோற்றத் தைக் கொண்டிருப்பார். வெளியே நிறைய சுற்றுவார். வெளித் தொடர்புகள் பல இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் பிரச்சினைகள் உண்டாகும்.
2-ஆம் பாவத்தில் சந்திர பகவான் புதனின் கன்னி ராசியில் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் ஆடம்பரமாக வாழ்வார். குடும்பத்தில் மனக்கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி அதிகமாக பணம் சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் சந்திரன் துலா ராசியில் இருந்தால், உடன்பிறப்பு களுடன் சுமாரான உறவே இருக்கும். தைரியம் குறைவாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் அதிக வருமானம் கிடைக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்.
4-ஆம் பாவத்தில்- கேந்திர ஸ்தானத் தில் சந்திர பகவான் தன் நண்பரான செவ்வாயின் விருச்சிக ராசியில் நீசமடைவதால், அன்னையின் உடல்நலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். நிலம் வாங்குவதில் சிறிய தடைகள் ஏற்படும். கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் வாக்குவாதம் நடக்கும்.
5-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் சந்திர பகவான் குருவின் தனுசு ராசியில் இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகளால் சந்தோஷம் குறைவாகவே கிடைக்கும். படிப்பில் சில தடங்கல்கள் இருக்கும்.
அதைக்கடந்து வெற்றிபெறுவார். செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் மனதில் கவலைகள் உண்டாகும்.
6-ஆம் பாவத்தில் பகைவரான சனியின் மகர ராசியில் சந்திரன் இருந்தால் பகைவர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். நோய்கள் வரும். அதற்காக பணம் செலவழிக்க நேரும். மனதில் பல பிரச்சினைகள் இருக்கும்.
7-ஆம் பாவத்தில் சந்திர பகவான் தன் எதிரியான சனியின் கும்ப ராசியில் இருந்தால் ஜாதகருக்குப் பல பிரச்சினைகள் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் மனதில் கவலை உண்டாகும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்.
8-ஆம் பாவத்தில் சந்திர பகவான் குருவின் மீன ராசியில் இருந்தால் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளால் பணம் சம்பாதிப்பார்.
9-ஆம் பாவத்தில் சந்திர பகவான் தன் நண்பரான செவ்வாயின் விருச்சிக ராசியில் இருந்தால் தைரியம் குறைவாக இருக்கும். அதிர்ஷ்டத்தில் தடை உண்டாகி பின்னர் வெற்றி கிடைக்கும். கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிக்க வேண்டியதிருக்கும். தர்மச் செயல்கள் செய்வதில் சிறிய தடைகள் இருக்கும்.
10-ஆம் பாவத்தில்- கேந்திர ஸ்தானத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திர பகவான் உச்சமடைகிறார்.
12-க்கு அதிபதியாக 10-ஆமிடத்தில் இருப்பதால், ஜாதகர் தன் தந்தையின் சொத்தை வைத்து வாழ்வார். அரசாங்க விஷயங்களில் சில தடைகள் இருக்கும். வெளித் தொடர்புகளால் லாபம் கிடைக்கும்.
11-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சந்திர பகவான் இருந்தால் ஜாதகர் தன் வெளித் தொடர்புகளாலும், பயணத்தின்மூலமும் பணம் சம்பாதிப்பார். வயிற்றில் பிரச்சினை வரக்கூடும். செலவுகள் அதிகமாக இருக்கும்.
12-ஆம் பாவத்தில் 12-க்கு அதிபதியான சந்திரன் தன் சுய ராசியான கடக ராசியில் இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் அவருக்கு பெயர், புகழ், பணம் கிடைக்கும். ஜாதகர் நன்கு தூங்குவார். நன்றாக சாப்பிடுவார்.
செல்: 98401 11534