கடக லக்னத்தில் சந்திரன் சுய ராசியில் இருந்தால் ஜாதகருக்குப் பெயர், புகழ் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். பிறரை ஈர்க்கும் தோற்றத்தைக் கொண்டிருப்பார். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும். தன் பேச்சால் அனைவரையும் கவர்வார்.
சாதுரியமாகப் பேசி, தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வார்.
2-ஆம் பாவமான குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் தன் நண்பரான சூரியனின் சிம்ம ராசியில் இருந்தால் ஜாதகர் மன தைரியத்துடன் இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார். பெயர், புகழ் இருக்கும்.
3-ஆம் பாவத்தில் சந்திரன், புதனின் கன்னி ராசியில் இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். தைரிய குணம் நிறைந்த வராக இருப்பார். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கும். அனைவரிடமும் உற்சாகத்துடன் பழகுவார். நல்ல பண வசதியுடன் இருப்பார். அவருடன் பிறந்தவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/moon_5.jpg)
4-ஆம் பாவத்தில் சந்திரன், சுக்கிரனின் துலா ராசியில் இருந்தால் தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகனம், வீடு இருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத்துடன் இருப்பார். மென்மையான மனதைக் கொண்டவர். அனைவரிடமும் சிரித்த முகத்துடனும், உற்சாகத்துடனும் உரையாடுவார். பணக்காரராக இருப்பார்.
5-ஆம் பாவமான திரிகோணத்தில்- செவ்வாயின் விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைகிறார். அதனால் படிக்கும் காலத்தில் ஜாதகருக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். உடல்நலம் சற்று பாதிக்கப்படும். வயிற்றில் நோய் வரும்.
6-ஆம் பாவமான ரோக, ருண ஸ்தானத் தில், குரு பகவானின் தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் பகைவர்களால் பிரச்சினை இருக்கும். ஆனால் தன் அமைதியான குணத்தைப் பயன்படுத்தி ஜாதகர் அவர்களை வெல்வார். அதனால் பகைவர்கள் குறைவார்கள்.
7-ஆம் பாவத்தில், சனியின் மகர ராசியில் சந்திரன் இருந்தால், கணவன்- மனைவி உறவில் சந்தோஷம் இருக்காது. இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஜாதகர் பெண் பித்தனாக இருப்பார். தன் செயல்களை மிகுந்த சோம்பல் தனத்துடன் ஆரம்பிப்பார். படிப்படியாகத் தான் சுறுசுறுப்பே வரும். பலவழிகளில் பணத்தை சம்பாதிப்பார். எப்போதும் பிறரை ஈர்க்கும் தோற்றத்துடன் இருக்க விருப்பப்படுவார்.
8-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். இளம்வயதில் அவருக்கு உடல்நல பாதிப்பிருக்கும். அன்றாட செயல்களில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்து விஷயத்தில் சில பிரச்சினைகள் இருக்கும்.
9-ஆம் பாவமான திரிகோணத்தில், குருவின் மீன ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை ஈர்க்கக் கூடியவராக இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தைரியம் கொண்டவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை நிறைய உள்ளவர். ஜாதகருக்கு பெயர், புகழ் இருக்கும்.
10-ஆம் பாவத்தில்- மேஷ ராசியில் சந்திரன் இருந்தால், தந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும். வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.
அரசாங்க விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். ஜாதகர் உயர்ந்த பதவியை வகிப்பார். வசீகரிக்கக்கூடிய தோற்றம் இருக்கும். அழகான வீட்டில் வாழ்வார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.
11-ஆம் பாவத்தில் சந்திரன், சுக்கிரனின் ரிஷப ராசியில் உச்சம் பெறுகிறார். ஜாதகர் பிறரை ஈர்ப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் கிடைக்கும். தினமும் வருமானம் இருக்கும்.
12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சந்திரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு பேசி, அதன்மூலம் பணம் சம்பாதிப்பார். தன் காரியங்களில் மன்னராக இருப்பார். உணவை ருசித்து சாப்பிடுவார்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/moon-t.jpg)