மிதுன லக்னத்தில் சந்திரன், புதனின் வீட்டில் இருந்தால், ஜாதகர் மனபலத்துடன் பணத்தை சம்பாதிப்பார். எல்லா விஷயங் களிலும் மிக கவனமாக இருப்பார். உடல் நலம் நன்றாக இருக்கும். நல்ல தோற்றத் தைக் கொண்டிருப்பார். புகழுடன் விளங்கு வார். ஜாதகருக்கு அழகான வாழ்க்கைத் துணை வாய்க்கும்.

2-ஆம் பாவத்தில் சுயவீட்டில் சந்திரன் இருந்தால் குடும்ப சுகம் உண்டு. பணவரவு நன்றாக இருக்கும். வீட்டில் நகைகள், நவரத்தினங்கள் இருக்கும். ஜாதகர் எப்போதும் பணம் சம்பாதிப்பதைப் பற்றியும், குடும்பத்தைக் காப்பாற்றுவதைப் பற்றியுமே நினைத்துக் கொண்டிருப்பார். புகழ் இருக்கும். எனினும், மனதில் சிறியசிறிய குழப்பங்கள் தோன்றும்.

3-ஆம் பாவத்தில் சந்திரன் சிம்ம ராசியில் இருந்தால் ஜாதகரின் உடன்பிறப்புகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். பெயர், புகழ் கிடைக்கும்.

dd

Advertisment

4-ஆம் பாவத்தில் புதனின் வீட்டில் சந்திரன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். பூமி, வாகனம் வந்து சேரும். பணவரவிருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தந்தையால் புகழ் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் ஆதாயம் உண்டு. ஜாத கருக்கு பிறரை ஈர்க்கக்கூடிய சக்தி இருக்கும்.

5-ஆம் பாவத்தில் சந்திரன் சுக்கிரனின் துலா ராசியில் இருந்தால் படிப்பில் சிறிய தடைகள் ஏற்படும். குழந்தை பிறப்பதில் தடைகள் இருக்கும்.

ஜாதகர் கடுமையாக உழைத்து தன் அறிவால் தடைகளை வெல்வார். பணம் சம்பாதிப்பார். 6-ஆம் பாவத்தில் சந்திரன் ரோக, ருண ஸ்தானத்தில் தன் நண்பர் செவ்வாயின் ராசியில் நீசமடைகிறார். அதனால், பணம் சம்பாதிப்பதில் சில தடைகள் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். பகைவர்கள் பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். சிலருக்கு பெயர் கெடும். ஜாதகர் எதிலும் எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.

Advertisment

7-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் திருமண விஷயத்தில் சில தடைகள் இருக்கும். பின்னர் வெற்றி கிடைக்கும். நல்ல பணவரவுண்டு. வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வர்த்தகத்தில் புகழ் கிடைக்கும்.

8-ஆம் பாவத்தில் சந்திரன் தன் பகைவரின் மகர ராசியில் இருந்தால் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். பணத்தைச் சேமிப்பதில் தடைகள் உண்டாகும். குடும்ப சந்தோஷத்தில் பிரச்சினைகளைச் சந்தித்தாலும், ஜாதகர் வாழ்வில் வெற்றியைக் காண்பார்.

9-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சந்திரன் இருந்தால் அதிர்ஷ்டத்தில் சிறிய தடைகள் இருக்கும். அத னால் மன அமைதி கெடும். தர்மச் செயல்களில் ஈடுபடுவதன்மூலம் பண வரவிருக்கும். அதன்மூலம் மன அமைதி கிடைக்கும். சகோதரர்களுடன் உறவு சீராக இருக்கும். வாழ்க் கையை சந்தோஷமாக நடத்தலாம்.

10-ஆம் பாவத்தில் சந்திரன், குருவின் மீன ராசியில் இருந்தால் ஜாத கருக்கு பணவரவு நன்றாக இருக்கும். தந்தையால் சந்தோஷம் கிட்டும். வர்த்தகத்தில் வெற்றி உண்டு. வீடு, வாகனம் வந்துசேரும்.

11-ஆம் பாவத்தில் சந்திரன், தன் நண்பர் செவ்வாயின் வீட்டில் இருந்தால் விசேஷ லாபம் கிடைக்கும். குடும்ப சுக மிருக்கும். குழந்தை பாக்கி யம் உண்டு. ஜாதகர் படிப்பாளியாக- அறி வாளியாக இருப்பார். புகழுடன் வாழ்வார். குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளால் பணம் சம்பாதிப்பார். நன்கு சாப்பிடுவார்; தூங்குவார். கடுமையாகப் பேசுவார். குடும்பத்தில் சிறிய பிரச்சினை இருக்கும்.

செல்: 98401 11534