சந்திரன் மார்கழி மாதப் பிறப்பன்று பூராட நட்சத்திரம், தனுசு ராசியில் உள்ளார்.
இந்த மார்கழி மாதத்தில் நெருப்பு கிரகங்களான செவ்வாயும் சூரியனும் நெருப்பு ராசிகளில் உள்ளனர்.
நில ராசியான ரிஷபத்தில் ராகுவும், மகர ராசியில் காற்று கிரகமான சனியும், ஆகாய கிரகமான குருவும்
அமர்ந்துள்ளனர். நீர் ராசியான விருச்சிகத்தில், நீர் கிரகம் சுக்கிரன் அமர்ந்து வலுப்பெறுகிறார்.
16-12-2020 முதல் 04-01-2021 வரை சுக்கிரன் காற்று கிரகமான கேதுவுடனும் ராகுவின் பார்வையிலும் உள்ளார். எனவே, இ
சந்திரன் மார்கழி மாதப் பிறப்பன்று பூராட நட்சத்திரம், தனுசு ராசியில் உள்ளார்.
இந்த மார்கழி மாதத்தில் நெருப்பு கிரகங்களான செவ்வாயும் சூரியனும் நெருப்பு ராசிகளில் உள்ளனர்.
நில ராசியான ரிஷபத்தில் ராகுவும், மகர ராசியில் காற்று கிரகமான சனியும், ஆகாய கிரகமான குருவும்
அமர்ந்துள்ளனர். நீர் ராசியான விருச்சிகத்தில், நீர் கிரகம் சுக்கிரன் அமர்ந்து வலுப்பெறுகிறார்.
16-12-2020 முதல் 04-01-2021 வரை சுக்கிரன் காற்று கிரகமான கேதுவுடனும் ராகுவின் பார்வையிலும் உள்ளார். எனவே, இந்த காலகட்டத்தில் பெரும் காற்றுடன் பெருமழையும் பொழியக்கூடும். சில இடங்கள் புயலின் பாதிப்புக்கு உள்ளாகும். விருச்சிக ராசி வடக்கு திசையைக் குறிப்பதால், மேற்கண்ட நாட்களில் மழை, புயல் பாதிப்புண்டு.
மழை பொழியும் நாட்களும் இடங்களும்
டிசம்பர் 16- பூராடம்- கோவை, ஈரோடு மற்றும் கிழக்கு திசையில் மழை கொடுக்கும்.
டிசம்பர் 20- சதயம்- சேலம், நாமக்கல், திருச்சி, கரூர்- மேற்கு திசை மழை பெறும்.
டிசம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சந்திரன் நீர் ராசியான மீன ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய வருண மண்டல நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்கிறார். எனவே மதுரை, கரூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் வடக்கு திசையிலும் மழையின் பாதிப்பு கடுமையாக இருக்கும்.
டிசம்பர் 30 திருவாதிரை- இது காற்று ராசியிலுள்ள வருண மண்டல நட்சத்திரம். எனவே கடலூர், அரியலூர், நாகை, திருவாரூர் மற்றும் மேற்கு திசை மழை பெறும். காற்று அதிகமாகும்.
டிசம்பர் 31, ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் சந்திரன், நீர் ராசியான கடகத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரங்களில் செல்லும்போது குரு, சனி ஆகிய காற்று கிரகங்களின் பார்வையையும் பெறுவார். எனவே தஞ்சை மாவட்டம் முழுவதும் மழையுடன் புயல் அபாயமும் உண்டு. வடக்கு திசையும் பாதிப்படையும்.
ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் சந்திரன் விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் விருச்சிகத்தில் செல்கிறார். இங்கு கேது மற்றும் ராகு பார்வையும் உள்ளது. எனவே நல்ல மழையும், இடி, மின்னலும் இருக்கும். தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு மற்றும் வடக்கு திசை இடங்கள் பாதிப்படையும்.
ஜனவரி 12, 13 தேதிகளில் சந்திரன் தனுசு ராசியில் மூலம், பூராட நட்சத்திரத்தில் செல்லும்போது அங்கு சுக்கிரன் எனும் நீர் கிரகம் இருப்பதால் கிழக்கு திசை மற்றும் கோவை, ஈரோடு பகுதிகளில் குறைந்த அளவு மழை பொழியும். அது நெருப்பு ராசியாதலால் மழை பெய்யாமலும் போகலாம்.
டிசம்பர் 16 முதல் ஜனவரி 4 வரை கண்டிப்பாக ஆங்காங்கே மழை, புயல், இடி, மின்னல் என இருக்கும். இது வடக்கு திசையில் பெரும் பாதிப்பை உண்டாக்கலாம். கவனம் தேவை. மழை பொழியாத நாட்கள் நல்ல வெப்பத்தைக் கொடுக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
செல்: 94449 61845