நவீன விஞ்ஞான உலகில் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் பெருமழை, சூறாவளி, புயல்காற்று ஆகியவற்றைப் பற்றிய அறிவிப்புகளை அந்தந்த சமயங்களிலே வெளியிடுகின்றன. இந்த அறிவிப்புகள் கடலி−ல் கருமேகக் கூட்டங்கள் தோன்றி பூமியை நோக்கி நகர்ந்துவரும் பாதையை விஞ்ஞானக் கருவிகள்மூலம் கண்காணித்து வெளியிடப்படுபவை எனலாம். அவ்வாறு நடக்கலாம்; நடக்காமலும் போகலாம் என்பதே நிதர்சனமான உண்மை.
அதேசமயம் நம் ரிஷிகள் பல நூற்றா

அதேசமயம் நம் ரிஷிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தங்களது அனுபவ அறிவு, சூட்சும புத்தி, ஞானதிருஷ்டி ஆகியவற்றைக் கொண்டு பருவகால மழைப்பொழிவு பற்றிய அறிவிப்புகளைக் கணித்துக் கூறியிருக்கிறார்கள். இயற்கை அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்ட இப்படிப்பட்ட அறிவிப்புகள் வாய்மொழியாக சீடர்களுக்கு கற்பிக்கப்பட்டு, சீடர் பரம்பரைமூலமாகத் தொடர்ந்து, பின்னர் சாஸ்திர நூல்களில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பொதுவாக பருவமழைப் பொழிவு பற்றி சாஸ்திரம் கூறும் கணிப்புகளைக் காணலாம்.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் ஐந்தாம் தேதியன்று வரும் கிழமையின் அடிப்படையில் பருவ மழைப்பொழிவின் கணிப்பு:
வருட பருவமழை
ஞாயிறு, திங்கள், சனி- மழைப்பொழிவு; விளைச்சல்; பயிர்நாசம்.
செவ்வாய்க்கிழமை- சொற்பமழை; குறைவான விளைச்சல்.
புதன்கிழமை- மழைப்பொழிவு; ஒருபோக விளைச்சல்.
வியாழக்கிழமை- நல்ல மழைப்பொழிவு; இருபோக விளைச்சல்.
வெள்ளிக்கிழமை- நல்ல மழை; அமோக விளைச்சல்.
நடைபெறும் விளம்பி வருடத்தில் ஆடி மாதம் ஐந்தாம் தேதி சனிக்கிழமை என்று அமைந்தது. எனவே இந்த வருடம் பருவமழை பொழியும்; அதே சமயம் பயிர் உற்பத்தியானாலும் நாசம்- பாதிப்பு அடையும் வாய்ப்புகள் உள்ளன என்று தெரிகிறது.
பருவமழை தொடர்பான கூடுதல் சாஸ்திரக் கணிப்புகள்
ஆவணி மாதம் எட்டாம் தேதியன்று விண்ணில் கருமேகங்கள் தோன்றி மின்னலுடன், இடி முழக்கம் அதிகமாக அமைந்தால் நல்ல பருவமழை உண்டு.
ஐப்பசி மாதம் ஸ்வாதி நட்சத்திரம் வரும் நாளில் கிழக்கே கருமேகங்கள் உண்டாகி, இடி மின்னல் தோன்றினாலும் நல்ல பருவமழை உண்டு.
சந்திரன் கடகம் மற்றும் விருச்சிக ராசிகளில் இருந்து, சுபகிரகப் பார்வை பெற்றால் நல்ல பருவமழை உண்டு.
மேற்கூறிய கணிப்புகள் தமிழ் வருட மாதங்களின் தொடர்பு பெற்றதால் தமிழ்நாட்டுக்குப் பொருத்தமாக அமையும் என்றே கருதலாம்.
பருவமழையை வீணாக்காமல் சேமிப்பது சிறந்தது.
செல்: 74485 89113