வாரத்தில் இரண்டாவது நாளான திங்கட்கிழமை, சந்திரனின் பூரணமான ஆளுமைக்கு உட்பட்ட நாளாகும். இது ஈசனின் திருப்பெயரான சோமன் என்கின்ற பெயரை இணைத்து சோமவாரம் என்றும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த வளமிகு நன்னாளில் மன வளத்தையும், வலிமை யையும், பணவரவையும் எவ்வாறு ஒருங்கே அடைவது என்பதைப் பரிகாரங்களுடன் காணலாம்.
"விதி கால், மதி முக்கால்' என்கின்ற சொல்வழக்கைக் கேள்விப் பட்டிருப்போம். விதி என்கின்ற லக்னம் துணைபுரியாத நிலையிலும், சந்திரன் என்கின்ற மன ஓட்டமான ராசியைப் பிடித்து வெல்லும் ரகசியம் பொதிந்துள்ளது இந்த வழக்கு மொழியில்.
மதி என்னும் சந்திரன் ஒரு மனிதனின் அணுமுதல் அண்டம்வரை துணைவரும் கருவியாகும். ஏன்- பிறப்புமுதல் இறப்புவரை இந்த சந்திரனைக் கைக்கொண்டுதான் சகலத்தையும் கணிக்க முடிகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/monday=parigaram.jpg)
ஒரு ஜனனத்தின்பொழுது எந்த நட்சத்திரத் தில் சந்திரன் பயணிக்கின்றதோ, அதுவே ராசியாகக் கருதப்படுகிறது. அதேபோல் ஓர் இறப்பின்பொழுது சந்திரன் சூரியனி டமிருந்து எத்தனையாவது விலகலில் நிற்கிறார் என்பதையே திதியாகக் கைக் கொண்டு, அவர்களுக்கான கிரியைகள் செய்யப்படுகிறது. ஆக பிறப்பும், இறப்பும் சந்திரனுக்குட்பட்டதே.
ஒரு உடலின் உருவாக்கத்தில் ஐந்து கோசங்கள் அமைந்துள்ளன. அவற்றில் இரண்டு கோசங்கள் சந்திரனின் துணையால் நிர்ணயிக்கப்பட்டவையாகும்.
அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம். இவற்றில் அன்னமய கோசமும், மனோமய கோசமும் சந்திரனின் முழு பலத்துடன் செயல்படுகிறது. உணவால் உடல் வளர்க்கப்படுகிறது. இந்த உடல், உணவு சந்திரனின் காரகமாகும்.
எனவே அன்னமய கோசம் சந்திரனின் ஆளுமை பொருந்திய கோசமாகும்.
அதேபோன்று மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரனின் துணையாலே தான் ஒரு மனிதனின் மனமானது செயல் படுகிறது. அதனால் மனோமய கோசமும் சந்திரனின் ஆளுமைக்கு உட்பட்டது என்பதை ஆணித்தரமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.ஆக ஒட்டுமொத்த மனிதப் பயணத்தில் சந்திரனின் பங்கு மிகப் பெரியதாகும்.
சந்திரன் மனித உடலில் ரத்த ஓட்டம், நீர்ப்பைகள் என்று அழைக்கக்கூடிய சிறுநீரகம், கண்ணீர்ப்பைகள், சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை போன்றவற்றில் தன் ஆதிக்கத்தை பலமாகப் பதித்துள்ளது.
மேலும் இடது கண் மற்றும் மனம் சார்ந்த எல்லா செயல்பாடுகளையும், தாய் சார்ந்த நிலையையும் சந்திரனே நிர்ணயம் செய்கிறது.
சந்திரனுக்கு எப்படி இப்படியொரு ஆற்றல் என்று வியக்காத ஜோதிடர்கள் நிச்சயமாக இருக்கமாட்டார்கள். இந்த மாபெரும் ஒளி கிரகமானது பல மாற்றங் களை வாழ்வியலில் அளிக்கிறது.
சந்திரனின் கோட்சாரம், அன்றாட வாழ்வில் இணக்கமான மற்றும் இணக்கமற்ற நிகழ்வுகளை நிகழச்செய்கிறது. இந்த கோட்சார சந்திரனின் முன்- பின் மற்றும் சந்திரனின்மீது பயணிக்கும் கோட்சார சனி மற்றும் எட்டாமிட சனி பலவகையில் ஏற்ற- இறக்கங்களை வழங்கிச் செல்கிறது. இதையே ஜோதிடரீதியாக அஷ்டமச் சனி யாகவும், ஏழரைச் சனியாகவும் வரையறுக்கப் படுகிறது.
காலச்சக்கரத்தின் அச்சாணியாக சந்திரன் ஒளிபொருந்தி சுழன்று கொண்டிருக்கிறது. ஜோதிடத்தில் கடக லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், திங்கட்கிழமையில் பிறப் பெடுத்தவர்களும் சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்கள் ஆவர். இவர்கள் சற்று பயந்த தன்மையுடனே காணப்படுவார்கள். ஆனால் இந்த பயம் நிச்சயமாக வெளியில் தெரியாது.
கடல் கடந்த பயணம், உணவுத் தொழில், விவசாயம் போன்றவையும், பயணம் சார்ந்த துறையான டிராவல் ஏஜென்சி போன்றவையும் சந்திரனின் தன்மை பொருந்தியவையாகும்.
சந்திரனின் நிலையில் மாந்தி தொடர்பு பெறும்பொழுது, அந்த வம்சத்தில் நீரினால் இறந்தவர்களோ அல்லது உணவினால் இறந்த வர்களோ நிச்சயமாக இருப்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/monday=parigaram1.jpg)
மேலும் சந்திரன் பாவ கிரகங்களுடன் இணையும்பொழுது மனமும் பணமும் இணைந்தே பாதிப்படையும்.
குறிப்பாக ராகு- சந்திரன், கேது- சந்திரன், மாந்தி- சந்திரன், சனி- சந்திரன் ஆகிய கூட்டானது மனதில் ஒரு இனம்புரியா பதட்டத்தையும் பயத்தையும் நிலவச் செய்துகொண்டே இருக்கும்.
சந்திரன் மற்றும் கேதுவின் தொடர்பானது பெண்களின் ஜாதகத்தில் அமையும் பொழுது அவர்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை எளிதாகக் கணக்கிட முடிகிறது.
இந்த பாவ கிரகங்களின் சேர்க்கையானது ஜாதகரின் தாய் மற்றும் அவர்களின் உடல்நிலை மற்றும் பொருளாதாரத்தையும் பெருமளவு பாதிக்கிறது.
"பணம் தண்ணீர்போல் செலவாகிறது' என்ற வரியை நாம் பலசமயம் கேட்டிருப் போம். அதேபோல் "வருமானம் தேய்ந்து கொண்டே செல்கிறது' என்பதையும் அடிக்கடி காதுபடக் கேட்டிருப்போம். ஆக சந்திரனின் பலமே பணபலமும்கூட.
தேய்ந்து வளரும் தன்மை பணத்திற்கும் உண்டு; சந்திரனுக்கும் உண்டு.
திங்கட்கிழமைகளில் அன்னதானம், சேவை, ஆன்மிக நிகழ்வுகள், கடல் குளியல் போன்றவை சிறப்பளிக்கும்.
பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது சிறப்பு.
புதிதாக பத்திரப்பதிவு தவிர்க்கலாம்.
பல வளங்களை அருளும் திங்கட்கிழமை பரிகாரங்கள்
சந்திராயன நோன்பு: சோழ மன்னனின் மகள் காஞ்சன மாலை பாண்டிய மன்னனை மணந்து, குழந்தை வரம்வேண்டி இந்த சந்திராயன நோன்பு மேற்கொண்டதாகவும், அதன்மூலம் கிடைப்பதற்கரிய குழந்தை வரத்தை அடைந்ததாகவும் பண்டைய நூலில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திராயன நோன்பு பிரதமையில் வரும் திங்கட்கிழமையில் ஆரம்பிக்க வேண்டும். முதல்நாளில் ஒரு கவளம் உணவும், இரண்டாவது திதியில் இரண்டு கவளம் உணவும் என, திதிகளுக்கு ஏற்ப எண்ணிக்கையில் உணவு உட்கொள்ள வேண்டும். இறுதியாக வருகின்ற அமாவாசை அல்லது பௌர்ணமி திதியில் முழு விரதமிருந்து கோரிக்கை வைக்க, சந்திரனின் ஆசிகிடைத்து அந்த எண்ணமும், செயலும் ஈடேறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பெரும் வருமானத்தடை உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் ஐந்து, ஐந்து ரூபாய் நாணயங்களைக் கையில் வைத்துக்கொண்டு பிள்ளையார் கோவிலை 11 முறை வலம்வந்து, அந்த நாணயங்களை தொழில் நடத்தும் இடங்களில் கல்லாப் பெட்டிகளில் போட்டு வந்தால் சிறப்பானதொரு வருமானத்தைக் கைக்கொள்ளமுடியும்.
பெரும் தொழில் செய்பவர்கள் அல்லது சில்லரை வியாபாரம் செய்ய முடியாதவர்கள் இந்த நாணயங்களை மணிபர்சில் வைத்து அடுத்த வாரம் அதே நாணயங்களைக் கொண்டு மேற்கூறிய முறையில் பிள்ளையார் கோவிலில் செய்துவர தேவையில்லாத விரயங்கள் கட்டுப்படும்; பணவரவையும் அளிக்கும்.
திங்கட்கிழமைகளில் வருகின்ற பௌர்ணமியில் திருப்பதி சென்று வர, எல்லா இடர்ப்பாடுகளும் தீர்ந்து வளமான வாழ்க்கை கிட்டும்.
சந்திர காயத்ரியை தினந்தோறும் வருகின்ற சந்திர ஓரையில் கூறி வர, எல்லாவகையான செல்வங்களும் வந்தடையும்.
மனம் சார்ந்த தெளிவான முடிவெடுக்க முடியாதவர்கள் எல்லா பௌர்ணமிகளிலும் இரவு உணவை 24 நிமிடங்கள் நிலவொளியில் வைத்து பின்பு உண்டுவர உடல், மனம், பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல வளர்ச்சியும் தீர்வும் கிடைக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/monday=parigaram-t.jpg)