Advertisment

எதிரிகளை முறியடிக்கும் மோகினி கவசப் பிரயோகம்! -குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/mohini-armor-defeat-enemies-kumara-sivacharya

ன்றாட வாழ்க்கையில் பெண்கள் தொடர்பான பெயர்களில் "மோகினி' என்ற பெயரைப் பயன்படுத்துவதில்லை. காரணம், இது மோகினி பிசாசுவின் பெயர். இதை வைத்தால் பெண் பொல்லாதவளாகி "ருத்ர தாண்டவம்' ஆடுவாள் என்று பயப்படுவார்கள். மோகினி என்ற பதத்திற்கு ஈர்ப்பவள், மோகம் கொள்ளச் செய்பவள், காந்த சக்தி போன்று இழுப்பவள், தன்னிடம் வரவழைப்பவள் என்று பொருள்.

Advertisment

ஸ்ரீல-தா சகஸ்ரநாமத் துதியின் 562-ஆவது நாமாவளியில் "ஓம் ஸ்ரீம் மோஹின்யை நம:' என்ற வரி வருகிறது. இதன் உட்பொருள் பக்தர்களை மோகம் கொண்டு தன்வயப்படுத்துபவள் என்பது. "மோகி' என்ற பதத்திற்கு எதிலும் ஆசை கொள்பவள், விருப்பப்படுபவள் என்றும் உட்பொருள்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை "மோகனன், மோகனக் கண்ணன்' என்று ஸ்ரீமத் பாகவதத் துதிகளில் பொருளோடு கூறியிருப்பது, அவர் பெண்களிடம் விரும்பி விளையாடுவதால் என்பதாலேயே.

இந்த உலகில் அழகான பொருட்கள் பிறரால் கவரப்பட வேண்டும் என்பதற்காகவே படைக்கப்படுகின்றன. அழகான பொருட்கள் மகிழ்ச்சி தருபவை என்பதை, "ஊஸ்ங்ழ்ஹ் க்ஷங்ஹன்ற்ண்ச்ன்ப் ற்ட்ண்ய்ஞ்ள் ஹழ்ங் த்ர்ஹ் ச்ர்ழ் ங்ஸ்ங்ழ்' என்ற ஆங்கிலப் பழமொழியால் அறியலாம்.

Advertisment

ஸ்ரீல-தா சகஸ்ரநாமத்தின் 954-ஆம் நாமாவளியில் மிகவும் வித்தியாசமாக "ஸ்ரீசம்புமோகின்யை நம;' என்று அம்பிகை வர்ணிக்கப்படுகிறாள். சம்பு என்றால் சிவபெருமானைக் குறிக்கும். அந்த பரமேஸ்வரனிடம் மிகவும் பிரியம் உடையவள் என்று பொருள்.

லட்சுமி சகஸ்ரநாமம் கூறும் மோகினியின் பெருமை

மகாலட்சுமியைக் குறித்து ஆயிரம் திருநாமங்களால் இந்திரனால் உபாசிக்கப்பட்டது லட்சுமி சகஸ்ரநாமம். இப்பெயர்களில் 309-ஆம் நாமாவளியில் "மோகின்யை நம:' என்று சொல்- மகாலட்சுமியை வணங்குகிறார் நான்முகன். எனக்கு லக்ஷ்மி கடாட்சத்தையும் ஐஸ்வர்ய நிலைப்பாட்டையும் கவர்ந்திழுத்துத் தரவேண்டும் என்று வேண்டுதல் வைக்கப்படுகிறது. அடுத்து வரும் 409-ஆவது நாமாவளியில் "ஓம் த்ரைலோக்ய மோகின்யை நம:' என்று மகாலட்சுமி பிரார்த்தனை செய்யப்படுகிறாள். இதன் உண்மையான பொருள்- த்ரைலோக்ய- "மூன்று உலகங்களில

ன்றாட வாழ்க்கையில் பெண்கள் தொடர்பான பெயர்களில் "மோகினி' என்ற பெயரைப் பயன்படுத்துவதில்லை. காரணம், இது மோகினி பிசாசுவின் பெயர். இதை வைத்தால் பெண் பொல்லாதவளாகி "ருத்ர தாண்டவம்' ஆடுவாள் என்று பயப்படுவார்கள். மோகினி என்ற பதத்திற்கு ஈர்ப்பவள், மோகம் கொள்ளச் செய்பவள், காந்த சக்தி போன்று இழுப்பவள், தன்னிடம் வரவழைப்பவள் என்று பொருள்.

Advertisment

ஸ்ரீல-தா சகஸ்ரநாமத் துதியின் 562-ஆவது நாமாவளியில் "ஓம் ஸ்ரீம் மோஹின்யை நம:' என்ற வரி வருகிறது. இதன் உட்பொருள் பக்தர்களை மோகம் கொண்டு தன்வயப்படுத்துபவள் என்பது. "மோகி' என்ற பதத்திற்கு எதிலும் ஆசை கொள்பவள், விருப்பப்படுபவள் என்றும் உட்பொருள்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை "மோகனன், மோகனக் கண்ணன்' என்று ஸ்ரீமத் பாகவதத் துதிகளில் பொருளோடு கூறியிருப்பது, அவர் பெண்களிடம் விரும்பி விளையாடுவதால் என்பதாலேயே.

இந்த உலகில் அழகான பொருட்கள் பிறரால் கவரப்பட வேண்டும் என்பதற்காகவே படைக்கப்படுகின்றன. அழகான பொருட்கள் மகிழ்ச்சி தருபவை என்பதை, "ஊஸ்ங்ழ்ஹ் க்ஷங்ஹன்ற்ண்ச்ன்ப் ற்ட்ண்ய்ஞ்ள் ஹழ்ங் த்ர்ஹ் ச்ர்ழ் ங்ஸ்ங்ழ்' என்ற ஆங்கிலப் பழமொழியால் அறியலாம்.

Advertisment

ஸ்ரீல-தா சகஸ்ரநாமத்தின் 954-ஆம் நாமாவளியில் மிகவும் வித்தியாசமாக "ஸ்ரீசம்புமோகின்யை நம;' என்று அம்பிகை வர்ணிக்கப்படுகிறாள். சம்பு என்றால் சிவபெருமானைக் குறிக்கும். அந்த பரமேஸ்வரனிடம் மிகவும் பிரியம் உடையவள் என்று பொருள்.

லட்சுமி சகஸ்ரநாமம் கூறும் மோகினியின் பெருமை

மகாலட்சுமியைக் குறித்து ஆயிரம் திருநாமங்களால் இந்திரனால் உபாசிக்கப்பட்டது லட்சுமி சகஸ்ரநாமம். இப்பெயர்களில் 309-ஆம் நாமாவளியில் "மோகின்யை நம:' என்று சொல்- மகாலட்சுமியை வணங்குகிறார் நான்முகன். எனக்கு லக்ஷ்மி கடாட்சத்தையும் ஐஸ்வர்ய நிலைப்பாட்டையும் கவர்ந்திழுத்துத் தரவேண்டும் என்று வேண்டுதல் வைக்கப்படுகிறது. அடுத்து வரும் 409-ஆவது நாமாவளியில் "ஓம் த்ரைலோக்ய மோகின்யை நம:' என்று மகாலட்சுமி பிரார்த்தனை செய்யப்படுகிறாள். இதன் உண்மையான பொருள்- த்ரைலோக்ய- "மூன்று உலகங்களிலுமுள்ள செல்வங்களையும் மோகித்து வரச் செய்து தருவாய் தேவியே!' என்று விருப்பமுடன் செய்யப்படும் பிரார்த்தனையாகச் சொல்லப்பட்டது.

அசுரர்கள் கைகளில் அமிர்தம் சென்றபோது மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து அவர்களை மயங்கச் செய்து அதை மீட்டு வந்தார் என்கிறது விஷ்ணு பராக்கிரமம். இதேபோல ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகத் துதியில் ஏழாம் அநுவாகத்தில் ஆதிசங்கரர்,

"அம்பா சாஸ்வத ஆகமாதி

வினுதா ஆர்யா மகாதேவதா

யா ப்ரம்மாதி பிபீ-காந்த

ஜனனீ யாவை ஜகன் மோகினீ''

என்று வர்ணிப்பது குறிப்பிடத்தக்கது. "பிரம்மாதி தேவர்களுக்கும் வேதமறிந்த பண்டிதர்களுக்கும் இடையில் நிரந்தர சக்தியாக அவதாரமெடுத்த இவள், உலகத்தின் நிதி பாக்கியங்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை படைத்த மோகினியாக விளங்குகிறாள்'

என்கிறார். மோகினி தேவியின் கவசம் ஓர் அரிதான மந்திரப் பிரயோகம் என்பதை இதன்மூலம் அறிய வேண்டும். எதிரிகள், மோசடி செய்வோர், அமானுஷ்ய சக்திகளை முறியடிக்கும் உயர்ந்த கவசம் இது.

எதிரிகள், சூன்யாதி சக்திகளால் யாருக்கு பாதிப்பு வரும்?

* லாபாதிபன் 12-லும், 12-ஆம் அதிபதி இரண்டிலும், இரண்டுக்குடையவன் பலம் குறைந்தும் காணப்பட்டால், நண்பர்கள் எதிரியாகி சொத்துகள் சேதமாகும் நிலை உருவாகும்.

* 10-ஆம் வீட்டுக்குடையவன் 6, 8, 12-ஆம் வீடுகளில் அமர்ந்து அங்கே, பாவர் பார்த்தால், பொதுஜனங்களின் விரோதம் ஏற்பட்டு வெளிநாட்டுக்குச் சென்று வாழும் சூழ்நிலை உருவாகக்கூடும்.

* எட்டுக்குடையவன் சாரத்தில் ஒரு கிரகம் நின்று தசை நடத்தும்போது, 8-க்குடைய கிரகம் கோட்சாரத்தில் லக்னாதி பதியுடன் இணைகிறபோது சண்டை, வீண்பழி, அவமானம், பொய்க் குற்றச் சாட்டுகளில் சிக்குதல் ஆகிய துர்ப்பலன்கள் உண்டாகலாம்.

*12-ஆம் இடத்தில் சனி, 6-ஆம் இடத்தில் ராகு- கேது அமர்ந்திட பகைவர்களின் துன்புறுத்தலை அடிக்கடி சந்திக்க நேரிடும்.

* 9-ஆம் வீட்டில் 6-ஆம் இடத்தோன் ஏறி நிற்கும்போது, அப்பா வழியினரால் பகை, பூர்வீகச் சொத்துகள் நாசமடைதல், ஏமாற்றப் படுதல், வில்லங்கம்- இதன் பொருட்டு மருந்து, சூதுகளால் கவரப்படுதல் ஆகியன உண்டாகலாம்.

* ஆயுள் காரகனாம் சனி அஷ்டமத்துச் சனியாக வரும்போதும், கண்டச் சனி காலத்திலும், மேஷத்தில் சனி மறைவு காணும் ஜாதகர்கள்- உறவினர், நண்பர்களிடத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். இடுமருந்து, சூன்ய வைப்புகள்மூலம் இடர்கள் தந்து சொத்துகளைக் கவர்வார்கள்.

dd

* லக்னாதிபதி 6-ஆம் இடத்தில் சேர்ந்து இன்னொரு பாவர் பார்வைக்கு ஆளாகி, அவரது தசை நடக்கும் காலங்களில் பணியிட எதிரிகள் தொல்லை, விஷநோய், இடுமருந்து, சூன்யாதிகள், பழிக்குள் சிக்குதல் ஆகியவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டு, தொழில், வியாபாரம், தன் பணிகளைச் செய்ய இயலாத நிலைக்கு ஆளாவார்கள் என்பது ஜோதிட விதி.

இந்த ஏழு எடுகோள்களை மட்டும் ஜாதகத்தில் பார்த்தால் போதாது. பாதகாதிபதி தசை நடக்கும்போது, சனி- சூரியச் சேர்க்கை; சனி- செவ்வாய்; ராகு- சூரியன்; கேது- சனி; கேது, சனி, சூரியன் இவர்களது ஸ்தான பலன் அறிந்து பரிகாரம் தேடுதல் நலம். ஒரு சொல்மொழி உண்டு. பாதகாதிபதிகள்கூட சேர்ந்துவிடுவர். பங்காளிகள் சேரமாட்டார்களாம். உறவும் நட்பும் கைகோர்த்து நலம் தந்திட சரியான பரிகார வழிபாடு செய்வோம்.

மோகினி கவசம்

பிரம்ம தேவனைப் பார்த்து மகரிஷிகளும் தேவர்களும் கைகூப்பி வணங்கியவாறு, "ரகசியத்திலும் ரகசியமாக தங்கள் உள்ளத்தில் வைத்திருக்கும் மோகினி சக்தியின் பெரும் ஆற்றலைப் பற்றிக் கூறும் கவசத்தை எடுத்துக்கூறுங்கள்' என்றனர்.

"பகவன் சர்வ தர்மக்ஞ

ஸர்வாகம விசாரத/

கவசம் தேவதா யாஸ்து

க்ருபயா கதய ப்ரபோ//'

அதற்கு பிரம்மா,

"ச்ருணு தேவ மஹா ப்ராக்ஞ

சர்வ சாஸ்த்ர விசாரத/

கவசம் மோஹினீ தேவ்யா

மகாசித்தி தரம் பரம்//'

"மிகப்பெரிய சித்திகளைக் கொடுக்கும் சிறந்த பெட்டகத்தி-ருந்து வெளிவந்த பொக்கிஷமான மோகினி தேவியின் கவசத்தை தேவர்கள், மகரிஷிகளுக்கு மட்டுமல்ல; உலக மக்கள் அனைவரும் பயனடைந்திட இங்கே கூறுகிறேன்' என வெளியிடுகிறார்.

"மோஹினீ தேவதை எனது தலையைக் காக்கட்டும். நெற்றியையும், அவ்வாறே இரண்டு கண்களையும் காக்கட்டும். காமினி தேவதை புருவங்களையும், வாகீச்வரி முகத்தையும் காக்க வேண்டும். மங்கள ரூபிணியானவள் காதுகளையும், மகிஷமர்தனியானவள் கண்டத்தையும், அழகுக்கு இருப்பிடமான தேவதை புஜங் களையும், யசஸ்வினியானவள் கைகளையும் காக்கட்டும். கமலா எப்பொழுதும் நாபிதேகத்தையும் வயிற்றையும் காக்கட்டும்.

விஜயா ஹ்ருதயத்தையும், தேவர்களில் உயர்ந்தவனாம் இந்திரனால் பூஜை செய்யப்பட்ட தேவி இடுப்பையும் காக்கட்டும். மகாலயா கைகளையும், பக்த வத்சலா விரல்களையும், வைஷ்ணவி ஆடுசதை களையும், அவ்வாறே மாயை ஆண் பகுதி, குதபாகத்தையும் காக்கட்டும்.

தேவ ஜனனியானவள் கால்களையும், பாதாள வாசினியானவள் பாதங்களின் அடிப்பாகத்தையும் காக்கட்டும். கிழக்கில் மோஹினி காக்கட்டும். தெற்கில் சுகவாசினியும், மேற்கில் வாருணியும், வடக்கில் அம்ருதத்தில் வசிக்கும் தேவியும், ஈசான்யத்தில் ஈசானியும், தென்கிழக்கில் அக்னி தேவதையும், தென்மேற்கில் வாள் ஏந்திய தேவியும், வடமேற்கில் மிருகத்தை வாகனமாகக் கொண்டவளும், மேலே பிரும்மாணியும், கீழ்பாகத்தில் வைஷ்ணவியும், எதிர்ப்புறத்தில் இந்திராணியும், பின்பகுதியில் வராகியும், இடப்புறம் கௌபேரியும், வலப்புறம் மகாவிஷ்ணுவிடம் அன்பு கொண்டவளும் காக்கட்டும்.'

பதினெண் புராணங்களில் ஒன்றான பவிஷ்யோத்தர புராணத்தில் பிரம்மதேவன் கூறிய மோகினி கவசத்தின் தமிழ் ஆக்கத் தையும், இதன் மூலக்கவசம் என்று போற்றப் படும் வடநூல் அனுவாகப்பகுதி எனப் படுகிற துதியையும் நம் விருப்பம்போலப் படித்துப் பலன் பெறலாம். இக்கவசத்தை அங்க சுத்தம் செய்துகொண்டு, மண் அக-ல் நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீபம் ஏற்றிப்படிக்க வேண்டும்.

"ஓம் மோஹினீமே சிர:

பாது பாலம் நேத்ர யுகம் ததா

ப்ருவௌச காமினீ ரக்ஷேன்

முகம் வாகீஸ்வரீ ததா/

ச்ரோத்ரே மங்கள ரூபாச

கண்டம் மகிஷ மர்தினீ

புஜௌ சௌந்தர்ய நிலயா

ஹஸ்தௌ ரக்ஷேத் யசஸ்விநீ//

ஸர்வதா நாபிதே ஸேது

கமலா பாது சோதரம்

விஜயா ஹ்ருதயம் பாது

கடிம் ஸுர வரார்ச்சிதா/

கரௌ மஹாலயா ரக்ஷே

தங்குளீர் பக்தவத்ஸலா

வைஷ்ணவீ பாது ஜங்கேச

மாயாமேட்ரம் குதம் ததா//

பாதௌச தேவஜனனீ

தலம் பாதாள வாசினீ

பூர்வேது மோஹினீ ரக்ஷேத்

தக்ஷினே சுகதாயினீ/

பஸ்சிமே வாருணீ ரக்ஷேத்

உத்தரே அம்ருதவாஸினீ

ஈசான்யம் பாதுசே சானீ

ஆக்னேயாம் அக்னி தேவதா//

நைர்ருத்யாம் கட்கத்ருக் தேவீ

வாயவ்யாம் ம்ருஹவாஹினீ

ஊர்த்வம் ப்ரும்மாணீமே ரக்ஷேத்

அதஸ்தாத் வைஷ்ணவீ ததா

அக்ரத பாதுசேந்த்ராணீ வராகீ

ப்ருஷ்டதஸ் ததா

கௌபேரீ சோத்தரே பாது

தக்ஷிணே விஷ்ணு வல்லபா//

இதம் கவச மஜ்ஞாத்வா

யோபஜேன் மோஹினீம் நர:/

வ்ருதா ச்ரமோ பவேத் தஸ்ய

ந மந்த்ர: சித்திதாயக://'

வழிபடும் முறையும் பலன்களும்

மோகினி என்பவள் அதிக தெய்வத் தன்மை கொண்ட அபூர்வமான சக்தி தேவி. வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி இரவு நேரங்களில் தீபமேற்றி இக்கவசத்தை மூன்றுமுறை படித்து, பூர்ஜ பத்திரம் தாமிரத்தகட்டில் "மூலம்' எழுதி, 108 முறை ஜெபித்து தாயத்தாகக் கட்டிக் கொள்ளலாம். எதிரிகளால் தொல்லைகளுக்கு ஆளாகுபவர்கள், ஆயுதங்களால் தாக்கப்படுவோம் என்று அஞ்சுபவர்கள் இக்கவசத்தை நாகாஸ்திர மந்திரம் போலப் பயன்படுத்தலாம்; பூத வேதாளங்கள், பிரம்ம ராட்சசர்கள், பில்- சூன்யம், அமானுஷ்ய சக்திகளினால் தாக்கம் கொண்டவர்கள், மோகினி மந்திரப் பிரயோகத்தால் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடுவார்கள்.

பலாச மரம் என்ற புரசு மரத்தடியில் அமர்ந்து மூன்றாயிரம்முறை ஜெபிப்பதால் எதிரிகள் அலறி ஓடுவர். ஏமாற்றிவிட்டுச் செல்வோர் இந்த மோகினி பிரயோகத்தால் கட்டுப்பட்டு வருவர். ஆயிரம்முறை ஜெபம் செய்தால் ஒரு எளிய விருப்பம் கைகூடும். எருக்கன் செடி அருகில் அமர்ந்து மூன்றுமுறை ஜெபித்து தினமும் பிராமண போஜனம் தருவோருக்கு மோகினியே மகாலட்சுமி தேவியை அழைத்துவந்து விட்டுச்செல்வாள் என்கிறது இதன் பலன் கூறும் விதி.

மோகினி என்பவள் ஸ்ரீசக்கர ஆவரணங் களில் வரும் உபதேவதைகளில் ஒரு பெண் சக்தியே.

ஆலயங்களில் பிரம்மோற்சவம் நடத்தப்படும்போது மகாவிஷ்ணு, சிவன், அம்பிகை, முருகன், உற்சவ மூர்த்திகளுக்கு, ஆகம விதிக்கு உட்பட்டு மோகினி அலங்கார தரிசன சேவை இன்றும் நடத்தப்படுகிறது.

சக்தி தேவியின் அம்சமான மோகினியும் சாந்த சொரூபமான அம்பிகையே. நாம் கவசம் சொல்- அழைத்து வழிபட்டால் குலவிளக்காக அமர்ந்து குடும்பத்தைக் காத்து வாழவைப்பாள் என்பது உறுதி.

செல்: 91765 39026

bala250621
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe