பிருகு மகரிஷியின் மைந்தன் சுக்கிரன். (பெண் வடிவம்). அம்பிகை, மகாலட்சுமி அம்சம் உடையவர். இயற்கை சுபர். இறந்தவர்களை எழச்செய்யும் அமிர்த சஞ்சீவியை வைத்திருப்பவர்.

பிருகு மகரிஷிக்கும் பூலோமசை என்பவருக்கும் புதல்வனாகப் பிறந்த இவர், நாகரீகப் பொருட்களிலும் நறுமண வஸ்த்துகளிலும் வாசம் செய்பவர். மழை கிரகம்.

சுக்கிரன் சிவபெருமானின் திருவருளைப் பெற எண்ணி சிவலிங்கத்தை வைத்து பல ஆண்டுகள் பூஜைசெய்து வந்தார். சிவனருளால் தனது ஐம்புலன் களையும் அடக்கி, தவ வலிமையால் அவர் அருளைப்பெற்று அமிர்த சஞ்சீவினி என்ற மந்திரத்தை சிவனிடம் உபதேசம் பெற்றார். இந்த மந்திரத்தை சுக்கிரன் அறிந்திருப்பதை அறிந்து அசுரர்கள் அன்றுமுதல் அசுர குலத்திற்கு குருவாக ஏற்றுக்கொண்டார்கள்.

தேவர்களுடன் போரி டும்போது பல அசுரர்கள் இறந்துவிடுவார்கள். அசுர குருவின் அருளால் அமிர்த சூழ்வினையைக்கொண்டு மீண்டும் அவர்களை எழச்செய்து விடு வார்கள்.

Advertisment

அமிர்த சஞ்சீவினியால் தேவர்கள் படை குறைவதை அறிந்த தேவர் கள் சிவபெரு மானிடம் சென்று முறையிட்டனர். சுக்கிரனை வரச்சொல்லி சிவன் அவரை விழுங்கினார். பல காலம் சிவன் வயிற்றுக்குள் யோகநிலையில் இருந்தார். பிறகு தேவர்களின் வேண்டு கோளின்படி சிவபெருமான் சுக்கிரன் சுக்கிலமாகி, தூய வெண்மை நிறத்துடன் அவரை வெளியே அனுப்பி ஆசி கூறினார்; அதனால் சுக்கிரன் என்ற பெயர் வரலாயிற்று. இப்படி நம் புரணாங்கள் கூறுகின்றன.

கோட்சாரத்தில் 1, 2, 3, 4, 5, 8, 9, 11-ல் மற்றும் ஜெனனத்தில் இருக்கும்போதும் பயன் தருபவர். கரு உற்பத்தியில் முதலாம் மாதம் சுக்கிரன் அதிபதியாகி, பின் சுக்கிலம், சுரோணிதம் இரண்டறக் கலந்து கரு வனர அசுர குருவின் ஆதிக்கம் அங்கே பரிணமிக்கும். மீன ராசியில் சுக்கிரன் இருந்தால் உச்சம். ரிஷபம், துலாத்தில் சுக்கிரன் இருந்தால் ஆட்சி. மிதுனம், மகரம், கும்பத்தில் இருந்தால் நட்பு. மேஷம், தனுசு, விருச்சிகம் சமம். கடகம், சிம்மம் பகை.

Advertisment

gg

பஞ்சபூதங்களில் நீருக்கு அதிபதி. மனைவி சுகிர்த்தி. மகன் இந்திர தனுசு. வைரத்திற்கு அதிபதி. இவரை ஆங்கிலத்தில் வீனஸ் என்று சொல்வார்கள். கவர்ச்சியான ஆடை, அணிகலன்கள், அறுசுவை உணவுகள், அழகு பொருந்திய அம்சங்களை வைத்திருப்பவர். தாம்பத்திய இன்பத்திற்கு முக்கியமானவர். பஞ்ச உலோகத்தில் வெள்ளி, எண்களில் 6-ஆம் எண்ணைப் பெற்றிருப்பவர். எனது அஸ்ட்ரோ நியுமராலஜி ஆய்வின்படி 15, 24, 51, 60, 69, 87 ஆகிய எண்களில் பெயர், நிறுவனம் அமைந்தால் அதிர்ஷ்டமே. கையில் கட்டை விரலுக்குக் கீழே இருப்பது சுக்கிரன் அம்சம். வெண்மை நிற புறபங்கள், வெண்தாமரை, வெண்மொச்சை இவருக்குரியது. கருடன் அம்சம் கொண்டவர். நீர், வெண்மை நிற வஸ்த் துகளுக்கு அதிபதியாக இருப்பவர். அதனால்தான் உப்பை லட்சுமியாக நினைக்கி றோம். இலையில் முதலில் உப்பை வைக்கிறோம்.

அசுரர்களுக்கு இவர் குருவாக இருப்பதால் இவரை அசுரகுரு என்று அழைப்பதுண்டு. அத்தி சமித்து; விருட்சம் செண்பகம், வெண் நாவல் மரம்; ஆடை வெண்பட்டு; வடிவம் ஐங்கோணம்; நிவேத்தியம் வெண்பொங்கல், நெய் பொங்கல்; வாஸ்து சாஸ்த்திரத்தில் தென் கிழக்கு திசை (அக்கினி உள்ள பகுதி).

இவர் வசமுள்ள பொருட்கள்: அழகுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, சொகுசுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் விற்பனை, கலைப் பொருட்கள் விற்பனை, சுவையான உணவுப் பொருட்கள் விற்பனை, பொன், வெள்ளி மற்றும் வைர வியாபாரம், கால்நடைகள், குதிரை, யானை, வெண்மைநிறப் பிராணிகள். இயல் இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைத் தொழில்கள், கவிதை எழுதுதல், பாட்டு பாடுதல், நடிப்பத் தொழில், துணிமணிகள் வியாபாரம், கட்டில் மெத்தை, சங்கீதக் கருவிகள். அழகு நிலையம் வைத்தல், சுற்றுலாத்துறை, கேளிக்கை விடுதி வைத்தல், வட்டித் தொழில், பழரசங்கள், நிதி அமைச்சர்கள், கணக்கர்கள், தணிக்கையாளர்கள், ரத்தினம் பட்டை தீட்டும் தொழில் செய்பவர்கள்.

சுக்கிரனின் யோகங்களும் அதற்குண்டான பலன்களும் மாளவ்ய யோகம்: கலைத்துறை, ஓட்டல், லக்ஸரி, டிரிங்ஸ் அயிட்டங்கள், ஜுவல்லரி, பத்திரிகை, மீடியா, சரீரத்தை சரிப்படுத்தும் தொழில்கள்.

மருத யோகம்: பணம் புழங்கும் துறைகள், ஆடை, அணிமணிகள், ஆலோசனைகள், சுப காரிய தொடர்புடையவை, சுப வஸ்த்துக்கள்.

குரு சுக்கிர யோகம்: இயல், இசை, வீட்டிற்குத் தேவையான உபகரணங்கள், டெக்ஸ்டைல்ஸ், காஸ்மெட்டிக்ஸ், நவநாகரீகப் பொருட்கள், நறுமணங்கள்.

புத சுக்கிர யோகம்: பத்திரிகை மீடியா, பலபொருள் அங்காடி, கவர்ச்சி நிறுவனம், பெண்களுக்கு உண்டான உபகரணங்கள், வெண்மை நிற வஸ்த்துகள், போஷாக்கான உணவுகள், பொழுது போக்கும் அம்சம்.

லட்சுமி யோகம்: சொகுசு, ஹெர்பல் தொழில்கள்.

பிருகுமங்கள யோகம்: பூமி, பொன், பொருள், பைனான்ஸ்.

பரணி, பூரம், பூராடம் இந்த நட்சத்திரத் தில் 2-ஆம் பாதம் புஷ்கராம்ச நட்சத்திரங்கள். இதில் பிறந்தவர்கள் யோகசாலிகள். தான் பிறந்ததன் பலனை ஏதேனுமொரு வகையில் தன் பெயர் சொல்கிறமாதிரி ஒரு சாதனை, பரிசு, பாராட்டு இருக்கும்.

சுக்கிரனை வசீகரிக்கும் வழிமுறைகள்

ஐங்கோண தேக்குப் பலகை அல்லது சுத்த வெண்மை ஆடை, வெண்பட்டு.வெள்ளிப் பாத்திரத்தில் நிவேத்தியப் பொருட்கள், பழங்கள், பால்பாயாசம். நறுமணப் பொருட்கள் கொண்ட வஸ்துகள், வாசனை திரவியங்கள், தாமரை, மல்லிகை, வெண்மை நிற புஷ்பங்கள், துளசி, வில்வம். வலம்புரிச் சங்கு.

இவருக்குரிய ஆடியோ, வீடியோ கேட்பது, பார்ப்பது நன்று.

உடல் அமைப்பில் சுக்கிரன் முகம், கண்ணம், இடைப்பகுதி, மர்ம உறுப்பு.கள்.

காலபுருஷ தத்துவத்தில் சுக்கிரன் 2, 7-ஆம் வீடுகளுக்கு இயற்கையிலேயே அதிபதி. இதனால் ஒருவருக்கு குடும்பம், பணம், ஆரம்பக் கல்வி அந்தஸ்து, இணைந்த முயற்சி, இல்வாழ்க்கை இன்பம், வஸ்த்திராபரண சேர்க்கை, நல்லதொரு வாழ்க்கை போன்றவற்றை வழங்குபவர். பண கிரகமாக இவர் வருவதால்தான் வெள்ளிக்கிழமையில் பணம் கொடுப்பதில்லை. அந்தநாளில் பணம், ஆபரணம் யாருக்கும் தருவதில்லை.

சுக்கிர தசை

எல்லா கிரக தசைகளைவிட இவர் தசைதான் அதிக வருடம். ஒருவர் நன்றாக இருக்கிறார். என்றால் அவருக்கு சுக்கிர தசை அடிக்கிறது என்று பேச்சுக்கு சொல்வோம். உண்மையிலேயே சிலருக்கு சுக்கிர தசை நடக்கலாம் அல்லது வேறு தசை நடக்கலாம். ஒருவர் சௌகரியமாக பணம், பொருள், பதவியுடன் இருந்தால் சுக்கிரனை காரணமாகக் சொல்வோம், ஆக மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவர்.

சுக்கிரனின் முக்கிய சிறப்பு

எல்லா கிரகங்களும் நீசசம் பெற்றபிறகே உச்சம்பெறும். இவர் ஒருவர்தான் உச்சம் பெற்றி பிறகே நீசமாவார்.

இவரை வழிபட உகந்த நாட்கள்: வெள்ளிக் கிழமை. பரணி, பூரம், பூராடம், திதிகளில் திரிதியை, பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி. சுக்கிர ஓரை கௌரி பஞ்சாங்கத்தில் அமிர்தம் சுகம்.

ரத்தினம்- ஏதேனும் ஒரு வெள்ளி ஆபரணம். ஆணோ- பெண்ணோ அணியவேண்டும். வெள்ளி அணிவது ஒரு கவர்ச்சியைத் தரும். வெள்ளித் தட்டில், டம்ளரில் உணவு, பால் அருந்துவது உகந்ததே. குறிப்பாக வாசனைப் பொருட்களை பாலில் போட்டு 15 நிமிடம் வெள்ளி டம்ளரில் வைக்கவேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளிச் சங்கில் உணவு ஊட்டுவார்கள். வெள்ளிக் கயிறு கட்டுவார் கள். அல்லது ஏதேனும் ஒரு உபகரணத்தை அணிவிப்பார்கள்.

சுக்கிரன் தலங்கள், வழிபாடுகள்

ஸ்ரீரங்கம், திருநாவலூர், கஞ்சனூர், திரு ஆணைக்கா, அஷ்டலட்சுமி, மகாலட்சுமி தலங்கள், திருத்தணி, திருநின்றவூர் லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், ஆகர்ஷண பைரவர், பைரவி உள்ள தலங்கள். அதன் வரிசையில் இப்போது உடையாளுர்.

சுக்கிரனின் காயத்திரி, போற்றி வழிபாடுகள், லட்சுமி காயத்திரி, போற்றி, லலிதா சகஸ்ர நாமம், அம்பிகை ராஜராஜேஸ்வரி, நாமக்கல் ஸ்ரீ சக்கர மந்திர பாராயணம், கருடாழ்வார் துதி, விஷ்ணு- லட்சுமி ஷட்கம், அஷ்டகம், ஆகாஷண பைரவர் ஸ்லோகங்கள், சஷ்டி கவசங்கள் உள்ளிட்ட வழிபாடுகளை எல்லாம் தினம் அல்லது குறிப்பாக வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அல்லது மேலே சொன்ன நாள், நேரம், திதி, நட்சத்திரம், ஓரை கௌரி குறிப்பிட்ட காலங்களில் படிப்ப தால் சுக்கிரன் அருளால் ஆண்- பெண் யாராக இருந்தாலும் நல்லதொரு வாழ்க்கை வசதி வாய்ப்புகள் அமைந்திடப் பெறுவீர்கள்.

செல்: 94431 37989