தமிழ் மாதங்களை உத்தராயனம், தட்சிணாயனம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். தைமுதல் ஆனிவரையான ஆறு மாதங்களை உத்தராயனம் எனவும், ஆடிமுதல் மார்கழிவரையான ஆறு மாதங்களை தட்சிணாயன காலம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில், சூரியனிலிருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாகக் கருதப் படுகிறது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கி, அம்மன் வழிபட்டை மேம்படுத்திக்கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. அம்மனுக்கு வேப்பிலை சாற்றி வழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும் ஆடி மாதத் தின் சிறப்பாகும்.
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் இருப்பார். கடகம் சந்திரன் வீடு. பெண் ராசி. பெண் வீட்டில் ஆண் கிரகமான சூரியன் நிற்பதால், ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்ப தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆடி மாதத்தில் புதிதாகத் துளிர்விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் உண்டு. மேலும், எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவான கூழ் சாப் பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ஆடி மாதம் பல்வேறு வழிபாட்டிற் குரிய விஷேச தினங்களைக் கொண்ட மாதம் என்பதால், வீடுகளில் சுபநிகழ்வு களைக் குறைத்து, அம்மன் வழி பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் முக்கிய விழாக் களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆடி வெள்ளி
நடப்பு விகாரி வருடம், ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. பொதுவாகவே, வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட் களாகும். இதனோடு தட்சிணாயனத்துக் குரிய சிறப்பும் சேருவதால், ஆடி மாதத் தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச் சிறப்புடையவையாகக் கருதப்படு கின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப்பெண்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதமிருக்க வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு வளையல்சாற்றி அந்த வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள்பூசிக் குளித்து மகாலட்சு மியை வழிபட்டால் வீட்டில் செல்வம்சேரும். மாங்கல்ய பலம் கூடும். பெண்கள் துளசி பூஜை செய்துவந்தால் நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை வெள்ளியில் வீட்டில் சிறப்புப் பூஜைகள்செய்து பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தை களை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து, அலங் கரித்து, அம்மனை ஆவாகனம்செய்து, பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட, வீட்டில் சுபகாரியங்கள் தங்குதடை யின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதாசகஸ்ர நாமம் பாராயணம்செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச்செய்ய வேண்டும்.
சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அறுகம் புல்லால் விநாயகரைப் பூஜிக்க வேண்டும். கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். காரியத்தடை விலகும்.
ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை
31-7-2019, ஆடி -15, புதன்கிழமையன்று அமாவாசை. ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்குப் பிதுர்க்கடமைகளைச் செய்தால், ஆண்டுமுழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றைத் தரும் வலிமை படைத்தவர். மனதுக்கு அதிபதி யான சந்திரன் மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றைத் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகிற சூரிய, சந்திரர்களை தாய்- தந்தை இல்லாதவர்கள் ஆடி அமாவாசையன்று வழிபடுவது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தது.
அமாவாசை நாட்களில் பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்சவிருத்தி இன்மை போன்றவை ஏற்படும். முன்னோர் களுக்கு ஆடி அமாவாசையன்று சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன் நிவர்த்தி, வம்சவிருத்தி ஏற்படும்.
ஆடி அமாவாசையன்று கடல், நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதிகொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன்மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் நடக்கும்.
3-8-2019, ஆடி- 18, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு
ஆடிப்பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்தத் திதியில் வந்தாலும் புதிய முயற்சிகள் வெற்றிதரும்.
ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழைபெய்து காவிரியில் புதுவெள்ளம் பெருக் கெடுத்து ஓடிவரும். இதைத்தான் ஆடிப் பெருக்கு என கொண்டாடுகிறார்கள். அன்று நதிகளுக்கு சீர்செய்து வணங்க வேண்டும். நதிக் கரையிலுள்ள கோவில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடுசெய்தால் சிறப்பான கணவர் அமைவார். சுமங்கலிப் பெண்கள் வழிபட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்தகன்னி களை வழிபட்டால் திருமணத்தடை அகலும்.
ஜனனகால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் ஆடிப்பெருக்கன்று புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும்.
அம்மனுக்குரிய விசேஷ தினங்களுள் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பதால், ஆண்டாளை நினைத்து திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டுப் பாசுரங்கள் பாடினால் திருமணத்தடை அகலும். மனம் விரும்பும் மணாளனை அடையலாம். ஜனன கால ஜாதகத் தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள் ஆடிப்பூர நாளில் அம்பிகையை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும்.
4-8-2019, ஆடி- 19, ஞாயிறு, நாகசதுர்த்தி ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி நாளில் நாகசதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பித்ரு தோஷம் இருப்பவர்களுக்குக்கூட பரிகாரம் செய்து சரிசெய்துவிடமுடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரம் பலிப்பது குறைவு. ஜாதகரீதியாக இருக்கும் தோஷத்தைவிடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் ஏழு ஜென்மங் களுக்கும் தொடரும். கடுமையான தோஷத் திலிருந்து விடுபடுவதற்குகந்த வழிபாடு நாகசதுர்த்தி பூஜை மற்றும் விரதம். நாகதோஷம் யாருக்கெல்லாம் இருக் கிறதோ, அவர்களுக்கெல்லாம், அடிக்கடி நாகம் தென்படும். நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் மிகவும் முக்கியமானது. நாகதோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத்தடை ஏற்பட்டுக்கொண்டிருக்கும். சில கணவன்- மனைவி பிரிந்துவாழ்வார்கள் அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது அல்லது உடல் ஊனமான குழந்தை பிறக்கும். ஒரு சிலருக்கு தீராத நோய், பரம்பரை வியாதி, குடும் பத்தினர் ஒருவரையொருவர் பிரிந்துவாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுப வித்துவருவர். நாகசதுர்த்தி விரதத்தைக் கணவர், குழந்தைகள் நலனுக்காகவும் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டும்.
கடுமையான நாகதோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகர்சிலை பிரதிஷ்டைசெய்து, அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும். மற்றவர்கள் அரசமரத்தடியிலுள்ள சர்ப்ப விக்ரகத்துக்கு பால், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும். பால் ஊற்றிவிட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம்செய்ய வேண்டும்.
அதன்பிறகு நாகர்சிலைக்கு தலைமுதல் வால் வரை மஞ்சள்பூசி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகள் அணிவித்து, பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்சதையுடன் சர்க்கரைப் பொங்கல், துள்ளு மாவு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூஜைசெய்தால் குடும்பத்தில் நிம்மதி பெருகும். அத்துடன் கணவர் மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும். தொழில் வளர்ச்சி உண்டாகும், நல்ல வேலை கிட்டும். கடன் தொல்லை குறையும்.
ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்துக் கண்டம் நீங்கும். நாகதோஷத்தால் தடைப்பட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும் 5-8-2019, ஆடி- 20, திங்கள்கிழமை, கருட பஞ்சமி அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதி அன்று கருட பஞ்சமியும், நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.
மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பவர்கள் தாங்கள்செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். கருடன் மகாபலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங் களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' எனப் போற்றப்படுபவரே கருடாழ்வார்.
மகாவிஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷ னையும், அவருடைய வாகனமாகிய கருடாழ் வாரையும் வழிபட சிறந்த நாள் நாக, கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப்போல பலசாலியான, புத்திசாலியான ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர். பெண்கள் கருட பஞ்சமியன்று கௌரியம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பிருந்து பூஜைசெய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில் கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனிக்கிழமை, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று கருடனை வழிபட்டுவர நாகதோஷம் விலகும். கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருடவழிபாடு செய்தால் தீர்க்கமுடியாத கோர்ட் கேஸ், பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்க் கொல்லி நோயான கேன்சரால் பாதிக் கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப் பட்டவர்கள் கீழ்க்காணும் சுலோகத்தை 108 முறை சொல்லி, கருடரை வழிபட தோஷங்களிலிருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ ஆதிசேஷ ப்ரசோதயாத்.’
கருட காயத்ரி
‘தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.’
விபத்து, நோய் நீக்கும் மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாகவும் திகழும் கருட பகவானுக்கு கருட ஜெயந்தி, கருட பஞ்சமி அன்று கருடஹோமம் செய்வது நலம்.
9-8-2019, ஆடி- 24, வெள்ளிக்கிழமை, வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி தேவிக்காக இருக்கும் சிறப் பான விரதம் வரலட்சுமி விரதம். வரலட்சுமி மகாவிஷ்ணுவின் துணைவி. மகாலட்சுமியாக வரங்களை அள்ளித்தருவதால் 'வரலட்சுமி' என அழைக்கப்படுகிறாள். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை நம்வீட்டுக்கு வரவேற்கும் நாள் வரலட்சுமி நோன்பு ஆகும். இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்களும், திருமணமாகாத கன்னிப்பெண்களும் கடைப்பிடிக்கலாம்.
வரலட்சுமி விரதத்தை ஒவ்வோர் ஆண்டும் தவறாது கடைப்பிடித்துவரும் வீட்டில் வறுமை, திருமணத்தடை இருக்காது. திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும். சில குடும்பத்தில் வரலட்சுமி பூஜைசெய்யும் வழக்கம் கிடையாது. அத்தகையவர்கள் பூஜைசெய்யும் வழக்கமுள்ளவர்களின் வீட்டிற்குச் சென்று பூஜையில் கலந்துகொள்ளலாம்.
விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம்செய்து, பசுவின் கோமியம் தெளித்து, மாவிலைத் தோரணம் கட்டவேண்டும். பூஜையறையில் பலகையை இட்டு, அதன்மீது மாக்கோலம் இடவேண்டும். மகாலட்சுமியின் படம்வைத்து கோலத்திற்கு நடுவில் நெல்பரப்பி, அதன்மீது தட்டில் கலசம்வைத்து, பட்டுப்பாவாடை, நகைகள் போட்டு, மஞ்சள், குங்குமமிட்டு, பூச்சூடி, கும்பத்தை அலங்காரம்செய்து மகாலட்சுமிக்கு வரவேற்பு கொடுத்து, வீட்டிற்கு அழைத்து கலசத்தில் ஆவாகனம் செய்யவேண்டும்.
மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பு நாளில், நோன்புச் சரடை கும்பத்தோடு வைத்து, பஞ்சமுக நெய் விளக்கேற்றி, கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், அன்னம், நெய் ஊற்றிய சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்ற நிவேதனப் பொருட்கள் படைக்கவேண்டும். வரலட்சுமியின்முன் வைத்திருந்த நோன்புச்சரடை மஞ்சள், குங்குமமிட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். வரலட்சுமியிடம் வேண்டிய வரத்தைக்கேட்டு, வரலட்சுமியின் ஸ்தோத்திரங்களைக் கூறி, தூபதீப ஆராதனைகளைச் செய்து வழிபடவேண்டும்.
பூஜையின்போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் படிக்கவேண்டும். சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக்கயிற்றை வைத்துப் பூஜைசெய்து அதனை அணிந்துகொள்ள வேண்டும்.
பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷமுள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
பூஜைக்கு வயதான சுமங்கலிப்பெண்களை அழைத்து, உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசிபெறுவது மிகச் சிறப்பு. மறுநாள் புனர்பூஜைசெய்து விரதம் முடிக்கவேண்டும்.
இந்த பூஜையை ஆண்டுதோறும் தொடர்ந்து செய்துவந்தால் லட்சுமி, இல்லம் தேடிவருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காலமாகும். லட்சுமிக் கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
செல்: 98652 20406