மூன்றாமிட யோகச் சனி
ஏழரைச்சனியான 12, 1, 2-ஆம் இடங் களையடுத்து சனி ராசிக்கு மூன்றாமிடத் திற்குப் பெயர்ச்சியாவார். மூன்றாமிட சனி தன் பார்வையால் ராசிக்கு ஐந்து, ஒன்பது, பன்னிரண்டாமிடத்தைப் பார்வையிடுவார். ஏழரைச்சனியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதலான பல நன்மைகள் நடைபெறும். கர்வம் அழிந்திருக்கும். பிரிந்தவர் கூடுவர். தைரியம் பிறக்கும். மனதிற்கு சந்தோஷமான பல விஷயங்கள் நடைபெற்று தன்னம்பிக்கை வந்துவிடும். உண்மை வெளிவந்து போற்றப்படுவர். தண்டனைகளிலிருந்து தப்பிப்பர். நோயிலிருந்து விடுபடுவர். எதிரி நண்பனாவார் அல்லது எதிரி அழிந்துபோவார். சகோதர உறவு பலப்படும். தவறை உணர்ந்து உதவிக்கரம் நீட்டுவர். நம்பிக்கை தரும் நல்ல விஷயங்கள் தானாக நடக்கும். "இதற்குமேல்கஷ்டப்பட என்ன இருக்கிறது. அந்தக் காலத்தையே கடந்து வந்துவிட்டோம்' என எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழும் துணிவு பிறந்திருக்கும். புத்திரர்களுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்வர். புத்திரர்களால் லாபம்பெறுவர். பூர்வீக லாபம், சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து சுயவாழ்வைத் தொடங்குவர்.
குலதெய்வப் பூஜை, குலதெய்வக் கோவில் புனரமைப்பு, கும்பாபிஷேகம் நடந்தும் நல்ல சூழல் உருவாகும். பங்காளிகள் ஒன்றுசேர்ந்து நல்ல காரியத்தை நடத்திவைப்பர். உதவிகள் பெறுவதும், பிறருக்கு உதவி செய்யும் காலமாகவும் இருக்கும். தந்தை, தந்தை வழியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து தந்தைக்கு லாபம், தந்தையால் லாபம் கிடைக்கும். அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் காலம். விரயங்கள் குறைந்து தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் தானாக இனிதே நிகழும். வெளிநாடுகளில் இருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவர். வாராக் கடன் வந்துசேரும். எதிர்பாராத வகையில் நன்மைகள் தேடிவந்து நிம்மதியான வாழ்க்கை, நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்கும். நமக்கு நல்லதே நடக்காதென நொந்தவர்களுக்கு, நமக்குதான் நல்லது நடக்கிறதா எனும் அளவுக்கு நம்பமுடியாத நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.
அர்த்தாஷ்டமச் சனி
அஷ்டமம் என்னும் எட்டில் பாதி அர்த்தாஷ்டமமான நான்கில் சனி நின்று அர்த்தாஷ்டமச் சனியாக பலன் தருவார். ராசிக்கு நான்கில் நிற்கும் சனி, ராசிக்கு ஆறு, பத்து, ஒன்றாமிடத்தைப் பார்வையிடுவார். தாயாருக்கு பாதிப்பு, தாயாரால் பாதிப்பு, அவமானம், தாய்வழி உறவுகளுடன் பாதிப்புண்டாகும். உறவினர் நன்றி மறந்த வர்களாக செயல்படுவர். நம் கஷ்டம் கண்டு சந்தோஷப்படுவர். உறவினரின் உதவி ஒத்தாசை கிடைக்காமல் ஆதரவற்ற நிலையே உருவாகும். எங்கும் எதிலும் முடக்கம்- நிலம், வீடு, வாகனங்கள்மூலம் நஷ்டம், முடக்கம் உருவாகும். வீண் செலவுகள் தொடர்ந்து ஏற்படும். நிம்மதியற்ற நிலையில் நாட்கள் நகர்வதே தெரியாமல் அலைந்து திரிய நேரும். தேச சஞ்சாரம் மன ஆறுதல் தரும். "வேறுவழி?' என நடப்பதைக் கடந்துபோக நேரும். மாற்ற முய்ற்சித்தாலும் பெரிய நன்மை வராது. பலவித முயற்சிகளும் பாதியில் நின்று பாடாய்ப் படுத்தும். எதிர்பாராதவர்கள் எதிரியாக மாறுவர். சுகம் என்பதைய
மூன்றாமிட யோகச் சனி
ஏழரைச்சனியான 12, 1, 2-ஆம் இடங் களையடுத்து சனி ராசிக்கு மூன்றாமிடத் திற்குப் பெயர்ச்சியாவார். மூன்றாமிட சனி தன் பார்வையால் ராசிக்கு ஐந்து, ஒன்பது, பன்னிரண்டாமிடத்தைப் பார்வையிடுவார். ஏழரைச்சனியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதலான பல நன்மைகள் நடைபெறும். கர்வம் அழிந்திருக்கும். பிரிந்தவர் கூடுவர். தைரியம் பிறக்கும். மனதிற்கு சந்தோஷமான பல விஷயங்கள் நடைபெற்று தன்னம்பிக்கை வந்துவிடும். உண்மை வெளிவந்து போற்றப்படுவர். தண்டனைகளிலிருந்து தப்பிப்பர். நோயிலிருந்து விடுபடுவர். எதிரி நண்பனாவார் அல்லது எதிரி அழிந்துபோவார். சகோதர உறவு பலப்படும். தவறை உணர்ந்து உதவிக்கரம் நீட்டுவர். நம்பிக்கை தரும் நல்ல விஷயங்கள் தானாக நடக்கும். "இதற்குமேல்கஷ்டப்பட என்ன இருக்கிறது. அந்தக் காலத்தையே கடந்து வந்துவிட்டோம்' என எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழும் துணிவு பிறந்திருக்கும். புத்திரர்களுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்வர். புத்திரர்களால் லாபம்பெறுவர். பூர்வீக லாபம், சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து சுயவாழ்வைத் தொடங்குவர்.
குலதெய்வப் பூஜை, குலதெய்வக் கோவில் புனரமைப்பு, கும்பாபிஷேகம் நடந்தும் நல்ல சூழல் உருவாகும். பங்காளிகள் ஒன்றுசேர்ந்து நல்ல காரியத்தை நடத்திவைப்பர். உதவிகள் பெறுவதும், பிறருக்கு உதவி செய்யும் காலமாகவும் இருக்கும். தந்தை, தந்தை வழியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து தந்தைக்கு லாபம், தந்தையால் லாபம் கிடைக்கும். அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் காலம். விரயங்கள் குறைந்து தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் தானாக இனிதே நிகழும். வெளிநாடுகளில் இருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவர். வாராக் கடன் வந்துசேரும். எதிர்பாராத வகையில் நன்மைகள் தேடிவந்து நிம்மதியான வாழ்க்கை, நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்கும். நமக்கு நல்லதே நடக்காதென நொந்தவர்களுக்கு, நமக்குதான் நல்லது நடக்கிறதா எனும் அளவுக்கு நம்பமுடியாத நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.
அர்த்தாஷ்டமச் சனி
அஷ்டமம் என்னும் எட்டில் பாதி அர்த்தாஷ்டமமான நான்கில் சனி நின்று அர்த்தாஷ்டமச் சனியாக பலன் தருவார். ராசிக்கு நான்கில் நிற்கும் சனி, ராசிக்கு ஆறு, பத்து, ஒன்றாமிடத்தைப் பார்வையிடுவார். தாயாருக்கு பாதிப்பு, தாயாரால் பாதிப்பு, அவமானம், தாய்வழி உறவுகளுடன் பாதிப்புண்டாகும். உறவினர் நன்றி மறந்த வர்களாக செயல்படுவர். நம் கஷ்டம் கண்டு சந்தோஷப்படுவர். உறவினரின் உதவி ஒத்தாசை கிடைக்காமல் ஆதரவற்ற நிலையே உருவாகும். எங்கும் எதிலும் முடக்கம்- நிலம், வீடு, வாகனங்கள்மூலம் நஷ்டம், முடக்கம் உருவாகும். வீண் செலவுகள் தொடர்ந்து ஏற்படும். நிம்மதியற்ற நிலையில் நாட்கள் நகர்வதே தெரியாமல் அலைந்து திரிய நேரும். தேச சஞ்சாரம் மன ஆறுதல் தரும். "வேறுவழி?' என நடப்பதைக் கடந்துபோக நேரும். மாற்ற முய்ற்சித்தாலும் பெரிய நன்மை வராது. பலவித முயற்சிகளும் பாதியில் நின்று பாடாய்ப் படுத்தும். எதிர்பாராதவர்கள் எதிரியாக மாறுவர். சுகம் என்பதையே அனுபவிக்கமுடியாமல் போகும். எரிச்சலும் கோபமும் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நோய் தீராமல் தொல்லை கொடுப்பதுமின்றி, செலவை அதிகரிக்கச் செய்யும். எதிரி வலுப்பெற்று நமக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை, பதவி, பணம், புகழை அபகரிப்பார். முடக்கத்தை மாற்ற கடன் வாங்கி, புதிய தொழிலால் நஷ்டப்பட வைக்கும். "ஏன்டா இந்த காரியத்தை செஞ்சோம்; இப்படி முடங்கிவிட்டதே' என வருத்தப்படுவர். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படவேண்டிய நேரம்.
வேலை பறிபோகும். வேலையில் தொல்லை, பிடிக்காத இடமாற்றம், தொழில் மந்தம், தொழில் முடக்கம், தொழில்வகை ஏமாற்றம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற கூலி வராது. இருப்பிடத்தைவிட்டு வரமுடியாமல் தவிக்கநேரும். தொழில் ஸ்தானமான பத்தாமிடம்தான் மாமியார் வீடு. தொழில் கெட்டவனின் மாமியார் ஒத்துப் போகமாட்டார். எதிரிபோல் நடத்துவார். மாமியாருக்கும் மருமகனுக்கும் ஆகாது. மதிக்கமாட்டார். தொழில் நன்றாக நடந்து மகளை நன்றாக வைத்துக்கொண்டால் எந்த மாமியாரும் கோபப்படமாட்டார். அதனால்தான் நல்ல தொழில் செய்து வாழ்பவனை மாமியாருக்குப் பிடிக்கிறது. பத்தாமிடத்தை சனி பார்க்கும் இந்த இடத்தில் தொழில்வகை தொல்லைகளைத் தவிர்க்கமுடியாது. கர்ம ஸ்தானம் என்பதால் பெற்றோர், பெரியவர்களுக்கு கர்மம்செய்ய நேரும்.
ஐந்தில் சனி
ராசிக்கு ஐந்தில் சனி நின்று ஏழு, பதினொன்று, இரண்டாமிடத்தைப் பார்வையிடுவார். அர்த்தாஷ்டமச் சனியால் ஏற்பட்ட முடக்கம் தீர்ந்து சகஜ நிலைக்குத் திரும்பும் காலமாக இருக்கும். பூர்வபுண்ணிய அருளால் லாபங்கள் பெறுவர். குலதெய்வக் கோவிலைப் புனரமைத்தல் அல்லது புதிதாகக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தவேண்டி இருக்கும். பூர்வ சொத்துகளால் வில்லங்கம் ஏற்பட்டு ஆதாயம் பெறுவர். கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் உண்டாகி தெளிவுபெறுவர். வாழ்க்கைத் துணைவருக்குத் தொல்லை வந்து நன்மை நடக்கும். கூட்டாளிகளிடம் கவனம் தேவை. உப தொழில்களால் வரும் லாபம் உறுதுணையாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு நின்ற சுபகாரியங்கள் நல்ல முறையில் இனிதே நடைபெறும். குலதெய்வத் திற்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், காது குத்து, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், புத்திர பாக்யம், வீடு கிரகப் பிரவேசம், வாகனச் சேர்க்கை போன்ற சுபயோகப் பலன்கள் குடும்பத்தில் நடைபெறும். எதிர்பராத இடத்திலிருந்து எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நண்பர்களால் லாபம் ஏற்படும். வாக்கு கொடுத்ததைக் காப்பாற்றவேண்டி வரும். கல்வி முன்னேற்றம், தொழில் மேன்மை, பொருளாதார முன்னேற்றம் சிறப் பாக இருக்கும். நன்மை- தீமை கலந்த ஐந்தாமிட சனியில் தசாபுக்திகள் நன்றாக அமைந்தால் பெரும் லாபம் சம்பாதிப்பார்.
ஆறில் யோகச்சனி
ஆறாமிடத்தில் சனி நின்று மறைவிடங் களான மூன்று, எட்டு, பன்னிரண்டாமிடங் களைப் பார்வையிடுவது விசேஷமான அமைப்பு. சனி முழு பாவகிரகம். பாவ கிரகம் ஆறில் மறைந்து மறைவிடங்களைப் பார்வையிடுவது ராஜயோகப் பலனைத் தரும். இதுவரை இருந்துவந்த அனைத்து கெடுபலனையும் மாற்றி வாழ்வில் நற்பலனைக் கொடுக்கும் அற்புதமான காலம். நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு உடல்நிலை முன்னேற்றம், தோற்ற பொலிவைப் பெறுவர். எதற்கெடுத்தாலும் சோர்ந்து கொண்டிருந்தவர்கள் சுறுசுறுப்பாக மாறுவர்.
தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். முயற்சி செய்துகொண்டே இருப்பவர்கள் அனைவரும் வெற்றிபெறுவதில்லை. ஒரு கட்டத் திற்குமேல் முயற்சியையே கைவிட்டவர்கள் உண்டு. கொஞ்சமாவது முயற்சிக்குப் பலன் இருந்தால்தான் முயல்வதில் அர்த்தமுண்டு. நடக்காத ஒன்றில் விடாமுயற்சி செய்து கொண்டே இருந்தால் வீண் முயற்சியாகவே மாறிவிடும். இந்த காலகட்டத்தில் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். எதிரி அழிந்துவிடுவர். எதிரியால் லாபம் அடைவர்.
வீண் விரயத்திற்காகவோ, சுப விரயத்திற் காகவோ கடன்பட்டிருந்தால் கடனை அடைத்துவிடுவர். வேலைக்காகவோ, மனஸ்தாபத்தாலோ குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றுசேர்வர். தொல்லையாக இருந்தவரைவிட்டு ஒத்துப் போகிறவர்களோடு வாழத் தொடங்குவர். அயன சயன சுகமின்றித் தவித்தவர்களுக்கு சந்தோஷமாக- நிம்மதியாக வாழ வழிபிறக்கும். வெளிநாட்டுத் தொடர்பு, வேற்று மனிதர்கள் தொடர்பால் வெற்றி கிடைக்கும். கெட்டவர்களைவிட்டு விலகி நல்லவர்களுடன் சேர்வர். இன்று ஒழுக்கம், நேர்மை கொண்டவர்களைப் பிழைக்கத் தெரியாதவன் என்றும், கெட்டவழியில் கோடீஸ்வரனாக மாறுபவனை விவரமான அறிவாளியாகவும் கொண்டாடுகிறார்கள். ஆறில் சனி இருக்கும்போது சம்பாதிக்க குறுக்குவழியில் ஈடுபட்டால்கூட சிக்கிக்கொள்ள மாட்டார்கள். இங்கு தவறு செய்பவர்கள் சிக்கிக்கொண்டால்தானே குற்றவாளியாகிறார்கள்? கெடுக்க நினைப்ப வர்கள் கெட்டுப்போவார்கள். செய்வினை, பில்லி, சூன்யம் வைத்தால்கூட பாதிக்காது. யோகத்தைத் தரும் அற்புதமான இடம்.
கண்டகச்சனி
ராசிக்கு ஏழில் கண்டகச்சனியாக மாறி ஒன்பது, ஒன்று, நான்காமிடத்தைப் பார்வை செய்வார். ஏழாமிடச்சனி வாழ்க்கைத் துணைவருடன் மனஸ்தாபம், சண்டை, பிரிவு, நோய், இழப்பு ஏற்படுத்தக் கூடும். தேவையற்ற வீண்செலவுகளை அதிகப்படுத்தும். தொழில்வழித் தொல்லை, நண்பர்கள், தொழில் கூட்டாளியுடன் பிரிவு, ஏமாற்றம், துரோகம் உண்டாக்கும். புது நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. ஏமாற்ற நினைப்பவர்கள் எப்போதும் புகழ்ந்து பேசுவர். "உங்களைப் போன்ற நல்ல மனிதரைப் பார்த்ததில்லை', 'உங்களைப்போல உத்தமர் யார்?' என்று சொல்லி நம்மை மயக்கும்படி புகழ்வார்கள். கொஞ்சம் அவர்களின் பேச்சுக்கு செவிசாய்த்தால் நம் மொத்த வாழ்க்கையையும் நாசம் செய்துவிடுவர். நம்முடன் நெடுநாள் இருக்கும் நண்பர்கள், உண்மையான விசுவாசிகளை, புதியவர் கள் நம்முடன் பகையாக்கிப் பிரித்துவிடுவர்.
கெட்டவர்களிடம் தனியாக சிக்கிக்கொள் வோம். ஏழில் சனி வந்தால் யாராலும் காப்பாற்றமுடியாத நிலையே ஏற்படுத்தும். உடல்நிலையையும் மனநிலையையும் கவனிக்கவேண்டும். சோதனைகளால் மனதை விட்டுவிடக் கூடாது. எது நடந்தாலும் நடக்கட்டுமென்று வாழ்ந்தால்தான் முடியும்.
கெட்ட பழக்கவழக்கத்திற்கு அழைத்துச் செல்லும். குணத்தில் மாற்றம் ஏற்படும். பெற்றோருக்கு அவப்பெயரை உண்டாக்கும். கல்வியில் தடை, தோல்வி, கல்விக்காக செலவு, பெற்றோரைப் பிரிந்துசெல்ல நேரும். பிடித்த உயர்கல்வி கிடைக்காமல் போகும். உறவினர் பகை, சொந்த பந்தங்களால் வெறுக்கப்படுவர். சுகத்தை இழக்க நேரும். தாய்- தந்தைக்கு கண்டம், வீண் செலவு, பிரிவு, பிரச்சினை உண்டாகும். பாக்கியக்குறை,எதைத் தொட்டாலும் தாமதம் ஏற்பட்டு எரிச்சல் உண்டாகும். பொறுமை யில்லாமல் கோபப்பட்டு, கிடைக்கவேண்டியதை இழப்பர். குடும்ப உறவு கள் மரியாதைக் குறைவாகப் பேசி மனம்நோக நடந்துகொள்வர். தூரதேசம் செல்வர். வீடு, வாகனத்தில் நஷ்டமடைவர். தாழ்ந்த பெண், முறையற்ற உறவு களால் அவமானம் ஏற்படும். தசாபுக்தி நன்றாக இருந்தால் தீயபலன் குறையும். கோட்சாரமும் ஜாதகமும் கெட்டிருந்தால் தற்கொலைவரை செல்லநேரும்.
அஷ்டமச்சனி
ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டில் சனி வருவதைதான் அஷ்டமச்சனி என்பர். "அகப்பட்டவனுக்கு அஷ்டமச்சனி' என்பதன் பொருள், தானாக ஒரு விஷயத்தில் நுழைந்து அதிலிருந்து மீளமுடியாமல் சிக்கிக்கொண்டு தவிப்பது, வாய்ப் பேச்சால் வம்பில் மாட்டிக்கொள்வது, பொய் பேசுவது, வாக்கு கொடுத்து காப்பாற்றமுடியாமல் மாட்டிக் கொள்வது, யாரோ செய்த தவறுக்கு வலியப்போய் மாட்டிக்கொள்வது, தவறு செய்யாமல், காரணமே இல்லாமல் கண்ணில் படுவோரிடம் எல்லாம் பகைத்துக் கொள்வது, ஜாமின் போட்டு மாட்டிக்கொள்வது, நம்பி ஏமாறுதல், அரசாங்கப் பகை, சான்றோர், பெரியோரை எதிர்த்து வாக்குவாதம், பிரச்சினை செய்வது- அதனால் அரசாங்க தண்டனை, தனிநபர் பகையால் அடிவாங்குவது போன்ற மோசமான பலன்களே அதிகம் நடக்கும்.
வாகன விபத்து, போக்குவரத்தில் கண்டம், மருந்து கொடுக்கமுடியாத புதிய நோயால் அவதிப்படுவது, மருந்து சாப்பிட்டும் முன்னேற்றமில்லாமல் இருப்பது என விதவிதமான சோதனைகள் உண்டாகும். எதிரிகளைப் பகைத்துக்கொண்டு தண்டனையடைவது, புது எதிரிகளை உருவாக்குவது, செய்யாத தவறுக்கு அபராதம் கட்டுவது, தெரிந்தே தவறுசெய்து காவல் நிலையம், நீதிமன்றம், சிறைக்குச் செல்ல நேரும். கெட்ட பழக்கவழக்கம், தீய நண்பர் சேர்க்கை உண்டாகும்.
எட்டில் சனி நின்று பத்து, இரண்டு, ஐந்தாமிடத்தைப் பார்க்கிறார். பூர்வீக நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கம் உண்டாகும். உறவினர்களால் தொல்லை ஏற்படும். புத்திர பாக்கியம் தடை, தாமதம், வீண் மருத்துவ செலவை உண்டாக்கும். புத்திரர்களால் தொல்லை, சுப காரியங்கள் செய்யமுடியாமல் தவித்தல், சொல்பேச்சு கேட்காமல் நடத்தல், புத்திரர்களால் அவமானப்படுதல், குடும்ப கௌரவம் பாதித்தல் என சங்கடங்கள் மனதை வாட்டும். பெரியவர்களுக்கு கர்மம்செய்ய நேரும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு நிம்மதி பறிபோகும். சொந்த பந்தம் இருந்தும் இல்லாதது போன்று தனித்து வாழவேண்டி இருக்கும். யாருடைய உதவியுமின்றிப் போராடவேண்டி இருக்கும். சொல்லமுடியா, கணக்கிலடங்கா துன்பங்கள் தொடர்ச்சியாக நடக்கும்.
தொழிலில் பாதிப்பு, வேலையின்றி வாடுதல், பணத்திற்காக அலைதல், உழைப்பிற்கேற்ற ஊதியமில்லாமல், தகுதிக்கேற்ற வேலையின்றி கீழ்நிலைத் தொழில் செய்தல், வயது குறைந்தவரிடம் கீழ்நிலைப் பணிசெய்து அவமானப்படுதல், சக ஊழியர்களால் அவமானமடைதல் சகஜமாக நடைபெறும். வேறு வழியின்றி ரோஷத்தை அடக்கி, அடங்கி வாழ்வர். வருமானத்திற்கு மீறிய செலவுகள் வரும். குடும்பத்தில் யாரையும் கண்டிக்கமுடியாத சூழல், அவரவர் இஷ்டப்படி நடந்து அவமானத்தைத் தருவர். போராட்டம், வலி மிகுந்த வாழ்க்கையாக தினம் இருக்கும். தற்கொலை எண்ணங்கள் மேலும் சங்கடத்தையே தரும்.
கஷ்டகாலத்தில் நண்பர்கள்,உறவினர் கள்,நம்மிடம் உதவி பெற்றவர்கள், குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம், "யார் எப்படிப்பட்டவர்' என்பதை அறியும் பொற்காலமாக இருக்கும். சோதனைக் காலத்தை அனுபவமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். கஷ்டம் வருவதுபோல அடுத்து நன்மையும் வரும். புதியவர்களின் நட்பு, அறிவுரைகள் நம் எண்ணம், செயலை மாற்றும்.
அஷ்டமச்சனியில் எல்லாருக்கும் கெடுதல் நடக்காது. இதில் வீடு, வாகனம், முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளமுண்டு. சுய ஜாதகப்படி நல்ல தசை நடந்தாலோ ராசிக்கு சனி கெட்டவனாகி கெட்டிருந்தாலோ அஷ்டமச்சனி குறைவான கஷ்டத்தைக் கொடுத்துத் திருத்தி, அதிர்ஷ்டத்தையே தரும்.
ஒன்பதாமிட சனி
ஒன்பதாமிடத்தில் சனி நின்று பதினொன்று, மூன்று, ஆறாமிடத்தைப் பார்ப்பார். பாக்கிய ஸ்தானத்தில் சனி, கிடைக்கவேண்டிய பாக்கியத்தைக் கெடுத்துவிடுவார். சுபகாரியங்கள் தள்ளிப்போகும். தந்தைக்கு கண்டம், தந்தைவழி பாதிப்புகள் முன்னேற் றத் தடையாக இருக்கும். நியாயமாகக் கிடைக்கவேண்டியது கிடைக்காது. பலவித போராட்டங்களைத் தாண்டியே வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தால் அல்லது வயது குறைந்த நண்பர்களால் ஏமாற்றம், தொல்லை உண்டாகும். யாரையும் நம்பமுடியாமல் தைரியத்தை இழப்பர். பொறுமையாக செயல்படவேண்டும். கெட்ட சிந்தனை பிரச்சினைகளைத் தந்துவிடும். தேவையற்ற வீண் பிரச்சினைகளால் மனநிம்மதி கெடும். யாருக்கும் நல்லவராக முடியாமல் தவிப்பர்.
உடல்நிலையில் அக்கறை தேவை.
மனதை அலைபாயவிட்டால் உடல்நலம் கெடும். குடும்பத்தைப் பிரிந்து அவதிப்பட நேரும். குடும்பத்தில் வீண்குழப்பம் ஏற்பட்டு கடன்பட நேரும். வரவுக்குமீறிய செலவுகளால் கட்டுப்படுத்தமுடியாத நிலை வரும். எதிரிகளால் ஆபத்து நேரும். தெரிந்தவர்கள் எதிரிபோல் செயல்படுவர். எதிரியை வெல்லும் திறன் குறைவு. ஏதாவதொரு வகையில் அனைத் தையும் சமாளித்து ஓட்டவேண்டி வரும். முன்னோர்கள் செய்த புண்ணியம் பல இன்னல்களிலிருந்து காப்பாற்றும். திடீர் அதிர்ஷ்டம் வந்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு, கேட்காமலேயே உதவிகள் சரியான நேரத்திற்குக் கிடைத்து, தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாக ஒன்தாமிட சனி நன்மை- தீமை கலந்த கலவையாகவே பலன் தரும். நன்றாக இருக்கும்போது தீமையும், நொந்துபோகும்போது நன்மையும் நடந்து தெளிய வைத்து வைத்து அடித்து, இரண்டரை ஆண்டுகளைக் கடக்கவைக்கும். சனி எந்த இடத்தில் நின்றாலும், நன்மை தரும் தசை நடந்தால் நன்மைகளே நடக்கும். சுய ஜாதகமே சரியான பலனைக் கொடுக்கும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 96003 53748