புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவிஅமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.

புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். குடும்பத்தில் வாதங்கள் நடக்கும். சிலருக்கு கண்ணில் நோய் இருக்கும். இளமையில் கஷ்டம் இருக்கும். 33 வயதிற்குப்பிறகு, நல்ல பண வரவு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

Advertisment

புதன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சோம்பேறியாக இருப்பார். எந்தத் தொழிலையும் மெதுவாகத்தான் செய்வார். ஆனால், அதை நன்கு முடிப்பார். சகோதரர்களுடன் வாதம் செய்வார். படிப்பிற்காக சிலர் வெளியூர் செல்வார்கள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பணம் சம்பாதிப்பார். நல்ல மனைவி அமைவாள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும்.

Advertisment

புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், தாயின் உடல்நலம் கெடும். நல்ல பண வசதி இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் ஏதாவது போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பார். கோப குணம் இருக்கும். வீணான பேச்சு இருக்கும்.

புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அரசாங்கத்தில் ஏதாவது பதவியில் இருப்பார். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளில் இருப்பார்கள். சிலருக்கு வயிற்றில் நோய் இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். அவர்களால் ஜாதகருக்கு பெயர், புகழ் கிடைக்கும்.

புதன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், காலில் நோய் இருக்கும். தலைவலி இருக்கும். இளம் வயதில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். குடும்பத்திலுள்ள ஏதாவதொரு பெண்ணுக்கு பிரச்சினை இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் புகழுடன் வாழ்வார்.

புதன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலரின் வாழ்க்கையில் மனைவி வந்தபிறகு, பல மாறுதல்கள் நடக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலர் பயணம் செய்து, பணம் சம்பாதிப்பார்கள். சிலருக்கு புகையிலை, பீடா பழக்கம் இருக்கும்.

புதன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு மூலநோய் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். பெயர், புகழ் இருக்கும். சிலருக்கு கள்ள உறவின்மூலம் மனைவி, குழந்தைகள் இருப்பார்கள்.

புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் தன் முன்னோரின் பெருமைகளைக் கூறி, வாழ்வார். நன்கு படிப்பார். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலருக்கு சூதாட்டத்தில் ஈடுபாடு இருக்கும்.

புதன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர்அரசரைப்போல வாழ்வார். அழகான மனைவி இருப்பாள். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் வக்கீலாகவோ, நீதிபதியாகவோ இருப்பார்கள். நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.

புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். ஒரு ஆண் வாரிசு இருக்கும். பெண் குழந்தைகள் அதிகமாக இருப்பார்கள். அழகான மனைவிஅமைவாள். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும்.

புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். பண வசதி இருக்கும். சொந்தத்தில் வீடு,

வாகனம் இருக்கும். ஜாதகர் பிறரை மதிக்க மாட்டார். ஆணவ குணம் அதிகமாக இருக்கும்.

செல்: 98401 11534