க்ன கேந்திரத்தில், குருவின் மீன ராசியில் புதன் நீசமடைகிறது. ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். உடல்நலத்தில் குறையிருக் கும். தாயாருடன் சுமாரான உறவே இருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். மனைவியால் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் கடுமை யான உழைப்பாளியாக இருப்பார். தான் வளரவேண்டுமென்ற சிந்தனையுடனே எப்போதும் இருப்பார்.

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் தன் அறிவை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். அன்னையுடன் உள்ள உறவில் குறையிருக்கும். மனைவி யுடன் உள்ள உறவில் சில பிரச்சினைகள் இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் உடன்பிறந்தோரால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பணம் சம்பாதிப்பார். தாயாரால் சந்தோஷம் இருக்கும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். பூமி பாக்கியம் இருக்கும். ஜாதகர் நல்ல உழைப்பாளியாக இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். பெயர், புகழ் இருக்கும்.

Advertisment

dd

4-ஆம் பாவத்தில் தன் சுயராசியான மிதுன ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு அன்னையால் சந்தோஷம் இருக்கும். பூமி, வீடு வாங்கலாம். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.

5-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். வாரிசுகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் தன் சுய அறிவைக் கொண்டு பணம் சம்பாதிப்பார். இனிமையாகப் பேசுவார். குடும்பத்தை நன்கு பார்த்துக்கொள்வார்.

6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் எதிரிகளிடம் பக்குவமாக பேசி, தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார். தாயாருடன் கருத்து வேறுபாடு இருக்கும். மனைவியுடனும் கருத்து வேறுபாடு இருக்கும். பூமி பாக்கியம் இருக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிலவும். ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி, வியாபாரத்தில் வெற்றிபெறுவார்.

7-ஆம் பாவத்தில் தன் சுயராசியான கன்னி ராசியில் புதன் உச்சமடைகிறது. அதன்காரணமாக ஜாதகருக்கு பெயர், புகழ் கிடைக்கும். மனைவி அழகாக இருப்பாள். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தாயாரால் சந்தோஷம் கிடைக்கும். பூமி, வீடு வாங்கலாம்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். அன்றாடச் செயல்களை ஜாதகர் சந்தோஷமாக முடிப்பார். மனைவி யுடன் உள்ள உறவில் குறையிருக்கும். அன்னையுடன் சுமாரான உறவே இருக்கும்.

9-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால், தலையெழுத்து நன்றாக இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். தாயால் சந்தோஷம் உண்டாகும். பூமி பாக்கியம் இருக்கும். மனைவியால் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

10-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் புதன் இருந்தால் தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். மனைவி பக்கபலமாக இருப்பாள். இல்வாழ்க்கை ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும்.

11-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் புதன் இருந்தால் நல்ல பண வரவிருக்கும். அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாரிசுகளால் சந்தோஷம் ஏற்படும். ஜாதகர் இனிமை யாக பேசுவார். பிறரை அதன்மூலம் ஈர்ப்பார். அறிவாளியாக இருப்பார். பெயர், புகழுடன் வாழ்வார்.

12-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் நல்ல லாபம் இருக்கும்.

பெயர், புகழ் இருக்கும். அன்னையுடன் உள்ள உறவில் குறையிருக்கும். மனைவியுடன் சுமாரான உறவிருக்கும். அதன்காரணமாக மனதில் கவலை உண்டாகும்.

செல்: 98401 11534