க்ன கேந்திர ஸ்தானத்தில், செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் மிகவும் கவனமாக செயல்படுவார். கொடுக்கல்- வாங்கலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார். கடுமையாக உழைப்பார். இல்வாழ்க் கையில் பிரச்சினைகள் இருக்கும் .உடல்நலம் சற்று பாதிக்கப்படும். எனினும் ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார்.

2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் பணத்தைச் சேமிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். புதன் அஷ்ட மாதிபதியாக இருப்ப தால் பல தடைகள் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக ஜாதகர் பணத்தை நீரென செலவிடுவார். வசதி யான வாழ்க்கையை வாழ்வார்.

3-ஆம் பாவத்தில் தன் நண்பரான சனியின் மகர ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறந் தோரால் சந்தோஷம் கிடைக் கும். மனதில் தைரியம் இருக்கும். சிலர் கடுமையான போட்டிகளைச் சந்திப்பார்கள். நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

Advertisment

dd

4-ஆம் பாவத்தில் தன் நண்பரான சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு பூமி, வாகனம் இருக்கும். கடுமையான உழைப் பாளியாக இருப்பார். பணம் வருவதற்கான வாய்ப்புகளை அவரே உருவாக்குவார். நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்க லாம்.

5-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில், குருவின் மீன ராசியில் புதன் நீசமடைகிறார்.

அதனால் படிப்பில் தடங்கல்கள் ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை இருக்கும். தன் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி ஜாதகர் பணம் சம்பாதிப்பார். முன்னோரின் சொத்து கிடைக்கலாம்.

6-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி எதிரிகளை வெல்வார். அதில் பணவரவு இருக்கும். சில தடைகளைக் கடந்து வருமானம் கிடைக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். அஜீரணக் கோளாறு ஏற்படும்.

7-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு அன்றாட செயல்களில் வெற்றி கிடைக்கும். படிப்பில் கவனமாக இருப்பார். நீண்ட ஆயுள் உண்டு. கணக்கு, கணக்கியல் ஆகியவற்றில் ஜாதகருக்கு திறமையிருக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரலாம்.

8-ஆம் பாவத்தில் சுய ராசியான மிதுன ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு மனபலம் இருக்கும். நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. புதன் 8-ல் இருப்பதால், வருமானம் வருவதில் சில தடைகள் உண்டாகும். ஜாதகர் வெளியே தன்னை வசதி படைத்தவரைப்போல காட்டிக்கொள்வார்.

9-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் புதன் இருந்தால், ஜாதகருக்கு தர்ம காரியங்களில் ஈடுபாடிருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கலாம். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக- சந்தோஷமாக வாழ்வார்.

10-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் தன் தந்தையுடன் கொண்டிருக்கும் உறவில் சிறிய பிரச்சினை இருக்கும். ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக் கும். நீண்ட ஆயுள் இருக் கும். முன்னோரின் சொத்து கையில் கிடைக்கலாம். ஜாதகர் பேச்சாற்றல் உள்ளவர். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பார்.

11-ஆம் பாவத்தில், சுய வீட்டில், கன்னி ராசியில் புதன் உச்சமடைகிறது. வருமானம் நன்றாக இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக் கும். ஜாதகர் உற்சாகமாக வாழ்வார். எப்போதும் உயர்ந்த சிந்தனைகளுடன் இருப்பார்.

12-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் புதன் இருந் தால் செலவுகள் அதிக மாக இருக்கும். ஜாதகருக்கு வெளித் தொடர்புகளின் மூலம் ஆதாயம் கிடைக் கும். அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. சிறிய சிறிய நோய்களின் பாதிப் பிருக்கும். ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். வாழ்க்கை யின் இரண்டாவது பகுதியில் சந்தோஷ மாக வாழ் வார்.

செல்: 98401 11534