துலாம் லக்னத்தில் புதன் விரய ஸ்தானாதி பதியாக இருப்பதால் ஜாதகர் மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி நிறைய பணம்சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக ஏற்படும். அதிர்ஷ்டத்தில் குறைபாடிருக்கும். ஜாதகர் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருப்பார். தர்ம காரியங்களில் ஆர்வமிருக்கும்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால் செலவுகள் அதிகமாக உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமென்ற எதிர் பார்ப்புடன் ஜாதகர் தர்ம காரிங்களில் ஈடுபடு வார். நல்ல பேச்சாற்றல் இருக்கும்.
3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறந்தோரு டன் நல்ல உறவிருக்கும். ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். துணிச்சலுடன் தன் செயல்களைச் செய்வார். சிறிய தடைகளுக்குப்பிறகு பெரிய வெற்றி கிடைக்கும். நல்ல பணவசதி இருக்கும். பெயர், புகழுடன் சந்தோஷமாக வாழ்வார்.
4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் புதன் இருந்தால் அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். சொத்து வாங்குவதில் பிரச்சினை ஏற்படும். உடன்பிறப்புகளுடனான உறவு நன்றாக இருக்கும். வர்த்தகத்தில் நல்ல பணவரவு கிடைக்கும். வெளித் தொடர்புகளை வைத்து ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். தைரியசாலியாக இருப்பார்.
5-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில், சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் குழந்தை பாக்கியத்தில் சிறிய தடை ஏற்படும். படிப்பு விஷயத்தில் தடங்கல்களைக் கடந்து வெற்றிகிடைக்கும். வெளித் தொடர்புகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும்.
6-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் புதன் இருந்தால் எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். இந்த இடத்தில் புதன் நீசமடைவதால், பகைவர்கள் சிரமங்களைக் கொடுப்பார்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். பணக்கஷ்டம் உண்டாகும். தர்மச் செயல்களைச் செய்வதில் தடங்கல் ஏற்படும். ஜாதகருக்குப் பேச்சாற்றல் இருக்கும். வெளித் தொடர்புகளால் பணத்தை சம்பாதிப்பார்.
7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால் வியாபாரத்தில் சிறுசிறு தடைகள் ஏற்படும். ஜாதகருக்கு மனைவியால் பிரச்சினைகள் உண்டாகும். செலவுகள் அதிகமாக ஏற்படும். தர்மச் செயல்களில் ஈடுபாடிருக்கும். ஜாதகர் தன் ஊரைவிட்டு வெளியே சென்று பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் இருக்கும்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். தைரியசாலியாக இருப்பார். அதிர்ஷ்டத்தில் சிறிய குறை இருக்கும். அதனால் அவர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும்.
9-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் தன் சுய ராசியான மிதுன ராசி யில் புதன் இருந்தால் ஜாதகர் தர்ம காரியங்க ளில் ஈடுபடுவார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வெளித் தொடர்புகளைப் பயன் படுத்தி நிறைய பணம் சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால், மனக்கஷ்டம் உண்டாகும்.
10-ஆம் பாவத்தில் கடக ராசியில் புதன் இருந்தால் ஜாதகரின் தந்தைக்கு சில பிரச்சினைகள் இருக்கும். தந்தையுடனான உறவு சரியாக இருக்காது. தடைகளைக் கடந்து அவர் பணம் சம்பாதிப் பார். நல்ல வாழ்க்கைக்காக கடுமையாக உழைப்பார்.
11-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால் ஜாத கருக்கு பணவரவு நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். செலவுகள் அதிகமாக ஏற்படும்.
ஜாதகர் பணக்காரராக இருப்பார். நல்ல பேச்சுத் திறமை இருக்கும். வாழ்க் கையில் படிப்படியாக அவர் உயர்வார்.
12-ஆம் பாவத்தில் விரய ஸ்தானத்தில் சுய ராசியான கன்னியில் புதன் உச்சமடைகிறார்.
அதனால் செலவுகள் அதிகமாக ஏற்படும். வெளித் தொடர்புகளின்மூலமும், பயணத்தின் மூலமும் ஜாதகர் பணம் சம்பாதிப்பார். நல்ல பணவசதி இருக்கும். ஆடம்பரமாக, சந்தோஷமாக ஜாதகர் வாழ்வார்.
செல்: 98401 11534