லக்னத்தில், சனியின் மகர ராசியில் புதன் இருந்தால் பெயர், புகழ் கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி பெரிய மனிதராக வருவார். பகைவர்கள் அவரைப் பார்த்து பயப்படுவார்கள்.மனைவியின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை வெற்றி நிறைந்ததாக இருக்கும்.
2-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் நல்ல பண வரவிருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் தர்ம காரியங்களைச் செய்வார். அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார்.
3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் புதன் நீசமடைகிறது. அதனால், உடன்பிறந்தோருடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு குறைவாக இருக்கும். பகைவர்களால் சில பிரச்சினைகள் உண்டாகும். எனினும், ஜாதகர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவார்.
4-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். பூமி, வீடு வாங்கலாம். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். எனினும், இல்வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும்.
5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் படிப்பில் சில தடங்கல்கள் ஏற்படும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உண்டாகும். குடும்ப சந்தோஷத்தில் சில தடைகள் இருக்கும்.கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். ஜாதகர் தர்மச் செயல்களைச் செய்வார். பகைவர்களை வெல்வார்.
6-ஆம் பாவத்தில் தன் சுயராசியான மிதுன ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் பகைவர்களை வெல்வார். தர்ம காரியங்களைச் செய்வதில் சில தடைகள் இருக்கும். பணி செய்யுமிடத்தில் எதிரிகளால் பாதிப்பிருக்கும். எனினும், அனைத்தையும் கடந்து ஜாதகர் வெற்றிபெறுவார். தான் பெரிய மனிதராக வரவேண்டுமென்ற எண்ணம் எப்போதுமிருக்கும்.
7-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியால் சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகருக்கு தர்ம காரியங்களில் ஈடுபாடிருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டிகளை சந்தித்து லாபம் கிடைக்கும்.
8-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. புகழில் குறையிருக்கும். பகைவர்களால் சில சிக்கல்கள் உண்டாகும். அதனால் மன அமைதி கெடும். எனினும், ஜாதகர் எப்போதும் கம்பீரமாகவே இருப்பார்.
9-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான கன்னி ராசியில் புதன் உச்சமடைகிறது. அதனால் ஜாதகருக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடிருக்கும். ஜாதகர் தன் விதியை அதிகமாக நம்புவார். எதையும் சாதாரண விஷயமாக நினைப்பார்.
10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால் தந்தையால் சந்தோஷம் கிடைக்கும்.
அரசாங்க விஷயத்தில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் லாபமிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து, பகைவர்களை வெல்வார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
11-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால் வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். தன் சுய அறிவைப் பயன்படுத்தி, கடுமையாக உழைத்து ஜாதகர் பெயர், புகழை அடைவார். தன் சுய லாபத்திற்காக தர்மச் செயல்களைச் செய்வார்.
12-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் புதன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனினும், ஜாதகர் அனைத்தை யும் தன் கட்டுப்பாட்டில் கவனமாக வைத்திருப்பார். வெளித் தொடர்புகளின்மூலம் நல்ல பண வரவிருக்கும். புகழில் குறையி ருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார்.
செல்: 98401 11534