லக்னத்தில், சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத் துடன் இருப்பார். கணக்குப் பாடத்தில் திறமைசாலியாக இருப்பார். பூர்வீக சொத்து கிடைக்கும். மனதில் சஞ்சலம் இருக்கும். ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்வார். வருமானம் சுமாராக இருக்கும்.
2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் புதன் நீசமடைகிறார். பணம் சேமிப்பில் கஷ்டம் இருக்கும். குடும்பத்தில் பலர் அவருக்கு எதிராக இருப்பார்கள். படிப்பில் பிரச்சினை ஏற்படும். மனதில் கவலைகள் இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஜாதகர் வெற்றிபெறுவார்.
3-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால் உடன்பிறந்தோரால் பல கஷ்டங்கள் இருக்கும். வாரிசுளால் மனக் கஷ்டம் உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். படிப்பு நன்றாக இருக்கும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். எனினும், தர்மத்தைப் கடைப் பிடித்து, அந்த சிக்கல்களிலிருந்து ஜாதகர் வெளியே வருவார்.
4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் தாயாருடனான உறவு சுமாராகவே இருக்கும். பல தடைகளைத் தாண்டி வீடு, மனை வந்துசேரும். படிப்பு நன்றாக இருக்கும். பல சிரமங்களைக் கடந்து ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்.
5-ஆம் பாவத்தில் சுய ராசியான மிதுன ராசியில் புதன் இருந்தால் வாரிசுகளால் சில பிரச்சினைகள் இருக்கும். படிப்பு நன்றாக இருக்கும். சிலர் அலட்சியமாக இருப்பார்கள். ஆனால் புத்திசாலிகளாக இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். ஜாதகர் பணக்காரராக விளங்குவார். பிறரை ஈர்க்கும் வண்ணம் இருப் பார். அதைவைத்து அவர் பணம் ஈட்டுவார்.
6-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசி யில் புதன் இருந்தால் பகைவர்களால் பல பிரச்சினைகள் உண்டாகும். அதனால், மன அமைதி கெடும். தன் அறிவைப் பயன்படுத்தி ஜாதகர் பகைவர்களை வெல்வார். வாரிசு களால் சில பிரச்சினைகள் இருக்கும். சிறிய.... சிறிய நோய்களின் பாதிப்பிருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். அனைத்தையும் கடந்து, ஜாதகர் பணத்தை சம்பாதிப்பார்.
7-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால் மனைவியால் சில பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத் தில் சில சிக்கல்கள் ஏற்படும். ஆனால் எல்லா பிரச்சினைகளையும் கடந்து வெற்றி கிடைக் கும். முன்னோரின் சொத்து கிடைக்கும். ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி அனைத்து காரியங்களையும் செய்வார்.
8-ஆம் பாவத்தில் சுய ராசியான கன்னி ராசியில் புதன் உச்சமடைகிறது. பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் கம்பீரமான வாழ்க்கையை வாழ்வார். சிலருக்கு படிப்பு குறைவாக இருக்கும். எனினும், ஜாதகர் அறிவாளியாக இருப்பார். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். பேச்சாற்றல் இருக்கும்.
9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் மிகவும் கவனமாக இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பார். கடுமையாக உழைத்து, முன்னேறு வார். முன்னோரின் சொத்து கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும்.
10-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால் தந்தையுடன் உறவு சுமா ராக இருக்கும். அரசாங்க விஷயத்தில் சில பிரச் சினைகள் ஏற்படும். பூர்வீக சொத்து கிடைக் கும். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும்.
ஜாதகர் பல தடைக ளைத் தாண்டி வெற்றி பெறுவார். பண வர விருக்கும். கொடுக்கல்லி வாங்கலில் கவனமாக இருப்பார்.
11-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் தன் அறிவைப் பயன் படுத்தி பணம் சம்பாதிப் பார். சில நேரங்களில் பெரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வார். பூர்வீக சொத்து கிடைக் கும். ஜாதகர் அன்றாட வாழ்வை மிகுந்த உற்சா கத்துடன் நடத்துவார்.
12-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் புதன் இருந்தால் செலவு கள் அதிகமாக இருக் கும். வெளித் தொடர்பு களின்மூலம் லாபம் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகர் எப்போதும் சிந்தனை யிலேயே இருப்பார். வாரிசுகளைப் பற்றிய சிந்தனையும் கவலையும் மனதில் இருக்கும்.
செல்: 98401 11534