Advertisment

தனுசு லக்னத்திற்கு 12 பாவங்களில் புதன்

/idhalgal/balajothidam/mercury-12-bhavas-sagittarius-lagna

க்ன கேந்திரத்தில் புதன், குருவின் தனுசு ராசியில் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். வியாபாரத்தில் பல வெற்றிகள் கிடைக்கும். ஜாதகர் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். மனதில் தைரியம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக நகரும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் புதன் இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். குடும்ப சுகம் உண்டு.

தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் ஆதாயமிருக்கும். வர்த்தகம் லாபத்தில் நடக்கும். ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். தன் புத்திசாலித்தனத்தை வைத்து வாழ்க்கையில் படிப்படியாக வளர்வார்.

dd

Advertisment

3-ஆம் பாவத்தில் தன் நண்பரான சனியின்

க்ன கேந்திரத்தில் புதன், குருவின் தனுசு ராசியில் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். வியாபாரத்தில் பல வெற்றிகள் கிடைக்கும். ஜாதகர் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். மனதில் தைரியம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக நகரும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் புதன் இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். குடும்ப சுகம் உண்டு.

தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் ஆதாயமிருக்கும். வர்த்தகம் லாபத்தில் நடக்கும். ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். தன் புத்திசாலித்தனத்தை வைத்து வாழ்க்கையில் படிப்படியாக வளர்வார்.

dd

Advertisment

3-ஆம் பாவத்தில் தன் நண்பரான சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைப்பார். உடன்பிறந்தோருடன் உறவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பெயர், புகழுடன் இருப்பார். நல்ல பணவசதி இருக்கும். ஜாதகர் தைரிய சாலி. சந்தோஷமாக வாழ்வார்.

4-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் புதன் நீசமடைகிறது. தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். வீடு, மனை வாங்குவதில் பிரச்சினை உண்டாகும். இல் வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். பல பிரச்சினைகளைக் கடந்து தன் மன பலத்தைக் கொண்டு ஜாத கர் பணத்தை சம்பாதிப் பார்.

5-ஆம் பாவத்தில், திரி கோணத்தில், செவ்வா யின் மேஷ ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு படிப்பு நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். தந்தையால் ஜாதகருக்கு சந்தோஷம் கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி கிடைக் கும்.

6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் தன் புத்திசாலித்தனத் தைப் பயன்படுத்தி பகைவர்களை வெல்வார். தந்தையுடனான உறவில் குறையிருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும்.

7-ஆம் பாவத்தில், சுய வீட்டில், மிதுன ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு அழகான மனைவி இருப்பாள். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தந்தையால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க விஷயத்தில் லாபமிருக்கும்.

8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் புதன் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கும். அன்றா டச் செயல்களை கம்பீரமாகப் பேசியே ஜாதகர் நிறைவேற்றிவிடுவார். தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிலருக்கு பெரிய அளவில் நஷ்டம் உண்டாகும். எனினும், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

9-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில், சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால், ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மச் செயல்களைச் செய்வார். தந்தையால் சந்தோஷம் இருக்கும். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். பெயர், புகழுடன் சந்தோஷமாக வாழ்வார்.

10-ஆம் பாவத்தில், சுய வீட்டில் புதன் உச்சமடைகி றார். ஜாதகருக்கு தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். மனைவி அழகாக இருப்பாள். அவளால் ஜாதகருக்கு சந்தோஷம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பொதுவாக வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்கும்.

11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால் வியாபாரம் நல்ல லாபத்துடன் நடக்கும். ஜாதகருக்கு தந்தையின் ஆதரவிருக்கும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும்.

ஜாதகருக்கு ஏதாவது பதவி கிடைக்கலாம். புத்திசாலியாக இருப்பார். பெயர், புகழுடன் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த தாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். அனைவரும் மதிக்கக்கூடிய மனித ராக ஜாதகர் இருப்பார். ‌

12-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந் தால் செலவுகள் அதிக மாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். இருக்குமிடத்தை விட்டு வெளியூருக்குச் சென்று தொழில் செய்தால் அதில் நஷ்டம் உண்டாகும். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.

செல்: 98401 11534

bala091222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe