Advertisment

வலியால் துடித்த பெண்ணுக்கு அகத்தியர் காட்டிய மருத்துவ வழிமுறை! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/medical-method-shown-by-agastya-woman-pain-siddharthasan-sundarji-jeevanadi

சுமார் 40 வயதுடைய ஒருவர், 32 வயதுடைய தன் இளம் மனைவியுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அந்தப் பெண்ணால் கீழே உட்காரமுடியவில்லை. ஒரு நாற்காலியில் சாய்வாக அமரச் சொல்லிவிட்டு, "என்ன விஷயமாக நாடியில் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.

"இவள் எனது மனைவி, எங்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கின்றோம். சுமார் ஒரு வருடத்திற்குமுன்பு, மனைவியின் இடுப்பில் வலி ஏற்பட்டது. அவ்வப் போது சிகிச்சைப்பெற்று, மருந்து சாப்பிட்டாள். நாளடைவில் வலி குறையாமல், உட்கார்ந்து வேலை செய்யமுடியாத நிலை உண்டானது. படுக்கையில் படுத்தே இருக்கவேண்டிய நிலையாகிவிட்டது.

Advertisment

aa

அமெரிக்காவில் ஏராள மான பணம் செலவுசெய்து, பல பரிசோதனை களை செய்தோம். ஆனால் வலி சரியாகவில்லை. இப்போது விடுமுறையில் தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னையிலுள்ள எலும்பு, நரம்பு, ஸ்பெஷ லிஸ்ட் டாக்டர்கள் பலரிடம் பார்த்தபோது. சிலர் எலும்பு தேய்ந்துவிட்டதென்றும், இன்னும் சிலர் சவ்வு கிழிந்துவிட்டது, இடுப்பு "டிஸ்க்' எலும்பு விலகி

சுமார் 40 வயதுடைய ஒருவர், 32 வயதுடைய தன் இளம் மனைவியுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அந்தப் பெண்ணால் கீழே உட்காரமுடியவில்லை. ஒரு நாற்காலியில் சாய்வாக அமரச் சொல்லிவிட்டு, "என்ன விஷயமாக நாடியில் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.

"இவள் எனது மனைவி, எங்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கின்றோம். சுமார் ஒரு வருடத்திற்குமுன்பு, மனைவியின் இடுப்பில் வலி ஏற்பட்டது. அவ்வப் போது சிகிச்சைப்பெற்று, மருந்து சாப்பிட்டாள். நாளடைவில் வலி குறையாமல், உட்கார்ந்து வேலை செய்யமுடியாத நிலை உண்டானது. படுக்கையில் படுத்தே இருக்கவேண்டிய நிலையாகிவிட்டது.

Advertisment

aa

அமெரிக்காவில் ஏராள மான பணம் செலவுசெய்து, பல பரிசோதனை களை செய்தோம். ஆனால் வலி சரியாகவில்லை. இப்போது விடுமுறையில் தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னையிலுள்ள எலும்பு, நரம்பு, ஸ்பெஷ லிஸ்ட் டாக்டர்கள் பலரிடம் பார்த்தபோது. சிலர் எலும்பு தேய்ந்துவிட்டதென்றும், இன்னும் சிலர் சவ்வு கிழிந்துவிட்டது, இடுப்பு "டிஸ்க்' எலும்பு விலகிவிட்டது என்று பலவிதமாகக் கூறுகின்றார்கள். பல பரிசோதனைகளைச் செய்தும் நோய்க்கு காரணம் கண்டு கூறவில்லை. இன்னும் பல "டெஸ்ட்டு'களைத்தான் செய்துவருகின்றார்கள். உட்கார முடியாமல் படுத்தப்படியே இருக்கின்றாள்.

Advertisment

நண்பர் ஒருவர், "பாலஜோதிடம்' வாசகர், அவரிடம் என் மனைவியின் உடல்நிலைப் பற்றி வருத்துடன் கூறினேன்.

அவர் லட்சக்கணக்காண பணம் செலவுசெய்தும், வலிக்கு காரணமே அறிய முடியவில்லை என்று கூறுகின்றீர்கள். இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கலாம். உங்களுக்கு சித்தர்கள்மீது நம்பிக்கையிருந்தால், "ஜீவநாடியில் இதற்கு அகத்தியரிடம், கேட்டு அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்' என்று கூறி தங்கள் செல்போன் நம்பரைக் கொடுத்தார்.

அவர்மூலம்தான் தங்களை நாடிவந்துள்ளேன். என் மனைவியின் நோய்தீர அகத்தியர்தான் வழி காட்டவேண்டும்'' என்றார்.

ஆரம்பம்முதல் இன்றுவரை அவர் மனைவியின் கஷ்டத்தையும், அதற்கு சிகிச்சைகள் பற்றி அவர் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கி னேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

"இவளின் இந்த நோய் நிலைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. இவள் தாயின் வம்சத்தில் உண்டான பெண் சாபம், அவளுக்குப் பிறந்த இவளுக்கும் தொடர்ந்தது. இந்தப் பெண் சாபம், இந்தப் பெண்ணிற்கு மகள் பிறந்தவுடன் செயல்படத் தொடங்கியது. இவள் மகள் பிறப்பின்போது, பிரசவ சமயத்தில் இடுப்பில் மருத்துவர்களால் போடப்பட்ட ஊசியின்மூலம் சாபம் தொடங்கியது. இவள் மகள் வளர, வளர, வயது கூடக்கூட, இவளுக்கு இடுப்பில் வலி அதிகமாகி இவளைப் படுக்கையில் தள்ளியது. அந்த மகள் பிறப்பிற்குப் பிறகு, தாயின் பாசம் மகளுக்கு குறைந்தது.

பிரசவகால சமயத்தில், மருத்துவர், குழந்தைப்பேறு சுலபமாக இருக்க வேண்டுமென்று, இடுப்பின் பின்பக்கம் ஊசிபோட்டார்கள். அந்த ஊசியின் மருந்து, முழுமையாக கரையாமல், சிறிது மருந்து, ஊசிபோட்ட இடத்திலேயே கட்டிபோல் தங்கிவிட்டது. தங்கிய அந்த மருந்து இடுப்பில் ரத்த ஓட்டத்தைத் தடுத்து, இடுப்பு எலும்பு சரியாகச் செயல்படாமல், செய்து தற்போது இந்த சிரம நிலையை உண்டாக்கிவிட்டது. இடுப்பில் ஊசிபோட்ட அந்த இடத்தில், அவளை கையை வைத்து, ஒரு சிறிய கட்டி, கொப்புளம்போல் இருக்கின்றதா என்று பார்க்கச் சொல்'' என்றார் அகத்தியர்.

அந்தப் பெண்ணிடம், ஊசி போட்ட இடத்தில், கையை வைத்துப் பார்க்கச் சொன்னேன். அவளும், அந்த இடத்தில் கையை வைத்து தடவிப் பார்த்துவிட்டு, ஆமாம், ஐயா, "ஒரு சிறிய கொப்புளம்போல் கட்டியாக உள்ளது' என்றாள்.

இளம் பெண்ணான இவளுக்கு எலும்பு தேய்மானம், சவ்வு கிழிதல் என மருத்துவர்கள் கூறுவதுபோன்று எதுவும் இல்லை. பிரசவ சமயத்தில் போட்ட ஊசி மருந்து கரையாமல் தங்கியதுதான் காரணம். அறுவை சிகிச்சை எதையும் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு இந்த மருந்து கட்டி கரைய, ஒரு எளிமையான மருந்தையும், அதைப் பயன்படுத்தும் முறையை கூறிவிட்டு, வம்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்விட்ட சாபம் நிவர்த்தியாக, அந்த ஆத்மாவின் கோபம் தீர பிரார்த்தனை முறைகளையும் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

ஒரு மாதகாலம் சென்றபின்பு, கணவன்- மனைவி, அவர்களின் குழந்தை, அவரின் நண்பர், "என நான்கு பேரும் என்னைப் பார்க்கவந்தார்கள். ஐயா, நீங்கள் கூறியபடி, மருத்துவத்தையும், பிரார்த்தனையையும் முறையாகச் செய்தோம். என் மனைவி பூரணமாகக் குணமடைந்துவிட்டாள். மறுபடியும் நாங்கள் தொழில் செய்ய, அமெரிக்கா செல்கின்றோம். பல லட்சம் செலவுசெய்தும் சரியாகாத இடுப்புவலியை சிறிது எண்ணெயில் செலவில்லாமல் அகத்தியர் தீர்த்துவிட்டார். அகத்தியருக்கும் உங்களுக்கும் நன்றி. என் வணக்கங்கள்'' என்றார்.

அகத்தியருக்கோ, எனக்கோ உங்கள் நன்றி தேவையில்லை. "பாலஜோதிடம்' வாசகரான உங்கள் நண்பருக்கும், "பாலஜோதிடம்' நிர்வாகத்திற்கும் உங்கள் நன்றியைக் கூறுங்கள். நண்பர் உங்களுக்கு வழிகூறினார். "பாலஜோதிடம்' அவருக்கு வழிகாட்டியது. இவர்கள் இருவரும்தான் அகத்தியரிடம் உங்களை அழைத்து வந்தார்கள். நீங்களும் "பாலஜோதிடம்' தொடர்ந்து வாங்கிப் படியுங்கள். பல உண்மைகளைத் தெரிந்து பயனடைவீர்கள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.

மனிதன் உடம்பில் உண்டாகும் அனைத்து நோய், வியாதிகளுக்கும், மருத்துவமும், மருத்துவ உபகரணங்களாலும் அறிந்துகொள்ள முடியாது. ஒரு நோய்க்கு செய்யும் மருத்துவமே, உடலில் மற்றொரு நோயை உண்டாக்கும் என்பதையும், உடல், உயிர், ஆன்மா இவற்றிப் பற்றி சித்தர்கள் மட்டுமே முழுமையாக அறிந்தவர்கள் என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267

bala201224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe