மருத்துவக் கல்வி யோகம் - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/medical-education-yoga-melmaruvathur-s-kalaivani

ஜோதிடம் என்னும் யுக சாஸ்திரம், மானுடத்தின் வளர்ச்சிக்கு ஆழ்ந்து வித்திட்டுள்ளது. இதன் மூலம் அவரவரின் செயல்பாடு களையும், அவர்கள் அடையும் நிலையையும், எளிதாகக் கையாளும் தன்மையினையும் நமது முன்னோர் கள் பகுத்தளித்துள்ளனர்.

ஒருவர் மேற்கொள்ளும் தொழில் மற்றும் திருமணம், வாழ்க்கைத் துணை சார்ந்த பயணம், குழந்தைகள் மற்றும் கல்வி, சகோதரன், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துமே அவரவரின் ஜாதகப்படியே அமையும் என்பது திண்ணம்.

ஏன்? இவர்களின் பெயர்கள்கூட கிட்டத்தட்ட ராசி மற்றும் கிரகங்களின் சாயலில் அமைவதைக்கண்டு பலசமயம் வியந்திருக்கின்றேன்.

இவ்வாறாக வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஜோதிடத்தின் மூலம், ஒருவரின் கல்வியினையும் அறியமுடியும்.

s

அதில் கடவுளுக்கு நிகரான மருத்துவக் கல்வியைச் சார்ந்த நபரின் ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை ஆராயலாம்.

மகத்தான மருத்துவக் கல்வி, ஜீவிதத்தின் உயிரைக் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது.

நடப்பு சூழலில் மிகமிக அறியத்தக்க படிப்பாக இது கையாளப்படுகிறது. பொருளாதாரரீதியாகவும் மிக உயர்ந்த கல்வியாக இந்த மருத்துவக் கல்வி தேர்ந்

ஜோதிடம் என்னும் யுக சாஸ்திரம், மானுடத்தின் வளர்ச்சிக்கு ஆழ்ந்து வித்திட்டுள்ளது. இதன் மூலம் அவரவரின் செயல்பாடு களையும், அவர்கள் அடையும் நிலையையும், எளிதாகக் கையாளும் தன்மையினையும் நமது முன்னோர் கள் பகுத்தளித்துள்ளனர்.

ஒருவர் மேற்கொள்ளும் தொழில் மற்றும் திருமணம், வாழ்க்கைத் துணை சார்ந்த பயணம், குழந்தைகள் மற்றும் கல்வி, சகோதரன், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துமே அவரவரின் ஜாதகப்படியே அமையும் என்பது திண்ணம்.

ஏன்? இவர்களின் பெயர்கள்கூட கிட்டத்தட்ட ராசி மற்றும் கிரகங்களின் சாயலில் அமைவதைக்கண்டு பலசமயம் வியந்திருக்கின்றேன்.

இவ்வாறாக வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஜோதிடத்தின் மூலம், ஒருவரின் கல்வியினையும் அறியமுடியும்.

s

அதில் கடவுளுக்கு நிகரான மருத்துவக் கல்வியைச் சார்ந்த நபரின் ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை ஆராயலாம்.

மகத்தான மருத்துவக் கல்வி, ஜீவிதத்தின் உயிரைக் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளது.

நடப்பு சூழலில் மிகமிக அறியத்தக்க படிப்பாக இது கையாளப்படுகிறது. பொருளாதாரரீதியாகவும் மிக உயர்ந்த கல்வியாக இந்த மருத்துவக் கல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மானுட சேவையின் உயிர்தொட்டுத் தொடர்கின்ற இந்தப் படிப்பு ஒருவரை கடவுளுக்கு நிகராக மற்றவர்கள் பார்க்கும் தன்மையை இயல்பாகவே அளித்துவிடுகிறது.

மருத்துவத்துறையில் பலவகை பிரிவுகள் இருப்பினும், ஒரு ங. இ. இ.ந. ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதைக் காணலாம்.

மருத்துவக் கிரகங்களில் முதன்மை கிரகமான செவ்வாயின் நிலையும், தொடர்பும் மிகமிக முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அடுத்ததாக மருந்துகளுக்கான கிரகமான கேது ஆளுமை கிரகமாகவும், குணப்படுத்தும் சூழலை அருளும் சூரியனும் தொடர்புகொண்டு குருவின் பார்வை, சேர்க்கைக்கு இடம்கொடுக்கும் சூழல் ஒருவரை மருத்துவராக்கும்.

நோயாளிகளிடம் கனிவு, பரிவு, கவனமுடன் பரிசோதிப்பு, கவனிப்பு, சரியான நோய் கணிப்பு ஆகியவற்றிற்கு நிச்சயமாக சந்திரனின் துணையும் இவற்றுடன் அமைந்து வலிமை பெற்றிருக்க வேண்டும்.

உதாரண ஜாதகம்- 1

ஜாதகத்தில் கடக லக்னமாகி, லக்னத்தில் 10-ஆம் அதிபதியான செவ்வாய் அமர்ந்துள்ளார்.

அதோடு வருமானத்தை அளிக்கக்கூடிய 2-ஆம் அதிபதி சூரியன் மற்றும் மருந்து கிரகமான கேது ஆகிய இரண்டு கிரகங்களும் லக்னத்திற்கு தனது சமசப்தமப் பார்வையை அளிக்கிறது..

அதோடு குருவின் 5-ஆம் பார்வை சிகிச்சையைக் குறிக்கும். 12-ஆம் பாவகத் திற்கும், வருமானத்தைக் குறிக்கும் 2-ஆம் பாவகத்திற்கும் கிடைக்கிறது.

இதனுடன் 7 மற்றும் 8-ஆம் அதிபதியான சனியின் பார்வையும் லக்னத் தைத் தொடர்புகொள்வது- இந்த ஜாதகம் நிச்சயமாக மருத்துவர் என்கின்ற தகுதியை எட்டிவிடும் என்பதற்கு சான்றளிக்கின்றது.

இங்கு செவ்வாய், சூரியன், கேது, குரு, சந்திரன் ஆகியோர்களின் தொடர்பு, அற்புதமாக லக்னத்திற்கும், 10 மற்றும் 6, 12, 2, 8 ஆகிய இடங்களுக்கும் கிடைப்பது மருத்துவப் படிப்பைக் கொடுத்துள்ளது.

இது ஒரு மேல்நிலை அறுவைச் சிகிச்சை மருத்துவரின் ஜாதகமாகும்.

உதாரண ஜாதகம்- 2

இரண்டாவதாகக் கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் தனுசு லக்னமாக அமைந்துள்ளது.

10-ஆமிடம் கன்னி ராசியாகும். இதன் அதிபதியான புதன் செவ்வாயின் வீட்டில் அமர்ந்துள்ளார். மேலும் அங்கு சூரியன், கேது, குரு ஆகியோரின் தொடர்பு இந்த ஜாதகத்தில் உள்ளதால், இது மருத்துவர் ஜாதகம் என்கின்ற ஆழ்ந்த நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

மேலும் புதன் மற்றும் செவ்வாயில் பரிவர்த்தனையும் மேலே குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து விதிகளும் மிக மிக எளிமையாகப் பொருந்திவரும் ஜாதக மாகும்.

dd

லக்னத்திற்கு 12-ஆம் அதிபதியான, சிகிச்சைக்குரிய செவ்வாய் லக்னத்தைப் பார்க்கிறார். 8-ஆமிடத்திற்குரிய சந்திரன் 10-ஆமிடத்தோடு தொடர்பு.

இரண்டாம் இடத்திற்குரிய சனி 8-ஆமிடத்தோடு அமர்வு, இதுபோன்ற அனைத்து விதிகளும் அற்புதமாக அமைந்துள்ள மருத்துவ ஜாதகம் இதுவாகும். இது ஒரு பெண் கைனக்காலஜிஸ்ட் மருத்துவரின் ஜாதகமாகும்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள பிரிவுகளின் ஜாதகங்கள் எந்த கிரகத்தின் தொடர்பிலிருக்கும் என்பதைக் காணலாம்.

செவ்வாய்+கேது+சூரியன் இவர்களுடன் குருவின் தொடர்பிருந்தால் குழந்தைகள் நல மருத்துவர் அல்லது பொது மருத்துவர். (Child Specialist and General Physician).

செவ்வாய்+குரு+கேது+சூரியன் இவர் களுடன் சுக்கிரனின் ஆளுமையும் தொடர்பும் பெற மகப்பேறு மருத்துவர் அல்லது பெண்கள் நல மருத்துவர். (Gynecologist).

இந்த கிரகங்களுடன் புதனின் சம்பந்தம் அதிகமானால் நரம்பியல் மருத்துவர் அல்லது ஆயுர்வேத மருத்துவர். (Neuro).

சூரியனின் தொடர்பு மற்றும் வலு அதிகமாக இந்த கிரகங்களுடன் சேர்ந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட மருத்துவம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட துறை. (Ortho and Heart Specialist).

கேதுவின் வலு இந்த கிரகங்களை மிஞ்சும்பொழுது, மூலிகைமருத்துவம் அல்லது சித்த மருத்துவம். (Herbal and Siddha).

ராகுவின் ஆளுமையும் வலுவும் மேற்கண்ட கிரகங்களோடு இணையும்பொழுது, கால்நடை மருத்துவர் அல்லது இரசாயனம், லேசர் சிகிச்சை, எக்ஸ்ரே, ரேடியாலஜி போன்ற துறையில் கால் பதிக்கின்றார்கள். (Chemical, Laser, X-ray, Radiology).s

இந்த கிரகங்களுடன் சந்திரனின் ஆளுமை உயரும்பொழுது, மூளை மற்றும் நரம்பியல், சிறுநீரகம். (Brain, Neuro, Kidney).

இவர்களுடன் சனியின் சம்பந்தமும், ஆளுமையும் இருக்க பல் அல்லது காது, மூக்கு, தொண்டை. (Dental and ENT).

இதனுடன் சேர்த்து சந்திரன், மருத்துவ கிரகங்களான ராகு- கேது நட்சத்திர சாரம் பெற்றிருக்க. (அதாவது அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம் இன்னும் முழுமையான மருத்துவத் துறை தொடர்பு ஏற்பட்டு, அதில் பணிபுரிய அதிக வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கிறது.

செல்: 80563 79988

bala181024
இதையும் படியுங்கள்
Subscribe