Advertisment

மகப்பேறு தரும் பரிகாரங்கள்! -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/maternity-remedies-mahesh-verma

ருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு, அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்கவேண்டும். 5-ஆம் பாவமும் 5-ஆம் பாவாதிபதியும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 5-ஆம் பாவம் அல்லது 5-ஆம் பாவாதிபதிக்கு குருவின் பார்வை இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி பலவீனமாக அல்லது அஸ்தமனமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். சில நேரங்களில் பிறக்கும் குழந்தைக்கு உடல்நலம் சரியிருக்காது.

Advertisment

parigaram

5-ஆம் பாவத்தில் கேது, சனியுடன் இருந்தால், அவரின் வயிற்றில் உபாதைகள் இருக்கும். குறிப்பாக பெண்ணின் ஜாதகமாக இருந்தால், குழந்தை பிறக்கும் நேரத்தில் கருச்சிதைவு உண்டாவதற்கு. வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு குழந்தை இறந்து பிறக்கும். ஆனால், கேதுவுக்கும் சனிக்கும் குரு பார்வை இருந்தாலும், குரு 9-ல் இருந்து 5-

ருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு, அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்கவேண்டும். 5-ஆம் பாவமும் 5-ஆம் பாவாதிபதியும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 5-ஆம் பாவம் அல்லது 5-ஆம் பாவாதிபதிக்கு குருவின் பார்வை இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி பலவீனமாக அல்லது அஸ்தமனமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். சில நேரங்களில் பிறக்கும் குழந்தைக்கு உடல்நலம் சரியிருக்காது.

Advertisment

parigaram

5-ஆம் பாவத்தில் கேது, சனியுடன் இருந்தால், அவரின் வயிற்றில் உபாதைகள் இருக்கும். குறிப்பாக பெண்ணின் ஜாதகமாக இருந்தால், குழந்தை பிறக்கும் நேரத்தில் கருச்சிதைவு உண்டாவதற்கு. வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு குழந்தை இறந்து பிறக்கும். ஆனால், கேதுவுக்கும் சனிக்கும் குரு பார்வை இருந்தாலும், குரு 9-ல் இருந்து 5-ஆவது பாவத்தைப் பார்த்தாலும், லக்னத்திலிருந்து 5-ஆவது பாவத்தைப் பார்த்தாலும் அவருக்கு பிள்ளை பிறக்கும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன், சூரியனுடன் அஸ்தமனமாக இருந்து, அதை சனி தன் 3-ஆவது அல்லது 10-ஆவது பார்வையால் பார்த்தால், ஆண் ஜாதகருக்கு உயிரணுக் களில் தோஷம் இருக்கும். உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதனால் வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். பெண்களில் சிலருக்கு கர்ப்பப்பையில் கோளாறு ஏற்படும். சிலருக்கு நீர்க்கட்டி இருக்கும்.

11-ல் செவ்வாய், சனி இருந்து, 5-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். வாரிசு உண்டாவதில் பல கஷ்டங்கள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராது. ரத்தம் குறைவாக இருக்கும். அதனால் குழந்தை பிறப் பதில் பிரச்சினை ஏற்படும்.

5-ல் சூரியன், 5-ஆம் பாவாதிபதி 6-ல், 11-ல் சனி இருந்தால், பெண்களுக்கு குழந்தை உருவாகும்போது கருச் சிதைவு உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் 5 அல்லது 11-ல் இருந்து, அதற்கு சனியின் பார்வை இருந்தால், ஆண்களுக்கு உயிரணுக்களில் தோஷம் இருக்கும். அவர்கள் பெண்களுடன் சரியாகப் பழகமாட்டார்கள். அதனால் குழந்தை பாக்கியம் இருக்காது.

5-க்கு அதிபதி 6-ல் இருந்து, 5-ஆம் பாவத்திற்கு சூரியன், செவ்வாய் பார்வை இருந்தால், அந்த ஜாதகருக்கு குழந்தை பிறப் பதில் பல சிக்கல்கள் ஏற்படும்.

5-க்கு அதிபதி 12-லிருந்து அதை சனி பார்த்தால் அவருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படும்.

5-ஆம் வீட்டில் குருவும் கேதுவும் இருந்து, 5-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக இருந்தால், அவருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது.

5-ஆம் பாவாதிபதி நீசமாக ராகுவுடன் இருந்து அதை சனி பார்த்தாலும்; லக்னத் தில் நீசச் செவ்வாய், ராகு, 7-ல் கேது, சனி, 8-ல் சந்திரன் இருந்தாலும்; 5-ஆம் பாவாதிபதியாக சனி இருந்து, அந்த சனி, புதனுடன் இருந்து, சுக்கிரன் அஸ்த மனமானாலும் குழந்தை பாக்கியம் இருக்காது.

ஒரு ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 5-ஆவது பாவத்தில் கேது, சூரியன், சுக்கிரன் இருந்தால், அவருக்கு பிள்ளை பிறப்பதில் பல சிரமங்கள் இருக்கும்.

ராசிக்கு 7-ஆவது பாவத்தில் சனி, புதன் இருந்தால், ஆணாக இருந்தால் அவரிடம் சுறுசுறுப்பு இருக்காது.

பெண்ணாக இருந்தால் வயிற்றில் கட்டி இருக்கும். 5-ஆம் பாவாதிபதி 6, 8, 12-ல் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால் வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும்.

5-க்கு அதிபதி 4-ல் இருந்து, அதை செவ்வாய் பார்த்தால், அந்த செவ்வாய் ராகுவுடன் இருந் தால் குழந்தை பிறப்பில் பிரச்சினை இருக்கும்.

ஒரு வீட்டிற்கு தென்கிழக்கு வாசல் இருந்தா லும், அந்த வீட்டின் மத்தியப்பகுதியில் நீர்த் தொட்டி இருந்தாலும், படுக்கையறை வடமேற் கில் இருந்தாலும் அங்குள்ள பெண்ணுக்கு கருச்சிதைவு உண்டாகும். ஒரு வீட்டின் மத்தியப் பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்து படுக்கையறையின் மத்தியப் பகுதியில் வாசல் இருந்தால், படுகையறையின் வடகிழக்கிலும் தென்கிழக்கிலும் கனமான இரும்புப் பொருட்கள் இருந்தால், அங்கிருப் பவர்களுக்கு வாரிசு இருக்காது.

பரிகாரங்கள்

தினமும் காலையில் குளித்து முடித்து, சூரியனை வழிபடவேண்டும். "சூரிய காயத்ரி' படிக்கலாம். படுப்பதற்குமுன்பு சிறிது வெல்லம் சாப்பிடவேண்டும். 5-ஆம் பாவாதி பதியின் ரத்தினத்தை அணிவது நல்லது. வியாழக்கிழமை பசுவுக்கு வெல்லம், அகத்திக் கீரை அல்லது மஞ்சள் வாழைப்பழம் தர வேண்டும். கிழக்கில் தலைவைத்துப் படுக்க வேண்டும். ராமேஸ்வரத்திற்குச் சென்று கடலில் நீராடி விட்டு, ஆலயத்திலுள்ள தீர்த்தங் களில் குளிக்கவேண்டும். பகவானை தரிசிக்க வேண்டும். வியாழக்கிழமை சூரியன் மறைந்த பிறகு, அரச மரத்தை ஒருமுறை சுற்றிவர வேண்டும். அங்கு ஒரு தீபத்தை ஏற்றவேண்டும்.

அங்குள்ள விநாயகரை ஒருமுறை சுற்றிவந்து, தீபமேற்றி வழிபடவேண்டும்.

செல்: 98401 11534

nkn041220
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe